சூப்பர் சிங்கர் ஜூனியர் 2

சூப்பர் சிங்கர் ஜூனியர் 2, ஃபைனலை நெருங்கிக் கொண்டு இருக்கிறது.

தோழிகள் இந்த நிகழ்ச்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

யாருடைய திறமை உங்களை அதிகம் கவர்ந்தது?

ஜெயிப்பதற்கு யாருக்கு அதிக வாய்ப்பு இருக்குன்னு நினைக்கிறீங்க?

வாவ்.. நல்ல டாபிக் சீதா அவர்களே..

நான் தொடர்ந்து மிஸ் பண்ணாமல் பாக்ககூடிய ஒரே நிகழ்ச்சி..
அனைத்து குழந்தைகளுமே நல்ல திறமை உள்ளவர்கள்தான்..

ஸ்ரீகாந்த்:
அவருடைய திறமை இந்த வயதிற்கு மிகவும் அதிகம்.அனைவரின் செல்ல குழந்தையாக இருந்தாலும், அவரை விட திறமையானவர்கள் இருக்கின்றார்கள்.. ;-)..பட்டம் இல்லையெனினும் அனைவரின் மனதிலும் இருக்கும் குட்டி பட்டாசு..

ரோஷன்:
குரலின் இனிமைக்காகவே அவருக்கு பட்டம் கொடுக்கலாம். மொழி வேறாக இருந்தாலும் அவருடை ஈடுபாடு மற்றும் சங்கீத ஞானம் தனி தான். எனினும் ஒப்பிடுகையில் சிரமம் தான்..

நித்யஸ்ரீ:
அப்பப்பா.. சரியான சரவெடி.. எல்லாவிதமான பாடலையும் சாதாரணமாக பாடக்குடிய இவருக்கு வாய்ப்பு இருக்கிறது..

ஷ்ரவன்:
சங்கீத ஞானம் அதிகம் பெற்ற ஒரு முழுமையான பாடகர்.கர்நாட்டிக்கில் அடிக்க ஆள் இல்லை.

அல்கா:
சித்ரா, ஜானகி என்று அனைவரின் கலவை தான் அல்கா.. வேறு மொழியானாலும் எல்லா வித பாடலையும் அசால்ட்டா பாடும் திறமையுள்ள குட்டி.. அவரின் குரலின் க்ளாரிட்டிக்கே பட்டாம் கொடுக்கலாம்..

என்னுடைய ஓட்டு அல்காவிற்கே.. போட்டி என்று வந்துவிட்டால் திறமையை மட்டுமே பார்க்க வேண்டியுள்ளது.. ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சரியான டிவி பை...

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

இப்போ இருக்கிற ஃபைனலிஸ்ட விட நல்லா பாடுகிற குழந்தைகள் எல்லாரும் எலிமினேட் ஆயிட்டாங்க. அல்காவுக்கு தான் ஜட்ஜஸ் சப்போர்ட். அதுக்காக ஸ்ரீ நிஷா, ப்ரியங்காவை ஃபைனல்ஸ்க்கு வர விடாம பண்ணீட்டாங்க. இது என்னோட வியூ. தப்பா இருந்தா சொல்லுங்க.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

சீனியர் 2 வை பார்த்த அளவுக்கு இந்த ஜூனியர் போட்டியை ரசிச்சு பார்க்கலை. பார்த்ததே கொஞ்ச நாட்கள்தான். எல்லாருமே சின்ன பிள்ளைங்கதாங்கிறதால, யாரையும் குறை சொல்ல முடியலை. செலக்ஷன் டைம்லேர்ந்து பிரியங்காவோட குரலை ரொம்ப ரசிச்சி கேட்டுகிட்டு வந்தேன். அந்த பொண்ணு கண்டிப்பா பைனலுக்கு வந்திருக்கணும். அதை எதிர்பார்த்தேன். ஸ்ரீகாந்த்தையும் ரொம்ப ரசிச்சேன். ஆனா, பைனலுக்கு கொண்டு வந்ததெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். பப்ளிக் வோட்டிங் னால இந்த சான்ஸ் கிடைச்சிருக்கு.

ரெண்டு பையன்களை செலக்ட் பண்ணியே ஆகணுங்கிற விதியில ரோஷனை செலக்ட் பண்ணியிருக்காங்கன்னு நினைக்கிறேன். ஷ்ரவனும், ஸ்ரீகாந்தும் பக்கத்துல நின்னா, அப்பா பிள்ளை மாதிரி இருக்கு. இந்த வயசு லிமிட்டே இந்த போட்டியோட ஒரு பெரிய மைனஸ் பாயிண்ட். ஷ்ரவன் ஆரம்பத்துல பாடின பாடல்களை கேட்டா, இவர் எப்படி பைனலுக்கு வந்தார்னு தோணும். கொண்டு வந்தாங்கன்னுதான் சொல்லணும். பெட்டரா பாடின நிறைய பேர் நடுவில காணாம போயிட்டாங்க. முழுசா பார்க்காததால என்ன நடந்துச்சுன்னு எல்லாம் தெரியலை.

