விட்டுக்கொடுப்போம் வாங்க!!!

ஹாய் தோழிகளே... இத்தனை வயசுல நம்மோட விட்டுக்கொடுக்கும் குணம் பல விதமா மாறியிருக்கும்.

ஒரு சில எல்லாத்தையும் எல்லாருக்கும் விட்டுக்குடுத்துடுவாங்க... அவங்க தியாகி!!!
ஒரு சிலர் எதையும் யாருக்கும் விட்டுக்குடுக்க மாட்டாங்க... அவங்க ---------!!!
ஒரு சிலர் விட்டுக்குடுக்க வேண்டிய இடத்தில் விட்டுகுடுத்து சில விஷயங்களை பிடிவாதாம இருப்பாங்க.... அது தான் மனித குணம்!!!

அப்படி நீங்க யாருக்காக எங்க எதை விட்டு குடுத்தீங்க??? எதை விட்டுக்குடுக்க விரும்பறீங்க??? எதை விட்டுக்குடுக்கும்போது சந்தோஷ பட்டீங்க?? எதை யாருக்காகவும் விட்டுக்குடுக்க விரும்பல, விட்டுக்குடுக்கவும் மாட்டீங்க??

இதை தான் பேச போறோம். விட்டுகுடுக்குறது பெரிய விஷயமா'னு கேட்டுடாதிங்க.... தெரிந்தோ தெரியாமலோ மனிதன் முக்கியமா பெண்கள் பல விஷயங்களை விட்டு குடுத்து தான் வாழறாங்க. அது மட்டும் இல்லன்ன இன்னைக்கு வீடுகள் அதில் குடும்பங்கள், உறவுகள் இல்லை. வழக்கமான விஷயத்தை விட்டு கொஞ்சம் வித்தியாசமான விஷயங்களை இங்க சொல்லுங்க.

உண்மையா சொன்னா விட்டுகுடுக்குறதுல சந்தோஷமும் இருக்கு, சில நேரத்துல வலியும் இருக்கு. எல்லாத்தையும் இங்க சொல்லலாம்.

பொதுவா பயணம் செய்யும்போது வயதானவங்க இல்லன்னா குழந்தை வெச்சிருக்கவங்களுக்கு நாம சீட் குடுப்போம்... நமக்கு வலிச்சாலும் அவங்க உட்கார்ந்திருப்பதை பார்க்க சந்தோஷமா தான் இருக்கும்.

அக்கா, தங்கை'கு சின்ன வயசுல அவங்க கேட்கும் பொருளை விட்டு குடுப்போம்... அதை அவங்க வாங்கினதும் முகத்துல ஒரு சிரிப்பும் சந்தோஷமும் தெரியும் பாருங்க.... அதுக்காக எதை வேணும்னாலும் குடுக்கலாம்.

காதலிப்பவருக்காக, கணவருக்காக, மனைவிக்காக எத்தனையோ பேர் சைவத்தை, அசைவத்தை, உணவு பழக்கத்தை விட்டு குடுக்கறாங்க. அதுலையும் சந்தோஷம் இருக்கு.

நண்பர்களுக்காக விட்டுக்குடுப்பது, குழந்தைகளுக்காக விட்டுக்குடுப்பது, வாழ்க்கை துணைக்காக விட்டுக்குடுப்பது, உறவுகளுக்காக விட்டுக்குடுப்பது, முகம் தெரியாதவங்களுக்காக விட்டுக்குடுப்பதுன்னு எல்லாமே பல நேரத்தில் சந்தோஷமா தான் இருக்கும். சில நேரங்களில் நம்ம சங்கட படுத்துவதும் உண்டு, காயப்படுத்துவதும் உண்டு.

உங்க அனுபவம், உங்க விருப்பம்... எல்லாமே நீங்க இங்க சொல்லலாம். படிக்க அறுசுவை ஆவலோடு காத்திருக்கு!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி...

நீங்க சொல்கிறமாதிரி விட்டு கொடுப்பது ஒரு நல்ல விஷயம் தான்.
உறவுகள் விட்டு கொடுப்பதினால் விஸ்வரூபம் எடுக்கிறதுனு சொல்வாங்க. பல இடங்களில் விட்டு கொடுத்து போவதினால் தான் பல பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது.

