hai admin(Babu sir)

ஹாய் பாபு ஸார்
பாபு சார்,நான் துபாயில் இருக்கிறேன்,எனக்கு c,ஜாவா ஓரளவுக்கு தெரியும்,நான் வீட்டிலிருந்தே இந்தியாவில் இருக்கும் யாருக்காவது சொல்லித்தர வழியிருக்கிறதா?தெரிந்தால் கூறுங்கள் பிளீஸ்

டிஸ்கரேஜ் பண்ணுவதாக எண்ணிவிட வேண்டாம். நீங்கள் குறிப்பிட்டுள்ள C, JAVA வை இன்று ஊரில் உள்ள சிறிய சிறிய சென்டரில் கூட சொல்லித் தருகின்றார்கள். அதுவும் மிகக் குறைந்த கட்டணத்தில். இப்போது பள்ளிகளிலேயே அது பாடமாக வந்துவிட்டது. அதனை ஆன்லைனில் கற்றுக் கொள்ள, இந்தியாவில் இருந்து யார் முன்வருவார்கள் என்பது எனக்கு தெரியவில்லை.

நீங்கள் எதன் வாயிலாக சொல்லிக் கொடுப்பீர்கள்? எப்படி கட்டணம் வசூலிப்பீர்கள், எவ்வளவு கட்டணம் வசூலிப்பீர்கள்? என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். இண்டர்நெட் காஸ்ட்டே அதிகம் வந்துவிடும். C, JAVA விற்காக இந்தியாவில் உள்ளவர்கள் அவ்வளவு செலவு செய்வார்களா என்பது தெரியவில்லை.

நீங்கள் இதனை ஆன்லைனில் செய்யாமல், அங்கேயே மாணவர்களுக்கு ட்யூசன் எடுக்க முயற்சி செய்யலாம். துபாயில் ட்யூசன் எடுப்பதற்கான வாய்ப்புகள் எப்படி இருக்குமென்று எனக்கு தெரியவில்லை.

ஆன்லைனில் மட்டுமே பணி செய்ய இயலும் நிலையில் நீங்கள் இருந்தால், இப்படி தனியாக ட்யூசன் போல் எடுப்பதற்கு முயற்சி செய்யாமல், நிறைய E-learning sites இருக்கின்றது. அவர்கள் ஆன்லைனில் பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி கொடுக்கின்றனர். அவர்களை அணுகி, அவர்களுக்காக பணியாற்றுவது குறித்து கேட்கலாம். இப்போது நிறைய education sites வந்துவிட்டது. கூகிளில் தேடினால் முகவரிகள் கிடைக்கும். தனியாக செய்வதைவிட, இப்படி பணியாற்றுவது எளிதானது.

நீங்கள் இந்த மொழிகளில் நல்ல திறன் பெற்றிருந்தால், ஆன்லைனில் freelancer ஆக பணியாற்றலாம். நிறைய ப்ராஜக்ட்ஸ் இருக்கிறது. எடுத்து செய்தால் நிறைய சம்பாதிக்கலாம். http://www.freelancer.com , http://www.guru.com இதுபோன்ற தளங்களில் பெயர்ப்பதிவு செய்து, ப்ராஜக்ட்ஸ் பெறலாம். ஆரம்பத்தில் சில சிரமங்கள் இருக்கும். ஒன்றிரண்டு ப்ராஜக்ட்ஸ் செய்துவிட்டீர்கள் என்றால், பிறகு உங்களின் மதிப்பு கூடிவிடும். நிறைய ப்ராஜக்ட்ஸ் கிடைக்கும். இதில் நிறைய சம்பாதிக்கின்றார்கள். நல்ல நாலேட்ஜ், கடும் உழைப்பு இரண்டுமே இதற்கு அவசியம்.

ஹாய் பாபு ஸார்,
ரொம்ப நன்றி,ஆனால் எனக்கு புராஜக்ட் வொர்க் பண்ணிய அனுபவம் இல்லை,நீங்க சொன்ன தளங்களில் அதற்கு TRAINING குடுப்பார்களா?என்னால் ஆன்லைனில் மட்டும் தான் சொல்லிகுடுக்க முடியும்,துபாயில் டியூசன் எடுக்க வழியில்லை,TRAINING கற்றுக்கொள்ள ஏதாவது தளம் இருந்தால் தயவு செய்து கூறமுடியுமா பிளீஸ்,தொந்தரவுக்கு மன்னிக்கவும்

ஹாய் பாபு ஸார்,
நான் FREELANCER போயி பார்த்தேன் அதுல Software,I.T வொர்க்ஸ் மட்டும் இல்லாமல்,DATA Entry,Excel மற்றும் இருக்கிறது,இதுக்கு ஏதாவது Training எடுக்கமுடியுமா?எப்படி என்று விவரமாக கூறமுடியுமா பிளீஸ்,இல்லன்னா இந்தியாவில் இருந்து டிரெயினிங் எடுக்க முடியுமா?

அந்த தளங்களில் அதற்கான ட்ரெயினிங் கொடுப்பதில்லை. நீங்கள் தனியாக ட்ரெயினிங் எடுக்கலாம். ஆனால், அந்த தளங்களில் பங்குபெறுவது எப்படி என்பதுபோல் ட்ரெயினிங் இருக்காது. பொதுவாக டேட்டா எண்ட்ரி, எக்ஸல் எல்லாம் கற்றுக் கொள்ளலாம். அதை தாங்கள் அறிவீர்கள். அப்படி கற்றுக் கொண்டு, அதை வைத்துதான் இந்த பணியினை செய்ய வேண்டும்.

ஆன்லைன் டேட்டா எண்ட்ரி வாய்ப்புகள் பெரும்பாலும் ஏமாற்றுதான். உண்மையாய் இருக்கும் ஒரு சில வாய்ப்புகளும் profitable கிடையாது. நீங்கள் தனியாக செய்யும் பட்சத்தில் பெரிதாக எதுவும் சம்பாதிக்க முடியாது. சம்பாதிக்கும் குறைந்த பணத்திற்கு நீங்கள் செலவு செய்த நேரம், பொருள் அதிகமாய் இருக்கும். டேட்டா எண்ட்ரியை ஒரு நிறுவனமாக இருந்து, பெரிய ஆர்டர் எடுத்து செய்தால்தான் ப்ராஃபிட் அதிகம். எனக்கு தெரிந்த வரையில் சிறிய அளவில் செய்தவர்கள், தனியாக செய்தவர்கள் எல்லாம் சிறிது காலம் செய்துவிட்டு விட்டுவிட்டார்கள். இதில் ஏமாந்தவர்களும் நிறைய பேர்.

மேலும் சில பதிவுகள்