தான தர்மம்

அன்பான அறுசுவை தோழிகளே ! இங்கு நாம் இதுவரையில் செய்த தானங்களை பற்றியும், செய்ய வேண்டிய தானங்களை பற்றியும் பேசலாம். பொதுவாகவே வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்பார்கள். நம்மில் பலர் பணம் சேர்ப்பதிலேயே முழு வாழ்க்கையையும் தொலைக்கிறார்கள். நாம் இறந்த பிறகும் நம்மை தொடரும் புண்ணியத்தை சேர்க்க தவறிவிடுகிறார்கள். அந்த புண்ணியத்தை அடைய தானமே சிறந்த வழி. நான் தொடங்கிய இந்த இழையில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.

Thozhi, Dana darmam seivadhu avar avar viruppame.Idil kadugu alavu koduthalum darmame.Malai alavu koduthalum darmame.Enave idil solli seiya vendiyadu illai.Aanal kodukkmal irupavar kalukku idai parthu kodukka thondri naal idu oru naala matrame. Valthukkal.

nisarbanu

நாம் செய்யும் தான தருமம் நம் பிள்ளைகளை காக்கும் என்று என் அம்மா
எப்பொழுதும் சொல்வார்கள். பசியென்று வந்தவர்களுக்கு வுணவு கொடுப்பது
சிறந்ததானம்.நாம் செய்யும் தானத்தை இங்கு சொல்வதை விட கஷ்டப்படுபவர்கள்
என்று தெரிந்து தானம் செய்வது நல்லது. இவ்வுலகில் ஏமாற்று காரர்கள் நிறைந்திருக்கிறார்கள்
பாத்திரமறிந்து பிச்சை இடுவது நல்லது.என் பெற்றோர் நண்பனென ஒருவனை நம்பி அவன் கஷ்டபடுகிறான் என
நகைகளை கொடுத்து ஏமாந்தார்கள். அது போல் ஏமாறாமல் பார்த்து வுதவி செய்யவும்

நான் சொல்ல வருவது, தானத்தில் சேருமா? அல்லது தர்மத்தில்
சேருமா என்று தெரியலை.எனக்குத்தெரிந்த பையன் ஒருவன்
10-வதுக்கு மேல படிக்க வசதி இல்லாம இருந்தான்.அப்போஒரு
நல்ல உள்ளம் படைத்த ஒரு ஆண்டி அந்த பையனை ஒரு
டாக்டரிடம் அறிமுகம் செய்துவைத்தா. அவரும் அந்த பையனிடம்
விவரங்கள் எல்லாம் கேட்டு தெரிஞ்சுண்டார் அந்தபையனும்
10-வதில்85%எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தான் அந்த டாக்டர் நீ
மேலே படிக்க நான் உதவி பண்றேன். நன்னா படிக்கறாய்.
எவ்வளவு வேனுமோபடி. எல்லாஉதவியும் நான் பண்ரேன்.
ஆனா ஒரு கண்டிஷன். என்பெயரை யாரிடமும் சொல்லக்கூடாது.
என்ன சரியா. போ, சந்தோஷமா அட்மிஷனுக்கு ஏற்பாடுபண்ணிக்கோ
என்று மலர்ந்த முகத்துடன் சொன்னார். அந்த பையனுக்கு சந்தோ
ஷத்தில் அழுகையே வந்து விட்டது. இன்று அந்த பையன் சிங்க்ப்பூரில்
பெரிய தொழில் அதிபராக கை நிரைய சம்பாதிக்கிறான். படிக்க வசதி
இல்லாத வர்களுக்கு தன்னாலான உதவிகளை அமைதியாக செய்து
வருகிரான். இது எவ்வளவு நல்ல விஷயம் இல்லையா?.

மேலும் சில பதிவுகள்