சுளுக்கு problem--- Please, help me

சுளுக்கு அடிக்கடி இடுப்பில் வருகிறது. இது muscle problem or nerves problem? அதுக்கு வீட்டு வைத்தியம் இருந்தால் தெரிந்தவர்கள் please, சொல்லுங்கள் .

அறுசுவையில் ஏற்கனவே இதைக்குறித்து வேறு ஏதாவது த்ரெட் இருக்கிறாதா என்று தேடியபோது கிடைத்த இந்த த்ரெட்‍ஐயே உபயோகப்படுத்திக்கலாம் என்று இங்கே எழுதுகிறேன்.

தோழிகள் தங்கள் கருத்துக்களையும் உங்களுக்கு தெரிந்த, முயன்று பார்த்து பலன் அடைந்த வீட்டு குறிப்புகளையும் சொல்லுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

விஷயம் என்னவென்றால், என் கணவருக்கு அடிக்கடி இடுப்பு, அல்லது கழுத்து+ தோள்பட்டை பகுதியில் பிடித்து கொள்கிறது. இதை சரியா, சுளுக்கு என்று சொல்வதா, இல்லை வாயு பிடிப்பா என்று எனக்கு தெரியவில்லை. திடீரென்று அப்பப்ப இதைப்போல வந்து ரொம்ப அவதிப்படுகிறார். காரணம் என்னவென்றே கண்டுபிடிக்க முடியவில்லை.

வழக்கமா, தினமும் ஒரு பெயின் கில்லர் (Advil) போட்டுட்டு, பெங்கே (BENGAY) ஆய்ன்மெண்ட் தேச்சிட்டு படுத்தா, ஒரு இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து கொஞ்சம் குணம் தெரிகிறது. இதற்கு நடுவில் கொஞ்சம் தும்மல் ஏதாவது வந்து விட்டாலோ, அல்லது கொஞ்சம் குலுங்கி சிரித்தாலோ ரொம்ப அதிகமா பிடித்துக்கொண்டு ரொம்ப வலிக்கிறது. அதிர்ந்து நடக்கக்க்கூட முடியாமல் மெல்ல அடியெடுத்து வைத்து நடக்கிறார். பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.

இங்கே இருக்கும் டாக்டர்ஸ் இடம் பலமுறை சென்று பார்த்தும் ஆகி விட்டது. எப்பவும் ஒன்றுமில்லை என்று பெயின் போவதற்கு மருந்து கொடுக்கிறார்கள். ஒரு முறை ரொம்ப பெயின் வந்து போனபோது, நன்றாக முழு பரிசோதனை செய்து, எக்ஸ்ரே, கிட்னி டெஸ்ட் எல்லாம் செய்து எந்த பிரச்சனையும் இல்லை, எல்லாம் நார்மல். இது வெறும் மஸில் புல் (Muscle pull) என்று ஒரு ஊசி போட்டு, கூட மருந்தும் எழுதி கொடுத்து அனுப்பினார்கள்.

எங்க அப்பாவும் அப்பப்ப, ஊரிலிருந்து, ஆர்த்தோ குயூர், மகாராஜா முதுகுவலி தைலம், ஐயோடக்ஸ் என்று அவருக்கு தெரிந்தவர்கள் சொல்லியதின் பேரில், ஏதாவது வாங்கி அனுப்புகிறார். ஆனால், இதெல்லாம் வலி, பிடிப்பு வந்தபின், தடவ. இருந்தாலும், அப்புறம் சில நாட்கள் வலி படுத்திவிட்டுதான் போகிறது.

ஆனால், இது எதனால் வருகிறது? இது போல தோழிகள் யாராவது கேள்விப் பட்டு இருக்கிங்களா? இது வாயுத்தொல்லை பிரச்சனையால் வருகிறதா? நான் சமையலில் அவ்வப்போது பெருங்காயம் சேர்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். உருளைக்கிழங்கு சேர்ப்பதையும் நன்றாகவே குறைத்து இருக்கேன்.

வேறு என்ன மாதிரி இதற்கு வீட்டு வைத்தியம் செய்யலாம்? ‌தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன், ப்ளீஸ்.

