குழப்பத்தில் உள்ளேன் யாரது விடை தாருங்கள்

என் மாமனாருக்கு கண் அருவை சிகிச்சை செய்ய வேண்டும். அரவிந்தில் செய்யலாம் என்று இருந்தோம்.இப்போது அங்கு காப்பிட்டு திட்டம் செயல் படாது என்ரு கூறிவிட்டார்கள். எனவே என் கணவர் 14000 கொடுத்து இந்த அருவை சிகிச்சை செய்ய இருக்கிரார். அரவிந்தில் இலவசமாக செய்யும் மருத்துவமனையும் உள்ளது. அங்கு செய்யலாம் என்று என் கணவர் சன்டை போடுகிரார் நானும் வேலைக்கு செல்கிரேன்.என் கணவரின் அண்ணனுக்கு அதிக வருமானம் இல்லை.அவர் வேலைக்கு அதிகமாக செல்ல மாட்டார்.அவரது மனைவி வீட்டில் தான் இருகிரார். அவர்து பையன்னுகு போன மாதம் தான் 4000 ரூபாய் பல்லி கட்டணம் செலுத்தினோம். இந்த மாதம் என் மாமனாரின் கண் அருவை சிகிச்சை அதற்கு அவர் அண்ணன் எதுவும் பணம் தரமாட்டார்.நான் சிக்கானமாக இருந்து சேர்க்கும் பணததை என் கணவை அவரது சம்பலம் 5000 .என் வருமானதை 3500-வைத்து தான் வாழ்கிரோம். நான் இந்த மாதத்தில் இருந்து சீட்டு கட்ட துவங்கி உள்ளேன். நல்ல சாப்பாடு கிடையாது. நானும் எதும் கேட்க்கமாட்டேன். இலவச மருத்துவமனையில் செய்யலாம் என்ரால். என் கணவர் சண்டை போடுகிரார். என் மீது தவரு இருக்கிரதா இல்லையா என்று தெரியவில்லை.குழப்பத்தில் உள்ளேன் யாரேனும் விடை சொல்லுஙகல்

ஸ்ரீ தேவி இங்கிலீஸ் வேண்டாம் கண்ணம்மா.
அடுத்த முறை பதிவு தமிழ்ல ஓக்கேவா?
கீழே இருக்கும் தமிழெழுத்துதவி உங்களுக்கு உதவும்.(http://www.arusuvai.com/tamil_help.html)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

உன் மாமனாரின் கண் அறுவை சிகிச்சை பற்றி நீயும்
உன் கணவரும் நன்கு பேசி எது சிறந்தது என்று முடிவு
பண்ணவும். கூடிய விரைவிலேயே நல்ல முடிவு எடுக்கவும்.
பாவம் அந்த பெரியவர் என்ன அவஸ்தையில் இருக்கிறாறோ?
புத், புது செலவுகள் வந்தாலும் அதற்குத்தகுந்தாற்போல புது,
புது வரவுகளும் வந்து கொண்டுதானிருக்கும். எல்லா தோழிகளின்
பதிவு களையும் பார்க்கும் போது அர்விந்த் நல்ல மருத்துவமனை
என்று தான்தோன்றுகிறது நல்ல முடிவாக எடுங்கள்..

இங்கு சிலர் சொல்லும் பதிலை பார்த்தால், தனியார் மருத்துவம் சிறந்ததா இல்லை அரசு மற்றும் சமூக நலத்துக்காக அர்பணித்துக்கொண்ட தொண்டு நிறுவனம் சிறந்ததா என்று ஒரு பட்டி மன்றம் நடத்தி விடுவார்கள் போல் இருக்கிறது .!
வருத்தத்தில் இருக்கும் அந்த சகோதரிக்கு மேலும் குழப்பம் தான் மிஞ்சியும்.

nagavalar... நீங்கள் எப்படி தனியார் மருத்துவ மருத்துவமனை பற்றி விசாரிசென்களோ அப்படியே ஒரு எட்டு (நேரில்) போய் அரவிந்தர Hospital - ல பார்த்து விட்டு வந்து பிறகு முடிவு எடுக்க சொல்லுங்கல். (address கீழ இருக்கு)
நீங்கள் கவலைபடுவது பணத்தை பற்றியது மட்டும் இல்லை, சமூக நலத்துக்காக அர்பணித்துக்கொண்ட வர்களின் தரத்தை சந்தேகிக்குரிங்கனு நினைக்கும் போது தான் வருத்தமாக இருக்கிறது. சிலர் தனியார் ரிடம் செல்வது தான் கெளரவம் எண்டு நினைகிறார்கள் அப்படி பட்ட குணம் உங்க கணவருக்கு இருந்தால் சரி பண்ணுவது கஷ்டம் தான்.

