மூக்கு மற்றும் காது பராமரிப்பு

மூக்கு காது பராமரிப்புBeauty tips

மூக்கை பராமரித்தல்

இந்த வாரம் மூக்கின் பராமரிப்பைப் பற்றியும், மேக்கப் பற்றியும் பார்ப்போம்.

கிளி, குடை மிளகாய், சப்பை, கோணல், கூர்மை இப்படி பல வார்த்தைகளோடு சேர்த்து மூக்கின் தோற்றத்தினையும், அளவினையும் குறிப்பிடுகிறோம். ஆனால் எப்படிப்பட்ட ஷேப் உள்ள மூக்கினையும் ஒழுங்காக பராமரித்து, அழகாக மேக்கப் செய்து கொண்டால் ஷேப்பைப் பற்றிய கவலை தேவையில்லை. மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது. ரெகுலரான பேஷியல் கூட போதும். அதுவும் முடியாவிட்டால் வீட்டில் செய்து கொள்ளும் சின்ன ட்ரீட்மெண்ட்டே போதும். மிக எளிதான மூக்குக்கான அழகுக் குறிப்பினை பார்ப்போம்.

ப்ளாக் ஹெட்ஸ் - ஒயிட் ஹெட்ஸ்

மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்சனை பிளாக் ஹெட்ஸ்தான். சிலருக்கு ஒயிட் ஹெட்ஸும் காணப்படும். இது இரண்டுக்குமே முறையான கவனிப்பு அவசியம். பிளாக் ஹெட்ஸுடன் இருக்கும் மூக்கு, அருகில் வந்து பார்ப்பவருக்கு நிச்சயம் ஒரு வித அசூசையை ஏற்படுத்தும். கடைகளில் விறகும் பிளாக் ஹெட்ஸ் ரீமூவல் ஸ்ட்ரிப்ஸ் அதிக நாட்களாக இருக்கும் பிளாக் ஹெட்ஸை முழுதுமாக நீக்காது. ஏனென்றால் நாள்பட்ட பிளாக் ஹெட்ஸ் மிகவும் அழுத்தமாக இருக்கும். எளிதாக ஸ்ட்ரைப்ஸ் மூலம் நீக்க முடியாது. எனவே ஸ்ட்ரைப்ஸை (ஒரு முறை பிளாக் ஹெட்ஸை முழுதும் நீக்கிவிட்டு) ரெகுலர் பராமரிப்புக்கு மாதம் ஒரு முறை என்று உபயோகிக்கலாம்.

நாள்பட்ட பிளாக் ஹெட்ஸுக்கு மிகவும் சரியான ட்ரீட்மெண்ட், ஆவி பிடித்தல்தான். வீட்டிலேயே பேஷியலுக்கு செய்வதுபோல் எண்ணெய்ப்பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் க்ரீமை மூக்கிற்கு நன்றாக தடவி, மசாஜ் செய்ய வேண்டும். மூக்கின் பிளாக் ஹெட்ஸ் உள்ளவர்கள், விரல்களால் மூக்கின் பக்க வாட்டிலும், நுனியிலும் அதிக நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் கொதித்த நீரை ஊற்றி, நன்றாக வேர்க்கும்வரை ஆவி பிடிக்க வேண்டும். இப்போது வெளிச்சமான இடத்தில் அமர்ந்து, கண்ணாடியைப் பார்த்து பிளாக் ஹெட்ஸ் இருக்கும் இடங்களில் பிளாக் ஹெட் ரிமூவரால் (பேஷியல் கிட்டில் இருக்கும். கிடைக்காவிட்டால் ஸ்டெரிலைஸ் செய்த டீஸ்பூனின் முனை கொண்டு நீக்கலாம்) மெதுவாக அழுத்த வேண்டும். வெளியே வேரோடு வரும் பிளாக் ஹெட்ஸை டிஷ்யூவால் துடைத்து எடுத்துவிடுங்கள். இப்படியே மூக்கில் உள்ள பிளாக், ஒயிட் ஹெட்ஸ் முழுதுமாக நீக்கி விடலாம். இப்போது குளிர்ந்த நீரில் மூக்கினை நன்றாக கழுவினால் போதும். இந்த ட்ரீட்மெண்ட் செய்யும் முன்பு முகத்திற்கு ஸ்க்ரப் போடுவதென்றாலும் போடலாம். ஆனால் ட்ரீட்மெண்ட் செய்த பிறகு ஸ்க்ரப்பிங் கூடாது.

