பிரார்த்தனை

இந்த உலகில் எத்தனையோ சகோதரிகள் பல விதமான பிரச்சினைகளால் கஷ்டப்படுகிறார்கள். நாம் ஏன் ஒரு பிரார்த்தனை குழு ஆரம்பிக்க கூடாது. யாருக்காவது பிரர்ர்த்திக்க வேண்டும் என்றால் எழுதுங்கள். கடவுளால் ஆகாதது ஒன்றும் இல்லை.

உமா உங்களுடைய பதிவை இப்போதுதான் பார்த்தேன். எங்கள் மகளுக்கும் 12 வயது ஆகிறது. mild cerebral பாலிசி. உங்கள் மகனுக்கு இப்படி எதாவது பிரச்சனையா? என் மகள் இன்னும் நடக்கவில்லை ஆனால் கடவுள் கிருபையால் நன்றாக பேசுவாள் நாங்கள் குவைதில் இருக்கிறோம் ஸ்பெஷல் ஸ்கூல் போகிறாள் எல்லாம் பிரார்த்தனையால் தான் சந்தோசமாக நாட்கள் போகிறது எல்லா tuesdays இதுபோன்ற பிள்ளைகளுக்காகவே உபவாசம் இருந்து பிரார்த்தனை செய்கிறோம். இனி உங்கள் மகனையும் சேர்த்துக்கொள்கிறோம். நிச்சயம் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். நீங்கள் போன நடக்க வைப்தற்கான சிகிச்சை கொடுத்த இடத்தின் முகவரியை முடிந்தால் எனக்கு அனுப்பவும். முடிந்தால் உங்கள் மெயில் முகவரி எனக்கு அனுப்பவும்.

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

உங்களின் விரிவான பதில் எனக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கு..
ஆன்னாலும் அந்த மேதை களும் குழந்தைப்பருவத்தைக் கடந்து
தானே வந்திருக்கிறார்கள். அப்படி அவர்கள் குழந்தயாக இருந்தப்போ
அவர்களின் பெற்றோர் எவ்வளவு பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டி
வந்ததோ?
4வயது முதல் நன்றாகவே நடக்கத் தொடங்கி விட்டான். என்வீட்டுக்காரர்
வேலை செய்வது மஹாராஷ்ட்ரா பேங்கில். அதோட ஹெட் ஓபீஸ் பூனா
வில். அன்கே போய் பெரிய ஆபீசர்களைப்பார்த்து எங்களுக்கு தமிழ்
நாட்டுக்கு ட்ரான்ஸ்பர் வேனும் என்று கேட்டோம். ஸ்டேட் டு ஸ்டேட்
ட்ரான்ஸ்பர் கஷ்டம் மஹாராஷ்ட்ராவிலேயே வேர எங்க வேனும்னாலும்
மாத்தல் தரோம் என்றார்கள். எங்க குழந்தையின் ப்ராப்ளம் பற்றி சொல்லி
தமிழ் நாடு போனாதான் ட்ரீட் மெண்ட் கொடுக்க சௌரியமா இருக்கும்
என்று ரொம்ப ரிக்வெஸ்ட் பண்ணி நாமக்கல்-லில் போஸ்டிங்க் கொடுத்தர்கள்.
அப்போ பையனுக்கு5 வயது. வைத்தியத்திற்காக திருச்சி,கோயமுத்தூர்,சென்னை
என்றெல்லாம் கூட்டிப்போனோம். க்ரோமசோம் மிஸ்டேக்னால தான் இப்படி
ஒரு குறைபாடு. பரம்பரையில் யாருக்காவது இந்தமாதிரி ப்ராப்ளம் ஏதும் உண்டா?என்றார்கள். என்வழிலயும்சரி, அவர் வழிலயும் சரி (4த்லைமுறை
சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள் அதில் யாருக்குமே இதுபோலெல்லாம் கிடயாது.
இதுசரிபண்ணக்கூடிய ப்ராப்ளம் இல்லை. நம்மளோட அன்பான, கவனிப்பால
தான் அவனை வளர்க்கனும். இதுதான் பெரும்பாலான டாக்டர்களின் அட்வைஸ்.
சென்னையில் ராமச்சந்த்ரா மருத்துவ மனையில் ரேகாரமசந்த்ரன் என்னும்
டாக்டர் அவனுக்கு எல்லாடெஸ்ட் களுடன் ஐ.க்யு. டெஸ்டும் எடுத்தார்கள்.
இப்போ இவனுக்கு 5 வயசுன்னு சொல்ரீங்க .ஆனா 1 வயசுக்குழந்தையோட
மூளை வளர்ச்சிதன் இருக்கு. ரொம்பவே ஸ்லோ க்ரோத். நீங்க ஒன்னு பண்ணுங்க
எதாவது நார்மல் ஸ்கூல்ல வெணா சேர்த்துபாருங்க இம்ப்ரூவ் ஆக சான்ஸ்
இருக்கு என்றார்கள். நாம்க்கல்லில் m.s.உதயமூர்த்தி அவர்கள் ஒரு ஸ்கூல்
நடத்தி வருவது அறிந்து அங்கு ஒன்றாவது வகுப்பில் சேர்த்தோம்.அத்ற்குள்
வீட்டிலேயே அவனுக்கு ஓரளவு பேச்சு பயிற்சியும் நாங்க இருவருமே கொடுத்து
வந்தோம்.தெளிவா பேச்சு வரலை. ஆனாகூட அப்பா, அம்மா,அத்தை, தாத்தா
என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்திருந்தான். ஸ்கூலில் முதலில் சேர்த்துக்கவே
மாட்டேன்னுட்டா. பிறகு டாக்டர்கள்சொன்னதை சொல்லி மாசம்1000 ரூபாய்
ஃபீஸும் கட்டி சேர்த்தோம். டீச்சர்கள் போர்டில் எழுதுவதை அவனால சரியாக
க்ரகிச்சுக்க முடியலை. மத்தகுழந்தைகள் அவனை ரொம்பவே சீண்டி விளையாட
ஆரம்பித்து விட்டார்கள். அஞ்சலி படத்தில் பார்த்திருப்பிர்களே, அதுபோல
பைத்தியம், பைத்தியம் என்று கை கொட்டி கேலி வேறு, எந்தக்குழந்தை இதப்பார்த்துண்டு சும்மா இருக்கும்? இவனும் அவர்களை அடித்து கடித்து என்று
அமர்க்களம் செய்து நார்மல் பள்ளி படிப்பு ஒரே வாரத்தில் ஸ்டாப்.
இந்தமாதிரி குழந்தைகளுக்காக எதாவது ஸ்பெஷல் ஸ்கூல் என்கியாச்சும் இருக்கா என்று தேடினோம். எங்கள் அக்கம் பக்க வீட்டு குழந்தைகளுடன்
விளையாட அனுப்பினாலும் மத்த குழந்தைகள் அவ்னை பைத்தியமாகவே
பார்த்தார்கள். அத்னால மத்த பசங்ககூட விளையாடவும் அனுப்ப முடியாது, நாங்க இருவருமே அவனுடன் வீட்டுக்குள்ளயே கேரம், செஸ்,பல்லாங்குழி
தாயக்கட்டம் என்று அவன்கூடவே பூரா நேரமும் இருப்போம். இந்த 11 வயதுவரை அவனை எப்படியெல்லாம் பார்த்துண்டோம் என்பதை உங்க எல்லருடனும் பகிர்ந்துகொள்ளத்தான் ஆசை யா இருக்கு. ஆனா என் ப்ராப்ளம்
அளவுக்கு அதிகமாக சொல்லி எல்லாரையும் போரடிக்கிரேனோ என்று இருக்கு.
அத்னால இப்போதைக்கு இங்க தொடரும் போட்டுடரேன்.

