பிரார்த்தனை

இந்த உலகில் எத்தனையோ சகோதரிகள் பல விதமான பிரச்சினைகளால் கஷ்டப்படுகிறார்கள். நாம் ஏன் ஒரு பிரார்த்தனை குழு ஆரம்பிக்க கூடாது. யாருக்காவது பிரர்ர்த்திக்க வேண்டும் என்றால் எழுதுங்கள். கடவுளால் ஆகாதது ஒன்றும் இல்லை.

நான் தற்பொழுது கர்ப்பமாக உள்ளேன்.எனக்கு கடந்த 10 நாட்களாக காது வலியால் போராடிகொண்டிருக்கிறேன்.மருத்துவரும்
இதற்கு மருந்து இல்லை என்கிறார்.என்னால் வலி தாங்கமுடியவில்லை.நான் வெளினாட்டில் தனியாக உள்ளேன்.யாருமே இல்லாத பொல் வெருப்பாக உள்ளது.
குட்டிரெயாமா

ராதிகா,
திரும்பவும் போய்க் காட்டிப் பார்த்தீர்களா?
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

அன்பு uma.k
இந்த இழை இப்போ தான் என் கண்ணில் பட்டது..எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலே..ரொம்பவே உணர்ச்சி பிராவகமா இருக்கு..அப்படியே படிச்சுட்டு கொஞ்ச நேரம் போயி உட்கார்ந்துட்டு மறுபடியும் உங்களுக்கு இந்த பதிவை போடுகிறேன்..பொதுவாகவே எனக்கு வாழ்க்கையில் வெற்றி பெற்றவங்க சுயசரிதை படிக்க ரொம்பவே விரும்புவேன்..அவங்களோட அனுபவம் நமக்கு சிறந்த வழி காட்டுதலா இருக்கும்னு..நிஜமாய் இதுவும் கூட எனக்கு ஒரு சுயசரிதை படிச்ச மாதிரி உமா..நீங்கள்,உங்க கணவர்,உங்கள் உறவினர்கள் எல்லாம் போற்றப்பட வேண்டியவங்க உமா..சின்ன விஷயத்துக்கெல்லாம் பெருசாய் கடவுளை கோவிக்கும் நிறைய பெண்களுக்கு நிஜமாய் உங்கள் அனுபவம் பெரிய ஊக்கமா இருக்கும்..நீங்க ,உங்க கணவர் ரெண்டுபேரும் எவளவு விடாமுயற்சியா முயன்று சிவா குட்டியை இவளவு ஒரு நல்லா நிலைமைக்கு கொண்டு வந்துருக்கிங்க..நீங்கலாம் "நல்ல அம்மா" லிஸ்ட் இல் இடம் பிடிக்கிறீங்க உமா..கட்டாயம் பிரார்த்தனைகளை மீறி கூட கடவுளும் பார்த்து கொண்டே இருப்பார் இந்த பாச உறவுகளை..எப்பவுமே நல்லா இருக்க நான் பிரார்த்தனை செய்வேன்..பிரார்த்தனை மீறி உங்களுக்கு என் நன்றி..உங்கள் குழந்தையாய் சிறப்பாக்கி கொண்டிருக்கும் உங்கள் ஒத்துழைப்புகளில் நானும் சில positive attitude கற்றுகொண்டேன்..
சிவா பாப்பாக்கு என் வாழ்த்துக்கள்..
அன்புடன்,
ஆனந்தி..

Madurai Always Rocks...

உங்க பதிவு இப்பத்தான் பார்த்தேன். என் மகனுக்காக எவ்வளவு நல்ல
உள்ளங்கள் பிரார்த்தனை பண்ணுகின்ரன. அந்த விஷயத்தில் என் மகன்
எவ்வ்ளவு லக்கி இல்லியா. கொஞ்சம் கொஞ்சமா இம்ப்ரூவ் ஆகி வருகி
ரான். நாங்க இருவருமே அவனுடைய முன்னேற்றத்திர்காகத்தான் எங்க
முழு நேரத்தயும் அவன்கூடடவே செலவு செய்து வருகிரோம்.
ஆனாலும் யதார்த்த வாழ்க்கைன்னு ஒன்னு இருக்கே. அவர் ஆபீஸ்போகாம முடியுமா. நான் மத்த வேலைகளை கவனிக்காம முடியுமா? நாமல்லாம்
சாதாரண மனுஷங்கதானே. நம்மால முடியலைங்கும்போது கோபம் வரது.
வருங்காலத்தை நினைத்தால் யோசனையாகத்தானிருக்கு.