என்கிட்ட இருக்க பழக்கம் நான் எந்த ஒரு பொருளையும் காஸ்ட்லியாவோ,இல்ல ஆசையோவோ வாங்கினாலும் என்னை விட வயதில் சிறியவர்கள் கேட்டால் கொடுத்துவிடுவேன். ஆனா என்ன விட பெரியவங்க கேட்டா ஒரே சண்ட வந்துடும் ( உரிமையானவங்கனா மட்டும்) இல்லனா ஏதேனும் சொல்லி சமாளிக்க வேண்டிவரும். இல்லெனா அந்த பொருளை ஒளுச்சுதான் வெக்கனும். இந்த சின்ன பசங்களுக்கு விட்டு குடுக்குறபழக்கம் எனக்கு எப்டி வந்ததுனா நாங்க வீட்டுல மூனு பொண்ணுங்க பசங்க இல்ல. நான் தான் கடைகுட்டி. நான் சின்ன பொண்ணுங்றதால அக்கா ரெண்டுப்பேரும் எதுனாலும் விட்டுக்குடுப்பாங்க. விவரம் இல்லாதப்போ அவங்களோட இந்த நல்ல குணத்தை நிறையா யூஸ் பண்ணிட்டேன்.விவரம் வந்தப்பறம் அவங்களுக்கான உரிமைல தலையிட்டது இல்ல.. அவங்களுக்கு விட்டு குடுக்க ரெடியா இருந்தாலும் அவங்களுக்கு என் சந்தோசம் முக்கியம்னு அக்ஸப்ட் பண்ணிக்கமாட்டாங்க. அதனாலேயே எனக்கும் என்ன விட சிறியவர்களுக்கு விட்டுகுடுப்பதில் எந்தவித தயக்கமும் இருக்காது.

இன்னொரு முக்கியமான விஷயம் நாம் யாருக்கு விட்டுகொடுக்கிறோமோ அந்த நபர் அதற்கு முழு தகுதி உடையவர்களாக இருக்கு வேண்டும்.

சும்மா எல்லோர்க்கும் செய்ய முடியாது இல்லயா. அப்போ நாம விட்டுகுடுக்றதுல என்ன ஸ்பெஷல் இருக்கு. நான் இனி என் கணவருக்காக எல்லாம் விட்டுகொடுக்க ரெடி எங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றம் தடைபடாத வரை.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கல்யாணத்துக்கு முன்பு யார் என்ன சொன்னாலும் ரண்டுல ஒன்னு பாக்காம விட மாட்டேன். எங்க அம்மாவானாலும், சொந்தங்களானாலும் யாராவது என்னைய திட்டுனா கிழிகிழின்டு கிழிச்சுற்வேன்.
கல்யாணத்துக்கு பிறகு பல பிரச்சனைகளை தவிர்க்க நானாகவே இந்த பழக்கத்தை விட்டுட்டேன். யாராவது பேசுனா பதிலுக்கு பதில் சொல்லனும்டு தோணும். ஆனால் மனசுக்குள்ளேயே 100 ல இருந்து 1 வரைக்கும் சொல்லிக்கிட்டே இருந்துற்வேன்(கோபம் அடக்குவதற்க்காகவும், கவனத்தை திசை திருப்பவும்).
எல்லாம் முடிந்த பிறகு "பரவாயில்லையே ஆமினா உனக்கும் பக்குவம் வந்துற்ச்சேன்டு" என்னைய நானே சொல்லி சந்தோசப்படுத்திக்கிற்வேன்.
தன்மானம் விட்டு கொடுக்குறோமே அப்டின்டு ஒரு பக்கம் அழுகை வந்தாலும் தலைக்கு வந்த பிரச்சனை தலைப்பாவோட போச்சேன்டு ஒரு சந்தோசம்.
அந்த சந்தோசத்துக்கு விலைமதிப்பு இல்லை

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நான் அன்று மதியம் கம்ப்யூடர் முன்பு உக்காந்துண்டு
நம் அருசுவைதோழிகளுடன் பதிவுகளை பறிமாரிக்கொண்டி
ருந்தேன். அப்போது பக்கத்து ஃப்ளாட் மராட்டிக்காரி தன் 5வயது
பையனுடன் வந்தாள். வந்தவர்களை உபசரித்து சிரிது நேரம்
பேசிக்கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் அந்த பையன் மம்மி
கம்ப்யூட்டர் என்று கேட்டான். அந்த மம்மியும் பாருங்களேன்
இவனுக்கு 5 வயதிற்குள்ள கம்ப்யூட்டரில் என்ன ஒரு நாலட்ஜ்
தெரியுமா?அந்த பையனும் யாருடைய அனுமதியையும் எதிர்
பார்க்காமல் கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாட ஆரம்பித்து
விட்டான். சரி குழந்தை தானே கொஞ்ச நேரம் விளையாடிட்டு
எழுந்திடுவன் என்று நினைத்தேன்.3-மணிக்கு கம்ப்யூட்டர் முன்பு
உக்காந்தவன் சாயங்காலம் 6 மணி ஆகியும்கூட எழுந்து கொள்ளவே
மாட்ரான். அந்த மம்மியும் எதுவுமே சொல்லாம தன் குழந்தையின்
கம்ப்யூட்டர் பெருமையே பேசிண்டே இருந்தா.எனக்கோ அவா எப்படப்பா
கிளம்புவா என்றுதான் இருந்தது. மதிய 3டு6 தான் நானும் கம்ப்யூட்டரில்
உக்காருவேன். அன்று அந்த குழந்தைக்காக என் டைமை விட்டுக்கொடுக்க
வேண்டி இருந்தது.

