சின்ன சின்ன பதிவுகள் - பகுதி 2

நம்ம முந்தைய சின்ன சின்ன பதிவுகள் 98 ஆயிடுச்சு அதான் புது இழை. :)

அன்பு ஹரி காயத்ரி,

எல்லோரையும் இங்கே பார்க்கிறது ரொம்பவே மகிழ்ச்சி, நானும் முன்பு எல்லா இழைகளையும் பார்வையிட்டு விடுவேன், இப்போ இந்த ஆங்கிலப் பதிவுகளாக இருப்பதால், மிஸ் பண்ணி விடுகிறேன்.

அடிக்கடி வாங்க, எல்லோரையும் எனக்கு ஞாபகம் இருக்கு, ஏன் நீங்க எல்லாம் முன்பு போல வரலை என்ற கவலைதான் எனக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு அம்முலு,

ரொம்ப சந்தோஷமாக இருக்கு அம்முலு, நான் தினமும் அறுசுவை பார்வையிடும்போது, நீங்கள் அனைவரும் ஏதேனும் பதிவு போட்டிருக்கிறீர்களா என்று ஆர்வத்துடன் பார்ப்பேன். யாருமே வரலையேன்னு ரொம்ப ஏமாற்றமாக இருந்தது. இப்போ இந்தப் பதிவுகளைப் பார்த்து ரொம்ப மகிழ்ச்சி.

அறுசுவை பழைய மாதிரி கலகலப்பாக இருக்கணும், அதுதான் என் ஆசை.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாலஷ்மி மேடம் உங்க தயவால வராதவங்கெல்லாம் வந்துட்டாங்க....

உங்க மருமகபேரு மஹேஷ்வரியா???(மஹேஷ்வரிக்குக் பதிலாக நான் சொல்லிட்டேன்...):) (ஆர்வக்கோளாறு அதான்....)

சுகன்யா உங்களை ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாள் கழித்து பார்த்ததில் ரொம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷம். 2வது முறை அம்மாவானதற்கு வாழ்த்துக்கள்(சொல்லவேயில்லை), பையன் எப்படியிருக்கார், தேஜஸ் நல்லாயிருக்காங்களா?

ஹரிகாயத்ரி எப்படியிருக்கீங்க பேசி ரொம்ப நாளாச்சு.
மற்ற தோழிகளை பார்த்ததிலும் ரொம்ப சந்தோஷம்.

நானும் பழைய தோழிகளை பார்க்க ஆசையா இருக்கேன், நேரம் கிடைக்கலைனாலும், சீதாலஷ்மி மேடம் சொன்னமாதிரி ஒரு ஹாயாவது சொல்லிட்டு போங்க... (எனக்கும் கம்ப்யூட்டர் கிடைக்கும் நேரத்தில் (நைட் 11 மணிக்கு மேல பதிவுப்போடறேன்,) அதுக்காக நைட் உட்கார்ந்து போடுங்கனு சொல்லல‌, நேரம் கிடைக்குபோது ஒரே ஒரு ஹாய்)

இதுவும் அரட்டை திரட்டா, இல்லைனா விசாரிப்பு திரட்டா மாறிடகூடாதுங்கற பயம் அதிகமா இருக்கறாதுனால இத்தோட நிறுத்திக்கிறேன்:)

எனக்கு பிடித்த‌ விளமபரங்கள்,வோடபோனுக்கு வரும் விளம்பரங்கள்ல் காலப்ப‌ந்து போட்டி பார்க்கறதுக்கு ஒவ்வொருத்தரும் பண்ற வேலைகள், அப்புறம் சூசூ வரும் விளம்ப‌ரங்களில் அம்மா சூ சூ , முகத்தில் எதையோ போட்டுக்கிட்டு உள்ள உட்கார்ந்திருக்கும்,உள்ள போய் பார்த்து ஒவ்வொரு சூ சூவும் கத்திட்டு ஓடி வருமே அது ரொம்ப பிடிக்கும்,இன்னும் நிறைய விளம்பரம் ஞாபகம் வருது, இப்பவே பதிவு ரொம்ப‌ பெருசா போயிடிச்சு ம‌த்ததை அப்புறம் வந்து சொல்றேன்.

ரசனை பற்றி பேசுவோமா??? மனுஷங்க ரசனை எப்பவும் ஒரே மாதிரி இருக்குறது இல்லை... தெரியுமா??

நேற்று வேலைக்கு போகும்போது சுட்ட வெய்யில் இன்னைக்கு தோழியை பார்க்க போகும்போது சுடாது.

தனியா உட்கார்ந்து ரசிக்க முடியாத கடல் அலை என் கனவர் கை பிடித்து நடந்த போது சொர்க்கமாக தெரிந்தது.

சாதாரணமா பார்த்தா பிடிக்காத ரோட்டோர கடை மழைக்கு ஒதுங்கி சூடா ஒரு டீ குடிச்சப்போ பிடிச்சுது.

எத்தனியோ முறை துணி காயப்போட மொட்டை மாடி போனப்போ பார்த்த நிலா காதல் வந்த பிறகு மட்டும் வழக்கத்தை விட அழகாய் தெரிந்தது.

வழக்கமா சத்தமா இருக்க உலகம் திருமணம் நிச்சயம் ஆன பிறகு ஏதோ வெளி உலக சத்தமே இல்லாத மாதிரி உணர்வு தந்தது.

