சின்ன சின்ன பதிவுகள் - பகுதி 2

நம்ம முந்தைய சின்ன சின்ன பதிவுகள் 98 ஆயிடுச்சு அதான் புது இழை. :)

வித்யா... மிக்க நன்றி. ஆங்கிலத்தில் ஒரு விஷயத்தை சொல்லுவதை விட தாய் மொழியில் சொல்லும்போது அதன் ஆழம் புரியும். அதுக்காகவாது எல்லாரும் தமிழில் எழுதினா நல்லா இருக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கலையன் வாசகம் கேலன்டரில் பார்த்து பிடிச்சு போச்சு... அதான் அறுசுவையில் வந்துட்டுது. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாணி... சீதாலஷ்மி மேடம் கூப்பிட்டதும் ஓடி வந்து சந்தோஷபடுத்திட்டீங்க. மிக்க நன்றி. நேரம் கிடைக்கும்போது வாங்க, கதையும் சீக்கிரம் அனுப்புங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வித்யா... சிரியா தொடர் அண்ணா'ட தான் இருக்கு. அண்ணா சீக்கிரமே போடுவார். நீங்க இப்பவே பிட்ட போட்டு வைங்க வெகேஷன்'கு. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Anbu Vanitha,
ithil naan entha thamizhai katrukolla, chennai thamizhaiya? Thanks... because i learnt Chennai tamil... please change ur title " chennai Tamil Kathukellaam vaanaka".... Summa Srippukku...

Balayoga @ Yoga R. Balasubramanian

கடவுளே... இவ்வளவு நேரமா தமிழில் பதிவு போடுங்கன்னு சொல்றோம், இங்கயே வந்து தங்கிலீஸ்!!!! மாத்தவே மாட்டீங்களா???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பழைய தோழிகள் / மூத்த உறுப்பினர்கள் யாரும் இரவு நேரத்தில் பார்வையிட வந்தால் அவங்க கவனத்துக்கு கொண்டு வர இந்த பதிவு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் சீதாலட்சுமி மேடம்,
எப்படி இருக்கீங்க மேடம்?நீங்க இந்தளவு என்னை மற்றும் தோழிகள் பல பேரின் பெயரை பட்டியலிட்டு அழைத்ததை தற்செயலாக பார்க்க நேர்ந்தது,இதை பார்த்திருக்காவிடில் இந்த பதிவை நான் பதிவு செய்திருக்க முடியாது.
வராமல் இருந்ததற்கு நேரமின்மை என்று சொல்வதை விட எனக்கு நேரம் போதாததே காரணம்.எனக்கு 2வது குழந்தை பிறந்தது முதலே வேலை சரியாக உள்ளது.முதல் குழந்தை யு.கே.ஜி. படிக்கிறாள்.
இருவரிடம் மல்லு கட்டவே சரியாக உள்ளது.இதில் இங்கே வந்தால் கை சும்மா இருக்காது.ஏதாவது பதிவை பார்த்து விட்டால் பதில் போட தோன்றும்.அந்த நேரம் பார்த்து மகன் அழுவான்.நேரம் கிடைக்கும் போது வருவேன்(நேரம் கிடைக்காது நாம் தான் அதை ஒதுக்கி கொள்ளனும்)யாரோ பின்னாடி சொல்வது கேட்குதுபா.
இங்கே வந்து பதிவு போடுமாறு நீங்கள் கேட்டு கொண்டதால் இங்கே போட்டேன்.அனைத்து தோழிகளுக்கும் ஒரு ஹாய்!!!
அறுசுவை மென்மேலும் வளர அட்மினுக்கு எனது வாழ்த்துக்கள்

அன்பு வித்யா

எனக்கும் ஆங்கிலத்திலும் தங்க்லீஷிலும் இருக்கும் பதிவுகளை படிக்கவே முடியல. சரி, ஏதோ ஒன்றிரண்டு பதிவுகள், அல்லது புதிதாக சேர்ந்தவங்க ஆரம்பத்தில் இப்படி எழுதறாங்க, அப்புறம் தமிழில் தொடர்வாங்க என்று நினைத்தேன். ஆனால் - “சமீபத்திய கருத்துகள்” தலைப்பின் கீழ் சில சமயம் எல்லாமே ஆங்கிலத்தில் இருக்கும். தொடர்ந்து பார்வையிடறதுக்கே ரொம்ப சோர்வாக ஆகி விடுகிறது.

கவிசிவா எல்லா இழையிலும் இப்போ பொறுமையாக எடுத்து சொல்லிட்டு இருக்காங்க. நானும் அது மாதிரி செய்யலாம்னு நினைக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வாணி,

ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்க பதிவைப் பார்த்து, ரொம்ப சந்தோஷமாக இருக்கு.

நானும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும், பதிவு போடலைன்னாலும், கண்டிப்பாக பார்வையிடுவேன். தமிழில் இருந்தால்தான் மேற்கொண்டு படிக்கவே தோணும்.

சீக்கிரம் கதையை அனுப்பி வைங்க, படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.

நீங்க சொன்ன மாதிரி, ஆரம்பத்தில் எழுத்துப் பிழை இருந்தாலும், பிறகு சரியாகி விடும். அறுசுவையில் கருத்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் பதிவுகள். அது தமிழில் இருந்தால்தான் எல்லோருக்கும் படிக்கத் தோணும்.

நேரம் கிடைக்கிறப்போ, அப்பப்போ (எத்தனை’ப்’) ஒரு ஹாய் சொல்லுங்க எங்க எல்லோருக்கும், சரியா.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்