அன்புடன்
சுஸ்ரீ

To dear susri Happy new year 2011. for you and for
your husband and the rest of your family.
After finishing all the tests in English medicine line it is
better to go to a very good Varma treatment which is a part of sidha
treatment. Some hit or blow on any part of the body of your husband may be the reason for this probelem.
So pl. don't delay . Go soon to a best varma doctor and start the treatment. Best of luck. And I pray GOD for the speedy recovery
for your husband.
Best of luck.
Anbudan poongothaikannammal.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

pls help me for my child. en paiyanuku 1 year aguthu. oru nalaiku 4 times motion poran. what's the reason for that? how to stop it? Doctor gave medicne for that but that is no use. what kind of food can i give for him to stop this motion.pls reply me.

ஹய் அருசுவை தோழிகள்,

அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.தோழி சுஹி சொன்னது போல கடந்த இரு வாரங்களாக இடுப்பு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றேன். நான் சார்ஜாவில் இருக்கின்றேன் இங்கு தற்போது குளிர் ஆரம்பித்து விட்டது.வைத்தியரிடம் போனபோது ஒரு பிரச்சினையும் இல்லை குளிர் காரணமாக ஏற்ப்பட்ட வலி தான் என்று மாத்திரை கொடுத்தார், மாத்திரை குடித்து ஓரளவு சரியானது, எனினும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளியில் போய் அதிகாலை வரை குளிரில் இருக்க வேண்டிய சூழ்நிலை வந்து விட்டது. கூட இடுப்பு வலியும் வந்து விட்டது.இப்போ என்னால் நேராக நிற்கவும் முடியவில்லை, நடக்கவும் முடியவில்லை,இதே பிரச்சினை என் நண்பிக்கும் கொஞ்ச நாள் முன்னாடி இருந்தது இப்போ பூரண சுகமாகி விட்டது. அடுத்த வாரம் எக்ஸாம் இருக்கு தோழிகளே இதில் இருந்து சீக்கிரம் சுகம் பெற என்ன மாதிரியான உணவுகள் சாப்பிட வேண்டும்,ஏதாவது வீட்டு வைத்தியம் உண்டா என்று தயவு செய்து தெரிந்தவர்கள் சிரமம் பாராது கூருங்கள் தோழிகளே.அறுசுவை தளத்தில் அனுபவசாலிகள் பலர் இருப்பதை நான் அறிவேன். நேரமின்மையால் உங்களுக்கு நான் அறிமுகம் இல்லா விடினும் கூட உங்கள் ஆலோசனைகளை தினம் தினம் படித்து பயன் பெற்றதில் நானும் ஒருத்தி.பிறந்திருக்கும் இப்புத்தாண்டில் மேலும் பல வளர்ச்சிகளை காண அறுசுவைக்கும்,நோய் நொடிகள் இன்றி பல்லாண்டு காலம் வாழ எமது அறுசுவை நேயர்களுக்கும் எனது பிரார்த்தனைகளும்,வாழ்த்துக்களும்.

என்றும் அன்புடன்,
ரூபி.

வணக்கம் ரூபி, எனக்கும் இந்த தொல்லை இருந்தது, தோழி ஒருத்தி பால் பவுடரை சும்மா வெருமனவே சாப்பிட்டுக்கொண்டிருக்க சொன்னால், நண்டு சாப்பிட சொன்னால். நானும் செய்தேன். வலி விட்டது. ஆனால் காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதையானு எனக்கு தெரியாது.
ஆனால் நண்டு சதையிலும், பால் பவுடரிலும் calcium சத்து அதிகம் நு எனக்கு தெரியும்

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

ஹய் சுஜி,

வணக்கம்,உடனே பதில் அனுப்பினதுக்கு ரொம்ப நன்றி,கண்டிப்பா பால்மா சாப்பிட்டு பார்க்குரேன்.நண்டு வாங்க கொஞ்சம் கஷ்டம் விஜி இங்க.பால்மா சாப்பிட்டு பலன் என்னன்னு சொல்றேன், ரொம்ப நன்றி.

அன்புடன்,
ரூபி

என் கேள்விக்கு ஏதாவது பதில் வந்து இருக்கிறதா என்று பார்க்கலாமென்று வந்தேன். நிச்சயம் நான் நினைத்தது தவறாகவில்லை.

