சின்ன சின்ன பதிவுகள் - பகுதி 2

நம்ம முந்தைய சின்ன சின்ன பதிவுகள் 98 ஆயிடுச்சு அதான் புது இழை. :)

தோழி... என்ன சாரி'லாம் சொல்றீங்க?? நான் எப்பவும் இப்படி தானே தமாஷா பதிவிடுவேன். நிஜமா விளையாட்டா தான் கேட்டேன்... தப்பா நினைச்சுக்காதிங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

;D அட்மின் அண்ணாவை விட ஒரு பெரீ..ய தலையா? யாரது!! //(திருத்த முயற்சி செய்யறாங்க..) :-) // ;))
'ற்' 'ப்' - அப்பாடா! இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு. எப்படா வனிதா இப்படி ஒரு இழை ஆரம்பிப்பாங்க என்று யாரோ பார்த்துக் கொண்டு இருந்த மாதிரி இருக்கே!! ;)

//மீதி க்ளாஸை நம்ம வனி சிஸ்டர் எடுப்பாங்க. // நியமனத்துக்கு வாழ்த்துக்கள் வனி சிஸ்டர். ஸ்டூடன்ட்ஸை 'பென்ச்' மேல ஏற்றி வைக்காமல் ஒழுங்கா க்ளாஸ் எடுங்க.

‍- இமா க்றிஸ்

இமா...

ஓகோ... தனியா தான் அண்ணா நம்மை கவுத்துகிட்டிருக்கார்'னு நினைச்சேன்... கூட்டணியில் தான் நடக்குதோ??!!! :( எத்தனை பேரு இப்படி கிளம்பிருக்கீங்க??? வனி பாவம், வனி பாவம்... வேணாம்... அழுதுடுவேன்!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

2 நாள் முன்னாடி கடைக்கு போயிருந்தேன். அங்கு வந்த பெண் கையில் ஒரு குழந்தை. அக்குழந்தை என்னை பார்த்து சிரித்தது... புரியாமல் ஏதோ பேசியது. நானும் பார்த்து சிரித்து என்ன என்று கேட்டேன். அந்த பெண் "அக்கா, தம்பிலாம் எங்க'னு கேளு" என்று குழந்தையிடம் சொன்னார். சரி நம்மை அவருக்கு தெரியும் போல என்று நினைத்து, "நீங்க எங்க தெருவில் தான் இருக்கீங்களா??"னு கேட்டேன். அவர் என்னை ஒரு பார்வை பார்த்தார்... "உங்க வீட்டு பின்னாடி தான் இருக்கேன்" என்றார். :( "பிரியா???". "ஆமாம்" என்றார். கடைகாரர்... ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தார். ஒரு வாரம் முன் தான் வீட்டின் பின் பக்கம் அவரை பார்த்து கால் வலிக்க 1 மணி நேரம் நின்று பேசினேன். அவர் பிள்ளையும் என் பிள்ளைகளும் விளையாடின... அவரை எனக்கு நினைவில்லை என்றால் எப்படி இருக்கும்???!!! "அதுக்குள்ள மறந்துபோச்சா??" என்றார்... "ப்ரியா... பின்னாடி வீட்டில் இருக்குற உங்களை அங்கயே பார்த்தா தான் எனக்கு அடையாலம் தெரியும்... பழகி போச்சு. இங்க பார்த்ததும் தெரியல." என்று அசடு வழிந்தேன்.

இரண்டு நாள் ஆச்சு... வீட்டு பின்னாடி போறதே இல்ல... அந்த பெண்னை பார்க்க வெட்கமா இருக்கு. :(( Very Bad Vani.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னப்பா... யாருக்கும் வேறு தமிழ் வார்த்தை தெரியலயா???

களவாணி பய - திருடன்
கொய்ந்த - குழந்தை ;)
பல்பம் - குச்சி - சாக்பீஸ்

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னான்ட, எங்கைல - என்னிடம்
கூறிக்கினல - சொல்லிட்ட இல்ல
தல - தலைவர்
இம்மாந்துண்டு - சிறிய அளவு
வாயப்பயம் - வாழைப்பழம்

இப்போதைக்கு நினைவிற்கு வந்தவை இவை.

self-confidense is the key to open the door of happiness in your life

Hai Na Gayathri.. Enaku ippa marraige fix aga poguthu... athuku jathagam. paakanum, ana enkita jathagm ilapa... na enn apandra thuunnu enaku theriyala... ennoda pirantha date vachi kooda jathagam elutha mudiyuma...
Sollunga deva madam ....

Na periya penna ana apo eluthina jathagam miss ayiduchi... So what can i do... pls help me friends ....

ஹாய் வனி...

எதாவது துறுதுறுனு செய்துட்டே இருப்பீங்களா? ;-)

நானும் தமிழ் நல்லா பேசுவேன் எழுதுவேன். அட்மின் அவர்கள் கூறிய தவறுகளை கொஞ்சம் கொஞ்சமா சரி செய்துட்டு வரேன்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நான் இருக்கறது பழனி. இங்க பேசற நிறைய வார்த்தைகளுக்கு இப்பதான் நான் அர்த்தம் கண்டுபிடுச்சுருக்கேன். உங்க பார்வைக்கும் சில வார்த்தைகள் இங்கே:

மொட்டு - முட்டை
நத்தம் - ரத்தம்
இங்குட்டு, இந்தால - இந்தபக்கம்
அங்குட்டு, அந்தால - அந்தபக்கம்
ஜோலி - வேலை
மெய்யா - உண்மையா
அப்பலயா - கொஞ்ச நேரத்துக்கு முன்ன
முந்தானேத்து - முந்தின நாள்
இன்னாருக்கு - இவங்களுக்கு
இவுக - இவங்க
அவுக - அவங்க

இன்னும் நிறைய இருக்கு இப்ப நினைவு இல்ல அப்பறமா யோசிச்சு சொல்றேன்.
ஆனா சிட்டி-ல இருக்கவங்கள விட இங்க இருக்கரவங்க ரொம்ப பாசமானவங்க. யார பாத்தாலும் அவங்கள சாமி, கண்ணு, தங்கம்-னு சொல்லி தான் நலம் விசாரிப்பாங்க. அதாவது வா சாமி நல்லாருக்கியா? என்ன கண்ணு நல்லாருக்கீங்களா? ஏன் தங்கம் எப்ப வந்தீங்க? அப்படி தான் பேசுவாங்க இதமாறி பேசி பாத்துருக்கீங்களா எங்க ஊரு பக்கம் வாங்க, நீங்களும் அவங்க அன்புல உருகிருவீங்க...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

டெய்சி... மிக்க நன்றி. சூப்பர சொல்லிபுட்டீங்க. நினைவுக்கு வரும் வார்த்தை எல்லாம் கண்டிப்பா சொல்ல வேணும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்