பீட்ரூட் வடை

தேதி: June 23, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

பீட்ரூட் - ஒன்று
கடலை பருப்பு - அரை கப்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 3
சின்ன வெங்காயம் - 15
உப்பு - 3/4 தேக்கரண்டி
கொத்தமல்லி - 5 கொத்து
கறிவேப்பிலை - 2 கொத்து
இஞ்சி - அரை அங்குலத் துண்டு


 

பீட்ரூட்டை துருவி வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடலை பருப்பை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
மிக்ஸியில் ஊற வைத்த பருப்பு, சோம்பு, மிளகாய் வற்றல், இஞ்சி துண்டுகள், உப்பு, சோம்பு போட்டு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த பருப்பை போட்டு அதனுடன் நறுக்கின சின்ன வெங்காயம், துருவிய பீட்ரூட், கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்றவற்றை தயாராக எடுத்துக்கொள்ளவும்.
பின் இவை அனைத்தும் ஒன்றாக சேரும்படி பிசைந்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த மாவை ஒரு பெரிய எலுமிச்சை பழ அளவு எடுத்து உருட்டி வாழை இலை அல்லது ப்ளாஸ்டிக் கவரில் வைத்து தட்டி எண்ணெயில் போடவும்.
திருப்பி விட்டு 3 அல்லது 5 நிமிடம் கழித்து வெந்ததும் எடுத்து விடவும்.
சுவையான பீட்ரூட் வடை ரெடி. இந்த குறிப்பை அறுசுவை நேயர்களுக்காக செய்துக் காட்டியவர், திருமதி. கலா ரவிச்சந்திரன் அவர்கள். சமையலில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். அனைத்து வகையான சைவ உணவுகளையும் சுவைப்பட தயாரிக்கக் கூடியவர். திருமணத்திற்கு பின் தன்னுடைய நாத்தனாரிடம் தான் சமையல் கற்றுக் கொண்டார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

திருமதி கலா மேடம்,பீட்ரூட் சேர்த்து வடை செய்திருப்பது மிகவும் வித்தியாசமாக இருக்கு.நிச்சயம் சாப்பிடவும் மிகவும் நன்றாகவே இருக்கும் போல் தெரிகின்றது.
இப்படியும் குழந்தைகளுக்கு சத்தானதாக கொடுக்கலாம்.
நல்ல குறிப்பு கொடுத்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

கலா மேடம்,
ரொம்ப புதுமையா பீட்ரூட்டில் வடை செய்து இருக்கீங்க
கண்டிப்பாக செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்
மேலும் பல குறிப்புகள் தர மனமார்ந்த வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ரொம்ப புதுமையான குறிப்பா இருக்கு மிகவும் health thi டிப்ஸ் கண்டிப்பா செய்து பாக்குறேன் மேடம்

shanu