அப்படியே நீங்க 10 குறைகளை சுட்டி காட்டினாலும், என்னால் 11 குறைகளை சுட்டி காட்ட முடியும் (தனியாரிடம் குறைகளுக்கு ஒன்னும் குறை இல்லை என்பது என் எண்ணம்)
Aravind Eye Hospital

Kuruvikaran Road, Gandhi Nagar
Madurai, Tamil Nadu 625020, India
0452 4356100

Ps: Aravind Eye Care System today is the largest and most productive eye care facility in the world. From April 2007 to March 2008, about 2.4 million persons have received outpatient eye care and over 285,000 have undergone eye surgeries at the Aravind Eye Hospitals at Madurai, Theni, Tirunelveli, Coimbatore and Puducherry.

Blending traditional hospitality with state-of-the-art ophthalmic care, Aravind offers comprehensive eye care in the most systematic way attracting patients from all around the world.

Inaugurated in 1976, Aravind Eye Hospital, Madurai has grown to accommodate 329 paying patients and 920 free patients. It has full-fledged super-specialty clinics including, Retina and Vitreous, Cornea, Glaucoma, IOL, Paediatric Ophthalmology, Neuro-ophthalmology, Uvea and Orbit and Oculoplasty, manned by highly-qualified specialists.

Aravind Eye Hospital, Madurai, is the headquarters for the Madurai Eye Bank Association, which receives eyeball donations from various institutions in India and from the USA. Aravind-Madurai handled 775,383 outpatient visits and performed 107,197 surgeries from March 2007- April 2008.

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

அது ஏன் பாதி தமிழ், மீதி இங்கிலீஸ் அதையும் தமிழில் போடலாமே!!!!!!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அறுசுவைல பதில் சொல்வது என் முழு நேர தொழில் இல்லைங்க ..
வேலைல கொஞ்சம் ரிலாக்ஸ் தேவை படும்போது இப்படி அப்படி சில வெப்சைட் பார்த்து மைன்ட் ரெப்ரெஷ் பண்ணிகிறதுக்கு வர இடம் இது. தமிழ் பாதி இங்கிலீஷ் பாதி ல பதில் போடணும்னு ஒன்னும் வேண்டுதல் கிடையாது. நேரம் இன்மையும் காரணம்.

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

நான் தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.உங்களை போல் தான் யாருக்கும் அருசுவையில் பதில் போடுவது முழுநேர வேலை இல்லை.உங்களை போல் தான் ரிலாக்ஸ் தேவை படும்போது இப்படி அப்படி சில வெப்சைட் பார்த்து மைன்ட் ரெப்ரெஷ் பண்ணிகிறதுக்கு வர இடம் இது.உங்களை போல் தான் அனைவரும் மைன்ட் ரிப்ரஷ் பண்ண இங்க வராங்க. உங்களை போல் தான் பலருக்கும் நேரமின்மை இது போல் உள்ள இங்கிலீஸ் பதிவுகளை பார்வையிடும் போது நீங்கள் எழுதிய கருத்துக்கள் பயனுள்ளதாக இருப்பினும் பலரும் அதை படிக்க தவறலாம்.இங்கே இருக்கும் எத்தனை பேருக்கு இங்கிலீஸ் தெரியும் சொல்லுங்க? நீங்கள் சிரமம் பாராமல் தமிழில் எழுதினால் அனைவருக்கும் அது பயனுள்ளதாக அமையும். மனம் புண்படும் படி பேசியிருந்தால் மன்னிக்கவும்(என் நோக்கம் அது இல்லை).

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி. நான் என் மாமனாருக்கு பணம் செலுத்தி பார்க்கிரேன். இலவசமாக செய்து வேரு ஏதோ குரை ஏர்ப்பட்டால் கூட என்னால் தான் என்று தோன்றும் என் கணவருக்கும் செரி , எனக்கும் மண உளைச்சல் உண்டாகும்.ஆகவே பணம் செலுத்தியே பார்க்கிறேன். இதை என் மனப்புர்வமாக சொல்கிறேன்

மேலும் சில பதிவுகள்