அட்மின் மற்றும் பிரண்ட்ஸ்

ஹாய் தோழிகளே மற்றும் அட்மின் சார்,நான் சாப்ட்வேர் படித்திருக்கேன்,கல்யாணத்திற்கு பிறகு இந்த 6 வருஷமா சும்மாதான் இருக்கேன்,படித்தது கூட மறந்து விட்டது,Googleலில் வெப் டிசைன் செய்து கொடுத்து சம்பாதிக்கலாம்னு கேள்விப்ட்டேன்,எனக்கு Html மட்டும் தெரியும்,நன்றாக வெப் டிசைன் பண்ண என்ன என்ன சாப்ட்வேர் படிக்கனும்னு சொல்லுஙளேன் பிளீஸ் மேலும் நான் வெளிநாட்டில் வசிப்பதால் இங்கு படிக்கமுடியாது,நெட்டில் இருந்து வெப்டிசைன் பற்றி படிக்கலாமா?தயவு செய்து ஹெல்ப் பண்ணுங்க?வேலை பார்க்கணும்ங்கிறது என்னோட கனவு
தயவு செஞ்சு யாராவது உதவி பண்ணுங்க

வெப் டிசைனிங் செய்ய HTML மிகவும் அவசியம். ஆனால், இன்றைய தேதிக்கு அது ஒன்று மட்டும் போதாது. Scripting languages எதாவது தெரிந்திருக்க வேண்டும். சர்வர் சைடு கோடிங்கிற்கு இப்போது இரண்டு லாங்வேஜஸ்தான் அதிகம் பயனில் உள்ளது. ஒன்று PHP மற்றொன்று ASP. இதில் எதாவது ஒன்றை கற்றுக்கொள்ளுங்கள். PHP open source என்பதால், இலவசமாக கிடைக்கும். அது சம்பந்தமான நிறைய ஓபன் சோர்ஸ் டூல்களும் இலவசமாக நெட்டில் கிடைக்கும். ஒரு டேட்டாபேஸ் சாப்ட்வேர் தெரிந்திருந்திருக்க வேண்டும். MySQL கற்றுக்கொள்ளுங்கள். இதைத்தவிர Flash, JavaScript போன்றவையும் கற்றுக்கொள்ளலாம். நீங்களே முழு தளத்தையும் வடிவமைக்கப் போகின்றீர்கள் என்றால், போட்டோஷாப் மாதிரியான இமேஜ் எடிட்டிங் சாப்ட்வேர் ஒன்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். Dreamweaver மாதிரியான டூல் பற்றி தெரிந்துகொண்டாலும் மிகவும் உபயோகப்படும்.

கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் நிறைய இருக்கின்றது. ஒரு சில அடிப்படை விசயங்கள் நமக்கு நன்றாக தெரிந்து இருந்தால், எந்த லாங்க்வேஜ்ஜையும் ஒரே வாரத்தில் எளிதாக கற்றுக்கொள்ளலாம்.

இப்போது நெட்டில் எல்லாவற்றிற்கும் இணைய தளங்கள் இருக்கின்றன. நீங்கள் கற்றுக் கொள்ள நினைக்கும் அனைத்திற்கும் tutorial/guide நெட்டிலேயே கிடைக்கும். எதை கற்றுக் கொள்ள விரும்புகின்றீர்களோ அதை கூகிளில் கொடுத்து தேடிப் பாருங்கள். ஒவ்வொன்றிற்கும் ஆயிரக்கணக்கான தளங்கள் இருக்கும். படித்து நீங்களாகவே கற்றுக் கொள்ளலாம்.

வேலை பார்ப்பது உங்கள் கனவாக இருப்பதால், படித்துவிட்டு அது சம்பந்தமான வேலை எதாவது ஒன்றிற்கு செல்லுங்கள். ஆன்லைனில் சம்பாதிக்கின்றேன் என்று நேரத்தை வீணாக்க வேண்டாம். வேலைக்கு சென்றுகொண்டு, ஆன்லைன் வாய்ப்புகளை முயற்சி செய்யலாம்.

மேலும் சில பதிவுகள்