சின்ன சின்ன பதிவுகள் - பகுதி 2

நம்ம முந்தைய சின்ன சின்ன பதிவுகள் 98 ஆயிடுச்சு அதான் புது இழை. :)

தமிழ் கத்து கொல்லலாமா??? ;) திட்டாதிங்கப்பா.

நம்ம தமிழ்நாடு வந்தவங்களை வாழ வைக்கும், தமிழை கொல்லும். சும்மா தமாஷா தான் சொன்னேன்... உன் தமிழ் இருக்க அழகுக்கு உனக்கு இது தேவையான்னு நீங்க கூவுறது கேக்குது.

நம்ம ஊர்ல இருக்க பல தமிழ் வார்தைகளை பற்றி தான் பேச போறோம்.

சில வார்த்தைகளும் அதன் அர்த்தமும் இங்கே...

துப்புட்டி'ன தெரியுமா??? போர்வை தாங்க.

அழ்வான் தழ = அழகான தழை - இது வேறு ஒன்னும் இல்லை நம்ம மருதாணி தான். ;)

தோடா = இங்க பாருடா... நக்கலா சொல்றது (கேலியா சொல்றது)

அதுக்கொசரம் = அதுக்காக

தூறு = நுழை

தூந்துட்டியா??? = நுழைஞ்சுட்டியா??

கண்டுகினியா??? = கவனிச்சியா??

கால் அவரு = கால் மணி நேரம்

நவுளு = நவுரு = நகரு

குந்து = உட்காரு

அந்தான்டிக்கா = அந்த பக்கமா

அப்பாலிக்கா = அப்புறமா

ஊட்டான்ட = வீட்டு பக்கம்

எங்குட்டு = எங்க?

சுதானமா = பார்த்து நிதானமா பொறுமையா

அப்பிபுடுவேன் = அடிச்சுடுவேன்

தல சீவு = தல வாரு = தல கட்டு = முடியை கட்டுறது

தண்ணி மோன்டுட்டு வா = தண்ணி கோரிட்டு வா = தண்ணி கொண்டு வா

வய்யாதிங்க = திட்டாதிங்க

வசபாடுதா = திட்டுறா

- ம்ம்... இதுல எனக்கு ஏகப்பட்ட எழுத்து பிழை வருது... ஏன்னா எனக்கும் தமிழ் தெரியல. இன்னும் மிச்சத்தை தெரிஞ்சவங்க வந்து தொடருங்கப்பா.... :((

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா மேடம். தமிழை நல்லா கத்துக் கொல்ரிங்க(கொள்ரிங்க கிடையாதா?)அட்மின் அண்ணாவே என்னைபத்தி ஒரு மெயில் அனுப்பியிருந்தார்.எனது படைப்புகள் நன்றாக இருக்கின்றது.ஆனால் எழுத்துப் பிழை அதிகம் என.ம்ம்ம்ம்ம் பார்க்கலாம்.சப்ப மேட்டர்.நீங்க எப்படி??அட்மின் அண்ணாவின் விருப்பத்திற்கேற்ப்ப பிழைஇல்லாமல் எழுத முயற்ச்சிக்கிறேன்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

சப்ப மேட்டர்??? = சாதாரண மேட்டர் (விஷயம்) ???

ஹஹஹா....

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கம்முனுகட=சும்மா இருக்கவும் இதை மறந்துட்டீன்ங்கலா அக்கா.

கொன்னுட்டீங்க. ;D

‍- இமா க்றிஸ்

//அட்மின் அண்ணாவின் விருப்பத்திற்கேற்ப்ப பிழைஇல்லாமல் எழுத முயற்ச்சிக்கிறேன்//

அட்மின் அண்ணா பண்ற தப்புகளை பெரிய பெரிய தலைகள் எல்லாம் கண்டுபிடிச்சு திருத்திக்கிட்டு இருக்காங்க. (திருத்த முயற்சி செய்யறாங்க..) :-)

உங்களது மற்றும் நிறைய பேரது முதல் பிழை, 'ற்' கு பக்கத்தில இன்னொரு புள்ளி வைச்ச எழுத்து (மெய் எழுத்து) போடுறது. வல்லின 'ற்' கு பக்கத்துல அழுத்தம் கொடுக்க இன்னொரு மெய்யெழுத்து வரக்கூடாது.

கேற்ப்ப - கேற்ப
முயற்ச்சி - முயற்சி

மீதி க்ளாஸ்ஸை நம்ம வனி சிஸ்டர் எடுப்பாங்க. :-)

சஹ்லா... என்னைய தான சொன்னீங்க கம்முனுகட'னு??!! ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இமா... கொல்ல தானே ஆரம்பிச்சேன்... கொல்லாட்டா தான் தப்பு. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அண்ணா... இது "தமிழ் கத்து கொள்வோம்"ல வர வேண்டிய பதிவு... "கொல்வோம்" பகுதிக்கு வந்துட்டுது. இருந்தாலும் நல்லா சொல்லிகுடுத்தீங்க... அதனால் கத்துக்கறேன். :)

//மீதி க்ளாஸ்ஸை நம்ம வனி சிஸ்டர் எடுப்பாங்க// - ஏன் ஏன்??? ஏன் இந்த கொலை வெறி? பாவம் தமிழ்... விட்டுடுங்க. :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்கல சொல்லல பா.சாரி.

மேலும் சில பதிவுகள்