பழனி-ல யாராச்சு இருகீங்களா?

வணக்கம் தோழிகளே
எல்லா ஊருல இருந்தும் எல்லாரும் ஒன்னா கூடி பேசிக்கறீங்க, ஆனா யாரும் பழனி-ல இருக்க மாறி தெரியலயே???

நான் உடுமலைப்பேட்டை-ல இருக்கேன். அங்க இருந்து பழனி போற வழில ஒரு கிராமத்துல இருக்கேன். உடுமலைப்பேட்டை-ல இருந்து 20கிலோ மீட்டர் தள்ளி எங்க ஊரு இருக்கு, எங்க ஊருல இருந்து பழனி 20கிலோ மீட்டர் ஏதாச்சு புரிஞ்சுதா???

ஓகே எங்க ஊரு பக்கம் யார் யார் இருக்கீங்க???

நான் பழனி இல்லை. ஆனாலும் நான் கோவையில் படிக்கும் போது என் friend ஜமுனா பழனியில் ஏதோ ஒரு ஊரிலிருந்து வருவாள்.(ஊர் பெயர் நியாபகமில்லை ஒவில் ஸ்டார்ட் ஆகும் என்று நினைக்கிறன்.என் கிளாஸ் மேட் லோகநாதன் கூட வுங்கள் ஊர்தான்.ஜமுனா எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை.பழனி என்றதும் பதில் போடவேண்டும் என்று தோன்ற்யது.
லதா நீங்க என்ன செய்கிறீர்கள். வுங்களை பற்றி எழுதவும்.

romba mukkiyama

nan trichy than palani enkey irukku

நீங்க பதிவு போட்டதுல ரொம்ப சந்தோஷம்... ஓ-ல நெரய ஊரு இருக்குங்க அதனால எந்த ஊருன்னு தெரியலங்க...

நான் படுச்சு வளர்ந்தது எல்லாம் சென்னைங்க. ஊட்டி அம்மா ஊரு. கோயம்புத்தூர் அப்பா ஊரு. இப்ப பழனி-ல இருக்கேன்.

எனக்கு கல்யாணம் ஆகி 5வருஷம் ஆச்சு, ஒரு பொண்ணு இருக்கா 2அரை வயசு ஆகுது, பேர் நிரஞ்சனா. இன்னும் கொஞ்ச நாள்ள கேரளா பொய்ருவோம் என் கணவர் ஊரு அதுதான்...

நானும் உங்கள மாறி ஹோம் மேக்கர் தான்... வேர ஒன்னும் இல்லங்க என்ன பத்தி சொல்ல...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

நான் பழனி பக்கம் எல்லாம் இல்லீங்க. ஆனாகூட
பழனியை என்னால மறக்கவெமுடியாது. ஏன்
தெரியுமா?( சொன்னாதானே தெரியும்.)13வருடம்
முன்பு பழனிலதான் என்கல்யாணம் நடந்தது. அத்னால
பழனி மறக்கமுடியாத இடம் ஆயிடுத்து.

என்னப்பா லதா, ரண்டு நாளைக்கு முன் தானே வனிதா அக்கா சத்தம் போட்டாங்க. மறுபடியும் ஆரம்பிச்சீங்க?
ஒவ்வொறு ஊர் பேர் இருக்கும் போது அது மத்தவங்களுக்கு கஸ்டமா இருக்கும்.

நீங்க ஊர்க்கு போனதா சொன்னீங்க. அதுனால தெரியாதுன்டு நெனைக்கிறேன். பழனிய இதோட விட்டுருங்க. பொதுவான இழையில் பேசலாம்.தப்பா நெனைக்க வேண்டாம். என் தோழிக்கு நான் இடும் வேண்டுகோள்.........

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நான் அதை கவனிக்கவே இல்ல வெரி சாரிங்க... நான் பாத்த வரைக்கும் பழனி-ய கானம்னு தான் இப்படி ஒரு இழை ஆரம்பிச்சுட்டேன்...

இனி இப்படி ஆரம்பிக்கல ஓகேங்களா? அப்பறம் இங்க பழனி-ல பக்கத்துல யாராது இருந்தா அவங்கள சந்திச்சு டீப் ஃப்ரென்ட் ஆகிக்கலாம்னு ஒரு அல்ப ஆசை தான்க அக்கா வேர ஒன்னும் இல்ல...

ஓகே இந்த இழைய இப்படியே விட்டறேன் அக்கா...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

எங்க அம்மா அப்பா கல்யாணம் கூட பழனி-ல தான் நடந்ததா சொல்லிருக்காங்க... ரொம்ப சந்தோஷம்... பழனி வந்தா எங்க வீடு ரொம்ப கிட்ட அதனால இங்க வந்தா எங்க வீட்டுக்கு வராம போக கூடாது சரிங்களா...

lathavine@gmail.com இந்த மைல் அய்டிக்கு எனக்கு ஒரு மைல் பன்னுங்க என் மொபைல் நெம்பர் தரேன் ஓகேங்களா அக்கா...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

இவ்வளவு அன்பா வீட்டுக்கு அழைக்கும் தோழி இருக்கும்
போது அதற்காகவே ஒருதடவை பழனி வரலாம் போலத்தான்
இருக்கு.

எப்ப வறீங்க எங்க வீட்டுக்கு... நான் ரெடி ஆகிக்கறேன்... எல்லாரையும் கூட்டிட்டு வாங்க... ஆடி மாசம் வேற வருதில்ல ரொம்ப விசேசமா இருக்கும் பழனி-ல...

முருகரையும் எங்களையும் பாக்க எப்ப வறீங்க?????

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

மேலும் சில பதிவுகள்