ரெகுலராக வாரம் ஒரு முறை முகத்தினை ஸ்க்ரப் செய்யும்போது மூக்கு பகுதியில், பக்கவாட்டில் மசாஜ் செய்தாலே ஒயிட் ஹெட்ஸ் வராது. மூக்கின் உள்ளே ஒரு சிலருக்கு அதிகமாக முடிகள் இருந்து, வெளியில் லேசாக எட்டிப் பார்க்கும். இதுவும் அழகை கெடுக்கிற விஷயம்தான். சின்னதாக புருவத்தை ட்ரிம் செய்ய உதவும் கத்தரிக்கோலை கொண்டு லேசாக ட்ரிம் செய்துவிடலாம். இதற்கென்று பிரத்யேகமான கத்தரிக்கோலும் கடைகளில் கிடைக்கும். இந்த தொல்லைகள் பொதுவாக 40 வயதை தாண்டியவர்களுக்கு அதிகம் இருக்கும். அதிக எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும், எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்களுக்கும் பிளாக் ஹெட்ஸ் அதிகம் காணப்படும். நார்மல், ட்ரை ஸ்கின் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சணை குறைவு.

Nose care

மூக்கு குத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலிலேயே எந்த இடத்தில், எந்த பக்கத்தில் மூக்கை குத்த வேண்டும் என்று சரியாக மார்க் செய்து கொண்டு செயல்படுவது முக்கியம். காது போல அல்லாமல், தவறான இடத்தில் துளை போட்டுவிட்டால் முகத்தின் அழகை பாதிக்கும். துளையை மறைப்பதும் மிகவும் கடினம். மூக்கு குத்தப் பிடிக்காதவர்கள் கல்யாணத்துக்கு என்று ட்ரெடிஷனல் மேக்கப் செய்யும்போது மூக்கில் கல் ஸ்டிக்கர் கூட ஒட்டிக் கொள்ளலாம். மூக்கு குத்தாமல் செய்யப்படும் ட்ரெடிஷனல் அலங்காரங்கள் ஒரு வித முழுமையடையாததுபோல இருக்கும். அதனால் கல்யாணத்துக்கு மேக்கப் செய்பவர்கள் மிகவும் (மூக்குத்தி போடப் பிடிக்காதவர்கள்) ட்ரெடிஷனலான மேக்கப்பைத் தவிர்த்து, கொஞ்சம் மாடர்ன் லுக்கில் மேக்கப் செய்தால் அந்த குறை தெரியாது. அதே போல் கல்யாணங்களில் புல்லாக்கு (நரசிம்மா படத்தில் " ரா ரா நந்தலாலா" பாட்டு ஆரம்பத்தில் ரம்யா கிருஷ்ணன் போட்டிருப்பதுதான் புல்லாக்கு. அந்த அளவாவது மூக்கிற்கும் உதட்டிற்கும் இடைவெளி தேவை) போடும்போது நமக்கு அதற்கேற்ற முக அமைப்பு இருக்கிறதா என்று பார்த்து உபயோகிக்க வேண்டும். சரியான முக அமைப்பு (மூக்கிற்கும் வாய்க்கும் இடையே உள்ள தூரம்) இல்லாவிட்டால் மூக்கு ஒழுகுவது போல தோற்றம் ஏற்பட்டுவிடும்.

மூக்கிற்கு மேக்கப் போடும்போது நமது மூக்கு ஷேப்பை கவனித்து அதற்கு தகுந்தாற்போல் மேக்கப் செய்ய வேண்டும். சில டெக்னிக்குகளை பொதுவாக இங்கே சொல்கிறேன். சப்பையான மூக்கு உள்ளவர்கள் முகத்திற்கு பவுண்டேஷன் மற்றும் பவுடர் அப்ளை செய்த பிறகு, முக நிறத்தைவிட கொஞ்சம் ஒரு ஷேடு குறைவான டார்க் நிறத்தில் உள்ள ரூஜை மூக்கின் இரு ஓரங்களிலும், அதாவது இரு புருவத்தின் ஆரம்பங்களிலிருந்தும் மூக்கு அடிவரை, நேராக கோடு போடுவது தடவ வேண்டும். இப்போது நடுபக்கம் மட்டும் லைட்டாகவும் ஓரங்கள் பளிச்சென்று தெரியாதது போலவும் இருக்கும். சப்பை மூக்கு என்று பார்த்தால் தெரியாது. இதே போல் ஒரு பக்கம் சிறிது அகலமாகவும், ஒரு பக்கம் சரியாகவும் உள்ள மூக்கு தோற்றமுள்ளவர்கள் ஒரு பக்கம் மட்டும் இதே போல் டார்க் கலரை அப்ளை செய்தால் நன்றாக இருக்கும். பொதுவாக இந்த வகை அப்ளிகேஷனை நார்மலான மூக்கு ஷேப் உள்ளவர்களும் செய்து கொள்ளலாம். மூக்கு அழகாக தெரியும்.