- இப்படி எல்லாமே உலகில் அப்படியே இருக்கும்போது, நம்ம மனநிலைக்கு ஏற்றபடி அது பிடிக்குது, பிடிக்காம போகுது!!!! ரசனை மாறுவது போல மனுஷங்க மனசுல அழகுக்கு இருக்க இலக்கணமும் மாறும். ஒருவருடைய குணம் பிடிச்சு போச்சுன்னா அவங்க எவ்வளவு அசிங்கமா மத்தவங்க கண்ணுக்கு தெரிஞ்சாலும், நம்ம கண்ணுக்கு அழகா தெரிவாங்க. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாங்க கவி... நீங்க சொன்ன zuzu விளம்பரம் நான் இன்னும் பார்க்கலயே... :( எனக்கு அந்த சட்டிக்குள்ள உட்கார்ந்து ஜோக் பார்த்து சிரிக்குமே zuzu... அது பிடிக்கும் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரசனை பற்றிய இந்த பதிவு உண்மையிலேயே ரசிக்கும்படி இருக்கு :-)
தொடர்ந்து கலக்குங்க

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அன்பு கவி,

நிறைய தோழிகள் வந்துட்டீங்க, மிகவும் சந்தோஷமாக இருக்கு. இனிமே அடிக்கடி வாங்க, சரியா.

இப்போ பதிவு போடும்போது டைம் பாக்கறேன், சரியாக 11 மணி! என்ன ஒற்றுமை பாருங்க!

மருமகள் பேரு மகேஸ்வரிதான், கரெக்டாக சொல்லிட்டீங்க, ஒரு வருஷம் முன்னால சென்னையில் நடந்த கெட் டு கெதருக்கு எல்லோருமே போயிருந்தோம்.

நாலைந்து வருடங்களுக்கு முன்னால, மதுரை லோக்கல் சானல்களில் மட்டும் ராஜ்மஹால் விளம்பரம் ஒளிபரப்பானது. confident lookன்னா என்ன அப்படிங்கறதுக்கு அதுல வர மாடல் சரியான உதாரணம். ஜீன்ஸுக்கு பதிலாக பட்டுப் புடவை கட்டிக்கிட்டு, வருங்கால மாமியார் மாமனாரை அசத்துகிற மருமகள் ஆக அந்தப் பெண் வந்தார். கிட்டத்தட்ட ஒலியும் ஒளியும் ரேஞ்சுக்கு எல்லாரும் அந்த அட்வர்டைஸ்மெண்ட்டை ரசிச்சுப் பாத்தாங்க. யு டியூபில் இருக்கான்னு தேடிப் பாக்கணும்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

சீதா லெட்சுமி மேடம் தமன்னா'வ தானே நீங்க சொல்றது? அவங்க முதல் முதலில் வந்த ராஜ்மஹால் விளம்பரம் எங்க ஊர்ல ரொம்ப பேமஸ்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய் சீதா மேடம்,
நான் வந்து பதிவு போட்டதற்கு இத்தனை சந்தோஷம் அடைவதை பார்க்கும் போது எனக்கு ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு.இங்க இப்ப மணி இரவு 1.00 ஆகுது.என்னால் முடிந்த போது அறுசுவைக்கு வருகிறேன்.உங்க படித்தவை ரசித்தவை கூட படிப்பேன்.நீங்க சொல்வதை படிக்கும் போது அந்த புத்தகத்தை இப்பவே படிக்கனும் போலிருக்கும்.நல்லா எழுதுறீங்க.உங்க பணி நன்றாக தொடர என் வாழ்த்துக்கள்.

ஹாய் கவி.எஸ்,
எப்படிபா இருக்கீங்க?ரொம்ப நாள் கழித்து பார்க்காமல் பதிவு மூலம் பேசுவதில் மிக்க........ சந்தோஷம்.உங்க பையன் என்ன செய்றார்?திநேத்ரா தேஜல் ஜலதோஷத்தோட இருக்கிறாள்.அவனுக்கும் ஜலதோஷம்பா.
அப்புறம் மறந்து போயிட்டீங்களா!!!உங்க கிட்ட சொல்லியிருந்தேனே.அறுசுவையில் கூட அச்சமயம் இரண்டாவது குழந்தை ஈன்றெடுத்தவர்கள் சிலர் இருந்தாங்க.அப்போ கிண்டலாய் நீங்க என் கிட்ட கூட கேட்டு இருந்தீங்க.தளிகா,மர்ழியா இந்த லிஸ்டில் உண்டு.தனிஷா கூட எஸ்கேப் ஆனங்க.ஞாபகம் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்,வரலைன்னாலும் ஆ.............ஆமால்ல்ல அப்படின்னு நீங்களே சொல்லிக்குங்க.

ஹாய் வனிதா எப்படிபா இருக்கீங்க?யாழினி நலமா?நல்லா பேசுகிறாளா?

எனக்கு பிடித்தது என்பதை விட என் மகளுக்கு பிடித்த விளம்பரம்,ஒரு குட்டி பாப்பா ஸ்கூல் முடிஞ்சு வரும் போது ஒரு பூனையின் சத்தம் கேட்டு,வீட்டுக்கு எடுத்து வருவாள்.அதனிடம் சத்தம் போடாதே அம்மா பிச்சுடுவா?ன்னு க்யூட்டா சொல்லும்.அந்த சோப் விளம்பரம் ரொம்ப பிடிக்கும்.அந்த விளம்பரம் வந்தா அதை நின்னு பார்த்துட்டு தான் மத்த வேலை அவளுக்கு.

சீதாலஷ்மி... நீங்க சொன்ன விளம்பரம் நான் பார்த்த நியாபகம் இருக்கு. ஆனா ஆமினா சொன்ன மாதிரி தமன்னா'வ அதுன்னுலாம் எனக்கு நினைவில்லை. :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்