மனதளவில் கஷ்டபடுகிறேன். ஆலோசனை சொல்லுங்கள் ப்ளீஸ்,,,,,

ரொம்ப நாளா இதை பத்தி இங்க எழுதலாமான்னு நினைச்சேன். மனசுக்குள்ளயே இருக்கறதை யார்கிட்டயாவது சொன்னா ஒரு வழி கிடைக்கும் இல்லையா, நிறைய அனுபவம் உள்ளவங்க இருக்கிங்க. உங்க வீட்டு பொண்ணா நினைச்சி எனக்கு நல்ல ஆலோசனை சொல்லுங்க ப்ளிஸ். நான் ஹிந்துவில் இருந்து முஸ்லீம் மதத்திற்கு கன்வர்ட் ஆகிட்டேன். நான் முஸ்லீம் மதத்தை சேர்ந்த ஒருவரை விரும்பினேன். நாங்கள் இருவரும் விரும்பினாலும் மதம் எங்களுக்கு தடையா இருந்திச்சு. அவருடைய வீட்டில் இதற்கு ரொம்ப எதிர்ப்பு தெரிவிச்சாங்க.ஒரு ப்ரெண்டா அவங்க வீட்டுக்கு திருமணத்திற்கு போயிருக்கேன். அவர் வீட்டிற்கும் என்னை பற்றி நன்கு தெரியும். ஒரு ப்ரெண்டா ஏத்துக்கிட்ட அவங்களால அவங்க வீட்டு மருமகளா ஏத்துக்க முடியலை. அதற்கு அவங்களையும் குறை சொல்ல முடியாது. இந்த சமுதாயம் அப்படி. அவருக்காக தான் ஆரம்பத்தில் கன்வர்ட் ஆக நினைத்தேன். ஆனால் புனிதமான இஸ்லாம் மார்கத்திற்கு வந்த பிறகு அதோட உண்மையை புரிஞ்சிக்கிட்டேன். எனக்கு இஸ்லாத்தில இருக்க ஈடுபாடை பார்த்து அவருக்கும் நம்பிக்கை வந்தது. பிறகு அவரின் தங்கையின் கணவரிடம் என்னை பற்றி கூறினார். அவர்களும் என்னுடன் பேசி என்னை தன் தங்கையாக ஏற்றுக் கொள்வதாகவும் என் திருமணத்திற்கு அவர்களால் முடிந்த உதவி செய்வதாகவும் கூறினார்கள். அவர் வீட்டிலும் என்னை பற்றி பேசினார்கள். 3 வருட போராட்டத்தில் இந்த மாதம் அவர்கள் வீட்டிலும் சம்மதம் தெரிவித்தனர்.

என் குடும்பத்திலும் என் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். நான் இப்போது சென்னையில் இருக்கிறேன். உடன் என் தம்பி இருக்கிறார். இருவரும் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறோம். என் வருமானம் வீட்டு வாடகை மற்ற அத்தியாவசிய செலவுக்கே கரெக்டா இருக்கு. முஸ்லீம் வீட்டுல எந்தளவுக்கு நிக்காஹ் பன்னுவாங்கன்னு உங்க எல்லாருக்கும் தெரியும். இந்த 3 வருசத்தில என் செலவு போக 5 சவரன் நகை மட்டுமே சேர்த்து வைத்திருக்கிறேன். இன்சுரன்ஸ் ஒரு 30000 மட்டுமே என் சேமிப்பில் இருக்கிறது. அவர் வீட்டிற்கு அவர் ஒரே மகன். அவர்கள் என்னிடம் எதையும் கேட்கவில்லை. அப்படி இருக்க வீட்டிற்கு தேவையான அத்தியவசிய பொருட்கள் மற்ற செலவுகளை இவர் பார்த்தாக வேண்டும்...

குறைந்தது 10 சவரன் நகைகளோடும் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களோடு இன்ஷா அல்லாஹ் அவர் வீட்டிற்கு மருமகளாக போக வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் அதற்கு இப்போது என்னிடம் வசதியில்லை. திருமணத்திற்கு இது சரியான வயது. எனக்கும் எல்லோரையும் போல வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்ற ஆசை இருக்கு, இதுவே நான் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்திருந்தால் எனக்கு என் பெற்றோர்களே முன் நின்று அனைத்தையும் செய்து எனக்கு நிக்காஹ் செய்திருப்பார்கள். ஆனால் நான் இப்போது ஒரு அனாதை போல் இருக்கிறேன்.

அவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். நினைத்த போது இந்தியா வரமுடியாது. திருமணம் இந்த வருடத்தில் நடத்தினால் தான். பிறகு அவர் திரும்பி வர குறைந்தது ஒன்றரை வருடமாகும். அவ்வளவு நாள் தாமதம் செய்ய அவருக்கும் விருப்பம் இல்லை. திருமணத்திற்கு பிறகு அவர் இங்கேயே இருந்து பிஸினஸ் செய்ய விரும்புகிறார். ஆனால் அதற்கும் முதலீடு வேண்டும். என்ன செய்றதுன்னு தெரியாம தவிச்சிட்டு இருக்கோம். அவருடைய வருமானமும் என்னை போல் வரவுக்கும் செலவுக்குமே சரியாக உள்ளது.

பேங்கில் லோன் எடுக்கலாமா??? அதற்கு எப்படி அனுக வேண்டும்? திட்ட அறிக்கை எப்படி தயாரிக்க வேண்டும் என்று யோசனை கூறுங்கள்...

கன்வர்ட் ஆன புதுசுல எனக்கு ஜமாத் முலமாகவே க்ளாஸ்க்கு ஏற்பாடு பண்ணினாங்க. எனக்கு க்ளாஸ் எடுத்தவங்களுக்கு திருமணம் நிச்சியமாகவும் என்னால க்ளாஸ் continue பண்ண முடியல. இந்த தளத்தில முஸ்லீம் ப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இருக்கிங்க. எனக்கு தொழுகையும் சில சிறிய சுறாக்கள், துஆக்கள் மட்டுமே தெரியும், குரான் ஓத தெரியாது. எனக்கு யாராவது ஹெல்ப் பண்ண முடிஞ்சா எனக்கு ஓத சொல்லிக் கொடுங்க். IRGC ங்கிற ஒரு இடத்துக்கு போனேன். அங்க உருது ல தான் சொல்லிக் கொடுக்கறாங்க, வேலைக்கு போயிட்டு நேரம் இல்லாததால என்னால அங்க போக முடியலை.

எனக்கும் 3 வருடமாக இதே போல் வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வந்து தனிமையான இந்த வாழ்க்கை ரொம்ப கஷ்டமா இருக்கு. என் தம்பி என்னுடன் இருந்தாலும் என் வருங்கால கணவரோட குடும்பத்தோட இருக்கனும் ஆசை படுறேன். இந்த தளத்தில நிறைய அனுபவம் உள்ளவங்க இருக்கிங்க. ப்ரெண்ட்ஸ் எனக்காக துஆ செய்யுங்கள். நான் என்ன பண்ணட்டும்??????? எனக்கு ஆலோசனை சொல்லுங்கள்.

neenaga avanga mathathai pathi padicha than avorada kalyanam pani vaipenu solrangale.unga amma appa unga lover namma hindu mathathai padicha thaan thirumanam seithu vaipenu sonnangana avaru seivara.neenga avarukaga wait panrathu waste.unga amma appa pakra maapilaya thiruman senju nallapadia valaparunga.

நீங்கள் நினைப்பது போல் அவர்கள் என்னை கட்டாயப்படுத்தவில்லை, நானாக விரும்பிதான் இந்த மதத்திற்கு மாறினேன். யாரும் வற்புறுத்தவில்லை. என் கடந்த கால வாழ்க்கை அப்படி. எனக்கு அம்மா இல்லை. நான் சிறு வயதில் இருக்கும்போதே அம்மா தவறிட்டாங்க. அப்பா கடந்த 10 வருடத்திற்கு முன்னாடி மறுமணம் செய்துக்கிட்டாங்க. சித்தியும், அப்பா அவர்களின் மகள் முவரும் தனியாக சென்று விட்டார்கள். எந்த வித ஆதரவும் இல்லாம இருந்தப்ப என் அத்தைதான் எங்களை பார்த்துக்கிட்டாங்க. நான் போஸ்ட் ஆபிஸில் ஏஜெண்டாக இருந்தேன். அதை வைத்துதான் நாங்கள் வாழ்க்கை நடத்தி கொண்டு இருந்தோம். எந்த வித வருமானமும் இல்லாம யாருடைய ஆதரவும் இல்லாம கஸ்டப்பட்டிட்டு இருந்தப்ப அவர் தான் எனக்கு நிறைய உதவி செய்தார். நான் இன்னைக்கு சென்னைக்கு வந்து நல்லா இருக்கேன்னா அதுக்கு காரணமே அவங்கதான். இது என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். அதனால் தான் என் விருப்பத்தை சொன்னபோது என் அத்தை உன்னோட வாழ்க்கையை நீ விரும்பினபடி அமைச்சிக்க. உனக்கு யாரும் இல்லைன்னு சொன்னாங்க. அப்பா மறுமணம் செய்துக்கிட்டதாலயும் எங்களை விட்டுட்டு தனியா போயிட்டதாலயும் எங்க உறவினர்கள் யாரும் எங்ககிட்ட பேசுறதில்லை. என் கடந்த கால வாழ்க்கை பத்தி சொல்லனும்னா .... அதையெல்லாம் மறந்திட்டு இப்போ ஒரு நல்ல நிலைக்கு வந்திட்டு இருக்கோம்.

