சின்ன சின்ன பதிவுகள் - பகுதி 2

நம்ம முந்தைய சின்ன சின்ன பதிவுகள் 98 ஆயிடுச்சு அதான் புது இழை. :)

நான் படம் பார்க்குறத விட அட்வடைஸ்மென்ட் பார்க்குறது தான் அதிகம். எனக்கு பிடிச்சதையும் நான் சொல்லவா?

முன்னாடிலாம் வரும் பாப்புலர் அப்பளத்துக்கு குழந்தைகள்லாம் சேர்ந்து சொல்றது ஒரு கடி அப்பளம் ஒரு பிடி சோறு அந்த அட்வடைஸ்மென்ட் நல்லா இருக்கும்.

ஒரு அண்ணனும் தங்கச்சியும் நடந்து வந்துட்டு இருப்பாங்க அப்போ தங்கச்சி சேத்துல விழுதுடுவா, உடனே அண்ணன் போய் சேரு கூட சண்டை போட்டு சாரி கேட்டுச்சினு சொல்லுவான், கறை நல்லது. சர்ஃப் எக்ஸல்க்குனு நினைக்குறேன்.
அப்பறம் வந்து சொல்றேன். இப்ப கொஞ்சம் வேலை செய்துட்டு வாரேன்.

hai வனிதா அக்கா அதேதான்....

இங்கே பொதுவான விஷயங்கள் பேசலாம்னு சொல்லி இருக்காங்க. எனக்கு நிறைய விஷயம் (அறுசுவை சம்பந்தமாதான்) பேசணும்.

எல்லாமே வேண்டுகோள்கள்தான்.

முதலில், நடுவில், முடிவில், இப்போதும் எப்போதும் ஒரு விஷயத்தை அழுத்தமாகக் கேட்டுக் கொள்வது:

எல்லோரும் தமிழிலேயே தட்டச்சு செய்யுங்க. நீங்க இங்கிலீஷில் டைப் பண்றது படிக்கவே முடியலை. என்னை மாதிரி நிறைய பேருக்கு ஒரு நாளைக்கு பல தடவை அறுசுவையை பார்வையிடணும், அப்படி ஒரு பழக்கம், ஆர்வம். அறுசுவையை தோழியாக, உறவாக, நினைத்து, இங்கு வருகிறார்கள். பல டென்ஷன்கள், மன வேதனைகளை மறக்கற ஒரு நல்ல இடம் இது. எல்லா இடத்திலும் பதிவு போட முடியலைன்னாலும் கண்டிப்பாக படிக்க விரும்புவார்கள். உதாரணத்துக்கு நான் நீங்களும் செய்யலாம் பகுதியில் எதுவும் பதிவு போடுவதில்லை. காரணம் எனக்கு ஆர்ட் வொர்க் எதுவும் வராது. ஆனால் அந்தப் பகுதியை வியப்புடன் பார்வையிடுவேன். முன்பெல்லாம் உறுப்பினர் ஆன புதிதில் ஒன்று அல்லது இரண்டு பதிவுதான் ஆங்கிலத்தில் இருக்கும், இப்போ முக்கால்வாசியுமே அப்படி இருந்தால் படிக்க ரொம்ப சிரமமாக இருக்கு. எழுத்துதவி பயன்படுத்தி தட்டச்சு செய்யலாம், NHM writer டவுன்லோட் செய்து கொள்ளலாம், இதன் மூலம் நீங்கள் கற்றுக் கொள்ளலாம்.. ஆரம்பத்தில் எழுத்துப் பிழைகள் வந்தாலும் போகப் போக சரியாகி விடும்.

அடுத்தது, உங்க பதிவோட தலைப்பு – சின்னதாக 2 அல்லது 3 வார்த்தைகளில் இருந்தாதான் டெம்ப்ளேட் மாறாம இருக்கும்னு அட்மின் நிறைய தடவை சொல்லி இருக்கிறார். நாம் தலைப்பை (இரண்டொரு வார்த்தைகளில்)டைப் செய்தால் மட்டும் போதுமாம், அதைத் தொடர்ந்து கமா, ஸ்பேஸ் இதெல்லாம் வேணாம்னு சொல்லி இருக்கிறார். இதையும் எல்லோரும் கவனத்தில் வைத்த்க் கொள்வோம்.

