டொமேட்டோ கார்விங்

தேதி: June 17, 2010

4
Average: 3.8 (15 votes)

 

டொமேட்டோ கேண்டில் செய்வதற்கு :
தக்காளி
கத்தி
கெட்ச் பென்
மெழுகுவர்த்தி
டொமேட்டோ ரோஸ் செய்வதற்கு :
தக்காளி
கத்தி
புதினா இலைகள்

 

டொமேட்டோ கேண்டில் மற்றும் ரோஸ் செய்வதற்கு தேவையான பொருட்களை தயார்நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
நல்ல அடர்ந்த நிறமுள்ள தக்காளியாக தேர்வு செய்து அதன் அடிப்பாகத்தில் படத்தில் உள்ளது போல் கெட்ச் பேனாவால் வரைந்துக் கொள்ளவும்.
பிறகு வரைந்த டிசைனில் இடைவெளி பகுதியை மட்டும் வெட்டி எடுக்கவும்.
இதழ் போல் வரைந்த டிசைனில் தக்காளியின் தோல்களை மட்டும் மிகவும் கவனமாக சீவவும். பழத்தின் பாதியளவிற்கு மட்டும் தோல்களை சீவி வைக்கவும்.
இப்போது அதன் நடுவில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கவும். ஈஸி டொமேட்டோ கேண்டில் கார்விங் ரெடி.
ரோஸ் செய்வதற்கு தக்காளியின் மேல் பக்கத்தில் கத்தியை வைத்து அதன் தோலை மெல்லியதாக சீவி கொண்டே வரவும்.
ஒரே அளவாக தக்காளியின் அடிப்பாகம் வரைக்கும் சீவி எடுத்துக் கொள்ளவும்.
பிறகு சீவிய தக்காளியின் தோலை மிக சிறிய புனல் வடிவில் சுற்றி கொண்டு படத்தில் உள்ளது போல் வைத்து ஒன்றன் மேல் ஒன்றாக சுற்றி முடிக்கவும்.
இப்போது அடுக்கு அடுக்காக சுற்றிய தக்காளியின் தோலை தலைக்கீழாக திருப்பி வைத்து ரோஸ் இதழ்கள் போல் சரி செய்து விடவும்.
இரண்டு ப்ரெஷான புதினா இலைகளின் மீது இந்த ரோஸ்ஸை வைக்கவும். தக்காளியின் தோலை கொண்டு மிகவும் எளிதாக இந்த ரோஸ் செய்யலாம்.
இந்த கார்விங் செய்முறையை அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் இலகுவாகவுமுள்ளது

திருமதி. செண்பகா பாபு அவர்கள் //தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை.//
வழங்கிக்கொண்டு இருக்கிறார் தானே சரி!! ;))

அழகாக இருக்கிறது செண்பகா. பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

ரஸ்லி உங்க பாராட்டிற்கு ரொம்ப நன்றி.

இமா அம்மா எப்படி இருக்கீங்க? உங்க போல பெரியவங்களின் பாராட்டுக்களும் ஊக்குவிப்பும் தான் இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க வேண்டும் என்று ஆர்வத்தை அதிகரிக்க செய்கிறது(குறிப்பா வால்ஹேங்கிங்:) )ரொம்ப நன்றி அம்மா.

பாபு எப்போதுமே இப்படிதான் அம்மா, நாங்க க்ராப்ட் செய்யும் போதெல்லாம் காமெடி பண்ணிகிட்டே இருப்பாங்க. நாங்க வால்ஹேங்கிங் செய்யறத பார்த்துவிட்டு ஒரு ஹேங்கரைவாங்கி தொங்கவிட்டு அதை வால்ஹேங்கிங்குனு சொல்லி அதையும் அறுசுவையில் போட்டுடாதீங்க என்று கிண்டல் பண்ணாங்க. என்னதான் சொன்னாலும் நாங்க விடுறதா இல்ல இதல்லாம் அரசியலில் சாதாரணப்பா:) நாங்க செய்த எல்லா க்ராப்டையும் பாராட்டவும் செய்வாங்க ஐடியாசும் கொடுப்பாங்க.

senbagababu

செண்பகா... சூப்பர். ரோஸ் முன்னாடி பார்த்திருக்கேன், ஆனா டொமேட்டோ கேண்டில் புதிதாகவும் இருக்கு அழகாவும் இருக்கு. வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செண்பகா ரோஸ் சூப்பர்ப் ரொம்ப அழகா இருக்கு. ரோஸ் கேண்டில் கூட அழகு. அக்கா மகனுக்கு பிறந்தநாள் வருது அதுக்கும் இந்த ரோஸ் கேண்டில் பண்ணலாம்னு இருக்கேன். வாழ்த்துக்கள்.