இப்படி டார்க் ஷேட் ரூஜைக் கொண்டே மூக்கின் ஷேப்பினை அழகாக்கிவிட முடியும். ஆனால் இந்த வித மேக்கப் போடும்போது அடிக்கடி செய்து பார்த்து பழகிக் கொள்வது அவசியம். புதிதாக எங்கேயாவது செல்லும்போது திடீரென்று ட்ரை செய்து பார்ப்பது பல சமயங்களில் காலை வாரிவிடும். மேக்கப் செய்து பார்த்து, போட்டோ எடுத்துப் பார்த்தால் நமது மேக்கப்பின் குறைகளை நாமே கண்டுபிடித்துவிடலாம். ரூஜ் பளபளப்பில்லாத மேட் லுக் ரூஜாக இருப்பது அவசியம். ஜெல் டைப் இதற்கு சரி வராது.

காதுகளை பராமரிப்பது எப்படி?

அடுத்து காதுகள் பராமரிப்பினைப் பார்ப்போம். குழந்தைகளுக்கு காது குத்தும்போதே, மூக்கிற்கு சொன்னதுபோல் சரியான ஸ்பாட்டை குறித்துக் கொள்வது அவசியம். பலருக்கு வயதானால் தோடுகளை பட்டன் இன்றி போட இயலாது. அதிக கனமுள்ள தோடுகளைப் போடுவதால் துளைகள் பெரிதாகிவிடும். இதனை எளிதாக சரி செய்து கொள்ள முடியும். மருத்துவரை அணுகினால் அவர், இப்படி பெரிதாக உள்ள துளைகளில் லேசாக கீறிவிட்டு தைத்துவிடுவார். லோக்கல் அனஸ்தீஷியா கொடுப்பதால் வலியெல்லாம் இருக்காது. சில நாட்களில் துளைகள் சேர்ந்துவிடும்.

நம்ம ஊரில் இந்த ட்ரீட்மெண்ட் பொதுவாக எல்லா பொது மருத்துவர்களும் செய்வார்கள். அதிக எடையுள்ள தோடு மட்டுமின்றி வளையங்களை அணிபவருக்கும் இந்த பிரச்சணை ஏற்படும். தூங்கும்போது இந்த வகை தோடுகளை கழட்டி வைத்துவிடுவது நல்லது. அதேபோல் சிலர் எப்போதும் தோடுகளை அணிந்து கொண்டே, அதனை ரெகுலராக க்ளீன் செய்யாமல் இருப்பார்கள். இதனால் காதுகளில் மற்றும் தோடுகளில் அழுக்கு சேர்வது மட்டுமில்லாமல் காதின் நிறமும் கறுப்படையக்கூடும். இப்படி நேரமில்லை என்று சாக்கு சொல்பவர்கள் வாரம் ஒரு முறை தலைக்கு குளிக்கும்போதாவது தோடுகளை கழற்றி சோப் வாட்டரில் பிரஷ் கொண்டு கழுவி க்ளீன் செய்யலாம். எண்ணெய்ப் பிசுக்கு, அழுக்குகளினால் ஏற்படும் துர்நாற்றமும் போகும்.

அடுத்து முக்கியமான விஷயம் காதுகளை சுத்தம் செய்வது. தரமான பட்ஸை உபயோகித்து காதுகளை சுத்தம் செய்வது மிகவும் அவசியம். நம் ஊர்களில் கடை வாசல்களில் பரிதாபமாக தோற்றமளிக்கும் சின்ன பிள்ளைகள் விற்கும் பட்ஸினை ஒரு போதும் வாங்காதீர்கள். அவர்களிடம் பரிதாபம் ஏற்பட்டால் பணமாக வேண்டுமானால் சும்மா கொடுங்கள். ஆனால் பொருள் வாங்கி உதவி செய்கிறேன் என்று வியாதிகளை வாங்கிக் கொள்ள வேண்டாம். அதிக விலை இருந்தாலும் ஜான்சன்& ஜான்சன் போன்ற தரமான பட்சுகளை வாங்கி உபயோகியுங்கள். பஞ்சும் அப்படியே. குழந்தைகளுக்கு சின்ன பருத்தி துனியினைக் கொண்டு காதுகளை க்ளீன் செய்தால் போதுமானது அல்லது குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக உள்ள பட்ஸினை உபயோகிக்கலாம். இந்த வகை பட்ஸ்கள், முனை பெரிதாக காது உள்பக்கம் வரை போக முடியாமல் இருக்கும். எனவே பயப்படாமல் உபயோகிக்கலாம்.

