மூக்கு மற்றும் காது பராமரிப்பு

மூக்கு காது பராமரிப்புBeauty tips

மூக்கை பராமரித்தல்

இந்த வாரம் மூக்கின் பராமரிப்பைப் பற்றியும், மேக்கப் பற்றியும் பார்ப்போம்.

கிளி, குடை மிளகாய், சப்பை, கோணல், கூர்மை இப்படி பல வார்த்தைகளோடு சேர்த்து மூக்கின் தோற்றத்தினையும், அளவினையும் குறிப்பிடுகிறோம். ஆனால் எப்படிப்பட்ட ஷேப் உள்ள மூக்கினையும் ஒழுங்காக பராமரித்து, அழகாக மேக்கப் செய்து கொண்டால் ஷேப்பைப் பற்றிய கவலை தேவையில்லை. மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது. ரெகுலரான பேஷியல் கூட போதும். அதுவும் முடியாவிட்டால் வீட்டில் செய்து கொள்ளும் சின்ன ட்ரீட்மெண்ட்டே போதும். மிக எளிதான மூக்குக்கான அழகுக் குறிப்பினை பார்ப்போம்.

ப்ளாக் ஹெட்ஸ் - ஒயிட் ஹெட்ஸ்

மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்சனை பிளாக் ஹெட்ஸ்தான். சிலருக்கு ஒயிட் ஹெட்ஸும் காணப்படும். இது இரண்டுக்குமே முறையான கவனிப்பு அவசியம். பிளாக் ஹெட்ஸுடன் இருக்கும் மூக்கு, அருகில் வந்து பார்ப்பவருக்கு நிச்சயம் ஒரு வித அசூசையை ஏற்படுத்தும். கடைகளில் விறகும் பிளாக் ஹெட்ஸ் ரீமூவல் ஸ்ட்ரிப்ஸ் அதிக நாட்களாக இருக்கும் பிளாக் ஹெட்ஸை முழுதுமாக நீக்காது. ஏனென்றால் நாள்பட்ட பிளாக் ஹெட்ஸ் மிகவும் அழுத்தமாக இருக்கும். எளிதாக ஸ்ட்ரைப்ஸ் மூலம் நீக்க முடியாது. எனவே ஸ்ட்ரைப்ஸை (ஒரு முறை பிளாக் ஹெட்ஸை முழுதும் நீக்கிவிட்டு) ரெகுலர் பராமரிப்புக்கு மாதம் ஒரு முறை என்று உபயோகிக்கலாம்.

நாள்பட்ட பிளாக் ஹெட்ஸுக்கு மிகவும் சரியான ட்ரீட்மெண்ட், ஆவி பிடித்தல்தான். வீட்டிலேயே பேஷியலுக்கு செய்வதுபோல் எண்ணெய்ப்பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் க்ரீமை மூக்கிற்கு நன்றாக தடவி, மசாஜ் செய்ய வேண்டும். மூக்கின் பிளாக் ஹெட்ஸ் உள்ளவர்கள், விரல்களால் மூக்கின் பக்க வாட்டிலும், நுனியிலும் அதிக நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் கொதித்த நீரை ஊற்றி, நன்றாக வேர்க்கும்வரை ஆவி பிடிக்க வேண்டும். இப்போது வெளிச்சமான இடத்தில் அமர்ந்து, கண்ணாடியைப் பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களில் பிளாக் ஹெட் ரிமூவரால் (பேஷியல் கிட்டில் இருக்கும். கிடைக்காவிட்டால் ஸ்டெரிலைஸ் செய்த டீஸ்பூனின் முனை கொண்டு நீக்கலாம்) மெதுவாக அழுத்த வேண்டும். வெளியே வேரோடு வரும் பிளாக் ஹெட்ஸை டிஷ்யூவால் துடைத்து எடுத்துவிடுங்கள். இப்படியே மூக்கில் உள்ள பிளாக், ஒயிட் ஹெட்ஸ் முழுதுமாக நீக்கி விடலாம். இப்போது குளிர்ந்த நீரில் மூக்கினை நன்றாக கழுவினால் போதும். இந்த ட்ரீட்மெண்ட் செய்யும் முன்பு முகத்திற்கு ஸ்க்ரப் போடுவதென்றாலும் போடலாம். ஆனால் ட்ரீட்மெண்ட் செய்த பிறகு ஸ்க்ரப்பிங் கூடாது.

