அறுசுவை அறிமுகம்.

தோழிகளே!
நம் நட்பினை மீண்டும் மீண்டும் திரும்பி பார்ப்பது இனிமை தான் அல்லவா?
நம்மை இணைத்த அறுசுவை என்னும் இப்பாலம் நமக்கு முதலில் அறிமுகம் ஆனது எப்படி?
ஒவ்வோருவரும் சற்று பின்னோக்கி சென்று உங்கள் இனிய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாமே?

என் மகள் பெயர் ஸ்வேதா.சும்மா அவள் பெயரை கூகுள் ல type செய்தேன். நம்ம அறுசுவை தோழி ஒருவர் ஸ்வேதா, அவருடைய குறிப்பு display ஆனது .அதில் இருந்து நானும் ஒரு member ஆகிடேன். 3 வருடங்கள் ஆகிறது நான் பெயர் பதியு செய்து.

அருசுவையில் எல்லாரும் எஸ்பர்ட். ஏன் நான் கூடத்தான்.ஆனால் இந்த கேக் மேட்டர்ல வீக்.
நா செஞ்ச கேக் மட்டும் கேக் மாதிரியே சாஃப்டா வராது. அதுக்காக தூர போடுற அளவுக்கு மோசமில்லை(பல்கிஸ் கவனிக்க :-) ).
ஒன்னு இறுகினா கேக் பிஸ்கெட் ஆகும் இல்லாட்டா லூஸானாக்கா அப்பம் அல்லது பணியாரம் மாதிரி இருக்கும் . ஒருமுறை பண்ணின கேக் மாடல் டேஸ்ட் அடுத்த தடவை வராது.ஆனா பக்கத்து வீட்டு அண்ணா பசங்க போட்டி போட்டு சாப்பிட மாதிரி இருக்கும். அவங்ககிட்ட நானு டேய் மக்கா இது உண்மையாவே கேக்டா- சொன்னால் அவங்க சொல்றாங்க அத்தை சும்மாச்சுக்கும் பொய் சொல்றீங்க..ஆனா என் தங்கச்சி என்னை மாதிரி இல்லை.நல்லா பண்ணுவா.
நானும் என் அப்பாவும் திருநெல்வேலி அரசன்,மயிலாடுதுறை ஜெனிஃபர்,திருச்சி வரைக்கும் கேக் கடையில் வேலை பார்ப்பவகள் எல்லாரிடமும் கேட்டு பண்ணினோம்.அதுவும் என் அப்பா 12PM கூட முளிச்சு தனியாக்வே கேக் பண்ணுவாங்க.என் 5 மாச பாப்பா நைட் தூங்காது.அப்பா நைட் டூட்டி பார்க்கிரேன்னு கூட இருப்பாங்க.தீடிரென்று பர்த்தால் மைக்ரோவேவ் அவன் சவுண்ட் கேக்கும்.மைதா முட்டை பட்டர் சுகர் ஆயில் ஜெல் வாங்கர பணம்? கடைசில எங்க நாட்டாமை( அம்மா) நீங்க கேக் பண்ணி செலவழிக்கிர பணத்துக்கு கடையில நல்லதாவே வாங்கலாம்னு சொல்லியாச்சு.

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

மேலும் சில பதிவுகள்