பிரார்த்தனை

இந்த உலகில் எத்தனையோ சகோதரிகள் பல விதமான பிரச்சினைகளால் கஷ்டப்படுகிறார்கள். நாம் ஏன் ஒரு பிரார்த்தனை குழு ஆரம்பிக்க கூடாது. யாருக்காவது பிரர்ர்த்திக்க வேண்டும் என்றால் எழுதுங்கள். கடவுளால் ஆகாதது ஒன்றும் இல்லை.

hai banu
how are u?உங்கள் பிரச்சனை என்ன என்று தெரியவில்லை. என்ன பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு தீர்வு இருக்கும். மனக்கவலையும், மன அழுத்தமும் உடல் உபாதையை ஏற்படுத்தும். உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முயலுங்கள். தீர்வு ஏற்பட நீண்ட நாட்கள் ஆகும் என்றால் அதை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்காமல் சமாளித்து வாருங்கள்.எப்பொழுதும் பிரச்சனையை பற்றி யோசிக்காமல் மனதை திசை திருப்புங்கள். கடவுள் மீது பக்தி என்றால் கடவுள் பற்றி சிந்தியுங்கள். அல்லது செடிகள், அமைதியான இசை, புத்தகம், குழந்தைகளோடு நேரத்தை செலவிடுங்கள். பிரார்த்தனை பண்ண சொன்னால் இவள் ஏன் இப்படி போரடிக்கிறாள் என்று எண்ணாதீர்கள். பிரார்த்தனையோடு இதை செய்தால் உங்களுக்கு மன அமைதி ஏற்படும். உங்களின் மன அமைதிக்காக நானும் இவர்களோடு பிராத்தனை செய்கிறேன்.
உங்களுக்காக அருசுவை தோழிகள் அனைவரும் உள்ளோம். எப்பொழுது வேண்டுமானாலும் பேசுங்கள்.
அன்புடன்
சுஜாதாசுதாகர்

hai janaki,
how are u? i see ur answer just now. i am fine pa.