ரெகுலராக வாரம் ஒரு முறை முகத்தினை ஸ்க்ரப் செய்யும்போது மூக்கு பகுதியில், பக்கவாட்டில் மசாஜ் செய்தாலே ஒயிட் ஹெட்ஸ் வராது. மூக்கின் உள்ளே ஒரு சிலருக்கு அதிகமாக முடிகள் இருந்து, வெளியில் லேசாக எட்டிப் பார்க்கும். இதுவும் அழகை கெடுக்கிற விஷயம்தான். சின்னதாக புருவத்தை ட்ரிம் செய்ய உதவும் கத்தரிக்கோலை கொண்டு லேசாக ட்ரிம் செய்துவிடலாம். இதற்கென்று பிரத்யேகமான கத்தரிக்கோலும் கடைகளில் கிடைக்கும். இந்த தொல்லைகள் பொதுவாக 40 வயதை தாண்டியவர்களுக்கு அதிகம் இருக்கும். அதிக எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும், எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்களுக்கும் பிளாக் ஹெட்ஸ் அதிகம் காணப்படும். நார்மல், ட்ரை ஸ்கின் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சணை குறைவு.

Nose care

மூக்கு குத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலிலேயே எந்த இடத்தில், எந்த பக்கத்தில் மூக்கை குத்த வேண்டும் என்று சரியாக மார்க் செய்து கொண்டு செயல்படுவது முக்கியம். காது போல அல்லாமல், தவறான இடத்தில் துளை போட்டுவிட்டால் முகத்தின் அழகை பாதிக்கும். துளையை மறைப்பதும் மிகவும் கடினம். மூக்கு குத்தப் பிடிக்காதவர்கள் கல்யாணத்துக்கு என்று ட்ரெடிஷனல் மேக்கப் செய்யும்போது மூக்கில் கல் ஸ்டிக்கர் கூட ஒட்டிக் கொள்ளலாம். மூக்கு குத்தாமல் செய்யப்படும் ட்ரெடிஷனல் அலங்காரங்கள் ஒரு வித முழுமையடையாததுபோல இருக்கும். அதனால் கல்யாணத்துக்கு மேக்கப் செய்பவர்கள் மிகவும் (மூக்குத்தி போடப் பிடிக்காதவர்கள்) ட்ரெடிஷனலான மேக்கப்பைத் தவிர்த்து, கொஞ்சம் மாடர்ன் லுக்கில் மேக்கப் செய்தால் அந்த குறை தெரியாது. அதே போல் கல்யாணங்களில் புல்லாக்கு (நரசிம்மா படத்தில் " ரா ரா நந்தலாலா" பாட்டு ஆரம்பத்தில் ரம்யா கிருஷ்ணன் போட்டிருப்பதுதான் புல்லாக்கு. அந்த அளவாவது மூக்கிற்கும் உதட்டிற்கும் இடைவெளி தேவை) போடும்போது நமக்கு அதற்கேற்ற முக அமைப்பு இருக்கிறதா என்று பார்த்து உபயோகிக்க வேண்டும். சரியான முக அமைப்பு (மூக்கிற்கும் வாய்க்கும் இடையே உள்ள தூரம்) இல்லாவிட்டால் மூக்கு ஒழுகுவது போல தோற்றம் ஏற்பட்டுவிடும்.

மூக்கிற்கு மேக்கப் போடும்போது நமது மூக்கு ஷேப்பை கவனித்து அதற்கு தகுந்தாற்போல் மேக்கப் செய்ய வேண்டும். சில டெக்னிக்குகளை பொதுவாக இங்கே சொல்கிறேன். சப்பையான மூக்கு உள்ளவர்கள் முகத்திற்கு பவுண்டேஷன் மற்றும் பவுடர் அப்ளை செய்த பிறகு, முக நிறத்தைவிட கொஞ்சம் ஒரு ஷேடு குறைவான டார்க் நிறத்தில் உள்ள ரூஜை மூக்கின் இரு ஓரங்களிலும், அதாவது இரு புருவத்தின் ஆரம்பங்களிலிருந்தும் மூக்கு அடிவரை, நேராக கோடு போடுவது தடவ வேண்டும். இப்போது நடுபக்கம் மட்டும் லைட்டாகவும் ஓரங்கள் பளிச்சென்று தெரியாதது போலவும் இருக்கும். சப்பை மூக்கு என்று பார்த்தால் தெரியாது. இதே போல் ஒரு பக்கம் சிறிது அகலமாகவும், ஒரு பக்கம் சரியாகவும் உள்ள மூக்கு தோற்றமுள்ளவர்கள் ஒரு பக்கம் மட்டும் இதே போல் டார்க் கலரை அப்ளை செய்தால் நன்றாக இருக்கும். பொதுவாக இந்த வகை அப்ளிகேஷனை நார்மலான மூக்கு ஷேப் உள்ளவர்களும் செய்து கொள்ளலாம். மூக்கு அழகாக தெரியும்.

