குழந்தைக்கு வேர்குரு போல் கொப்புளங்கள்

என் குழந்தைக்கு இப்பொது நான்கு மாதம். தலையில் சிவப்பு நிறத்தில் வேர்குரு போல் கொப்புளங்கள் வருகிறது. அதுவும் பெரிதாக உள்ளது. நான் அதற்கு சந்தனம் வைக்கிறேன். வேறு என்ன செய்யலாம்? படுக்க வைக்க முடியவில்லை...... ரொம்ப கஷ்டப்படுகிறாள்.

அன்புடன்
மகேஸ்வரி

இது வெயிலினால் வருவது. பக்கத்தில் ஓடு கிடைத்தால் அதை உரசி போடுங்க. லாக்டோகேலமைன்(டாக்டரின் பரிந்துரையின் பேரில் எங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இது தான் உபயோகிப்போம்.) நல்ல லோசன். அதை பயன்படுத்துங்கள். குளிச்சி தரும் பழ வகைகள் அதிகமாக கொடுக்கலாம்(ஐஸ் போடாமல்).

கடைகளில் விற்கும் ப்ளாஸ்டிக் ஸீட்,மெத்தை இதில் படுக்க வைக்க வேண்டாம். அந்த பெட்களில் இருக்கும் மட்டமான பஞ்சு சூட்டை அதிக படுத்தும். வெறும் தரையில் துணி விரித்தோ, பாயிலோ குழந்தையை படுக்க வைக்கலாம்.நீங்கள் தாய் பால் கொடுப்பவர் என்றால் சூடு அதிகப்படுத்தும் உணவுகளை குறைத்துக்கொள்ளுங்கள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கொப்புளங்கள் சூட்டினால் வந்திருக்கும்.சந்தனம் நல்ல மருந்துதான். ஆனால் குழந்தைக்கு 4 மாதங்களே ஆவதால் சந்தனம் மிகவும் குளிர்ச்சி.அதனால் குழந்தைக்கு சளி பிடித்துவிடப்போகிறது.முதலில் childran specialistidam போய் காட்டவும். அதன் பிறகு ஜூஸ் போன்றவை tri செய்யவும். அமீனா சொன்னதுபோலே குழந்தையை காட்டன் துணியில் படுக்கவைக்கவும்

அமீனா & சுந்தரி ரொம்ப தேங்ஸ் பா..... நான் சந்தனம் தான் போட்டேன். என் பாட்டி ஊரிலிருந்து ஒரு தழை கொடுத்து விட்டாங்க. அது போட்டதும் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிறது.

அன்புடன்
மகேஸ்வரி

நல்லாருக்கீங்களா? பொன்னுக்கு இப்ப பரவால்லயா?

நீங்க பாப்பாக்கு என்ன சோப், லோஷன், க்ரீம் யூஸ் பன்னரீங்க... சில டைம் பாப்பாக்கு அதெல்லாம் ஒத்துக்காம அதனால கூட அப்படி ஆகும்.

என் பொன்னுக்கு ஜான்சன்ஸ் சோப் தான் யூஸ் பன்னினேன் சின்ன வயசுல அது ஒத்துக்காம ஒடம்பெல்லாம் அலரிஜி ஆயுருச்சு. டாக்டர்-ட காட்டினதுக்கு டவ் சோப் யூஸ் பன்ன சொன்னாரு அத யூஸ் பன்னப்ப சரி ஆயுருச்சு...

எதுக்கும் பாப்பாக்கு மறுபடியும் அப்படி இருந்தா வீட்லயே அரச்ச கடலமாவு போட்டு குளிக்க வெய்யுங்க... அரிசி கலுவுன தன்னிய வெச்சும் குழந்தைய குளிக்க வெக்கலாம் அது கை கால்கள நல்லா ஸ்ட்ராங்கா ஆக்கும்... நாட்டு மருந்துக்கடைகள்ல கிடைக்கர நலங்கு மாவு போட்டு குளிக்க வெச்சாலும் பாப்பா நல்லா வாசனையா இருப்பா... நல்லதும் கூட...

மீண்டும் பேசலாம்.

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

நான் நலம். நீங்க நலமா? பாப்பாக்கு இப்ப பரவாயில்லை பா.....
பாப்பா பெயர் ஷத்விகா...... நான் ஷத்விகாவுக்கு ஜான்சன் பேபி சோப் தான் யூஸ் பண்றேன். அப்புறம் கடலை மாவு போடுறேன். உங்க பொண்ணு பெயர் என்ன?

அன்புடன்
மகேஸ்வரி

என் பொண்ணு பெயர் நிரஞ்ஜனா. அக்டோபர் வந்தா மூணு வயசு ஆகபோகுது. ஒரு வாரமா இவலுக்கும் ஒடம்பு சரி இல்லை... இன்னிக்கு தான் ஓரளவுக்கு சரி ஆகி எந்துருச்சு உக்காந்து விளையாடரா... ரொம்ப இளைச்சு போய்ட்டா இந்த ஒரு வாரத்துல...

அப்பறம் உங்க பொண்ணு பெயர் நல்லாருக்கு இப்பதான் கேக்கறேன் இந்த பெயரை... ஷத்விகா... என்ன மீனிங் இந்த பெயர்க்கு???
மீண்டும் பேசலாம்.

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

மேலும் சில பதிவுகள்