Love is Life Beautiful

anbu thozhi yasmin avargale neengal innum ungal kalyanathai talli poduvadu nalladu illai innum ettanai nalaiku tanimaiyaga irupinga mudalil kalyanam seiydu ungaluku oru kudumbathai tedi kolvadu than ungaluku padukapum nalladum kooda iru veetu samadamum irukum pode thirumanam seidukunga unga familyo illa avar familyo manam marvadarku vaipu ulladu so neenga late pannadina quran ooda niraya edatil sollitarughiralgal neenga unga varungala purusan veetil kooda ketu terenjukalam avargar veetil nagai eduvum ketkavillaiye adanal tamadikamal nikkah seiynga allah ungaluku eppovum tunaiyaga irupan inshallah apuram nam arusuvai il ulla anaitu muslim thozhi galum ungalukaga dua seiyrom

neenga unga appa amma pathina vivaram sariya kudukathaal thavara purinjukiten.neenga kaila irukra nagaya vachu epothaiku thirumanathai mudichurunga.nagai ellam adambaram athu serum bothu kadeepa serum.avanga veetla than ketakavilai illaya. na arranged marriage en husband govt staff enga amma appa enaku 10 pavun than potanga but marriage after kastapatu nanum enkanavarum atha 20 pavuna sethutom.so nagaigaka marriage thalli podatheenga ma.first kalyanathantha pannunga.
aprama neenga kooduthal salary thara madiriyana job thedunga.side businessa seetu pidipathu,vatiku panam kodupathu intha mari seyalam.valkaila konjam konjama than muneranum.loan vangi business arambikal negative aiduchuna namala thanga mudiathu so. konjam konjam arambichu peria levela kondu poganum

3 வருடத்திற்க்கு பிறகு உங்க காதல் வெற்றி பெற்றதற்கு என் வாழ்த்துக்கள். உங்க காதல் உண்மையானது என்பதற்கு இத்திருமணம் தான் சாட்சி. கவலை கொள்ள வேண்டாம். இறைவன் மீது பாரத்தை போடுங்கள். அவன் பார்த்துக்கொள்வான்.

ஆன்லைன் வழியா சொல்லி கொடுப்பது பற்றி தெரியாது. ஆனால் நீங்களே முயற்சி செய்யலாம்.'எர்சனல் குரான்' தமிழாக்கத்தில் உள்ளது. அது மட்டும் கற்றுக்கொண்டால் போதும்.பின் நீங்களே பெரிய குரான் ஓதும் அளவுக்கு முன்னேறுவீர்கள்.தமிழ் விளக்கத்துடன் கூடிய 'தொழுகும் முறை' புத்தகத்தை பார்த்து அதன் செய்முறைகளை பின்பற்றலாம்.

நீங்கள் மதம் மாறி இருப்பதால் உங்களுக்கு தேவையான வசதிகளை (நீங்கள் யார் மூலம் மதம் மாறினீர்களோ) அவர்களே செய்து கொடுப்பார்கள். பண விசயத்தை கூட அவர்களிடம் சொல்லுங்கள். வட்டியில்லாத கடன் வசதி கொடுக்கிறார்கள்.(முஸ்லீம் பெண்கள் சுய உதவி குழு). அதன் மூலம் பயன் பெறலாம்.

