சின்ன சின்ன பதிவுகள் - பகுதி 2

நம்ம முந்தைய சின்ன சின்ன பதிவுகள் 98 ஆயிடுச்சு அதான் புது இழை. :)

மொதல்ல - முதலில் (இப்ப இது பேச்சு வழக்காவே போயிடுச்சு)
ராதூக்கம் போச்சு - இரவு தூக்கம்.
அம்புட்டுதேன் - அவ்வளவு தான்
நெசமாவா சொல்ற - நிஜமாவா சொல்ற
குந்துங்க - உட்காருங்க
படிச்சு கொடுங்களேன் - சொல்லிகொடுங்களேன்.
இன்னும் நியாபகம் வரும் போது சொல்றேன். என்னதான் சொல்லும் போது ஒரு மாதிரியா இருந்தாலும் அத உச்சரிக்க சுவாரஸ்யமா இருக்குல்ல.

வனிதா, பிரபாதாமு,சோனியா, இமா,கவிசிவா,இலா,யோகராணி,சுபத்ரா, சுபா, வாணி, ராஜீ, ஹைஷ் அண்ணா மற்றும் அனைத்து தோழிகளும் நலமா?

அன்புடன்
மகேஸ்வரி

டஸ்னீம்... "அம்மா வீட்டுல இல்லன்னு சொல்ல சொன்னாங்க" விளம்பரமா???? அரோக்கியா விளம்பரம் எனக்கு இஷ்டம். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஷேக் தம்பி... மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரிஸ்வானா.... உங்க குழந்தைக்கு என்ன வயசு? பாப்கார்ன் விளம்பரம்... மாடியில் இருந்து இரங்குமே ஒன்னு அதுவா??? வோடபோன் விளம்பரம் முக்கவாசி எல்லா குழந்தைக்கும் பிடிக்கும்'னு நினைக்கிறேன்... என்னையும் சேர்த்து ;) ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமினா... இதே போல் மேட்ச் விளம்பரம் airtel'து கூட நல்லா இருக்கும். அப்பா'கு பையன் "என்னப்பா என் வீடு, என் டிவி என் ரிமோட்'னு அம்மா'ட சண்டை... மேட்ச் பார்க்க முடியலயா? வாங்க இங்க இருந்தே பார்க்கலாம்"னு சொல்லுவான். மற்ற airtel விளம்பரம் கடல்ல இருந்துகிட்ட ரீசார்ஜ் பண்ணி லவ்வர்'ட பேசுவது எல்லாமே எனக்கு பிடிக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கௌரி... மிக்க நன்றி. அம்புட்டுதேன்'னு சொல்லும் பழக்கம் எனக்கும் உண்டு. அது என்னவோ கேக்க நல்லா தான் இருக்கு ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மகேஸ்வரி.. நான் நலம். நீங்க நலமா?? அரட்டை பகுதி இல்லாம உங்களை பார்க்கவே முடியலயே... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஏ... மக்கா அந்த மட்டுப்பால கெடக்கற தொவர்த்த எடுத்துட்டு வாயன். அப்படியே உன்னோட அழுக்கு துண்டையும் சாரத்தையும் எடுத்துட்டு வந்துரு. நா ஆத்துக்கு போய் துணி அலசி குளிச்சுட்டு வெள்ளம் கோரிட்டு வரணும். அந்த தட்டத்துல பண்டம் எடுத்து வச்சிருக்கேன். சாப்புட்டுட்டு புழக்கடையில நிக்கற பிலாவுல இருந்து ஒரு பிஞ்சு சக்கய பறிச்சு வை. வந்து புளிக்கறி வச்சு சோறு தாரேன்.

இது எங்க ஊரு பாஷை. புரியாதவங்களுக்கு...

மக்கா- செல்லமாக கூப்பிடுவது
மட்டுப்பால- மொட்டை மாடியில்
தொவர்த்து- துவர்த்து, டவல்
சாரம்- கைலி, லுங்கி
துணி அலசி-துணி துவைத்து
வெள்ளம்- தண்ணீர்
கோரிட்டு- எடுத்துட்டு
தட்டம்- தட்டு
பண்டம்- பலகாரம்
புழக்கடை- வீடின் பின்புறம்
பிலாவு- பலா மரம்
சக்க- பலாக்காய்
புளிக்கறி- ஒரு குழம்பு

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆமாம் வனிதா முன்னாடி மாதிரி இல்ல இப்பலாம் விளம்பரத்துக்காக ரொம்ப மெகனுடறாங்க இல்ல. நல்ல க்ரியேட்டிவிட்டியோட சொல்றாங்க. எனக்கு நிறைய விளம்பரங்கள் பிடிக்கும்.
நீங்க சொன்ன அந்த " கண்ணா லட்டு திங்க ஆசையா" dairymilk shots.
அப்பறம் ஒரு குலாப் ஹாமுன் விளம்பரம் வரும்ல ரேஸ் 2nd வந்துருக்கானாம், ஆமாம் எத்தனை பேரு ஓடுனாங்க? ரெண்டு அது சூப்பரா இருக்கும்.
ரின் விளம்பரம், traffic jam ல ஒரு பையன் சொல்லுவான்ல இன்னும் 2 சக்கரம் தான் அங்கிள் வித்தியாசம் ஒரு நாள் அதுவும் வந்துடும். ரொம்ப confident சொல்லுவான். அது பிடிக்கும்.
ரொம்ப ரொம்ப பிடிச்சது alpenlibe க்கு வரும் ஒரு முதலையும் கஜோலும், சோ க்யூட்.
அடுத்து, i10 விளாம்பரம், சாருக்கான் சொல்லுவார்ல ஒரு பொண்ணு பத்தி வர்ணிக்க சொன்ன அவரு கடைசியா i love i10 னு சொல்லிடுவாரு. அதுக்கு அப்பறம் ஷாருக்கு சொல்றது தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும் can u change name to i10.
இப்படியே நிறையவே இருக்கு, சொல்லிகிட்டெ போவேனே நான் இப்பதைக்கு இது போதும்.

மேலும் சில பதிவுகள்