நான் உம. அறுசுவையில் இணைந்து ஒரு வாரம் தான்
ஆகிறது. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரை
விளான்குடியில். திருமணம் முடிந்து 13 வருடங்கள்
ஆகிறது. ஒரு பையன் 11 வயது.என் வீட்டுக்காரர்
பேங்கில் வெலைபார்க்கிறார். 5 வருடங்களுக்கு ஒரு முறை
டிறான்ஸ்பர் பண்ணிண்டே இருப்பா. முதலில் நாக்பூர்,
பல்லார்ஷா மிடில்ல அஹேரின்னு ஒரு உள்ளடங்கிய
குட்டி கிராமத்தில் இருந்தோம். பேங்க் ஆளுன்னு ரொம்ப
மரியாதை கொடுப்பாங்க. அடுத்த வருடமே ஆண்குழந்தை
பிறந்தான். எல்லா குழந்தைகள் போலவும் நார்மலாக
பால் குடித்து விளையாடி அழுது, சிரித்து எல்லாம் பண்ணினான்.
முதல் பிறந்த நாளை மதுரையில் கொண்டாடினோம்.அப்போ
என் புகுந்த வீட்டிலிருந்து எல்லாரும் வந்து கலந்து கொண்டார்கள்
அவர்களெல்லாம் மும்பையில் இருக்கிறார்கள். என்கூட பிறந்தவர்
கள் என்னையும் சேர்த்து5 பேர்கள். அதுபோலவே என் வீட்டுக்காரருடன்
பிறந்தவர்களும் 5பேர்கள். அதில் என்கடைசி நாத்தனார் குழந்தையை
பார்த்ததுமே என் வீட்டுக்காரரிடம் அண்ணா குழந்தைக்கு ஏதோ
ப்ராப்ளம் மாதிரி தெரியரது. நார்மல் பேபி போல இல்லை கண்களை
பார்த்த உடனே தெரியரது. எதுக்கும் ஒரு சைல்ட் ஸ்பெஷலிஸ்டிடம்
காட்டிடு என்றா. நாங்களும் அப்படி யெல்லாம் ஏதுமில்லை என்று
சொன்னோம். அப்படி எதுவும் இல்லைனா சந்தோஷம் தான் ஆனா
இருந்துட்டா? எதுக்கும் டாக்டரை ப்போய் பார்த்துடுங்கோ என்றா.
டாக்டரிடம்போனதில் என்னல்லாமோ டெஸ்ட் எல்லாம் பாண்ணனும்
ரிப்பொர்ட் கிடைக்கவே ஒரு வாரம் ஆகும் என்றார். குழந்தை பிறந்த
நாளுக்கு வந்தவர்களெல்லாரும் அடுத்த நாளே கிளம்பி போனார்கள்.
நங்க இருவ்ரும் ஒரு வாரம் கழித்து டாக்டரிடம் போனோம்.அவர்
நீங்க சந்தேகப்பட்டது சரிதான் பிறக்கும்போதே டௌன் சிண்ட்ரோம்
பேபியாக பிறந்திருக்கு. மூளை வளர்ச்சி குறைபாடு இருக்கு. ஏன்
உங்க டெலிவரி ஆஸ்பிடலில்தானே நடந்தது அங்க டாக்டர் யாரும்
எதுவுமே சொல்லலையா?என்று கேட்டார். அங்கு டாக்டர் இது பற்றி
ஏன் எதுவுமே சொல்லலை என்று புரியவே இல்ல. அதுவும் ஒருவருடம்
கழிந்த நிலையில் என் நாத்தனார் சொல்லித்தான் எங்களுக்கே தெரிய
வந்திருக்கு. இதுஎவ்வளவு கொடுமை இல்லயா? அப்ப்லேந்து கடந்த 10
வருடமா அவன் கூட நாங்க இருவரும் படும் அவஸ்தை வார்த்தையில்
அடக்கிட முடியாது.3வயசு வரை பேச்சும் வரலை நடக்கவும் வரலை.
அந்தகுழந்தையின் அவஸ்தை கண்டு எங்கைருவரின் மனசும் என்ன
பாடு பட்டிருக்கும்? என் அக்கா திருவனந்தபுரத்தில் இருந்தா. அங்க
குழந்தையின் கால்களுக்கு ஆயுர்வேத ட்ரீட்மெண்ட் கொடுத்து பார்க்கலாம்
வா என்றா. அங்க திருவனந்தபுரத்திலேந்து50கிலோமீட்டர் உள்ளதள்ளி பரணீயம் என்று
ஒரு இடத்தில் ஒரு ஆயுர்வேத வைத்தியர் இருந்தார். அவர் குழந்தையை
பார்த்துட்டு அம்மா, இந்தக்குழந்தையை நான் நடக்க வைக்கரேன் ஆனா
6 மாசம் இங்கியே என் கண்கணிப்பிலேயே இருக்கணும். ஒருனாளைக்கு
5தடவை ஆயில் மசாஜ் பண்ணனும். உள்ளுக்கு குடிக்க கஷாயம் எல்லாம்
கொடுக்கனும்.குழந்தைகூட அவ அம்மாவும் இங்கியே தங்கனும் என்றார்.
நானும் வீட்டுக்காரரும் கலந்துபேசினோம். அவருக்கு 6 மாசம்லாம் பேங்கில்
லீவு கிடைக்காது. நம்ம சௌகரியத்தைப் பார்க்காம குழந்தைக்கு நல்லது
பண்ணனும் என்று நானு குழந்தையும் மட்டும் பரணீயம்போய் தங்கி சிகிச்சை
ஆரம்பித்தோம். வைத்தியர் சொன்னதுபோல 6 -வது மாசமுடிவில் குழந்தை
மெல்ல, மெல்ல அடிமேல், அடிவைத்து நடக்க தொடங்கினான்.பேச்சுவரலை.
அந்தவைத்தியரிடமே ஸ்பீச் தெரபி தரமுடியுமா என்றேன். அம்மா நான்
ஸ்பீச் தெரபியும் கொடுக்கரேன். ஆனா மலையாளத்தில்தான். நீங்க்ல்லாம்
தமில் பேசரவங்க. இங்க மலையாளம், வீட்ல த்மில்னா அந்த குழந்தை குழம்பி போயிடும் அதனால நீங்களே வீட்ல பயிற்சி கொடுக்கரதுதான் நல்லது என்றார்.
மாசத்தில் ஒருமுறை லீவ் எடுத்துக்கொண்டு குழந்தையையும் என்னையும்
பார்க்க என் வீட்டுக்காரர் வந்துபோவார். நடக்க வைப்பது பற்றி எழுதினதுலயே
ரொம்ப பெரிய பதிவாக வந்து விட்டது. இனியும் நடந்தவைகளை எழுத ஒரு
தனி பதிவே போடலாம் போல இருக்கு. இதுவரையில் பார்க்காத டக்டரும்
இல்லை போகாத கோவிலும் இல்லை. என் குழந்தை நார்மல் பேபியாக ஆக
சான்சே இல்லைங்கறது தான் பதில். ஒருவேளை எல்லாரின் கூட்டுப்பிரார்த்த
நையால் எதாவது மிரக்கிள் நடந்து குழந்தை நல்லா ஆகிட மாட்டானா என்ற
தவிப்பில் இந்த பதிவை அனுப்பியிருக்கேன்.