இப்படி டார்க் ஷேட் ரூஜைக் கொண்டே மூக்கின் ஷேப்பினை அழகாக்கிவிட முடியும். ஆனால் இந்த வித மேக்கப் போடும்போது அடிக்கடி செய்து பார்த்து பழகிக் கொள்வது அவசியம். புதிதாக எங்கேயாவது செல்லும்போது திடீரென்று ட்ரை செய்து பார்ப்பது பல சமயங்களில் காலை வாரிவிடும். மேக்கப் செய்து பார்த்து, போட்டோ எடுத்துப் பார்த்தால் நமது மேக்கப்பின் குறைகளை நாமே கண்டுபிடித்துவிடலாம். ரூஜ் பளபளப்பில்லாத மேட் லுக் ரூஜாக இருப்பது அவசியம். ஜெல் டைப் இதற்கு சரி வராது.

காதுகளை பராமரிப்பது எப்படி?

அடுத்து காதுகள் பராமரிப்பினைப் பார்ப்போம். குழந்தைகளுக்கு காது குத்தும்போதே, மூக்கிற்கு சொன்னதுபோல் சரியான ஸ்பாட்டை குறித்துக் கொள்வது அவசியம். பலருக்கு வயதானால் தோடுகளை பட்டன் இன்றி போட இயலாது. அதிக கனமுள்ள தோடுகளைப் போடுவதால் துளைகள் பெரிதாகிவிடும். இதனை எளிதாக சரி செய்து கொள்ள முடியும். மருத்துவரை அணுகினால் அவர், இப்படி பெரிதாக உள்ள துளைகளில் லேசாக கீறிவிட்டு தைத்துவிடுவார். லோக்கல் அனஸ்தீஷியா கொடுப்பதால் வலியெல்லாம் இருக்காது. சில நாட்களில் துளைகள் சேர்ந்துவிடும்.

நம்ம ஊரில் இந்த ட்ரீட்மெண்ட் பொதுவாக எல்லா பொது மருத்துவர்களும் செய்வார்கள். அதிக எடையுள்ள தோடு மட்டுமின்றி வளையங்களை அணிபவருக்கும் இந்த பிரச்சணை ஏற்படும். தூங்கும்போது இந்த வகை தோடுகளை கழட்டி வைத்துவிடுவது நல்லது. அதேபோல் சிலர் எப்போதும் தோடுகளை அணிந்து கொண்டே, அதனை ரெகுலராக க்ளீன் செய்யாமல் இருப்பார்கள். இதனால் காதுகளில் மற்றும் தோடுகளில் அழுக்கு சேர்வது மட்டுமில்லாமல் காதின் நிறமும் கறுப்படையக்கூடும். இப்படி நேரமில்லை என்று சாக்கு சொல்பவர்கள் வாரம் ஒரு முறை தலைக்கு குளிக்கும்போதாவது தோடுகளை கழற்றி சோப் வாட்டரில் பிரஷ் கொண்டு கழுவி க்ளீன் செய்யலாம். எண்ணெய்ப் பிசுக்கு, அழுக்குகளினால் ஏற்படும் துர்நாற்றமும் போகும்.