நான் இந்த பதிவை போட்டதின்மூலம் எவ்வளவு அன்பு
தோழிகள் எனக்கு கிடைத்திருக்கிரீர்கள். ரொம்ப சந்தோஷமா இருக்கு

உங்கள்பதிவுக்கு நன்றி.என்பையனுக்கு மைல்ட் செரிபரல் பாலிசி இல்லை.
இப்போ நாங்களே வீட்டில் தொடர்ந்து பயிற்சி அளிப்பதால் ஓரளவு முன்னேற்றம்
தெரிகிரது. ஆனால் கூட பழகினவர்களுக்குத்தான் அவன்பேச்சை புரிந்து கொள்ள
முடிகிறது. எல்லாராலும் முடியலை. நீங்க கேரளா சைடா? அங்கபோனால்
அந்த ஆயுர்வெத வைத்தியரை கண்டிப்பாக சந்தியுங்க.அவங்க ரொம்ப நல்ல மாதிரி
இருக்காங்க.அவர் பேரு அம்பி அன்னன். 04712260751. அவங்க மொபைல் நம்பர்
கொடுத்திருக்கேன். ட்ரை பண்ணி பாருங்க. நல்லதே நடக்கும்.

உமா உங்கள் பையன், உடல்நிலை சரியாக்கும் படி கடவுளிடம் வேண்டிக்கொள்கிறோம். நீங்க கவலைப்படாமல் இருங்கள் பா, எல்லாத்தையும் கடவுளிடம், விட்டு விடுங்கள் அவர் பார்த்துக்கொள்வார்.

உங்க பதிவுக்கு ரொம்ப நன்றிம்மா. அந்த நம்பிக்கையும் விடாமுயற்சியும்தான்
என்னை வழி நடத்திக்கொண்டிருக்கு.

உங்க பதிவுக்கு ரொம்ப நன்றிம்மா. அந்த நம்பிக்கையும் விடாமுயற்சியும்தான்
என்னை வழி நடத்திக்கொண்டிருக்கு.

உங்க பதிவுக்கு நன்றி. என் பையன் எவ்வளவு பேரை பாதித்து இருக்கான். இல்லையா?

உங்க பதிவுக்கு நன்றி நானும் எல்லாம் ஆண்டவன் செயல்தான்
என்றுதான் இருக்கேன்.

இப்பதான் உங்க பதிவ படிச்சேன். ரொம்ப கஷ்டமா இருந்துச்சு... என் ஃபீலிங்க சொல்லி இன்னும் உங்கள கஷ்டபடுத்த விரும்பல... நீங்க கவலபடாதீன்க... எல்லா நாளும் ஒரே மாறி இருக்காது கண்டிப்பா இந்த நாள் மாறும்...

கால் சரியாகனும்னு ஆயுர்வேத சிகிச்சை பன்னிருகீன்க, அதேமாறி இன்னும் கொஞ்ச நாள் அங்கேயே இருந்து பேச்சுக்கான சிகிச்சை பன்னிருக்கலாமே ஏன் அப்படி பன்னாம விட்டீங்க அக்கா... எந்த மொழியா இருந்தா என்ன முதல்ல நம்ம குழந்தை சரி ஆகனுமே அதில்ல நமக்கு வேணும்???...

தப்பா எடுத்துக்காதீங்க மலையாளமும் தமிழும் கொஞ்சம் கொஞ்சம் தான் மாறும்... பேச்சு வந்தன்ன தமிழும் பேச பேச வந்துரும் இப்படி சொன்னதுக்கு கோவம் இல்லயே???

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

மேலும் சில பதிவுகள்