சீம்பால் உடம்புக்கு நல்லதா?

ஹாய் தோழிகளே

எனக்கு சீம்பால் ரொம்ப புடிக்கும். நான் கிராமத்துல இருக்கரதால நிறைய சீம்பால் கிடைக்குது ஆனால் என் அம்மா(என் கணவரின் அம்மா) அத சாப்பிட கூடாது அதுல கண்டதும் கலந்து இருக்கும் அத சாப்பிட்டா வயுறுவலி தான் வரும் சிலருக்கு சேராதுன்னு சொல்லி வீட்டுக்குள்ளயே கொண்டு வர கூடாதுன்னு சொல்லிட்டாங்க. சொல்றது அவங்களாச்சே வேற வழி இல்லாம நானும் அத வாங்காம குடுத்து விட்டுட்டேன்.

எனக்கு என்ன சந்தேகம்னா நான் கேள்வி பட்ட வரைக்கும் சீம்பால் உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னும் அதுல நிறைய சத்துக்கள் இருக்குன்னும், குழந்தைகளுக்கு தாராளமா குடுக்கலாம்னும் ஆனா அம்மா இப்படி சொல்றாங்க எது உண்மை?

தயவுசெய்து சொல்லுங்க தோழிகளே அடுத்த முறையாவது ஆசைதீர சாப்பிடனும்... ஹி ஹி ஹி.
-------------------------------------------------------------------------------------

இருப்பதின் அருமை இல்லாத பொளுது தெரியும்

அன்புடன்
லதாவினீ.

ஹாய் லதா ,
ரொம்ப நல்லதுபா, கண்டிபா சாப்பிடுங்க. பயப்பட வேண்டாம் அத சாப்பிட்டா எதுவும் ஆகாது. நான் சாப்பிட்டு இருக்கேன்பா.
குழங்தை பிறந்தா எப்படி உட்னே தாய்பால்(சீம்பால்) குடுக்க சொல்றாங்க. அது குழங்தைக்கு ரொம்ப நல்லது. அது மாதுரிதா சீம்பால் உடம்புக்கு ரொம்ப நல்லதுபா.

லதா சீம்பால் குளுமைனு சொல்லுவாங்க. எங்க ஊருல பால் காய்ச்சும் போது குருமிளகு சேர்த்து காய்ச்சுவாங்க. நான் நல்லா சாப்பிடுவேன். இது நாம செய்யிற புட்டீங்ஸ் மாதிரி தான் இருக்கும்.

Don't Worry Be Happy.

ஆமாம் லதா சீம்பால் உடலுக்கு ரொம்ப குளுமைய தரக்கூடியதுன்னு தான் நானும் கேள்விபட்டுருக்கேன். அம்மா இருக்கிற வரை அவங்க சொல்லும்படி கேளுங்கபா அவங்க மனசு கஷ்டபடாமல் இருக்கனும்ல, அவங்க ஊருக்கு போனாப்பறம்னா சாப்பிடுங்க. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அனிதா நீங்க வேற சொல்லிட்டீங்கள எனக்கு சாப்பிடனும் போல இருக்கு. நீங்க எப்படி லதா செய்து சாப்பிடுவீங்க?

அடடா என்னங்க லதா சீம்பால நியாபகம் படுத்திட்டீங்க சின்ன வயசுல சாப்பிட்டது அப்போ யாரு கண்ட அது நல்லதோ கெட்டதோ அதன் சுவை நல்லா இருக்கும் பால்கோவா மாதிரியே. நிறைய சாப்பிட்டு இருக்கேன். ஆனால் இப்பதான் யோசிக்க தோணுது.

லதா,

சீம்பால் ஆரோக்கியத்துக்கு மிகவும் ஏற்றது. மேல் நாட்டில் இந்த சீம்பாலில் இருந்து மாத்திரைகள் வடிவில் சாப்பிட ஏற்றதாக மாற்றி விற்பனை செய்கிறார்கள்.
www.firstmilking.com என்ற வெப்சைட் போய்ப் பாருங்கள்.

நாம எப்பவுமே வெளி நாட்டுக்காரங்க கண்டுபிடிச்சு சொன்னாதானே ஏத்துக்குவோம்:):)

அன்புடன்

சீதாலஷ்மி

SEEPAL KODUTHAL THAN NAMADU NATTU PENKALUKKU AZHAHU POIVEDUMAY

ஹெல்லொ நஷ்லீம்,
மாடு கன்று போட்டன்ன கொடுக்கிற சீம்பால் பத்தி தான் இங்க பேசறோம். மாடும் அழகாதான் இருக்கு.
நம்ம நாட்டு தாய்மார்கள் அவங்களும் அழகாதான் இருக்காங்க.

Don't Worry Be Happy.

சாரி தோழிகளே நான் உங்க கிட்டலாம் சொல்லாம போனதுக்கு...

உங்க பதில் பாத்து ரொம்ப சந்தோஷம். சரிங்க லக்‌ஷ்மி அவங்க இல்லாதப்ப பன்னி சாப்பிட்டுக்கரன்...

நாளைக்கு எப்படி பன்ரதுன்னு சொல்லரன் இப்ப நான் கெளம்பரன்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

மேலும் சில பதிவுகள்