சின்ன சின்ன பதிவுகள் - பகுதி 2

நம்ம முந்தைய சின்ன சின்ன பதிவுகள் 98 ஆயிடுச்சு அதான் புது இழை. :)

அன்பு வானதி,

பல நாட்களாக நினைச்சுட்டு இருந்த விஷயங்கள்தான் இது, எந்த இழையில் சொல்வது அப்படின்னு யோசனை, உங்களுக்குதான் நன்றி சொல்லணும், இந்த இழை தொடங்கியதற்கு. தமிழில் பதிவு போடுவதைப் பற்றி ஏறகனவே நீங்களும் ஒரு முறை சொல்லியிருந்தீங்க. இப்போ கவிசிவா ரொம்ப முயற்சி எடுத்து எல்லோர்கிட்டயும் எடுத்து சொல்லிட்டு இருக்காங்க, நன்றி கவி சிவா.

எல்லா தோழிகளையும் நான் எந்த அளவுக்கு மிஸ் பண்றேன்னு எனக்கு சொல்லத் தெரியலை வானதி. எல்லோரும் மறுபடியும் வரணும்னு ரொம்ப ரொம்ப ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சுகன்யா பிரகாஷ்,

உங்க பதிவு, வாணி பதிவு எல்லாம் பார்த்ததும் சந்தோஷத்தில் ‘ஹய்யா’ அப்படின்னு கத்தத் தோணுது. (என்ன செய்ய, வானதி ‘பெரியவங்க’ அப்படின்னு ஒரு வார்த்தை சொல்லி அடக்கி வச்சுட்டாங்க)

குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதுன்னா நமக்கு இன்னும் ஸ்பெஷலாக நாலு கை, இன்னொரு அடிஷனல் 24 மணி நேரம் கிடைத்தாலும் நல்லா இருக்கும்னு தோணும். அதுவும் இப்போ குழந்தைகள் ஸ்கூலுக்குப் போறாங்க அப்படிங்கற போது, நாமும் அவங்களோட உக்காந்து படிக்கணும், சொல்லிக் கொடுக்கணும். உங்க சிரமம் புரியுது. இருந்தாலும் எல்லோரையும் அடிக்கடி இங்கே பார்க்க முடியலையேன்னு ஏக்கமாக இருந்ததால்தான் பதிவு போட்டேன். நீங்க இங்கே பதில் சொன்னது ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

குழந்தைகளுக்கு என் அன்பு.

டேக் கேர்,

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

வனிதா நான் நலம். குழந்தைக்கு இப்பொது தான் 5 மாதம். ஆபிஸ் போக ஆரம்பித்துள்ளேன். அதுதான் அறுசுவைக்கு வர முடிவதில்லை.

சீதாலஷ்மி நலமா?

அன்புடன்
மகேஸ்வரி

நல்ல முயற்சி, பழைய தோழிகள் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுப்போலவே எல்லாரும் வந்தா இன்னும் நல்லா இருக்கும். சுகன்யா, வாணி, மகேஷ் வாங்க வாங்க. என்னையும் நியாபகம் வைத்து கூப்பிட்டதுக்கு நன்றி மேடம். நான் அறுசுவையை பார்வையிட்டு கொண்டு தான் இருக்கேன் ஆனால் பதிவு போட தான் நேரம் இல்லை. அப்பவும் சில இடங்களில் நான் பேசிக் கொண்டு தான் இருந்தேன் நேரம் கிடைக்கும் போது.

எனக்கு தெரிந்த தமிழ் வார்த்தைகள்:
சோமாரகெழம = திங்கள் கிழமை
ஏசரங்க= திட்டுகிறார்கள்
தலகாணி= தலையணை
தொடவி= தடவி
ஒக்காந்தி= உர்கார்ந்து

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

தமிழ் வார்த்தைய சூப்பரா அசத்துறீங்க பா

மிக்க நன்றி, நான் சிங்கப்பூரில் இருக்கிறேன், நாங்கள் சேலம் பகுதி, அங்கு இப்படித்தான் தமிழ் பேசுவார்கள், எப்படி இருக்கு?, யாராவது அவங்க என்ன ஏசராங்கன்னு சொன்னா அவங்க சேலம் என்று நீங்க தெரிந்து கொள்ளலாம்.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

ஹாய் வனிதா,சீதாலஷ்மி.இருவரும் நலமா? வேலை காரணமாக வரமுடியவில்லை. என்றாலும் வரமுயற்சிக்கிறேன்.சீதாலஷ்மி ரெம்ப நன்றி என்னைய ஞாபகம் வைத்து கேட்டதற்கு.
எனக்கும் விளம்பரங்கள் ரெம்பவே பிடிக்கும்.ஆனால் சில விளம்பரங்களைப் பார்க்கும் போது இங்கு(இந்நாட்டில்) வரும் விளம்பரத்துடன் ஒப்பிட்டு பார்ப்பதை தவிர்க்கமுடியவில்லை.சில விளம்பரங்களுக்கு இங்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
விளம்பரங்களில் பாட்டி ஒருவர் காகம் விரட்டுவார்.அதைப் பார்க்கும் பேரன் சட்டையில் சேறு பூசிக்கொண்டு வந்து சோளக்கொல்லைபொம்மை மாதிரி வந்து நிற்பார் .இது எனக்கு பிடிக்கும். நான் நினைக்கிறேன் சோப் விளம்பரம் என.ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்,வோடாபோன்,இப்படி நிறைய. நேரம் கிடைக்கும்போது வந்து கூறுகிறேன்.
சீதாலஷ்மி நானும் உங்களின் கருத்தை வரவேற்கிறேன். நன்றி.

சீதாலஷ்மி பதிவை பார்த்து இத்தனை பேர் வந்து பதிவு போட்டிருப்பது உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. வாணி, மஹேஸ்வரி, சுகன்யா, ஹரிகாயதிரி, ஹேமா, அம்முலு அனைவருக்கும் நன்றி. அடிக்கடி வாங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு மகேஸ்வரி,

உங்க பதிவைப் பார்த்து ரொம்ப சந்தோஷம். அனைவரும் இங்கு நலமே, நீங்களும் உங்கள் உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்,

ஒரு சின்ன புதிர் - உங்க பேரை நான் தினம் தினம் சொல்லிக் கூப்பிட்டுகிட்டே இருக்கேன், தெரியுமா?

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்