அப்புறம், இந்த போட்டிக்கு மூணு ஜட்ஜஸ் எதுக்குன்னே தெரியலை. பெரும்பாலும் சித்ரா என்ன சொல்றாங்களோ, அதையே திருப்பி சொல்றதும், அவங்களுக்கு ஜால்ரா அடிக்கிறதைதான் சுபாவும், மனோவும் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. அதுவும் மனோ தன்னை இந்த அளவுக்கு கோமாளி ஆக்கியிருக்க வேண்டாம். என்னைக் கேட்டா, அடுத்த போட்டிகள்ல எல்லாம் ஒரே ஒரு ஜட்ஜை வச்சு, அவர் என்ன சொல்றாரோ அதையே ஏத்துக்கிற மாதிரி வச்சிடலாம். வேஸ்ட்டா மூணு பேரை உட்கார வச்சு, மொதல்ல கமெண்ட் சொல்றவர் நல்லா இருக்குன்னு சொல்லிட்டா, அடுத்தவங்க எல்லாம் நல்லா இல்லைன்னு சொல்ல முடியாம, அதையே ரிபீட் பண்றதுக்கு, ஒரே ஒரு ஜட்ஜே போதும். இடம், செலவு, நேரம் எல்லாமே மிச்சப்படும்.

அல்கா தான் ஜெயிக்கும்னு பட்சி சொல்லுது. அது நடந்தால், நல்ல திறமைசாலிதான் வென்றிருக்கார்னு சந்தோசப்படலாம்.

பாபு அவர்கள் கூறியது போல எனக்கும் ஸ்ரீநிஷா மற்றும் பிரியங்காவின் குரல் மிகவும் பிடிக்கும்.. ஸ்ரீநிஷாவின் பழம் நீயப்பா பாடலும், பிரியங்காவின் மன்னவன் வந்தானடி பாடலுமே அவர்களின் திறமைக்கு ஒரு சிறிய உதாரணம்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சூப்பர் சிங்கர் ஜூனியர் தேர்வு முறையாக பின் பற்றாமல் தேவைக்கேற்ப மாற்றப்பட்டது. முதலில் வைல்ட்கார்ட் ரௌண்டுக்கு ஐந்து பேர் தேர்ந்தெடுக்க போவதாக கூறிவிட்டு, ஆறாவது நபராக ஸ்ரீகாந்தை மக்கள் விருப்பத்திற்காக
என்று கூறி பைனல்சுக்கு சேர்க்கப்பட்டார்.
மீண்டும் பைனல்ஸில் நான்கு பேர் என்று கூறி விட்டு ஐந்தாவது நபராக நித்யஸ்ரீ ஐ மனோ தேர்ந்தெடுத்தார்.
இவற்றையெல்லாம் பார்க்கும் போது பிரியங்கா,ஸ்ரிநிஷா போன்றவர்களுக்கு அநீதி இழைத்தது போல் தோன்றுகிறது.

நானும் பாபு சொல்வதை ஆமோதிக்கிறேன்.

ஸ்ரீகாந்த்துக்கு 2 விஷயம் தான் 1 சின்னப் பையன் 2 ஹை பிச் (மேல் ஸ்தாயியில்) நன்கு பாடுகிறான். அவ்வளவுதான். பைனலுக்கு அழைத்து வந்ததெல்லாம் ரொம்ப ஓவர். இந்த சுற்றில் அவன் பாட்டு வெகு சுமார்

அல்கா, ஷ்ரவன் 2 பேரில் ஒருவருக்கு டைட்டில் கிடைக்க வேண்டும்.

ஸ்ரீநிஷாவிற்கு ஓட்டு போடும்படி ஏர் செல் வாடிக்கையாளர்களுக்கு SMS வந்தது. ஓட்டு கூட போட வேண்டாம். அநத SMS வந்ததும் ஒரு யெஸ் சொன்னாலே போதும்.

பிரியங்கா உள்ளே வந்திருக்க வேண்டும். குளறுபடி செய்தி விட்டார்கள்.

மனோ தேவையில்லாமல் ஸ்ரீகாந்தைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டுள்ளார்.