பூங்கோதை,
உங்களின் புது வருட வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. அலோபதி எதுவும் ஒத்து வராததால், வேற ஏதாவது ட்ரை பண்ணலாம் என்ப‌து நல்ல யோசனைதான். என்ன, இந்தியா போகும்போதுதான் எது ஒண்ணுமே முயற்சிக்க முடியும். மறுபடியும் மிக்க நன்றி.

அனிதா சுஜி,
உங்க பதிலுக்கும் மிக்க நன்றி. ரூபி சொன்னதுப்போல குளிரில் அதிகம் இருக்கும்போது எல்லாம், அவருக்கும் இப்படி பிடித்துக்கொள்வது உண்டு. பால் பவுடர், நண்டு - ‍ பால் பவுடர் ‍ வீட்டிலேயே இருக்கு. அவர் சாப்பிடறதுதான் முடியுமான்னு தெரியலை. ஏன்னா, அவர் பால் (பசும் பால்) சேர்த்துக்கறதே இல்லை. டீக்கு எல்லாம் கூட ஒன்லி சோயா பால்தான். அதற்கு பதில் தயிர் நிறைய சேர்த்துக்கொள்ள செய்கிறேன். நண்டு ‍- நாங்க செய்து சாப்பிடுவது கிடையாது.
இது இரண்டுமே கால்சியம் உள்ள உணவுகள்!. அப்ப பொதுவா கால்சியம் சத்துள்ள உணவு வகைகளை நிறைய சேர்த்துக்க‌றதும் நல்லது இல்லையா? கட்டாயம் உங்க யோசனையை முயற்சி செய்து பார்க்கிறேன். மீண்டும் ஒருமுறை உங்க பதிலுக்கு நன்றி.

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் சுஜி,
எப்படி இருக்கீங்க? முதல்ல உங்களுக்கு ஒரு பெரிய நன்ன்றி.................. நீங்க சொன்ன மாதிரியே பால்மா சாப்பிட்டேன் என்ன ஆச்சிரியம் இன்னைக்கு இடுப்பு வலி நல்லாவே குறஞ்சிருக்கு.இப்போ என்னால் நல்லா நடக்கவும் முடியுது. என்ன கொடுமைனா என்னோட பால்மா சுத்தமா முடிஞ்சிட்டது ஹிஹிஹி..... சாப்பிட கொஞ்சம் கஷ்டம் தான் ஆனாலும் வலி கொடுமைக்காக அளவு பார்க்காமல் அதிகமாகவே சாப்பிட்டேன்.
எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல சுஜி உங்களுக்கு. பலருக்கு தெரியாத ஒரு வீட்டுக்குறிப்பை கொடுத்தமைக்கு மிக்க நன்றி.எனக்கும் இது புது அனுபவம்.

அன்புடன்,
ரூபி

Dear srija valzthukkal.for the new year 2011..

For your son
It is natural for the child for four times a day according the food which your are giving and what he takes, Anyway you can give him Oma water
which you can buy in departmental stors are in Naatu marundu kadai.
And if you buy Omam seeds take three teeaspoons check in that there is any stones and if you find remove them and fry the Omam in a kadai without oil
till it becomes just like charcoal. And make it as powder and keep it in bottle. And take two pinch from that powder and mix with honey and
make the child to chew that and make him to swollow . Repeat this for
three times a day. it will clear all kinds of problems related the food
and gas problems and for any digetion problems. It will regularisethe
motion problems.

Try this. It is for us also in the same method .
Anbudan poongothaikannammal.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

To dear srija Happy new year 2011.

You can give the child Omam water. You can buy this in nattu marundu kadai. Or You can buy the Omam seeds in Nattu marundu kadai or any maligai kadai. Take two table spoon Omam fry that just like charkool without
adding oil in a kadai. And make powder and keep it in bottle.. Take two
pinches from that omam powder and mix it in Honey and spread it in the
tongue of the child and make him to swallow it. You can repeat this three
times a day. It will control the motion problems which ever may be the
cause ( gas / uncooked foods/ or unwanted foods / or heat problems) it will clear. You can give this once in three days only one time. It is
enough for the child. You can give this medicine for all without the
age bar. It is a very good medicine for the stomach problems for the
ageold people.
Best of luck.

Anbudan poongothaikannammal.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்