சின்ன சின்ன பதிவுகள் - பகுதி 2

நம்ம முந்தைய சின்ன சின்ன பதிவுகள் 98 ஆயிடுச்சு அதான் புது இழை. :)

இதுல அசிங்கபட என்ன இருக்கு ஆமினா??? ;) இதெல்லாம் அறுசுவைல சகஜமப்பா. பார்த்து இஷானி'கு பதிவே போட்டுட்டேன். நீங்க சொன்னதுல கடைசி 2 வார்த்தை எனக்கு ரொம்ப புதுசு. "ஏல" / "ஏலேய்" - ஆண்களை கூப்பிட பயன்படுத்தி கேட்டிருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

லக்ஷ்மி தேவகி... படம் பெயர் தெரிஞ்சவங்க வந்து சொல்வாங்க. எனக்கு தெரிந்து கிடைக்கும் இடம் சென்னையில்: raj video vision, odyssey, music world இன்னும் நிரைய இருக்கு

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எங்க ஊர்ல- சவுக்கார பொட்டி(சோப்பு பாக்ஸ்) எங்க அம்மாவோட அம்மா சொல்லுவாங்க.கால் மோஜா(சாக்ஸ்)இது எப்படி இருக்கு அக்கா?

எனக்கு பிடிச்ச ஒரு விஷயம்... விளம்பரங்கள் பார்ப்பது. நம்மில் பலரும் டிவி பார்க்கும்போது விளம்பரம் வந்தா அந்த கேப்'ல வேலை பார்க்க அடுப்படி போவோம். வனி கொஞ்சம் வித்தியாசம்... விளம்பரம் முடிஞ்சதும் வேலைய பார்க்க போயிடுவேன். :D அத்தனை விருப்பம் அதை பார்க்க.

முன்னலாம் வந்த விளம்பரத்தைவிட இப்போலாம் ரொம்ப நல்லா வருது. காமெடி, சிந்திக்க வைக்கும் விதமா, சென்டிமென்ட்'அ... இன்னும் நிறைய சொல்லலாம்.

அந்த லிஸ்ட்'ல எனக்கு பார்க்க பிடிச்சது "zuzu vodafone" விளம்பரம். அந்த கேரக்டர் வடிவமைப்பு, அது பேசும் விதம், அதன் சிரிப்பு சத்தம்... சூப்பர்.

ஒரு கார் விளம்பரம் பார்த்திருப்பீங்க... ட்ராஃபிக்'ல மாட்டி நிக்கும் போது ஒரு முரட்டு ஆள் வருவார், பிரெச்சனை பண்ணுவார்'னு நினைக்கும்போது சமாதானம் பேசி ட்ராஃபிக் சரி செய்வார். அதே கார்'கு இன்னொரு விளம்பரம் ரோட்'ல ஏதோ வித்துட்டு இருக்க பையன் ரூபாய் எடுத்துட்டு ஓடுவான், கடைசில சில்லரை கொண்டு வருவான். உருவத்தை, தோற்றத்தை வைத்து மதிப்பிட கூடாதுன்னு. நல்ல சிந்தனை.

இன்னும் பட்டியல் போடலாம். உங்களுக்கு பார்த்ததில் பிடித்தது எது??? வந்து சொல்லுங்க... நாங்களும் தெரிஞ்சிக்கலாம். விளம்பரம் சாதாரண விஷயம் இல்லை... அதுல ஏகப்பட்ட உழைப்பும், creativity'ம் இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தஸ்னீம் (பெயர் சரியா??) ... நீங்க சொன்ன இரண்டும் எனக்கு ரொம்பவே புதுசு. நல்லாவும் இருக்கு. மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்லா இருந்ததா? மிக்க நன்றி அக்கா.என்க்கு பேரிஸ் சுகர் விளம்பரம் ரொம்ப பிடிக்கும்.அது இப்பெல்லாம் போடுவதே இல்லை.அப்புறம் அன்பென்றால் ஆரோக்யா பிடிக்கும்.

எனக்கு"கண்ணா.லட்டு திங்க ஆசையா?,கண்ணா இன்னொரு லட்டு திங்க ஆசையா?'அந்த விளம்பரம் எனக்கு ரொம்ப புடிக்கும்.மனசுக்குள் அடிக்கடி சிரிக்க வைத்தத விளம்பரம் அது வனிதா அக்கா.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஹாய் வனிதா எப்படி இருக்கிங்க.இந்த threadஐ பார்த்து நிறைய புது வார்த்தைகள் கற்றுக்கொண்டேன் ரொம்ப நன்றி பா.எப்படி வனிதா உங்களுக்கும் எனக்கும் ஒரே wave lengthஆ இருக்கு நான் 2 நாளா யோசித்து கொண்டிருந்தேன் இப்படி ஒரு thread ஆரம்பிக்கலாம் என்று முன்னாடியெல்லம் விளம்பரம் என்றாலே செம bore சில பேர் tvஐ off கூட செய்து விடுவார்கள்.( நானுன் அந்த listல் உண்டு)ஆனா இப்போ அப்படியில்லை,என் பொண்ணுக்கு விளம்பரம் என்றால் ரொம்ப பிடிக்கும் அவள் tvயில் பார்ப்பது விளம்பரங்களை மட்டுமே.correctஆ விளம்பரம் முடிந்தவுடன் திரும்பிவிடுவாள்.அவளுக்கு ரொம்ப பிடித்தது popcorn,vodafone(dudu) advertisement,.இன்னும் நிறைய இருக்கு சொல்கிறேன்.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

எனக்கு பிடித்த விளம்பரம்:
ஒரு காலேஜ் பையன் க்ளாஸ்க்கு லேட்டா வருவான். க்ளாஸ்ல பாடம் நடத்திட்டு இருந்த லெட்ச்சரர் வெளிய போ அப்டின்டு சொல்லிக்கிட்டே கூடிட்டு போய்ட்டு ஒரு இடத்தில் நிக்க வைத்துவிட்டு ரூம்மில் புட்பால் மேட்ச் பார்ப்பார். அந்த விளம்பரம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

very very nice

மேலும் சில பதிவுகள்