பிரார்த்தனை

இந்த உலகில் எத்தனையோ சகோதரிகள் பல விதமான பிரச்சினைகளால் கஷ்டப்படுகிறார்கள். நாம் ஏன் ஒரு பிரார்த்தனை குழு ஆரம்பிக்க கூடாது. யாருக்காவது பிரர்ர்த்திக்க வேண்டும் என்றால் எழுதுங்கள். கடவுளால் ஆகாதது ஒன்றும் இல்லை.

எனக்கு ஒரு சந்தேகம், தீர்த்து வையுங்கள் தோழிகளே.
கர்ப்பமாக இருக்கும் போது புது வீடு கட்ட ஆரம்பிக்கலாமா, தெளிவுபடுத்துங்கள்.

priyamudan sangops

வுங்கள் பதிவை பார்த்து அழுதேவிட்டேன் .கவலை படாதீர்கள் உமா நாங்கள் இவ்வளவு பேர் பிராத்திக்கும் போது அந்த கடவுள் காதில் விழாமலா போய் விடும்.வுங்கள் மகன் கடவுளின் குழந்தை.அவனை இங்கு நன்றாக பார்துகொள்ளகூடியா பெற்றோரிடம் ஒப்படைத்திருக்கிறார்.விரைவில் அவன் பேசுவான் . அதையும் நீங்கள் எங்களுடன் ஷேர் செய்துகொள்வீர்கள்.மனதை தளரவிடாதீர்கள் .வுங்கள் மகன் குணமடைய கடவுளிடம் மனமுருகி வேண்டிக்கொள்கிறேன்.

hai nisarbanu,
how are u?
thanks for ur caring. thank u so much. sujatha_suthakar@yahoo.com
come to chat nisarbanu

enaku marriage agi 8 years agudhu, enaku kulandhai vendi pray pannuga pls..........

உங்க பதில் பார்த்ததும் மனசுக்கு எவ்வ்ளவு ஆறுதலாக இருக்கு தெரியுமா.?
என்மகனுக்காக இவ்வளவு நல்ல உள்ளங்கள் பிரார்த்தனை பண்ணும்போது
அவனுக்கு என்ன குறை? குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா
தான். சந்தோஷமான விஷயங்களை பகிர்ந்துகொண்டால் அது இரட்டிப்பாகும்.
அதுவே துக்கத்தை பகிரும்போது அது பாதியாக குறைந்து விடும் என்பார்கள்.
அது சத்யமான வார்த்தைகள்தான். அதுவும் நாம் பெரும்பாலானவர்கள்
முகம் தெரியாத தோழிகள்தான். ஆனா என்னஒரு அன்பு என்னஒரு ஆதரவான
வார்த்தைகள். மனதுக்கு ரொம்பவே நிறை வாக இருக்கு. நம்மை எல்லாம்
இப்படி ஒரு பிரிக்க முடியாத பந்தத்தில் சேர்த்து வைக்கும் அட்மினுக்கும்
அறுசுவை டீம் காரர் களுக்கும் தான் நாம் நம் நன்றிகளை தெரிவித்துக்கொள்ளணும்.

என்பையனுக்காக நீங்க பண்ணும் பிரார்த்தனை களுக்கு மிகவும் நன்றி.

உங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ளபடி தகுதியானபெற்றோரிடம்தான்
அந்த குழந்தையை ஆண்டவன் ஒப்படைத்துள்ளான். நாங்கள்
அன்பும் அரவணைப்பும் கொடுத்துத்தான் அவனை கவனித்துக்கொள்கிரோம்

மனம் தளராதீர்கள். விடா முயற்சியும் பயிற்சியும் உங்கள் மகனிடம் நிச்சயம் நல்ல மாற்றத்தை விரைவில் கொடுக்கும். உங்கள் குழந்தையையும் விரைவில் மற்ற குழந்தைகளைப் போல் பார்ப்பீர்கள். உங்களுக்காக நாங்களும் பிரார்த்திக்கிறோம்.

அன்புடன்,
இஷானி

உமா உங்கள் மகன் நடந்து விடுவான்னு நம்பிக்கையுடன் தானே நீங்க அவனுக்கு, கேரளா போய் மருத்துவம் செய்தீங்க உங்க நம்பிக்கை வீணாகாமல் அவன் நடக்கவும் ஆரம்பித்துவிட்டான்ல அதே நம்பிக்கையுடனே இன்னும் கொஞ்சம் காலம் காத்திருங்கள் அவன் பூரண குணமடைவான். சுந்தரி சொன்னது போல இறைவனுக்கு தெரியும் யாரிடம் இருந்தால் அந்த குழந்தை நல்ல முறையில் வளரும் என்று. நீங்க வேணும்னா பாருங்க ஒரு நாள் நீங்களே சொல்லுவீங்க இந்த அறுசுவையில, என் பையன் நல்லா இருக்கான்னு அந்த நாள் வெகு தொலைவில் இல்லை உமா. அது வரையில் தன்னம்பிக்கையும் தைரியத்தையும் விடாமுயற்சியையும் விட்டு விடாதீர்கள். உங்களுக்காகவும் உங்கள் மகனுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும் எங்கள் பிரார்த்தனைகள் எப்போதும் உண்டு.

உங்கள் பதிவை பார்த்து நான் மிகவும் உடைந்து போனேன். கவலை படாதீர்கள். கண்டிப்பாக உங்கள் மகனுக்காக நான் பிரார்த்திக்கிறேன்.விரைவில் நல்ல சேதி சொல்லுங்கள்.

மேலும் சில பதிவுகள்