/////////////அப்புறம், இந்த போட்டிக்கு மூணு ஜட்ஜஸ் எதுக்குன்னே தெரியலை. பெரும்பாலும் சித்ரா என்ன சொல்றாங்களோ, அதையே திருப்பி சொல்றதும், அவங்களுக்கு ஜால்ரா அடிக்கிறதைதான் சுபாவும், மனோவும் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. அதுவும் மனோ தன்னை இந்த அளவுக்கு கோமாளி ஆக்கியிருக்க வேண்டாம். என்னைக் கேட்டா, அடுத்த போட்டிகள்ல எல்லாம் ஒரே ஒரு ஜட்ஜை வச்சு, அவர் என்ன சொல்றாரோ அதையே ஏத்துக்கிற மாதிரி வச்சிடலாம். வேஸ்ட்டா மூணு பேரை உட்கார வச்சு, மொதல்ல கமெண்ட் சொல்றவர் நல்லா இருக்குன்னு சொல்லிட்டா, அடுத்தவங்க எல்லாம் நல்லா இல்லைன்னு சொல்ல முடியாம, அதையே ரிபீட் பண்றதுக்கு, ஒரே ஒரு ஜட்ஜே போதும். இடம், செலவு, நேரம் எல்லாமே மிச்சப்படும்./////////

ரொம்ப ரொம்ப சரி

அல்கா அல்லது ரோஷனுக்கு தான் என்னோட ஓட்டு. அல்காவிற்கு தமிழ் தெரியாதுனாலும் அவ்வளவு நல்லா வார்த்தைகள உச்சரிக்குது எந்த மாதிரியான பாடல்கள் ஆனாலும் அதில் அதனுடைய தனித்துவம் இருக்கு. ஸ்ரீகாந்த் 7 வயதில் இவ்வளவு நல்லா பாடறது பாராட்டுக்குரிய்யது தான் ஆனால் ஓட்டு போட்டே பைனல்ஸ் கொண்டு வந்தது தான் திறமைசாலிகள்லாம் பின்னுக்கு தள்ளுது. பாபு சார் சொல்லுவது போல் ஷ்ரவன்லாம் ரொம்ப சுமாரா பாடுற சிங்கர் தான் எப்படி இப்படி ஆக்கினாங்க தான் தெரியல. சூப்பர் சிங்கர்ல எனக்கு ரொம்ப பிடிச்ச இன்னும் சிலர் விஷ்ணுசரண், பாலசாரங்கன், சஹானா, செளமியா. இவங்கலாம் நல்லாவே பாடுவாங்க, அதுலயும் சஹானா பைனல்ஸ் வராதது எனக்கு ரொம்பரொம்ப வறுத்தம். இரண்டு முறையா பசங்க தான் டைடில ஜெயிச்சாங்க அல்கா முதலயே சொன்னது போல இந்த முறை நிச்சயம் ஒரு பொண்ணுதான் வாங்குவா. அது நிச்சயம் அல்காவாதான் இருக்கும் பார்க்கலாம். பப்ளிக் ஓட்டிங் இல்லாம சித்ரா மேடம் மட்டும் வச்சி ஜட்ஜ் பண்ணா திறமைசாலிகள் மட்டும் ஜெயிப்பாங்க.

ஹாய் தோழிகளே அனைவருக்கும் வணக்கம்..... நானும் நீண்ட நாள் தோழி தான், என் குழந்தைக்கு 1 வயது ஆகிவிட்டதால் அவளை சமாளிக்கவே நேரம் சரியா இருக்கு, அதான் முன் போல வரமுடியல.... சரி சரி விஷயத்துக்கு வர்றேன்.....

நான் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 -ன் தீவிர ரசிகை!இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே அல்காவை தான் தலையில் வச்சு கொண்டாடறாங்க.... அந்த பொண்ணுக்கு திறமை இருக்கு தான், ஒத்துக்கிறேன், அதுக்காக மற்ற குழந்தைங்களுக்கு திறமை இல்லாத மாதிரியும், அவங்களை ரொம்பவும் டிஸ்கரேஜ் பண்ணியும் எதுக்காக பேசணும்? குறிப்பாக பாலசாரங்கன், ஸ்ரீநிஷா, பிரியங்கா, சஹானா இவங்களை எல்லாம் வேண்டுமென்றே குறை சொல்லிட்டே தான் இருப்பாங்க...அல்கா தான் ஜெயிக்க வேண்டுமென்பது முதலிலேயே முடிவு செய்யப்பட்ட ஒன்று மாதிரி தான் தெரியுது..... அப்புறம் எதுக்கு மற்ற குழந்தைங்கள பாட வச்சு, குறைச்சு மதிப்பிட்டு அவங்களை வேதனை படுத்தணும்.....???