அரட்டை அரங்கம் – அட்மின் இதைப் பற்றி நிறையவே சொல்லி விட்டார், இது அறுசுவை அரங்கமாக இருந்தாலும் நாம அரட்டை அடிப்பதும் இங்கேதான், அதற்கு அனுமதியும் இருக்கு, இருந்தாலும் எதுவுமே அளவோடு இருந்தால்தானே நல்லது. தொலைபேசி எண், இருக்கும் இடம், ஈமெயில் ஐ.டி, இதெல்லாம் இங்கே கொடுப்பதை தவிர்க்கலாம், அப்புறம் ஒரு தலைப்பில் 100 பதிவுகள் வரை வந்துட்டா, அடுத்த புது இழை தொடங்கலாம்.

நாம இங்கே எல்லோருடனும் நட்புடன் பழகுவது ரொம்ப அற்புதமான ஒரு விஷயம். நான் கூட அடிக்கடி வீட்டில் சொல்லிகிட்டு இருப்பேன், உலக சுற்றுப் பயணம் போறதுன்னாலும் கூட தைரியமாக கிளம்பலாம், எந்த நாட்டுக்குப் போனாலும் நம்மை கனிவுடன் வரவேற்கறதுக்கு
அங்கே ஒரு அறுசுவைத் தோழி இருப்பாங்க, அப்படின்னு.

நான் முதன் முதலில் பட்டி மன்றத்தைப் பார்வையிட ஆரம்பிச்சப்போ, நிறைய கருத்துகள் சொல்ல நினைச்சேன், ஆனா நினைக்கிற வேகத்துல எழுத வரலை, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கோர்வையாக எழுதக் கத்துக்கிட்டேன். அங்கே நிறைய பேர் என்னை ரொம்ப நல்லா உற்சாகப் படுத்தி, ஊக்கம் கொடுத்தாங்க. பழைய பட்டி மன்றங்களைப் பார்வையிட்டாலே இது தெரியும். என்னை மட்டுமல்ல, எல்லாத் தோழிகளுமே மற்ற தோழிகளின் படைப்புகளை, அது சமையல் குறிப்பானாலும் சரி, ஆர்ட் வொர்க் ஆக இருந்தாலும் சரி, பாராட்டி, உற்சாகப் படுத்துவாங்க. கேலி, கிண்டல் இருந்தாலும், அது சம்பந்தப் பட்டவங்களே ரசிச்சு சிரிக்கிற மாதிரிதான் இருக்குமே தவிர, புண்படுத்தற மாதிரியோ, வேதனைப் படுத்தற மாதிரியோ இருக்காது. கற்பனை கெட் டு கெதர் பற்றி ஒரு பதிவு இருக்கு, படிச்சு பாருங்க, அருமையான நகைச்சுவைப் பதிவு.

எல்லோருடைய சமையல் குறிப்புகளையும் அனைவரும் சமைத்துப் பார்க்கணும்னு சொல்லி, சமைத்து அசத்தலாம் அப்படின்னு அதிராவும் ரேணுகாவும் எத்தனை பகுதிகள் நடத்தினாங்க, ரொம்ப மகிழ்ச்சியான விஷயம் அது.

இப்போ நான் சொல்லப் போகிற விஷயம் இங்கே ரொம்ப நாளாக வராமல் இருக்கிற நீண்ட நாள் அறுசுவைத் தோழிகளைப் பற்றிதான். அவங்க எல்லோரையும் பார்க்க முடியாமல் ரொம்பவே ஆதங்கமாக இருக்கு.

இடையில் நானும் சில மாதங்கள் அதிகமாக அறுசுவையில் பங்கு பெறவில்லை, இது மாதிரி அப்பப்போ காணாமல் போய் திரும்ப வருவது எல்லோருக்கும் உண்டு, அதற்காக அட்டெண்டண்ஸ் என்று ஒரு தனி இழை கூட இருந்தது.