ஏற்கனவே போதுமான அளவு மாட்டி முழிச்சுக்கொண்டு இருக்கிறேன். :) இன்னும் அதிகமா என்னை மாட்டி விடுற ப்ளானா! ;)
நான் அடுத்த குறிப்புக்கு என்ன ரெடியாக்கி இருக்கிறேன் என்கிறது பாபுவுக்கு எப்படித் தெரிஞ்சுது!! ம். அந்த ப்ராஜெக்ட் இப்போ கைவிட்டாச்சு. ;)

‍- இமா க்றிஸ்

Senbaga ungalota Ideya super

ரொம்ப அழகாக இருக்கிறது. நான் அறுசுவைக்கு புதுசு உங்களுடைய கைவினை மற்றும் கார்விங் எல்லாம் சூப்பர் ஆக உள்ளது. இன்னும் உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்.

சூப்பரா இருக்குங்க....தொடர்ந்து கலக்குங்க..

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

பாப்பி நலமா? உங்கள் இரண்டு வொர்க்கும் சூப்பர்! அந்த ரோஸ் ரொம்ப அழகா இருக்கு!! நானும் இதுபோல் தக்காளி தோலில் ரோஸ் செய்து ப்ரசண்ட் பண்ணியிருக்கேன், ஆனா இந்தளவு ரொம்ப அழகா வந்ததில்லையேன்னு உங்க செய்முறையை கவன‌மா பார்த்ததும்தான் தெரிஞ்சது அந்த அழகின் ரகசியம் :) அதாவது நான் தோலை சீவி, சுருட்டி அப்படியே வைத்துவிடுவேன். அதனால் இதுபோன்ற அழகான வடிவம் கிடைக்காமல் ஏதோ 'ரோஸ்'னு சொல்லிக்கலாம் என்றுதான் இருக்கும். ஆனால் இப்போதான் புரிஞ்சது, சுருட்டிய தோலை தலைகீழா திருப்பி வைத்தால் இவ்வளவு அழகு கிடைக்குமென்று! உங்களைப்போலவே அந்த ரோஜாவும் சிரிக்கிறது :-) பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி பாப்பி :) அம்மா, பத்மா, ரேவதியை கேட்டதா சொல்லுங்கள்!

ஹாய் அப்படி இருக்கிறீர்கள்.நான் அறுசுவைக்கு புதுசு. உங்களுடைய கைவினை மற்றும் கார்விங் எல்லாம் சூப்பர் ஆக உள்ளது. இதுபோல் இன்னும் உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்.

வனிதா எப்படி இருக்கீங்க? குழந்தைகள் எப்படி இருக்காங்க? உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி.

ஹாய் கெளரி எப்படி இருக்கீங்க? நான் உங்களிடம் இப்போதான் முதல் முறையாக பேசுகிறேன். உங்க அக்கா மகன் பிறந்தநாளுக்கு ரோஸ் கேண்டில் செய்ய்து அசத்துங்க:)

/ஏற்கனவே போதுமான அளவு மாட்டி முழிச்சுக்கொண்டு இருக்கிறேன். :) இன்னும் அதிகமா என்னை மாட்டி விடுற ப்ளானா! ;)///ஹிஹிஹி.............
/நான் அடுத்த குறிப்புக்கு என்ன ரெடியாக்கி இருக்கிறேன் என்கிறது பாபுவுக்கு எப்படித் தெரிஞ்சுது!! ம். அந்த ப்ராஜெக்ட் இப்போ கைவிட்டாச்சு. ;)/ சும்மா தானே சொல்றிங்க:)

உங்க பாராட்டிற்கு ரொம்ப நன்றி sudhanthira.

ஹாய் ரகிமா எப்படி இருக்கீங்க? அறுசுவையில் புதுவரவாக இருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன். என்னை பாராட்டியமைக்கு ரொம்ப நன்றி.

ஹாய் இளவரசி எப்படி இருக்கீங்க? வீட்டி அனைவரும் நலம் தானே? உங்க பாராட்டிற்கு ரொம்ப நன்றி.