அடுத்து முக்கியமான விஷயம் காதுகளை சுத்தம் செய்வது. தரமான பட்ஸை உபயோகித்து காதுகளை சுத்தம் செய்வது மிகவும் அவசியம். நம் ஊர்களில் கடை வாசல்களில் பரிதாபமாக தோற்றமளிக்கும் சின்ன பிள்ளைகள் விற்கும் பட்ஸினை ஒரு போதும் வாங்காதீர்கள். அவர்களிடம் பரிதாபம் ஏற்பட்டால் பணமாக வேண்டுமானால் சும்மா கொடுங்கள். ஆனால் பொருள் வாங்கி உதவி செய்கிறேன் என்று வியாதிகளை வாங்கிக் கொள்ள வேண்டாம். அதிக விலை இருந்தாலும் ஜான்சன்& ஜான்சன் போன்ற தரமான பட்சுகளை வாங்கி உபயோகியுங்கள். பஞ்சும் அப்படியே. குழந்தைகளுக்கு சின்ன பருத்தி துனியினைக் கொண்டு காதுகளை க்ளீன் செய்தால் போதுமானது அல்லது குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக உள்ள பட்ஸினை உபயோகிக்கலாம். இந்த வகை பட்ஸ்கள், முனை பெரிதாக காது உள்பக்கம் வரை போக முடியாமல் இருக்கும். எனவே பயப்படாமல் உபயோகிக்கலாம்.

காதுகளை அழகுபடுத்துதல்

காதுகளுக்கு அழகுப் படுத்துதல் என்று தனியாக எதுவும் தேவையில்லை. ஒரே ஒரு விஷயம் மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும். முகத்திற்கு மேக்கப் போடும்போது காதுகளுக்கும் சேர்த்து பவுண்டெஷன், பவுடர் தடவுங்கள். இல்லாவிட்டால் காதுகள் தனி நிறத்தில் இருக்கும். நிறைய தோடுகளை சைடு காதில் குத்திக் கொள்வதைக் காட்டிலும், பட்டன் டைப் அல்லது பிரஸ்ஸிங் டைப் வளையங்களை உபயோகித்தால் பேஷன் மாறும்போது நாமும் வடுக்கள் இல்லாமல் மாறிவிடலாம். சிறு வயதுக்காரர்கள் பார்ட்டி, கல்யாணம் என்று மேக்கப் செய்யும்போது, காதை மறைக்கும் பட்டையான மாட்டல் போடலாம். ஆனால் வயதானவர்களுக்கு இன்விசிபிள் டைப் மாட்டல்(கண்ணுக்கு தெரியாத வண்ணம்) தான் பொருந்தும். அதுவும் கூட பட்டன் போட விருப்பம் இல்லாதவர்களுக்கு ஒரு சாய்ஸ் மட்டுமே. பேஷன் தோடுகள் வாங்கும்போது ஒவ்வாமை, எடை இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு வாங்குங்கள். காது, மூக்கு பராமரிப்பு மிகவும் எளிதான விஷயம். சின்ன அக்கறை நல்ல தோற்றத்தினையும், அழகையும் கொடுக்கும்.

Comments

நான் பல பதிவுகளில் குறிப்பிட்டுள்ள படி, மருத்துவரின் ஆலோசனையோடு அல்லது ப்ரிக்ரிப்ஷனோடு கடைகளில் கிடைக்கும் ரெடினால்-A க்ரீமை வாங்கி தினமும் இரு வேளை தடவுங்கள். கரும்புள்ளி போய்விடும். இந்த க்ரீம் போடும்போது வெயிலில் செல்லக்கூடாது. முகம் பாதிப்படையும். பிறகு, Fade Out ஒரு மாதம் கழித்து தினமும் இரவு மட்டும் உபயோகிக்கலாம். இது தவிர இயற்கையாக, எனது இந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கும் பொடியினை தயாரித்து, அதனை தயிரில் கலந்து தினமும் முகத்தில் தடவுங்கள். சரியாகும்.
http://www.arusuvai.com/tamil/node/3677

எப்படி இருக்கீங்க? உங்களை அறுசுவையில் பார்த்தே நாளாச்சு? குழந்தை நலமா? குழந்தை பிறந்த பிறகு இப்படி ஸ்கின் பிக்மெண்டேஷன், முக கருமை ஏற்படுவது, ஸ்கின் தன்மை மாறுவது எல்லாமே பொதுவாக நிறைய பேருக்கு ஏற்படும். முகத்திற்கு தினமும் தயிர் கலந்த பேஸ் பேக் போடுங்க. வாரம் ஒரு முறை முகத்தை ஸ்க்ரப் செய்து முல்தானி மட்டி பேக் போடுங்க.