தங்களின் நிலை பற்றி முதலிலேயே உங்கள் காதலரிடமும், அவர்கள் தங்கையின் கணவரிடமும் சொல்லி ஆலோசனை கேளுங்கள். அவர்கள் அதை பற்றி என்ன அபிப்ராயம் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

தேவையில்லாத வங்கி கடன் உங்கள் வாழ்க்கையை பதம் பார்க்க வாய்ப்பு உண்டு. ஆதலால் முடிந்தவரை கடன் வாங்குதலை தவிர்க்கவும்.

ஆடம்பரம் இல்லாமல் நடக்கும் திருமணங்களும் உண்டு.அவ்வாறு நடத்துவதை பற்றி யோசிக்கலாம்.
நீங்கள் காதலித்து திருமணம் செய்ய உள்ளதால் நீங்கள் தான் எல்லா வேலையும் செய்ய கூடிய சூழ்னிலைக்கு தள்ளப்பட்டுள்ளீர்கள் என்பது உங்கள் பேச்சிலேயே புரிகிறது. 3 வருசம் கஷ்ட்டப்பட்டாச்சு.இன்னும் கொஞ்ச நாள் தானே. பொறுத்துக்கோங்க. நீங்கள் தாங்கும் ஒவ்வொரு வலியும் உங்களை பக்குவமாக்கும். இறைவன் துணை இருப்பான்.

மேலும் யாராவது உங்களுக்கு நல்ல கருத்துக்களை வழங்குவார்கள்.காத்திருக்கவும்.

LOVE IS A WONDERFUL MOVEMENT. DONT MISS IT.
அன்புடன்
ஆமினா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

hi yasmin
assalamu alaikum...
நல்லா இருக்கிங்களா... நீங்க quran onlineல கற்றுக்கொள்ளலாம். http://quranexplorer.com/Quran/Default.aspx,http://www.tamililquran.com/quranaudio.aspஇந்த websitesல் கற்கலாம் இன்னுமொருwebsite இருக்கு ஞாயபகம் வந்ததும் அனுப்புகிரேன். உங்கள் திருமண நல்ல படியாக நடக்க வாழ்த்துக்கள்.தோழிகள் சொல்வதுபோல கடன் எல்லாம் வாங்காம குடும்பம் நடத்துங்க.முதலில் கஷ்டமா இருக்கும் போக போக சரியாகிதும்.insha allah எல்லாமே நல்லதாவே நடக்கும்.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

உங்கள் பதில் எனக்கு தைரியத்தையும் நம்பிக்கையும் கொடுக்கிறது. இன்ஷா அல்லாஹ் கூடிய சீக்கிரமே நல்லது நடக்கும்னு நம்புறேன்.

Love is Life Beautiful

வலைக்கும் சலாம். உங்க குழந்தை நல்லா இருக்காங்களா.

நீங்க அனுப்பின வெப்சைட் ஏற்கனவே பார்த்திட்டேன். www.arabic.speak7.com வெப்சைட் பார்த்து கொஞ்சம் கத்துக்கிட்டேன். எனக்கு இப்போ சின்ன சின்ன சூராக்கள் தெரியும். புத்தகமும் வைத்து இருக்கிறேன். தைஸ்சுரல் குரான் வைத்து இருக்கிறேன். சில உச்சரிப்பு மாறுபடும். அதை முறைப்படி கற்க வேண்டும். இன்ஷா அல்லாஹ் நீங்கள் சொன்ன வெப்சைட் பார்த்து திரும்பவும் கற்றுக் கொள்ள முயற்சி செய்கிறேன்.

Love is Life Beautiful

ஹாய் சலாம் யாஸ்மின்...உங்கள் திருமணம் இனிதாக நடைபெற இறைவனை பிரார்த்திக்கிறேன்....http://onlinemadarasa.blogspot.com/search/label/Basic%20Duas
http://myrizwan.wordpress.com/dua/...indha site parungal.../
fathima

yasmin, mulu mariyathaiyoda poganum athu unga viruppam. but, kaiyila kasu illai. yasmin, unga problem thila en problem yabagam varuthu. en marriage la en husband veetil naagai ethuvum vendam, ponnu thanthal pothum. but marriage mudicha 2nd day avuga ketathu, nagai pathalai. yasmin, after marriage, namaku husband thaan important. so, neega unga lover kitta unga situation solluga. nagai eppothu vedumanalum vangalam, neega first marriage selavuku arrange pannuga. ethuva iruthalum lover kitta discuss pannuga. ena, amma illama, appa athavurum illama nama irukummpothu namaku ore thunai husband thaan. ethuvum thappa irunthal pl mannichuduga friend.

மேலும் சில பதிவுகள்