ஆசியா, ஆயிஸ்ரீ, மனோகரி மேடம், மனோ மேடம், இலா, ஜலீலா, ஹேமா, அதிரா, ரேணுகா, ஸாதிகா, தனிஷா, சுரேஜினி, அஸ்மா, விஜி டிவிஎம், ஷரோன், மேனகா, பிரபாதாமு, உமா ராஜ், சுகன்யாபிரகாஷ், சங்கீதா சிவகுமார், சாந்தோ, உமா, சந்தனா, அமர் அக்பர், ஸ்வர்ணலஷ்மி, அனாமிகா, கவி.எஸ், உத்தமி, மர்ழியா, ஹைஷ், சோனியா, சுபா, திருமதி ஹுசைன், ஹரிகாயத்ரி, துஷ்யந்தி, வத்சலா, ஜெயலஷ்மி, நர்மதா, உத்ரா, கீதாச்சல், செபா அம்மா, கதீஜா, திவ்யா, தேன்மொழி, அம்முலு, ஹர்ஷினி, வாணி, வின்னி,................................. இன்னும் நிறைய தோழிகள் ........................................... இவங்க எல்லோரும் எங்கே? ஏன் யாரும் இங்கே புதுத் தளத்துக்கு வரக் காணோம்? நாம் எல்லோரும் சென்ற வருடம் இதே கால கட்டத்தில் இங்கே எப்படி அரட்டையடித்து, பேசி, சிரித்து, மகிழ்ந்து இருந்தோம்! என்ன ஆச்சு உங்க எல்லோருக்கும்? எல்லோரையும் இங்கு வரும்படி அன்புடன் அழைக்கிறேன். வாங்கப்பா எல்லோரும்!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

நான் சீதாலஷ்மி மேடம் சொல்றதை ஆமோதிக்கிறேன்.... நான் ரொம்ப நாளாவே பார்வையாளராகவே அறுசுவையை பார்த்து வருகிறேன்... சிலமுறை சந்தேகம் இருப்பின் பதிவு எதாவது போட்டு கேட்பேன்.... வீட்டில் தனியாக இருக்கும் எனக்கு நல்ல துணையாக இருக்கிறது அறுசுவை.... ஆனால் இப்பொழுதெல்லாம் பார்வையிடுவதையே குறைத்துவிட்டேன்... 50-60% ஆங்கிலத்தில் எழுதியிருப்பதால் வாசிக்கவே பிடிப்பதில்லை... சமையல் பகுதியை மட்டும் பார்வையிட்டு போய்விடுகிறேன்....

தயவுசெய்து தமிழில் எழுதுங்கள் தோழிகளே....!!! இது ஒரு தமிழ் தளம்.... தமிழர்களாகிய நாமே தமிழில் எழுதாவிட்டால் எப்படி...? இன்டெர்நெட் உலகத்தில் அறுசுவை போன்ற அனைத்தையும் உள்ளடக்கிய தமிழ்தளம் கிடைத்தும் நாம் அதை இப்படி வீணடிக்கலாமா....? தமிழ் மட்டுமே எழுதப்படிக்க தெரிந்த தோழிகள் இருந்தால் அவர்களுக்கு எப்படி ஆங்கில பதிவுகள் பயன்படும்......??? இது அவர்களுக்கு வருத்தத்தை தராதா.....???

பெரிய விஷயம் இல்லையே தமிழில் எழுதுவது.... அதற்குதான் எழுத்துதவியை வைத்திருக்கிறார்கள்..... பழகினால் இரண்டு நாட்களில் சுலபமாக வந்துவிடும்.... அறிவுரை என்று தயவு செய்து நினைக்க வேண்டாம்... ஆதங்கம் தான்.... புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்...

வித்யா பிரவீன்குமார்... :)

ஹலோ வனிதா மேடம்
"சுறுசுறுப்பான தேனீக்களுக்கு துக்கப்பட நேரமில்லை"
இந்த வாக்கியம் எங்கேயிருந்து புடிச்சீங்க, சூப்பரா இருக்கு

அன்பின் சீதாலஷ்மி மேடம்,
நீங்கள் சொல்வது சரி தான். ஆங்கிலத்தில், தங்கிலீஸில் வரும் பதிவுகளை நான் பெரும்பாலும் படிப்பதில்லை. தமிழில் டைப் பண்ணுவது அப்படி ஒன்றும் பெரிய வேலை இல்லை.