வாயை சுற்றி உள்ள கருமையை நீக்க கவிக்கு வேறு ஒரு பதிவில் தெளிவாக பதிலளித்து இருக்கிறேன். அதிலிருந்து, " வாயை சுற்றி உள்ள இடங்களை அடிக்கடி தேய்க்காமல் இருக்க பழகிக் கொள்ள வேண்டும். வைட்டமின் E ஆயிலைக் கொண்டும் மசாஜ் செய்யலாம். இவை தவிர, அதிகம் வெயிலில் செல்லாத ஒரு வாரமாக தேர்ந்தெடுத்து, அந்த ஒரு வாரம் மட்டும் தினமும் Retinol A க்ரீமை தடவி வந்தால் அந்த கருமை நிற தோல் உரிந்து விடும். புதிதாக தோல் கருமை இன்றி இருக்கும். ஆனால் இந்த க்ரீம் உபயோகப்படுத்தும் போது எக்காரணம் கொண்டும் வெயிலில் செல்லக்கூடாது."

முழங்கை கருப்பு, சொர சொரப்பு நீங்க தினமும் இரண்டு வேளை அங்கே மாய்ச்சுரைசிங் லோஷனை தடவ வேண்டும். குளிக்கும் முன்பு ஸ்க்ரப்பிங் க்ரீம் எடுத்து முழங்கையில் தடவி மசாஜ் செய்து குளிக்கலாம். தூங்கும் முன்பு வாசலினோ , மாய்ச்சுரைசிங் லோஷனோ முழங்கைக்கு கண்டிப்பாக தடவ வேண்டும். அடிக்கடி கையை டேபிளில் ஊணிக் கொண்டு கம்ப்யூட்டர் பார்ப்பதும் சிலருக்கு பழக்கம். அதனாலும் இந்த கருமை ஏற்படலாம்.

நோஸ் ஸ்ட்ரிப்ஸை 15 நாளைக்கு ஒரு முறை பயன்படுத்தினால் போதும். அதிகபட்சமாக வாரம் ஒரு முறை போதும். அடிக்கடி உபயோகிக்க கூடாது. ஸ்கின் தொய்வடைந்து துளைகளும் பெரிதாகிவிடும். அதனால் Biore கிடைக்காட்டி பரவாயில்லை. எல்லா நோஸ் ஸ்ட்ரிப்புமே மாதம் இரு முறை உபயோகித்தாலே போதும்.

எப்படி இருக்கீங்க? உங்க பாராட்டுக்கு நன்றி.நீங்கள் தேர்ந்தெடுத்த எபிலேட்டர் சரியானதுதான். ஷெனாஸ் க்ரீமில் நீங்கள் தேர்ந்தெடுத்தது எந்த வகை க்ரீம்? நீம் ஃபேஸ் ட்ரீட்மெண்ட் க்ரீம்தான் தற்போது மார்க்கெட்டில் உள்ளது. இருந்தாலும் இந்த வகை க்ரீம்களை முகம், கை என்று சாதாரணமாக தடவி அப்படியே உலரவிடுவதுதான் சரியான முறை என்று ஷெனாஸ் ப்ராகட்ஸ் உபயோகிக்கும் முறையிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். நீங்கள் வாங்கின பேக்கிலேயுமே உபயோகிக்கும் முறை இருக்கும்.

Dear deva
pregnancy weight loss பண்றதுக்கு எதாவது டிப்ஸ் சொல்லுங்களேன். டெலிவரி முடிந்து 9 months ஆகுது, pregnancy period ல 20kg வெயிட் கெயின் பண்ணேன். இப்போ 15kgG kuraichiten. last 5 kg kuraiya matenthu, weight loss பண்ண எதாவது வழி சொல்லுங்கள்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

நான் நலம். நீங்க நலமா? ஆமாம் தேவா, முதல் மாதிரி வர முடியவில்லை. கொஞ்சம் வொர்க் அதிகம். அறுசுவையை பார்வையிடுவதோடு சரி. முல்தானிமெட்டி பேக் எல்லா ஸ்கின்னுக்கும் போடலாமா?