ஆமின்

நீங்க சொன்னமாதிரி எனக்கும் ஏட்டிக்கு போட்டி பேசுற பழக்கம் இருக்கும். நானும் கொஞ்சம் கொஞ்சமா மாத்திட்டு இருக்கேன். என் வாதம் தான் கடைசியா இருக்கனும்னு நினைப்பேன். ஆனா நான் பேசுறதும் சரியாவே இருக்கும் கூடுமானவரை.இபோதான் மத்திட்டே வரேன். ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹலோ கோமு இதெல்லாம் விட்டுக்கொடுத்தல்னு சொல்லமுடியாது
நீங்க ..மராட்டிக்காரி எப்படா இடத்த காலிபன்னுவானு நம்ம இடத்த புடிப்போமுனு உள்ளுக்குள் புழுங்கிகிட்டுல்ல இருந்திருக்கீங்க அது எப்படி விட்டுக்கொடுத்தது ஆகும்.அன்னைக்கு அந்த 3 டூ 6 மனிவரை
அவ மேல அவ்வளவு கொலைவெறித்தாக்குதலுடன் இருந்துட்டு இங்கே வந்து அதை விட்டுக்கொடுத்தேன்னு சும்ம கதை விட்டுக்கிட்டு இருக்கீங்க, யார்கிட்ட.
சும்ம்ம்ம்ம்ம்ம.....கூட்டதோட கூட்டமா எதையாவது சொல்லிவைக்கிறது....கூட்டத்துல எது சொன்னாலும் யாரும் கவனிக்கமாட்டாங்கனு சும்ம எதையாவது அள்ளி விடக்கூடாது..எதையாவது சொல்லிட்டு தப்பிச்சிரலாமுனு மட்டும் நினைக்காதீங்க...நாங்க விடமாட்டொம்
அன்புடன்
ஆஷிக்

நானும் பல விசயங்களில் எடுக்கும் முடிவுகள் சரியாக தான் இருக்கும். ஆனால் எங்கள் மாமியார் வீட்டில் இருக்கும் அனைவரும் என்னை விட மிகவும் பெரியவர்கள் என்பதால் நான் சொல்வது எடுபடாது. ஏதாவது சொல்லனும்னா அவங்க முதலில் சொன்ன கருத்தையே திருடி மறுபடியும் சொல்லுவேன். அவங்களும் நல்ல ஐடியா அப்டின்டு முடிவுகளை எடுப்பாங்க. ஆக மொத்தத்தில் அவங்கலே கேள்வியும் கேட்டு அவங்களே பதிலும் சொல்லுவாங்க. சந்தோஷ் சுப்பிரமணியம் படம் மாறி.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமின்..

ஹஹஹா.. எப்படியோ அந்த குடும்பத்தை புரிந்து வைத்து அவர்களுக்காக விட்டு கொடுத்து நீங்கள் இருப்பது பாராட்டுவதற்கு உரியது.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஐய்யோ ஆஷிக் இப்படி பேசுறதுக்காகவே ரூம் போட்டு உக்காந்து யோசிப்பிங்களா?
சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணா போச்சு போங்க!!!!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நான் எங்க வீட்ல பொன்னி அரிசி சாப்படு தான் சாப்பிடுவேன் ஆனால் என் கனவர் கிராமம் என்பதால் அவங்க வீட்ல அவங்க நில்த்தில விளயரததான் சாப்பிடுவாங்க. நான் போன புதிசில எங்க மாமனார் உனக்கு மட்டும் அரிசிய மாத்திருவோமானு கேட்டாரு
என்க்காக அவங்க செய்யனும் நினைக்கிராங்களே அதுவே போதும்னு இப்ப எங்க விட்டிலையும் அந்த அரிசி தான் சாப்பிடிரேன். எங்க அம்மா ஒரு நால் பாத்து என்ன சத்தம் போட்டஙா சம்பாதிங்ரேங்கல கடைல அரிசி வாங்கி சாப்பிட வேன்டியது தானேனு.என் மாமனார் , மாமியார் அன்பிர்காக சாப்பிட்ரேனு சொன்னென். அன்பு தான் விட்டு கொடுக்க்ர மனச கொடுக்கும்

மேலும் சில பதிவுகள்