சின்ன சின்ன பதிவுகள் - பகுதி 3

நம்ம முந்தைய சின்ன சின்ன பதிவுகள் 100'கு மேல போயிடுச்சு அதான் புது இழை. :)

இங்க யார் வேணும்'னாலும் பதிவு போடலாம், எதை பற்றி வேணும்'னாலும் பதிவு போடலாம்... எல்லாரும் கருத்து சொல்லலாம், உங்க அனுபவத்தையும் சொல்லலாம். ;) அரட்டை மட்டும் கண்டிப்பா கூடாது.

பாருங்கப்பா... புது தலைப்பா இல்லாம சின்ன சின்னதா தோழிகளிடம் சொல்லவே எவ்வளவு இருக்கு !!! 2 பகுதி முடிஞ்சு 3வது தொடங்கிட்டோம். அது சரி பெண்களுக்கு பேச்சுக்கா பஞ்சம்!!! ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ம்ம்... எவ்வளவு சொன்னாலும் மாத்திக்கல. இப்பவும் முகப்பில் 5 ஊர் இருக்கு. இனி நம்ம சொல்ல ஒன்னுமில்லை. அவங்களா விட்டா தான் உண்டு. யாரும் கண்டுகிட்ட மாதிரி கூட தெரியல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி ..

நீங்க சொன்னது உண்மைதான். உங்க பதிவு பார்த்ததும் எங்க அம்மா கூறியது நினைவுக்கு வருகிறது. நான் கொஞ்சம் ஜாஸ்தி பேசுவேன். உஙகளுக்கே தெரியுமே.ஆனா லீனா இருப்பேன். அம்மா அதற்கு இந்த பேச்சு இல்லனாலும் உன்னை நாய் தூக்கிட்டு போயிடும்னு சொல்லுவாங்க...;-( ...ஹ்ம்ம்ம்ம் ..ஆனாலும் நான் பேசுறத மட்டும் விடமாட்டேன்...

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஐ... ரம்யா... சேம் பின்ச். என்னையும் அப்படி தான் நண்பர்கள் சொல்வாங்க. ;) நான் அதையே கொஞ்ச மாத்தி என்னவரை "காகா தூக்கிட்டு போயிடும்"னு திட்டுவேன். அவரும் லீன் தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சீதாலஷ்மி... ஏதோ பதிவு போடனும்'னு சொன்னீங்க... வாங்க இங்க வேகமா!!! என்ன சொல்ல போறீங்கன்னு பாத்துகிட்டே இருக்கேன் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அவஙக அப்படி தான் திருந்தவே மாட்டைங்க.
உங்கல பத்தி சொல்லுஙக

வளர்... //உங்கல பத்தி சொல்லுஙக// அறுசுவையில் இது தான் "டீஃபால்ட் கேள்வி" ;) நம்மை பற்றி சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை.... என் ப்ரொஃபைல பார்த்தா என்னை புரியும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எப்படி இருக்கீறீர்கள்?, எங்கு இருக்கீறீர்கள்?, நான் சிங்கபூரில் இருக்கிறேன், நீங்கள் இல்லத்தரசியா? மேலும் என் நாத்தனார் பெயரும் உங்கள் பெயர்தான், முதலில் அறுசுவைக்கு நான் வந்த புதிதில் உங்கள் பெயரை பார்த்ததும் என் நாத்தனார் ஞாபகம்தான் வந்தது.நான் நினைக்கிறேன் நீங்கள் ஒரு சிறந்த முழுமையான இல்லத்தரசியாகத்தான் இருக்கவேண்டும் ஏனென்றால் எந்த இழையில் பார்த்தாலும் உங்கள் மயமாக இருக்கிறது.

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

என் பெயர் வளர்மதி. நான் ஒரு அலுவலகத்தில் வேலை பார்கிரேன்.எனக்கு திருமணம் அகி 11 மாதம் ஆகிரது. ஆனால் குலந்தை இல்லை.என் கணவர் அரசு வேலை. நான் மதுரைல் இருக்கிரேன். என் மாமியார்,மாமனார் கிராமத்தில் வசிக்கிரார்கல். நாங்கல் வாரம் ஒரு முரை சென்று பார்த்து வருவோம்

ஹாய் வளர்மதி.. என் பெயர் பாக்யா....நானும் மதுரை தான்..புதூர்..நீங்க எங்க இருக்கீங்க? என்ன ஒர்க் பண்றீங்க

மேலும் சில பதிவுகள்