ஹாய் அஸ்மா எப்படி இருக்கீங்க? வீட்டில் அனைவரும் எப்படி இருக்காங்க? இங்க எல்லோரும் நலம். உங்களுடன் பேசி ரொம்ப நாளாகுது. முதல் முறை நானும் நீங்க சொல்வது போலதான் செய்தேன். எதர்ச்சியாக ரோஸை திரிப்பி பார்த்ததும் தான், அது ரோஸ் மாதிரி இருந்தது. எப்போ ரோஸ் செய்யும் போதெல்லாம் திரிப்பி வைத்துதான் செய்றது. /உங்களைப்போலவே அந்த ரோஜாவும் சிரிக்கிறது :-)/ என்ன அஸ்மா இப்படி சொல்லிட்டீங்க உண்மையாவா:) உங்க பாராட்டிற்கு ரொம்ப நன்றி அஸ்மா.

senbagababu

அன்பு பாப்பி! இங்கு அனைவரும் நல‌மே! இப்படி தலைப்பு போட்டால் உடனே பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கை, அதான் :))

// /உங்களைப்போலவே அந்த ரோஜாவும் சிரிக்கிறது :-)/ என்ன அஸ்மா இப்படி சொல்லிட்டீங்க உண்மையாவா:) // உண்மையாவேதான் பாப்பி! நான் சொன்னால் நம்ப மாட்டீங்களா? :) பாப்பி, ஒண்ணு சொல்லவா? கவிதைக்கு பொய் அழகு என்பார்கள். என்னைப் பொறுத்தவ‌ரை அந்த கவிதை அழகாவே இல்லாட்டாலும் பரவாயில்லை, அதில் பொய்யாக எதுவும் கலக்காமல் எழுதணும் என்றுதான் நினைப்பேன். அப்போ உங்க சிரிப்பை மட்டும் பொய்யாக சொல்வேனா என்ன? :) வேண்டுமென்றால் உங்கள் டொமேட்டோ ரோஸை கேட்டுப் பாருங்கள், நீ என்னை மாதிரியே சிரிக்கிறாயாமே என்று :-)

அய்யோஓஓ.. சாமி.. தாங்க முடியலையேடா..

ஆஹா! அஸ்மா. ;))) உங்கள் தலைப்பு யாரையெல்லாம் கவர்ந்திருக்கிறது பாருங்கள். ;))

நானும் பொய் சொல்ல மாட்டேன். உண்மையாகவே கோட் ஹாங்கரைத் தூக்கித் தூரப் போட்டாயிற்று செண்பகா.

‍- இமா க்றிஸ்

ஆமா இமா, இதோ பாருங்களேன்... சில பேருக்கு காதுல புகை கிளம்புது :))

பாப்பி, அதையெல்லாம் கண்டுக்காதீங்க :‍) ரொம்ப கலாய்ச்சா, அழகிய கொரில்லா செஞ்சு ஆபீஸ் ரூம்ல மாட்டி தொங்கவிட்டுடுவேன்னு கொஞ்சம் மிரட்டி வையுங்க :)))

செண்பகா மேடம், ரொம்ப அழகா இருக்கு tomato rose.....

Hai mam.

i saw your craft tomato rose is superb mam...

kalakurenga.. ponga...


இப்படி சாப்படர ஐடத்தை எல்லாம்
அழகாக்கினா அதை சாப்புட தோணுமோ!

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.........................

(ஒண்ணுமில்லை. புகை வரது பொறாமை தாங்காமதான்.
நேக்கு இதெல்லாம் சாப்புடதான் தெரியும்.)

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

hi shen akka,
unga orange and tomato carving awsome. idhellam neengalae try panneengala illa kathukiteengala

எங்களுக்கல்லாம் பாத்து ரசிக்கத்தான் தெரியும் ம்ம்ம்ம் அழகாக இருக்குப்பா

வித்தியாசமான சிந்தனை வாழ்த்துகள். செண்பா நீங்கள் முன்பு பார்த்ததை விட இப்பொழுது ரொம்ப வித்தியாசமாக இருக்கீங்க. உங்கள் குறிப்பு எல்லாமே சூப்பர். வாழ்த்த வார்த்தைகள் இல்லை.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

சென்பகா நீங்கலும் அழகு உங்க கய் வன்னமும் அழகோ அழகு

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta