கஷ்டப்பட்டு வெற்றி கொண்ட குழந்தை பாக்கிய அனுபவம்

ஹாய் தோழிகளே கஷ்டப்பட்டு வெற்றி கொண்ட குழந்தை பாக்கிய அனுபவத்தை இங்கே பகிர்ந்துக்கொள்ளலாமே. நம் அறுசுவை தோழிகள் பலருக்கு நம் அனுபவம் நம்பிக்கை தருவதாய் இருக்கும் அல்லவா!!!!

ஹாய் தோழிகளே நல்லா இருக்கிங்களா! நான் என்னை பற்றி சொல்கிறேன் என் பெயர் சஃபா எனக்கு திருமணம் முடிந்து 5 வருடங்களுக்கு பிறகு தான் குழந்தை கிடைத்தது அதை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன்.
திருமணமான புதிதில் ஒழுங்காக intercourse செய்து வந்தாலும் எனக்கு குழந்தை கிடைக்கவே இல்லை ரொம்ப கவலையா இருந்தது உங்களுக்கே தெரியும் நம்ம ஊரில் கல்யாணம் ஆகி 2 அல்லது3 மாதம் பார்ப்பார்கள் அதர்க்கு பிரகு என்ன விஷேஷம் இல்லையா என்று கேட்க தொடங்கிவிடுவார்கள். ஆரம்பத்தில் இந்த கேள்வி ரொம்ப பெருசா தெரியலை ஆனால் போகபோக கோவம் தான் வந்தது. நானும் ஒவ்வொரு மாதமும் ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்து போவேன்.6 மாததிர்கு பிறகு அனைவரின் வற்புருத்தலில் மருத்துவரிடம் சென்ரேன் அவர் என் குடும்ப நலன் மருத்துவர் என்பதால் ரொம்ப கோவப்பட்டார்"திருமணம் முடிந்து 6 மாதம் தானே ஆகுது அதுக்குள்மருத்துவம் மாத்திரை எதர்க்கு என்று சொல்லிவிட்டார்கள்"அவருடைய நம்பிக்கையான வார்த்தைகள் எனக்கு positive thinking தந்தது. நம்பிக்கையுடன் நாட்கள் போனதே தவிற குழந்தை கிடைக்கவில்லை.
1 வருடம் கழித்து வேரு மருத்துவரிடம் சென்றால் அவர் அனைத்து test எனக்கும் என் கணவருக்கும் எடுத்தார் எல்லாம் நார்மலாகவே இருந்தது.இத்தனைக்கும் எனக்கு irregular periods கூட கிடையாது doctor enakku periods ஆகி பத்தாம் நாளிலிருந்து இருபதாம் நாள்வரை ஒருநாள்விட்டு ஒருநாள் scan செய்தார்கள் அதிலும் என்னுடைய கரு முட்டையின் வளர்ச்சி நன்றாகவே இருந்தது.doctor சொன்னார் அந்த மாதம் pregnant ஆக நிறைய chance இருப்பதாக சொன்னார் எனக்கும் என் கணவருக்கும் ரொம்ப மகிழ்ச்சி. ஆனால் சில பிரச்சனைகளால் என் கருவில் தங்கவில்லை அந்த குழந்தை. நானும் என் கணவரும் முடிவு செய்தோம் இனி குழந்தை வேண்டும் என்று எப்போதும் மனதை போட்டு குழப்பாமல் நார்மலா இருப்போம் என்று சொன்னார் அதன் படியே நாங்கள் இருந்தோம் என் mind divertசெய்வதர்க்காக நான் நிறைய music கேட்க ஆரம்பிட்டேன் சீரியல்,சோகமான நிகழ்ச்சிகள்(கதையல்ல நிஜம்,அரட்டை அரங்கம்) போன்றவை தவிர்த்தேன். நான் இஸ்லாம் மதத்தை சார்ந்தவள் என்பதால் குரான் தொழுகை என்று ஈடுபடுத்திக்கொண்டேன்.எப்போதாவது நினைக்க தோன்றும் இவ்வளவு செல்வம் இருந்தும் நமக்கு குழந்தை இல்லையே என்று.என் அனுபவத்தை தொடர்ந்து சொல்கிரேன் இப்போ பொண்ணு எழுந்து விட்டாள்.

