தேவா,ரம்யா மற்றும் தோழிகளே

தோழிகளே எனக்கு தலை குளிக்கும் அன்று மற்றும் எண்னெய் தேய்க்கும் அன்று முடி அளவுக்கு அதிகமாக கொட்டுகிறது,மற்ற நாட்களில் பரவாயில்லை,தலைக்கு குளிக்கும் முன்பு எது அப்ளை பண்ணினாலும் அதாவது எலுமிச்சை சாறு,தேங்காய்பால்,எண்ணெய்,வெந்தயம்,மருதாணி எது அப்ளை பண்ணினாலும் முடி தலைக்கு குளிக்கும் போது அதிகமாகத்தான் கொட்டுகிறது.முடி குறைந்து கொண்டே போகிறது.அதேபோல் தலைகுளித்த பிறகு மறுநாள் எண்ணெய் தேய்க்கும் போதும் அதிகமாக கொட்டுகிறது,யாராவது வழி காட்டுங்களேன்தயவு செய்து 1 தீர்வு கூறுங்கள் பிளீஸ்

same pinch

நீங்க எங்க இருக்கிங்க?உங்களுக்கும் இதே பிரச்சனை தானா?

ஹாய் மஞ்சு...

நீங்கள் மருத்துவரை சந்திப்பது நல்லது என நினைக்கிறேன்.எனெனில் எதை பயன்படுத்துனாலும் முடி கொட்டுகிறது என கூறுனீர்களே.

தேவாவின் குறிப்புகளை படித்து பொடுகு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் பொடுகு இருந்தால் எதை யூஸ் செய்தாலும் முடி கொட்டும். ஈரத்தலையில் சீவாதீர்கள்...

பிறகு தேங்காய்பால் நான் உபயோகபடுத்தும் ஒரு முறை.மற்றப்படி எனக்கு தேவா அளவுக்கு ஒன்றும் தெரியாது.எனவே நீங்கள் தேவா பெயருடன் என் பெயரை சேர்த்து என்னை பெரிய ஆள் ஆக்கிவிட்டீர்க்ளே..;-) அவர் மலை என்றால் நான் மடு... தேவா அவர்களே உங்களுக்கு கூறுவார்கள்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்