ஸ்ரீநிஷா குரலுக்கு என்ன குறைச்சல்? எல்லா விதமான பாடல்களையும் அசாத்தியமா, ரொம்ப அழகா, அந்த பாடலின் உணர்ச்சி மாறாம அவ்வளவு அழகா பாடுவாங்க.....

பிரியங்கா குரல் தேனில் முக்கி எடுத்த மாதிரி இருக்கும், அவ்வளவு இனிமை, கண்ணை மூடி பாட்டை கேட்டோம்னா அத்தனை சுகமா இருக்கும்.....

சஹானாவின் குரல் அப்படியே ஹரிணி குரலின் xerox தான்,ஹரிணி குரல் நல்லா இல்லேன்னு யாராவது சொல்வோமா? சஹானா பாடின "நிலா காய்கிறது" பாட்டு அதுக்கு சிறந்த உதாரணம்......அமைதியா பாடி இருக்குறவங்களை மயங்க வைக்கும் குரல்..

இப்படி திறமையான பல பேரை விட்டுட்டு இவங்க ஃபைனல்ஸ் நடத்துறாங்களாம்!!!!! வேடிக்கையாவும் இருக்கு அதே சமயம் கோபமாவும் வருது....நான் ஃபைனல்ஸ்ல யாருக்குமே vote பண்ணல....

இப்ப இருக்கும் 5 பேரில் அல்கா & ரோஷன் நடுவர்களின் பாரபட்சமான தீர்ப்பு மூலமா மட்டுமே வந்தவங்க..... ரோஷனுக்கும் திறமை இருக்கு, ஆனால் எல்லா விதமான பாடலும் அவரால் பாட முடியல, மெலடி-ல மட்டும் தான் அவரால ஜெயிக்க முடியுது...

ஷ்ரவன் குரல் கொஞ்சம் பெரிய குரல் தான், ஆனால் அந்த பையனின் பயணத்தை பார்த்தோம்னா நல்ல முன்னேற்றம் தெரியும்.... கர்நாடிக் பாடல்கள் மட்டும் தான் பாட முடியும்னு எல்லோரும் நினைக்கும்போது அதை உடைச்சு எறிஞ்சுட்டு எல்லா விதமான பாட்டும் தன்னாலும் பாட முடியும்னு நிரூபிச்சு இருக்கார், அதனால் அவர் இறுதிச் சுற்றுக்கு தகுதியானவர் தான்....

ஸ்ரீகாந்த்-ஐ பொறுத்தவரை அவர் ரொம்பவும் குட்டி பையன்றதால எல்லோர் மனசுலயும் ஈஸியா இடம் பிடிச்சுட்டார்.....அவரும் திறமையான பாடகர் தான், ஆனா அதை விட அவர் வயது தான் அவரை இறுதிச் சுற்றுக்கு வர வச்சிருக்கு......

கடைசியாக நித்யஸ்ரீ...... ஆடலுடன் பாடலிலும் கலக்கும் குட்டி சரவெடி, அவங்களுக்கும் மக்கள் ஓட்டு தான் பக்க பலம், இருந்தாலும் ஃ பைனல்ஸ்க்கு வரும் அளவு திறமையும் இருக்கு.... ஆனால் ஜெயிப்பது கஷ்டம் தான்......

மூன்று நடுவர்களில் என்னை பொறுத்த வரை சுபா தான் நடுநிலையா சொல்லுவாங்க..... சித்ராவும், மனோவும் அல்கா & ரோஷன் துதி பாடுறதுலயே கவனமா இருப்பாங்க..... அவங்க ஆரம்பத்தில் இருந்தே அப்படி தூக்கி வச்சதுனால அல்காவால ஒரு சின்ன ஏமாற்றத்தைக் கூட தாங்கிக்க முடியல, ஒரு ரவுண்டில் denger zone க்கு வந்தவுடன் அதையே தாங்கிக்க முடியாம அப்படி அழுதாங்க....எப்பவுமே ஒரு over confidence & தலைக்கனத்தோடு தான் அந்த பொண்ணு இருக்கும்.....

நல்ல வேளை தீர்ப்பை மக்கள் கையில் விட்டுட்டாங்க அதுனால "நிஜமாவே திறமையானவங்க" தான் ஜெயிப்பாங்க..... இன்னும் 3 நாளில் தெரிந்து விடும் யார் அந்த "செல்ல குரலுக்கு சொந்தக்காரர்" என்று......

இந்த இழையை ஆரம்பிச்ச சீதாலக்ஷ்மி தோழிக்கு ரொம்ப நன்றிகள்.... ரொம்ப நாளா மனசுல இருந்ததை கொட்டி தீர்க்க வாய்ப்பு கிடைச்சது......

அநேக அன்புடன்
ஜெயந்தி

மேலும் சில பதிவுகள்