கவலைபடாதீங்க உமா. இத்தன வருசமா ஒரு முன்னேற்றமும் இல்லாத உங்க மகன் இப்போ மெல்ல மெல்ல நடப்பதாக சொன்னீர்கள். இதை நடத்தி காட்டிய இறைவன் மீண்டும் உங்களுக்கு சந்தோஷத்தை தரக்கூடிய செய்தியை கூடிய விரைவில் சொல்வான் என நம்பிக்கை எனக்கு அதிகம் இருக்கிறது. படிக்கும் எனக்கே கண்ணில் நீர் வருகிறது என்றால் எழுதும் உங்களின் உருவம் மனக்கண்ணீல் வந்து போகிறது.உங்கள் கஸ்டம் கூடிய விரைவில் நீங்கி உங்கள் மகன் நடக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

உங்கள் குழந்தை குனமடைய ஆண்டவனிடம் பிராத்தனை செய்கின்ரேன்

வீட்டுக்கு வீடு இன்னைக்கு டிவி என்பது அத்யாவசியமாகி விட்டது, கிரைண்டர், மிக்ஸி இல்லாத கிச்சன் ரெம்ப அரிது, மின்விளக்கு இல்லாத இல்லம் உண்டோ,
கம்ப்யூட்டர் இல்லேனா என்னைப்போன்றவர்களுக்கு பைத்தியமே பிடித்துவிடும்,
பாட்டு,சினிமா, போன்ற பொழுது போக்கிலேயே பெரும்பாலோருக்கு பொழுது போகிறது, மேற்கூறிய அனைத்து சாதனங்களும் மின்சாரம் இல்லேனா இயங்காது. இன்றைய உலக இயக்கமே மின்சாரத்தால்தானே. அந்த மின்சாரத்தை கண்டுபிடிச்சது மூளைவளர்ச்சி குன்றிய குழந்தயாய் பிறந்த ஒரு ஆள்தான் தெரியுமா? அவர் தாமஸ் ஆல்வா எடிசன் இவரைப்பற்றி நிறைய பேர் பாடபுத்தகத்தில் படித்திர்க்கிறோம். மின்சாரமட்டுமின்றி நிறைய கண்டுபிடிப்புகள் இவருடையது, இத்தனைக்கும் அவர் காலத்தில் மருத்துவ துறை இவ்வளவு முன்னேற்றம் பெற்றிருக்கவில்லை ஆனாலும் விடாமுயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் அறிவுமிகுந்த ஒரு அறிவியல் அறிஞரானார். அவ்வாறிருக்க உங்க குழந்தைக்கு பூரனகுனமாகிவிடும் என்பதில் ஏன் சந்தேகம். சந்தேகமெல்லாம் வேண்டாம், நீங்க செய்யவேண்டியதெல்லாம் மிக பொறுமையுடனும் தன்னம்பிக்கையுடனும் விடாமல் கொஞ்சகாலம் முயற்சிசெய்துகொண்டே இருந்தால் போது, நிச்சய்ய்ய்ய்மா சரியாகிவிடும், கவ்வ்வ்வலையே படாதீங்கக்கா.
ஒரு மனவளர்ச்சி குன்றிய எடிசன் என்ற குழந்தை விடாமுயற்சி செய்து அறிவியல் அறிஞர் ஆகும்போது, உங்க குழந்தை நார்மல் மனிதனாக ஆகாதா, இத்றகு miracle வரை சம்பவிக்க அவசியமே இல்லைக்கா, தெம்பா இருங்க, தைரியமா இருங்க, உங்களுக்கு உங்க குழந்தையை பார்த்த்க்கொள்வதைவிட வேற என்ன வேலை இருக்கபோவுது, நல்லா பாத்த்க்கோங்க அவன் வளர்ந்து உங்களைப்பாத்துக்குவான். நிச்சயமா நானும் என் நன்பர்கள்கிட்டேயும் சொல்லி இறைவனிடம் நாங்க எல்லாருமே கண்டிப்பா பிரார்த்தனை செய்கிறோம், நிம்மதியா இருங்க, இறைவன் இருக்கிறான்
அன்புடன்
ஆஷிக்

nandri thozhi. yellam muyandren ethilum enaku verumaiye ulladhu.

nisarbanu

porumai kadalilum peridhu enave porumaiyaga vaithiyam velai seiyum. naanum kadavulidam vendugiren.kavalai padatheergal

nisarbanu

உமா, கவலைப்படாதீங்க! கடவுள் நல்ல வழி காட்டுவார். உங்கள் மகன் விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

Ippo than ungal mudal prarthanai parthen. nichyam ungalukku ondum illai. nandraga ulleergal endru ennungal.enname valkai aagividum.

nisarbanu

மேலும் சில பதிவுகள்