தேதி: June 24, 2010
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பனீர் துண்டுகள் - ஒரு கப்
பீஸ் - அரை கப்
வெங்காயம் - 2
தக்காளி - 1
மிளகாய்த்தூள் - ஒன்று தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - ஒன்று தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒன்று தேக்கரண்டி
ஃப்ரஷ் க்ரீம் - 2 தேக்கரண்டி
எண்ணெய் அல்லது பட்டர் - 7 தேக்கரண்டி மற்றும் பொரிக்க
மல்லிதழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பீஸ் ஃப்ரஷ்ஷாக இருந்தால் வேக வைத்து கொள்ளவும். ஃப்ரோஸனாக இருந்தால் சுடுநீரில் சிறிது நேரம் போட்டு வைத்து விட்டு பிறகு கழுவி எடுத்து வைக்கவும்.

பனீரை சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை அரிந்து மைக்ரோவேவ் ஹையில் இரண்டு நிமிடங்கள் வைத்து எடுத்து அரைத்துக் கொள்ளவும். (தண்ணீர் விடாமல் இருப்பதற்க்காக) அதே போல் தக்காளியை சுடுநீரில் போட்டு தோல் நீக்கி அரைத்து (டொமெட்டொ ப்யூரி)வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் அல்லது பட்டர் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ந்ததும், அரைத்த வெங்காய விழுதுடன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து எண்ணெய் ஓரத்தில் வரும் வரை வதக்கவும்.

பின்பு அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை சேர்த்து அதே போல் வதக்க வேண்டும்.

அதன் பிறகு மிளகாய்,கரம் மசாலா தூள் வகைகள் மற்றும் பீஸையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

மூன்று தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி மூடி போட்டு சிம்மிலேயே ஐந்து நிமிடம் வைத்திருக்கவும்.

பின்பு வறுத்த பனீர் துண்டுகளை சேர்த்து ஒரு கிளறு கிளறி சிறிது நேரம் வைத்திருக்கவும்.

ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் நேரம் க்ரீமை சேர்த்து நன்கு பிரட்டி விட்டு பொடியாக நறுக்கின மல்லி தழைகளை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.

சுவையான மட்டர் பனீர் மசாலா ரெடி. இது சப்பாத்தி, நாண், ஜலீலா அவர்களின் குபூஸ் இவைகளுக்கு மிகவும் நல்ல காம்பினேஷனாக இருக்கும்.

Comments
அப்சரா மேடம்,
அப்சரா மேடம்,
இது எனக்கு ரொம்ப பிடித்த மசாலா இது வரை எப்படி செய்வது என்று தெரியாது இப்போது அழகான குறிப்பாக நீங்க சொல்லிடீங்க கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் மேலும் பல குறிப்புகள் தர மனமார்ந்த வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்,
கவிதா
Dear Appsara
ஃப்ரஷ் க்ரீம் ன, என்ன க்ரீம் பெயர் சொல்ல முடியுமா?கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.
sharmila