அன்புடன்
மகேஸ்வரி

நீங்க முதலில் இந்த காம்பினேஷன் பிரச்சணைக்கு க்ளியர்சில் பேஸ் வாஷ் ஜெல் யூஸ் பன்ணுங்க. ரொம்ப லைட்டான ஜான்சன் பேபி மாய்ச்சுரைசிங் லோஷனை உபயோகப்படுத்த ஆரம்பியுங்கள். க்ரீம் வேண்டாம். லைட்டாக பவுண்டேஷன் + பேஸ் பவுடர் போதும். உங்கள் முகம் எப்போதும் பளிச் லுக்கோட இருக்கும். உதடுகள் பகுதி ட்ரையாக இருந்தால் தினமும் பட்டர் தடவி வந்தால் போதும். வாரம் ஒரு முறை ஸ்க்ரப்பிங், மாதம் ஒரு முறை பேஷியல், தினமுமே குளிக்க போகும் முன்பு பேஸ் பேக் தடவி காயவைத்து குளிப்பதுன்னு ரெகுலரா செஞ்சுட்டு வந்தாலே போதும். இதுதவிர அந்தந்த பகுதிகளில் முகத்தில் உள்ள உறுப்புகளை பராமரிக்கும் முறைகளை கூறி இருக்கிறேன். பாருங்கள்.

ஆயில் சருமம் உடைய ஆண்களுக்கு வாரம் ஒரு முறை பேஷியல் செய்து முல்தானி மட்டி கலந்த பேக்கை முகத்தில் போட்டாலே போதும். இந்த ஆய்லி ஸ்கின் டல் லுக் போய்விடும். அந்த ஆய்லி லுக் போன பிறகு மாதம் ஒரு முறை பேஷியல் போதும். முல்தானி மட்டி உபயோகமும் அப்படியே. அவர்கள் ஓலே, கார்னியர் போன்ர பிராண்டுகளில் விற்கும் ஆயில் கண்ட்ரோல் அல்லது ஷைன் கண்ட்ரோல் க்ரீம்களை உபயோகிக்கலாம்.

அந்த பொடி தயாரிப்பு பற்றி இந்த பதிவில் பாருங்கள்.
http://www.arusuvai.com/tamil/node/3677

நான் நலம். குழந்தை பிறந்துவிட்டால் எப்போதும் பிசிதான்.முல்தானி மட்டி ட்ரை ஸ்கின் தவிர எல்லா ஸ்கின் டைப்புக்கும் போடலாம்.

இந்தக் கேள்விக்கு நான் பதில் சொன்னா என் வீட்டில் மட்டுமல்ல அறுசுவையிலேயும் என்னை எல்லாரும் ஆள் வெச்சு அடிக்க வந்துடுவாங்க. ஏன்னா நானும் இன்னும் எடையை குறைக்காம டபாய்ச்சுட்டுதான் வர்றேன். பிரெண்ட்ஸோட எக்ஸ்பீரியன்சிலும், முன்பு கடைபிடிச்ச விஷயங்களையும் தொகுத்து இதுக்குன்னு ஒரு பதிவு அறுசுவையில் மன்றத்தில் ரொம்ப பெரிசா போட்டிருக்கேன். உடல் எடை குறைய சில குறிப்புகள்னு தலைப்புன்னு நினைக்கிறேன். சரியா ஞாபகம் இல்லை. என்னோட சஜஷன் பாலண்ஸ்ட் டயட் + எக்சர்சைஸ் தான். உடம்பு ப்ளெக்சிபிலிட்டிக்கு யோகா செய்யலாம். இந்த லிங்கில் பாருங்க. http://www.arusuvai.com/tamil/node/4526?page=8

அன்பு தேவா

வந்துட்டிங்களா ;-)

ரொம்ப நன்றி.. நீங்க சொன்ன க்ரீம் எல்லா மிடிக்கல் ஷாப்பிலும் கிடைக்குமா ?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அந்த க்ரீம் எல்லா கடைகளிலும் கிடைக்கும். சில இடங்களில் ப்ரிஸ்க்ரிப்ஷன் இருந்தால் மட்டுமே கிடைக்கும்.