நான் தினமும் அறுசுவையை பார்வையிடுவேன். ஆனால், பதிவுகள் போட நேரம் வருவதில்லை. மகனுக்கு ஸ்கூஸ் லீவு, விருந்தினர் வருகை என்று பிஸியாக இருப்பதால் நேரம் தான் பிரச்சினையாக இருக்கு. சிறுகதை எழுதி அனுப்ப வேண்டும் என்று நினைப்பேன். வெகு விரைவில் அனுப்ப வேண்டும்.

தோழிகளே! தமிழிலே எழுதுங்கள். எழுத்துப் பிழைகள் இருந்தாலும் பரவாயில்லை. வெளிநாட்டில் இருக்கும் என் போன்றவர்களுக்கு தமிழ் மறக்காமல் இருக்க உதவுவது அறுசுவையே. ழ், ல், ள் என்ற பிழைகள் வந்தாலும் பரவாயில்லை. யாரும் குறை நினைக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
வாணி

ஆமா வனிதா மேடம்.... எங்கங்க உங்க சிரியா அடுத்த பாகத்தை போடுவீங்க போடுவீங்கனு பாத்துகிட்டே இருக்கேன்.... போடவே இல்லையே....? :(( நீங்க இப்படி படங்களோட போட்டாதான என்னை மாதிரி ஆளுங்க வீட்டுக்காரர்கிட்ட அதையெல்லாம் காமிச்சு ஒரு vacation ட்ரிப் ஆட்டைய போட முடியும்....!!!
;-))

வித்யா பிரவீன்குமார்... :)

கவிசிவா... மிக்க நன்றி. சத்தியமா வேறு ஊரில் இருந்து உங்க ஊருக்கு வருபவர் பாவம்.. ஒரு வார்த்தை கூட புரியல. புத்தம் புதுசா இருக்கு. கேட்க நல்லா இருக்கு. :) சாரம், கோரிட்டு, வெள்ளம், பண்டம், சக்க - இது தான் தெரிந்தது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கௌரி... மிக்க நன்றி. நீங்க சொன்ன குலாப் ஜமூன் விளம்பரம் எனக்கும் ரொம்ப பிடிக்கும். கேட்டு கேட்டு சிரிப்பேன். :)

லக்ஷ்மிஸ்ரீ.. மிக்க நன்றி. உண்மையில் அந்த சர்ஃப் எக்சல் விளம்பரம் சூப்பரா இருக்கும். ;) இப்போலாம் வருவதில்லை. இப்போ பாட்டி பேரன் வரும் '1 நிமிஷம்' கூட நல்லா தான் இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சீதாலஷ்மி... வாங்க வாங்க. நல்ல விஷயங்களை சொல்லி இருக்கீங்க. பெரியவங்க நீங்க சொல்லியாது கேட்டாங்கன்னா சந்தோஷம். இனி தமிழில் இருக்கும் தலைப்புகளை பார்வையிட கூடாது'னு நினைச்சுட்டு இருக்கேன். நீங்க சொன்ன மாதிரி எல்லாரையும் உற்சாகபடுத்துறதுல நம்ம அறுசுவை தோழிகளுக்கு ஒரு சபாஷ் போடலாம். :)

பழைய தோழிகள்... எல்லாரையும் நானும் மிஸ் பண்றேன். அவங்க எல்லாரும் இப்படி ஆங்கிலமும் அரட்டையும் வந்ததால் காணாம போனவங்க தான். இதெல்லாம் இல்லாம தளம் பழைய அழகை பெற்றால் மீண்டும் அனைவரும் வருவார்கள். அது நம்ம கையில் இருக்கு. அதே போல் அவங்களாம் இங்க இருந்தா இப்படிலாம் நடக்காது... அதனால் அவங்களும் வந்து பங்கெடுக்கணும்.

ஆசியா, ஜலீலா இப்பவும் பதிவுகள் போடுறாங்க. வாணி, வின்னி'யும் கண்ணில் படறாங்க. மற்றவரை தான் காணோம்... நீங்க கூப்பிட்டதை கண்டிப்பா பார்ப்பாங்கன்னு நம்பறேன். :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்