speech delay for 2 yr old toddler(dear friends give ideas please)

my son is now 2 years and six month old. he is not talking properly sometimes only he says amma, appa, thatha and if he wants something he is not asking in words he just show in action iam worried can anyone please give some ideas for me how to teach my son to talk properly......... thanks in advance........

hi viji
my son is same age he is not talking properly same i am lso having same problem he is talking one or two words only iam also want some ideas do u like give ur mail id i contact u otherwise no problem

விஜி, என்னுடைய அக்கா பையனும் இப்படி தான் பேசாம இருந்தான். ஸ்கூல் போனதுக்கு அப்புறம் நல்லா பேச ஆரம்பிச்சுட்டான். அதனால கவலை படாதீங்க. சீக்கிரம் நல்லா பேச ஆரம்பிச்சிருவான். இருந்தாலும் அனுபவம் மிகுந்தவர்களிடம் இருந்து கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

ஆண் பிள்ளைகள் சீக்கிரமாக பேச மாட்டங்கனு கேள்விபட்டிருக்கேன்.ஆனால் பள்ளியில் சேர்த்துவிட்டதுக்கபுறம் சீக்கிரமாக பேச ஆரம்பிச்சிடுவாங்க.நீங்க அவன்கிட்ட பொருமையா பேசுங்க.நீங்க பேசுறத அவன் கவனிக்குறானானு பாருங்க.
அப்புறம் இந்த மாரி பிள்ளைங்க பேச ஆரம்பிச்சா நிறுத்தவேமட்டாங்க.

நீங்கள் US-ல் வசிப்பவராக இருந்தால், உங்களுக்கு Professional help வேண்டுமென்றால் உங்கள் அருகாண்மையுள்ள public Elementary school/ state education dept-ஐ தொடர்பு கொண்டால் வேண்டிய உதவி செய்வார்கள். சர்விஸும் ஃப்ரீதான்.

இதைப் பற்றி ஏற்கனவே ஒரு இழையில் விரிவாக பேசினோம். அதை இப்போ காணோம் :( குழந்தை பள்ளி சென்றால் நிச்சயம் மாற்றம் இருக்கும்.

kviji67@yahoo.com this is my mail id shalini kumar...and forward ur id also......

hi viji
check u r mail

அன்பு விஜி மற்றும் ஷாலினிகுமார்,

தினம் தினம் புத்தகம் வாசியுங்கள் குழந்தையோடு அமர்ந்து.படங்கள் நிறைய உள்ள புத்தகங்களை அவனிடம் காட்டி கதை "படித்துக் காட்டுங்கள்". அதுவும் கார், இரயில்,விமானம் படங்கள் எல்லாம் பையன்களுக்கு மிகவும் பிடிக்கிறது. படங்களோடு கூடிய அ, ஆ.. A,B,C,D மேலும் 1,2,3 numbers books எல்லாம் நூலகத்தில் உள்ளது. சில நேரங்களில் அவன் கவனிக்க மாட்டான். ஆனால், ஆர்வம் இருக்கும். கேட்டுக் கொண்டு விளையாடுவான். பரவாயில்லை... இடையிடயே இப்போ கதையில் என்ன ஆச்சுன்னு கேளுங்க.. சொல்ல முயற்சிக்கலாம். அவனே சொல்லறானான்னு பாருங்கள். ரொம்ப பொருமையாய் தான் இருக்கனும். சொல்ல வில்லை என்றால் பரவால்ல நானே சொல்றேன்னு நீங்களே கேள்வி கேட்டு பதிலும் சொல்லுங்கள்.. அதையும் அவன் கவனிப்பான்....

.. அவனுக்கு பிடித்த கார்ட்டூன் போட்டு விடுங்கள்(he will listen to that conversation ).. அடிக்கடி குழந்தைகளோடு விளையாட வையுங்கள்.

எதயும் கம்பெல் செய்யாமல் "பொறுமையாய்" தினமும் செய்யுங்கள்.

நீங்களும் ஏதாவது அவனுக்கு கதை அடிக்கடி சொல்லிக் கொண்டே இருங்கள். கண்டிப்பாய் கவனிப்பான். அவன் போக்கிலயே அவனே கவனிக்கும் படி செய்யுங்கள்..கவனிக்க, கேட்க, கேட்க பேசி விடுவான் என்றே நினைக்கிறேன்.
மேலும் குழந்தைகள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்கும் நிம்மதியாய் இருக்கும் அல்லவா?

அன்புடன்,
ஆயிஸ்ரீ

thank u sooooooooo much for the advice dear friends........

சொல்லுவதர்க்கு மன்னிக்கவும்.
ஸ்கூல் போனால் மட்டும் பேச்சு வந்துரும் என்பதில்லை.
இன்று முதலே உங்கள் பயிற்சியை தொடருங்கள்.
உங்கள் மகனிடம் தொடர்ந்து பேசுங்கள். அது அவனுக்குள் ஒரு மாற்றத்தை உண்டாக்கும். நம் அம்மா இவ்வாறு சொன்னால் நாம் இவ்வாறு பேச வேண்டும் என்று அவனுக்குள் தோன்றும். ம்.....ம் என்று வரும் ஒவ்வோரு வார்த்தையையும் கூட ரசியுங்கள். நம் அம்மா நம் பேச்சை ரசிக்கிறாள் என்று அவனுக்கு நீங்கள் புரிய வைத்தால் உங்களை மேலும் மேலும் ரசிக்க வைக்க அவன் பேச முயற்சிப்பான்.

என் குடும்பத்தில் என் மகன் வயதில் 3 பேர் உள்ளார்கள். முன்பு அவனுடன் நான் பேசும் போதெல்லாம் என்னை பைத்தியமா? நீ பேசும் கஸ்ட்டமான வார்த்தைகளெல்லாம் எப்படி புரியும் என்று கேலீ செய்தார்கள்.இப்போது இந்த வயசில் எனக்கு சரிசமமாக பேசுகிறான்.(ஸ்கூல் போனா பேச்சு வந்துரும்; பிள்ளைகளோடு பழகினால்பேச்சு வந்துரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இவனுடன் பிறந்த அந்த 3 பேருக்கும் இன்னும் பேச்சு வரவில்லை.) அவர்களுடன் அதிக நேரம் செலவழிப்பது நாம் மட்டும் தானே . முயற்சித்து பாருங்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய் விஜி,
அனுபவம் மிக்கவர்கள் மேலே சொல்லி இருக்கிறார்கள் அதை மட்டும் பண்ணினாலே இன்னும் 3 மாசத்தில் உஙளுக்கு கண்டிப்பா இம்ப்ரூவ்மென்ட் தெரியும்.அப்புறம் உங்க மகனோட கேள்விக்கு பதில் சொல்ல உங்களால முடியாது.

மேலும் சில பதிவுகள்