பிரார்த்தனை

இந்த உலகில் எத்தனையோ சகோதரிகள் பல விதமான பிரச்சினைகளால் கஷ்டப்படுகிறார்கள். நாம் ஏன் ஒரு பிரார்த்தனை குழு ஆரம்பிக்க கூடாது. யாருக்காவது பிரர்ர்த்திக்க வேண்டும் என்றால் எழுதுங்கள். கடவுளால் ஆகாதது ஒன்றும் இல்லை.

உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பிருக்கேன் பாருங்க... மறந்துராதீங்க.

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.


அன்பு தோழிகளே,
என் பெண்_க்கு மஞ்சள் காமாலை நோய் நீங்க கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அன்பு உமா,

கிட்டத்தட்ட 10 நாட்களாகவே நான் அறுசுவையின் மற்ற இழைகளை முழுமையாகப் படிக்கவில்லை. அதிலும் கடந்த ஐந்து நாட்களாக ஒரு பதிவு கூடப் போடவில்லை. இப்போ 2 நாளாக பல இழைகளையும் தேடிப் படித்து, பதிவு செய்து கொண்டு இருக்கிறேன்.

நீங்க இந்தப் பகுதியில் எழுதியிருந்ததை முழுதும் படித்தேன். "PRAYERS CAN MOVE MOUNTAINS", என்பதை நான் முழுதும் நம்புகிறேன்.

உங்கள் மகனுக்காக நீங்களும் உங்கள் கணவரும் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் நல்ல பலனைத் தர வேண்டுமென்று நானும் இங்கே எல்லாத் தோழிகளுடன் இணைந்து பிரார்த்திக்கிறேன்.

உங்களுடைய மன உறுதியும் பக்குவமும் பிரமிப்பாக இருக்கு. துன்பங்களும் சோதனைகளும் இரவு போல் வரும், பகல் போல விடிந்து விடும் என்பார்கள். உங்களுக்கு இருக்கும் சோதனைகளும் சீக்கிரமே மாறி, நிம்மதியும் ஆனந்தமும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கிடைக்க வேண்டுகிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

உங்க ஆறுதலான வார்த்தகள் எனக்கு இன்னமும் யானை பலத்தை
கொடுக்கிறது. என் மன பாரத்தை உங்கள் எல்லாரிடமும் பகிர்ந்து
கொள்வதற்கு முதலில் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஆனால்
நம் சந்தோஷங்களை பகிர்ந்து கொண்டால் அது ரெட்டிப்பாகும்,
அதுவே துன்பங்களை பகிர்ந்துகொண்டால் பாதியாகக் குறையும்
என்ற வார்த்தைகள் என்னை உங்க அனை வருடனும் பகிர்ந்து
கொள்ளும்படி செய்த்து. உங்களைப்பொல் அனைவரின் ஆறுதல்
வார்த்தைகளும் உண்மைலேயே என் துன்பங்களை பாதியாக
குறைத்துதான் விட்டது. ஆறுதல் சொன்ன அனைவருக்குமே நான்
எவ்வளவு முஅரை நன்றிகள் சொன்னாலும் போதாது.
அதுவும் தவிர எவ்வளவு நல்ல உள்ளங்கள் என்மகனுக்காக
பிரார்த்தனைகள் செய்கிரார்கள். எனக்கு ரொம்பவே நெகிழ்ச்சியா
இருக்கு. இது போல மகம் தெரியா நட்பு உள்ளங்களை ஒரு
கண்ணுக்குத்தெரியாத பந்தத்தில் இணைத்து வைத்திருக்கும்
அட்மின் அவர்களுக்கும் அறுசுவை டீம் காரர் களுக்கும் எவ்வளவு
நன்றிகள் சொன்னாலும் போதாதுதான்.

எல்லாரும் நல்லாருக்கீங்களா?

என் தோழிக்காக எல்லாரும் பிரார்த்தனை பன்னுவீங்களா??? என் கூட படிச்ச மஞ்சு-வோட கணவருக்கு சமீபத்தில எதிர்பாராத விதமா ஒரு விபத்து நடந்துருச்சு அதனால அவர் ஒரு மாசமா கோமால இருந்து இப்ப தான் ஒரு அளவுக்கு குணமடஞ்சுருக்கார், இருந்தாலும் சரியா எதுமே அவருக்கு நினைவு இல்லையாம் முழு நினைவுமே கொஞ்சம் கொஞ்சமா தான் வரும்னு டாக்டர்க சொல்லிருக்காங்க அவங்களுக்கு ஒரு வயசுல ஒரு பையன் இருக்கான் அவன மஞ்சு அவங்க அம்மா அப்பாகிட்ட விட்டுட்டு இவ அவரை கவனுச்சுட்டு இருக்கா... ரொம்ப மனசு கஷ்டத்துல இருக்காங்க அவர் சீக்கிரமா குணமடையவும் அவங்க எல்லாரும் சகஜ நிலைக்கு சீக்கிரமா வரனும்னு எல்லா தோழிகளும் பிரார்த்தனை பன்னுவீங்களா???

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

கவல படாதீங்க லதா!!!
உங்க தோழிக்கு ஆருதல் சொல்லுங்க.
மஞ்சுவின் கணவர் மிக விரைவில் முழு நினைவு பெற்று குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்!!!உங்க தோழிக்கு ஆருதல் சொல்லுங்க.
மஞ்சுவின் கணவர் மிக விரைவில் முழு நினைவு பெற்று குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

உங்க பதிவுதான் முதல்ல வரும்னு எதிர்பாத்தேன். நன்றிங்க...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

லதா உன்க தோழியின் கணவர் சீக்கிரமே நலமடைய நாங்க
அனைவருமே ஆண்டவரிடம் பிரார்த்தனைகள் செய்கிரோம்.
உங்க தோழி எங்களுக்கும் தோழிதான். அவளுக்கு எங்களின்
சார்பாக ஆறுதலைதெரியப்படுத்தவும். அவர் சீக்கிரமே குணமடைந்து
விடுவார்.

மாமி
உங்க அண்ணா கூடிய விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
கவலப்படாதீங்க!
எல்லாவற்றிற்கும் அந்த இறைவன் துணை இருப்பான்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

உமா எப்படி இருக்கீங்க? உங்க பையன் நலமா? ஈரோடு பஸ் ஸ்டாண்டிலிருந்து சபீதா பஸ் ஸ்டாப் செல்லும் வழியில் இருக்கிறது. ஏற்கனவே விசாரித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். உங்கள் பையனுக்கு வில்வ இலையை காய்ச்சி குடிக்க கொடுங்கள். மூளை சம்பந்தப்பட்டவற்றிற்க்கு வில்வ இலை மிக சிறந்த மருந்தாகும். அதே போல் உங்கள் பையனுக்கு ஆரஞ்சு வண்ணங்களை அதிகம் பயன்படுத்துங்கள். விரைவில் முன்னேற்றம் பெற வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்.
அன்புடன்
சுஜாதாசுதாகர்

மேலும் சில பதிவுகள்