சின்ன சின்ன பதிவுகள் - பகுதி 2

நம்ம முந்தைய சின்ன சின்ன பதிவுகள் 98 ஆயிடுச்சு அதான் புது இழை. :)

காயத்ரி... ஜாதகம் பிறந்த தேதி, நேரம் சொன்னா எப்ப வேணும்'னாலும் புதுசா எழுதிக்கலாம். ருது ஜாதகம் திருமண பொருத்தம் பார்க்க தேவை இல்லை. உங்களுடைய திருமணம் நல்லபடியா முடிவாக எங்க வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரம்யா... நீங்க கலக்குவீங்கன்னு எனக்கு எப்பவோ தெரியுமே. மெதுவா சரி செய்துட்டு வாங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

லதாவினீ... மிக்க நன்றி. நிஜமாவே நீங்க சொல்லும் உச்சரிப்பு எனக்கு புதுசா இருக்கு. ஒரே ஒருமுறை நானும் பழனி வந்திருக்கேன். அழகான ஊர். இனி வந்தா நீங்க சொன்ன உச்சரிப்புகளை கவனிக்கிறேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Romba Nandri vanitha,,, neenga.. sonnathu emmanasuku romba aaruthala iruku... neega sonna mathiri enaku nalla padiya marriagr fix ana en marriage ku neega kandippa varanum..

தமிழ் நல்லா கலக்குறீங்க பா.
அய்த மகன் =அத்தை மகன்
கொலுந்தேன் =கொலுந்தனார்
எப்படி வ்னிதா அக்கா

காயத்ரி... நான் என்ன... அறுசுவை குடும்பமே வருவோம். பெரிய விருந்து வைக்க வேணும் ;)

சஹ்லா... அய்த்த மவன் சூப்பர். ;) இன்னும் எதாச்சும் நினைவுக்கு வந்தா ஓடியாங்கோ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா இப்ப தமிழையும்............ம்ம்ம்ம்ம்ம்

விசால கிழம = வியாழக்கிழமை
செத்த நேரம் =கொஞ்ச நேரம்
(உபயம் எங்க பாட்டி:))
பாட்டி நினைவு வ‌ந்துடுச்சு.....

இன்னும் ஞாப‌க‌ம் வ‌ந்தா சொல்றேன்...

வ‌னி உங்க‌ பின்னாடி வீட்டு பொண்ணு க‌தை சூப்ப‌ர்:) எனக்கும் இதே மாதிரி நடந்திருக்கு:)

வனிதா மேடம்.
நீங்க ட்ராபிக் கந்தசாமின்டு எழுத அதையே நானும் எழுத நம்ம பேரே அசிங்கமாயிடுச்சு. இஸானி அதை எழுதிய விதத்தில் பைத்தியம் மாறி ரொம்ப நேரமா சிருச்சுட்டே இருக்கேன். எதித்த வீட்டுக்கதையை நீங்க சொன்னதையே இன்னும் என் மனசுல இருந்து மறையல. அதுக்குள்ளையும் இன்னோரு ஜோக்......
(அத பாத்தீங்களா?)

சரி இப்ப உங்க மேட்டருக்கு வரேன்.
இப்போதைக்கு எனக்கு தெருஞ்ச வார்த்தை.
மருதை-மதுரை ( இது எங்க ஊர் பக்கம் சொல்லும் வார்த்தை)
தல்வாணி-தலையணை
சாய்ந்தாரம்- சாயங்காலம்,சாயுங்காலம்
விடியகருக்கால- அதிகாலை பொழுது
ஏன்சீ- ஏன் டீ(பெண்களை கூப்பிடும் போது)
ஏம்புலி- ஏன் டா( ஆண்களை கூப்பிடும் போது)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கருப்பு வெள்ளை தமிழ் திரைப்படங்கள்
யாருக்காவது பழைய படங்கள் சீடி/டீவிடி எங்காவது கிடைக்குமா தமிழகத்தில்...எனக்கு ஒரு பட்டியலும் வேணும்...
தெரிந்தவர்கள் படங்கள் பேர் சொல்லுங்க...
1) கந்தன் கருணை
2) திருவிளையாடல்
3) பக்த மீரா
எனக்கு ரொம்ப தெரியாது.. தெரிந்தவர்கள் சொல்லவும்

//இப்ப தமிழையும்............ம்ம்ம்ம்ம்ம்// - கவி... என்னா சொல்ல வந்தீங்க??? ;) முழுசா சொல்லுங்க. "செத்த நேரம் =கொஞ்ச நேரம்" இதை எங்க வீட்டிலும் அம்மா சொல்லி கேட்டிருக்கேன். நினைவு வந்ததும் ஓடி வந்துடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்