ரொம்ப நன்றி தேவா

பொறுமையா பதில் கொடுக்கறீங்க.. ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் தேவா மேடம், உங்கள் குறிப்புகள் அருமை, என்னுடைய முகம் நார்மல் ஷ்கின். நீங்கள் சொன்ன இந்த பொடியுடன் http://www.arusuvai.com/tamil/node/3677 நான் வேறு என்ன சேர்த்து face pack போட வேன்டும். நான் முன்பை விட கலர் கம்மியாக உள்ளேன். எத்தனை நாட்களுக்கு ஒரு முறை போட வேண்டும். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, சொல்லுங்க‌ள் தேவா. please....

ரொம்ப தேங்ஸ் தேவா.... நீங்கள் சொன்ன மாதிரி செய்து பார்க்கிறேன்.

அன்புடன்
மகேஸ்வரி

thanks for ur kind reply. i'll follow ur tips and will u give u the feedback.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

தேவா மேடம்,
சாரி நீங்க பதில் சொல்ல கொஞ்ச நாள் ஆகும்னு நினைத்து ஓபன் செய்யாமலே விட்டுவிட்டேன்
சொன்னது தப்புன்னா மன்னித்து விடுங்க..
ரொம்ப நன்றி கண்டிப்பாக செய்யுறேன்..
நான் loreal skin genesis போடுறேன் இது நல்லதா ?

என்றும் அன்புடன்,
கவிதா

அந்த பொடியில் சேர்த்துள்ள பொருட்களோடு, பன்னீர், தயிர், எலுமிச்சை சாறு கலந்து பேக் போடலாம். தினமுமே உபயோகிக்கலாம். நிச்சயம் நிறம் கூடும்.

அன்புள்ள தேவா மேடம்,
உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி. நீங்கள் சொன்ன மாதிரி செய்து பார்க்கிறேன்.
1. நார்மல் சருமம் உடைய ஆண்களுக்கு என்ன பேஸ் பேக் போடலாம்? எத்தனை நாட்களுக்கு ஒரு முறை போட வேண்டும்?
2. பத்து வயது உள்ள என் பெண் குழந்தைக்கு நீங்கள் சொன்ன இந்த பொடியுடன் http://www.arusuvai.com/tamil/node/3677 நான் வேறு என்ன சேர்த்து பேஸ் பேக் போட வேன்டும்? எத்தனை நாட்களுக்கு ஒரு முறை போட வேண்டும்?
3. பேஷியலில் டோனெர் யூஸ் பண்ணலாமா? எப்படி யூஸ் பண்ண வேண்டும்? After க்ளென்சிங் toner யூஸ் பண்ணலாமா? பிளிச்சிங் எப்படி பண்ணுவது?
உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, முடியும்போது சொல்லுங்க‌ள் தேவா மேடம்.
ந‌ன்றி

weight podathamathiri enna vunavu sappitalam. please enaku mail anupunka

தேவா , எனக்கு இரண்டு வருடங்களாக முகத்தில் நிறைய கரும்புள்ளிகள் உள்ளது. நான் ஓமனில் இருக்கிறேன்.ஸ்கின் டாக்டரிடம் காட்டினேன் அவர் இதற்கு eloctrolysis செய்வது தான் நிரந்தர தீர்வு என்கிறார். ஆனால் எனக்கு இயற்கை முறையில் எதாவது செய்வதில் தான் உடன்பாடு. நீங்கள் சொன்ன பொடி தயாரிக்க இப்போதைக்கு முடியாது . இந்த மாதம் தான் இந்தியா சென்று வந்தேன். வேறு எதாவது வழி சொல்லுங்க.

hello mam,how are you iam subbulakshmi i'm watching your website this is useful guide for ladies.thank you

every day waching ur website

ஹைய், மேடம்
எனக்கு 23 வயசாகுது, எண்ணைபசையான முகம். நான் வயதுக்கு வந்ததிலிருந்து முக்கின் மீது மட்டுமில்லாமல் வாய் பகுதியின் கீழ், நெற்றியில் அதன் இருபுரமும் முகத்தின் எல்லா பகுதியிலும் வெள்ளையாக வருகிரது. கிலின் அன்ட் க்லியர் ச்cரப் உபயோகித்தாலும் இரண்டு நாளுக்கு பின் வெளியே வந்துவிடுகின்ரன. எனது கணவர் அதை அருவருப்பாக நினைக்கிறார். வெளியேசெல்லவே கஷ்டமாக உள்ளது. தயவு செய்து எனக்கு நிரந்த திர்வு சொல்லுங்களேன் பிளீஸ்.

your tips very nice....