ஹாய் சஃபா அஸ்ஸலாமு அழைக்கும் நல்ல இருக்கீங்களா?என் பெயர் நஸ்ரின் பானு என்னக்கு திருமணமாகி 5 வருடம் ஆகுது எனக்கு குழந்தை இல்லை pcod ப்ரொப்லெம்கரு முட்டையின் வளர்ச்சி சரியாய் வரவில்லை மாதம் மாதம் ஊசி போட்டு கொண்டு இருக்கேன் இப்போ டாக்டர் 2 மாதம் ரெஸ்ட் எடுத்து கொண்டு பிறகு பார்க்கலாம் என்று சொல்லி இருகாங்க நான் இப்போ குவைத்தில் இருக்கேன் இங்கு ட்ரிட்மென்ட் எடுத்து கொண்டு இருக்கேன் குழந்தை இல்ல்லாமல் இருப்பது ரொம்ப வேதனையாக இருக்கு நீங்க எங்கு இருக்கீங்க? நீங்க ட்ரிட்மென்ட் எடுத்தீர்களா?

அன்புடன்
நஸ்ரின் கனி

ஹாய் safa எப்படி இருக்கிங்க உங்க பொண்ணு எப்படி இருக்கிறாள் என்ன பெயர்? எனக்கு 3 வருடம் கழித்து இப்ப தான் consive இருக்கிரேன் குவைத்தில் tratment எடுத்தேன் சரியில்லை அதனால் இந்தியாவில் வந்து treatment எடுத்துட்டு மாத்திரை மொத்தமாக வாங்கிவந்து குவைத்தில் உள்ள டாக்டரிடம் eggsize, horomones checekup parthu இப்போதுதான் நான் 6மாதம் consive இருக்கிறேன். நானும் டிவி பார்க்கமாட்டேன் சாமி புத்தகங்கள் தான் படிப்பேன்

வாழ்க வளமுடன்

hai assalamu alaikum nasreen,naan farveen enaku thirumanam ahi 4 years ayidichi ,kadantha 2years la ungav nilamai thaan enakum but na oosi lam podala treatment arambathulaye enaku dr sonnanga red banana(sevvalaipalam)husband&wife thinamum sapidanum atula niraiya vitamins irukam anukkal athiharikka seiyumam apparam koyya palam naraya sapidanum nambikkayoda irukanum(vida muyarchi) itha mattum thaan naan edutukitten medicen enaku pidikala so na medicens sa edukala athihama aluthu dua seiven enni 10 masathula iraivan enaku kulanthai ya kudutan alhamdulilah.neengalum na sonna mari try pannunga insha allah iravan ungaluku kulanthai bakkiyam kudupan na ungalukaha dua seiren.bye vassalam.

"தவர விட்ட வாய்ப்பும் இலந்து விட்ட இன்பமும் கடந்து விட்ட காலமும் ஒரு போதும் திரும்பாது"
@@@ஒருவர் இன்னொருவருக்கு எந்த பயனும் அலிக்க முடியாத நாலை அஞ்சுங்கல்@@@

வ அழைக்கும் முசலம் பர்வீன் நல்லா இருக்கீங்களா ?உங்கள் அக்கறைக்கு ரொம்ப நன்றி உங்கள் துவாவில் என்னை மறக்காமல் எனக்காக துவா செய்யுங்கள் உங்கள்ளுக்கு என்ன குழந்தை ?உங்களுக்கு pcod பரோப்லம் இருந்தத விருப்பம் இருந்தால் உங்கள் மெயில் id சொல்லுங்கள்

அன்புடன்
நஸ்ரின் கனி

girl,kandippa ungaluku dua seiren.pcod na enna enaku puriyala?ffarveen@ymail.com unga emailid enna

"தவர விட்ட வாய்ப்பும் இலந்து விட்ட இன்பமும் கடந்து விட்ட காலமும் ஒரு போதும் திரும்பாது"
@@@ஒருவர் இன்னொருவருக்கு எந்த பயனும் அலிக்க முடியாத நாலை அஞ்சுங்கல்@@@

Enna pa interestana serial la thodarum podra madiri ,,,,, thodarum potutu poiteenga....... konjam seekram vandhu pesunga pa..........

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

pcod na period da enaku period problam irunthathu

"தவர விட்ட வாய்ப்பும் இலந்து விட்ட இன்பமும் கடந்து விட்ட காலமும் ஒரு போதும் திரும்பாது"
@@@ஒருவர் இன்னொருவருக்கு எந்த பயனும் அலிக்க முடியாத நாலை அஞ்சுங்கல்@@@

சாரி கொஞ்சம் busy அதனால் தொடர முடியவில்லை.குழந்தை விஷயத்தை கொஞ்சம் மறந்து ஜாலியா வெளியே சுத்துவோம்,வீட்டில் போர் அடித்தால் கார் எடுத்துக்கொண்டு எங்கே போகிறோம் என்று தெரியாமல் சுத்துவோம் அப்படியே அந்த சமயத்தில் 2பேரும் மனம் விட்டு பேசுவோம்,எங்களுடைய சந்தோஷமான பொழுதுகளை திரும்ப பேசுவோம்.ஆனால் பார்க் மட்டும் செல்வதே இல்லை ஏன்னா அங்கே நிறைய குழந்தை விளையாடும் எனக்கு திரும்ப குழந்தை நியாபகம் வரும் என்று என் கணவர் கூட்டி செல்ல மாட்டார்.சந்தோஷமாக செல்லும் அப்பபோ speed breakமாதிரி பீரியட்ஸ் தள்ளி போகும் doctorயிடம் சென்றால் negative result இப்படியே மாறி மாறி 3 வருடம் ஆச்சு.ஆனால் எப்போதும் நாங்கள் நம்பிக்கை மட்டும் இழந்தது இல்லை.கடவுள் எல்லாம் நன்மைக்கே செய்வார் என்று எங்களை நாங்களே தேற்றிக்கொள்ள்வோம்.நிறைய மருத்துவரிடம் காண்பித்து ஒன்னும் வேலைக்கு ஆகவில்லை எனக்கு PCO இருந்ததை பற்றி சொல்லவே மறந்துவிட்டேன்.எனக்கு PcO இருந்தது ஆனால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.கடைசியாக ஒரு மருத்துவரிடம் காண்பித்தோம் அவர் இருவருக்கும் முழு பரிசோதனை செய்தார்.எனக்கு METAPHGE TABLET கொடுத்தார் அப்புறம் வெயிட் குறைக்க சொன்னார் (இத்தனைக்கும் 65kg தான் இருந்தேன்).அவர்தான் முழுமையாக எனக்கு PCOபற்றி explain செய்தார் நாம overa stress ஆனாலும் PCO problem அதிகரிக்க செய்யும் என்றார்,junk food அறவே சாப்பிடகூடாது என்று சொல்லிவிட்டார்,excercise செய்ய சொன்னார்,walking செல்ல சொன்னார்.relaxஆ இருக்க சொன்னார்.இப்படி 3 மாதம் போனது ஒவ்வொரு மாதமும் periods முடிந்து 2nd day insulin test செய்ய சொன்னார்.கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து normal ஆனது .சில harmone injections கொடுத்து அந்த மாதம் intercourse செய்ய சொன்னார்,செய்ததில் positive result வந்தது ஆனால் திடிரென்று periods ஆகிவிட்டது இத்தனைக்கும் நான் எந்த பலமான வேலையும் செய்யவில்லை.மனசே வெறுத்துவிட்டது.சே என்னடா வாழ்க்கை என்று இருந்தது.அப்போ ஊக்கம் தருவதற்கு என் பெற்றோரும் கணவரும் மட்டுமே இருந்தனர்.திரும்ப அழுது கொண்டே இருப்பேன்.extreme சொல்வார்களே அப்படி இருந்தது,பைத்தியம் பிடித்தது போல இருந்தது.என் கணவரின் ஊந்துதலால் திரும்ப டாக்டரிடம் சென்றோம் அவர் Metaphage,folic acid கொடுத்தார்.உணவு கட்டுப்பாடு,excercise என்று போய்கொண்டு இருந்தது.எங்கள் மதத்தில் நடு இரவில் தொழும் தொழுகை தொழ ஆரம்பிட்டேன் ,அழுது இறைவனிடம் மன்றாடுவேன்.தொழுகையில் மட்டும் தான் அழுகை திரும்ப நார்மலாகிவிடுவேன் ஏன்னா stress ஆனால் குழந்தை தங்காதே. நானே எதிர்பாராதவிதம் எந்த injection எதுவும் இல்லாமல் கடவுளின் கிருபையால் அந்த மாதம் pregnant ஆயிட்டேன்.delivery வரை ரொம்ப ஜாக்கிரதையா இருந்தேன்.எனக்கு கடவுள் அழகான பெண் குழந்தை குடுத்தார்.இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு.என்னை போல் குழந்தைக்காக ஏங்கி தவிக்கும் அனைத்து தோழிகளுக்கும் குழந்தை கிடைக்கவேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

hi nasreen walaikum salam naan nalla iruken,ningal weight adikam irunthaal weightai kuraippadarku excercise,diet ponravai kadaipidiyungkal,then eppavum relaxaa irungkal insha allah ungkalukk kulanthai kidaikka allah vidam dua ketkiren.thahajjat ningalum,ungkal kanavuram tholuvungkal,ganjularsh,daroodetaaj niraya odungkal insha allah kulanthai selvam kidaikkum naanum adaithan odineen.periods mudinthu kulittu kaalayil 10 naal thodarnthu odunkal odi thaniril oodi kudiyungkal.

மேலும் சில பதிவுகள்