நல்லாருக்கீங்களா? அண்ணாவும், சிவாகுட்டியும் எப்படி இருக்காங்க. நீங்க எனக்கு ஊருக்கு போய்ட்டு வந்து ஒரு மெயில் பன்னிருந்தீங்க அப்பறம் ஏன் ஒரு மெயில் கூட அனுப்பலை? பரவால்ல நான் கோச்சுக்கலாம் மாட்டேன். நீங்க அனுப்பிருக்க பதிவை பாத்தேன். நீங்க சிவாகுட்டியை நல்ல நிலைமைக்கு கொண்டுவர முயற்சில பாதி ஜெயிச்சுட்டீங்க இன்னும் கொஞ்சம் தான் இருக்கும் முழுசா ஜெயிக்க இப்ப போய் நீங்க இப்படி மனசு சங்கடப்பட்டு பேசலாமா? நீங்க கவலைப்படற ஒவ்வொரு கணமும் ஒரு படி கீழ இறங்கி வரதா நினைச்சுக்குங்க அக்கா... உங்க எந்த பிரச்சனைன்னாலும் சொல்லுங்க நாங்க இருக்கோம் முழு மனசோட பிராத்தனை பன்ன..... சிவாகுட்டி கண்டிப்பா சீக்கிறமா சரியாய்ருவான். கடவுள்க்கு தெரியும் யார்யார்க்கு என்னன்ன குடுக்கனும்னு? நீங்க நல்லா பாத்துக்குவீங்கன்னுதானே சிவாகுட்டிய உங்களுக்கு குடுத்துருக்கார், கவலபடாதீங்க எங்க எல்லார் பிராத்தனையும் உங்களுக்கு உண்டு....

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

அன்பு இமா உங்கள் உடனடி பதிவுக்கு நன்றி.நான் மருத்தவரிடம் சென்றேன் அவர் வேறு வழி இல்லை என்று சொல்லிவிட்டார்.இன்று நான் மிகவும் துடித்ததை பார்த்து என் கணவர் மிகவும் வேதனை அடைந்தார் இன்று மீண்டும்
மருத்துவரிடம் போகலாம் என்று கூறி உள்ளார்.எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை கடவுள் மீது கோபமாக வருகிறது தனியாக இருக்கும் என்னை ஏன் இவ்வளவு கஷ்டப்படுதவேண்டும் கர்ப்பமாக இருக்கும் எனக்கு மனதளவில் ஏன் இவ்வளவு கஷ்டம்.என் முதல் கொழந்தையை பார்த்து கொள்ளமுடியாமல் நான் படும் வேதனை சொல்லி முடியாது.
குட்டிரெயாமா

உமா உங்களின் தவிப்பு துயரம் வெகு விரைவிலேயே தீர எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும். உங்களின் செல்லம் எல்லா குழந்தைகளைப் போல வளர்வான். கவலைப் படாதீர்கள். கீதையில் எல்லாம் நானே என்கிறான். பைபிளில் கேளுங்கள் தரப்படும் என்கிறான். குரானில் எங்குமாய் வியாபித்திருக்கிறேன். என்கிறான். அவனை நோக்கி நம் மனமொத்த பிரார்த்தனைகள் செல்லட்டும். எங்கும் நிறைந்திருக்கும் இறைவா, உமாவின் மகனுக்கு, உன்னால் பூமிக்கு தரப்பட்ட ஒரு ஜீவனுக்கு நல்ல முறையில் எல்லோரும் போல் நடக்க விளையாட பேச வைக்க உன்னால் மட்டுமே முடியும். பெற்ற தாய் தந்தையரின் கண்ணீரை துடைத்து வை ஆண்டவா.

அன்புடன்
THAVAM

என்னங்க நீங்க. சிங்கப்பூர் போய் வந்து உங்களுக்கு மெயில்ல
ஆறு போட்டோ அனுப்பியிருந்தேன் பதிலே இல்லை.

அண்ணா உங்க அன்பான வார்த்தைகள் மனசுக்கு ரொம்ப இதம்மா
இருக்கு. என் பையனுடைய பிரச்சினையை நம்ம அருசுவை மூலமா
பகிர்ந்து கொண்டதில் எவ்வளவு நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிரார்கள்.
அது எவ்வளவு நல்ல விஷயம் இல்லியா.


பாபு சார் குழந்தை நவீனா உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக கேள்வி பட்டென்.

குழந்தை நவீனா உடல் நிலை சரியாகி எப்போதும் போல் ஓடி ஆடி விளையாட ஆண்டவனை வேண்டி பிரார்த்தனை செய்யும் படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்