HAI MADEM,
HOW ARE YOU ?
ENAKKU MUGAM MATTUM BLACKA IRUKKU.
NANUM ELLA CREAMUM USE PANNITEN. HELP ME MADEM. ENEKKU INNUM 6 MONTH LA MARRIAGE. EN KAI UDAMBU NALLA KALARA IRUKKUM. MUGAM MATTUM OVER DART. PLZ PLZ HELP ME ALL.

உங்களுடைய பிரச்சணைக்கு அந்த இடங்களில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசைதான் காரணம். கவலை வேண்டாம். இதனை முற்றிலுமாக சரி செய்துவிட முடியும். தினமுமே நீங்கள் முல்தானிமட்டி, எலுமிச்சை, சந்தனம் கலந்த பேக் போடுங்கள். தயிர் கண்டிப்பாக சேர்க்க வேண்டாம். இரவு உறங்கும் முன்பு ஸ்க்ரப்பிங் க்ரீம் கொண்டு முகத்தை ஸ்க்ரப் செய்யுங்கள். அதை வாங்க முடியாவிட்டால் சிறிதளவு ஓட்ஸில் பன்னீர் கலந்து முகத்தில் நன்றாக தேய்த்து கழுவுங்கள். இப்படி செய்து வர உங்கள் முகத்தில் உள்ள எண்ணெய்ப் பசை நீங்கி வெள்ளையாக வருவதும் நின்று விடும். க்ளியர்சில் பேஸ் வாஷ் உபயோகியுங்கள். இது தவிர முகத்திற்கு பவுடர் போடும் முன்பு ஆயில் டூ நார்மல் ஸ்கின்னிற்கு உள்ள க்ரீம் அல்லது லோஷனை உபயோகியுங்கள்.

ஹாய் லக்‌ஷ்மி,நம் அனைவருக்குமே உடம்பு முழுக்க ஒரே நிறத்தில் இருப்பதில்லை. வெள்ளைக்காரர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அதிக சூரிய ஒளி முகத்தில் படும்போது, மற்ற பாகங்களைவிட முக சருமம் மென்மையாக இருப்பதால் எளிதில் பாதிப்படைந்து விடுகிறது. இதனைப் போக்க க்ரீம்களையெல்லாம் விடுத்து தினமும் அலோவேராவும் (இது சூரிய ஒளியால் கருத்த சருமத்தை சரி செய்யும்), உருளைக்கிழங்கு சாறும் (இயற்கையான ப்ளீச்), தயிர் கலந்த பேக் குளிக்க செல்லும் முன்பும் போட்டு வாருங்கள். முகம் நல்ல நிறத்தை பெறும்.

ஹாய் Modi Ahila, நார்மல் ஸ்கின் உள்ள ஆண்களுக்கு பேஸ் பேக்கை வாரம் ஒரு முறை போடலாம். முல்தானி மட்டி சேர்க்க தேவையில்லை. ஆண்களுக்கு மஞ்சள் கலக்காத பொடியினை தயிரில் குழைத்து முகத்தில் தடவலாம். அப்படி பொடி தயாரிக்க முடியாத பட்சத்தில் கடலைமாவு, பன்னீர், சந்தனம், தயிர், எலுமிச்சை சாறு கலந்து பேக் போடலாம். பத்து வயது பெண்ணிற்கு பேஸ் பேக் தேவையில்லை. தினமும் குளிக்கும்போது பொடியினை, சோப் தேய்த்து குளித்தப்பிறகு உடல் முழுதும் தடவி தண்ணீர் ஊற்றினால் போதும். பொடியில் எதுவும் சேர்க்க தேவையில்லை. பேஷியலில் டோனர் உபயோகிக்கலாம். நீங்கள் சொல்லியிருக்கும் முறையிலேயே உபயோகியுங்கள். ப்ளீச்சிங் செய்முறையை ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். நேரமின்மையால் தேடிப் பார்த்து லிங்க் கொடுக்க முடியவில்லை. நீங்கள் தேடிப் பார்த்து கிடைக்காவிட்டால் எனக்கு தெரியப்படுத்துங்கள்.