காதுகளை அழகுபடுத்துதல்

காதுகளுக்கு அழகுப் படுத்துதல் என்று தனியாக எதுவும் தேவையில்லை. ஒரே ஒரு விஷயம் மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும். முகத்திற்கு மேக்கப் போடும்போது காதுகளுக்கும் சேர்த்து பவுண்டெஷன், பவுடர் தடவுங்கள். இல்லாவிட்டால் காதுகள் தனி நிறத்தில் இருக்கும். நிறைய தோடுகளை சைடு காதில் குத்திக் கொள்வதைக் காட்டிலும், பட்டன் டைப் அல்லது பிரஸ்ஸிங் டைப் வளையங்களை உபயோகித்தால் பேஷன் மாறும்போது நாமும் வடுக்கள் இல்லாமல் மாறிவிடலாம். சிறு வயதுக்காரர்கள் பார்ட்டி, கல்யாணம் என்று மேக்கப் செய்யும்போது, காதை மறைக்கும் பட்டையான மாட்டல் போடலாம். ஆனால் வயதானவர்களுக்கு இன்விசிபிள் டைப் மாட்டல்(கண்ணுக்கு தெரியாத வண்ணம்) தான் பொருந்தும். அதுவும் கூட பட்டன் போட விருப்பம் இல்லாதவர்களுக்கு ஒரு சாய்ஸ் மட்டுமே. பேஷன் தோடுகள் வாங்கும்போது ஒவ்வாமை, எடை இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு வாங்குங்கள். காது, மூக்கு பராமரிப்பு மிகவும் எளிதான விஷயம். சின்ன அக்கறை நல்ல தோற்றத்தினையும், அழகையும் கொடுக்கும்.

Comments

நான் புதிதாய் சேர்ந்து உள்ளேன் . எனக்கு திருமணமாகி 10 மாதம் ஆகிறது. நான் மாநிறத்தை விட கொஞ்சம் கலராக இருப்பேன். என்னுடைய தலையாய பிரச்சனை என்னவென்றால் என் முகத்தில் நெரிய துவாரங்கள் உள்ளது. நெத்தி, மூக்கு, கன்னம் , தாடை என எல்லா இடத்திலும் வெளிப்படையாக துவாரங்கள் தெரிகிறது. மேலும் whiteheads வேற இருக்குது. யவளோ ஸ்க்ரப் பண்ணாலும் போகல . இதுக்கு ஒரு வழி சொல்லுங்களேன். permanenta துவாரம் மறையவும் , whiteheads போகவும் வழி சொல்லுங்களேன். இதனால என் புருஷன் கூட வெளில போகவே கஷ்டமா இருக்கு. நான் இப்ப பெங்கலூர் ல இருக்கேன். அதனால எண்ணை பசையான என் ஸருமம் வறண்டு போச்சு. இங்க நாட்டு மருந்து கடை கூட எங்க இருக்குனு தெரில. எனக்கு வழி சொல்லுங்க ப்லீஸ்...

hai mam enaku oily skin and pigmentation problem iruku white heads and nose mela black code mathiri iruku (spex pota varume code antha mathiri)ithuku solution sollunga yaravathu pls,then epavum en face oily ah iruku fresh ah iruka fair and lovely use pannalama or any other producct use panalama

hi, im new comer, enaku tamila type panna theriyala sorry but i will try, i am 25yrs old, nan 5th stnd padikum pothe enaku mookathi kuthi vitanga appa puduchathu but ippa enota mookathi enota age a olda kurathu mathiri theriuthu enaku feelinga iruku please help panunka pa, how to remove a nose ring hole? ethavathu marunthu iruka? doctor ta pona sary akkuma? hole maraya evalavu nall akkum? help me please...................

all is well

yenaku mouth suttrilum darka irukku..ithuku yethachu tips thanga

gud evening...என் nose small pimple அதை நான் கிள்ளிணேன் அது இப்பொது தலும்பாக மாறிவிட்டது help me deva mam....

உதவி செய்யுங்கள்.என் மூக்கின் இரு புறமும் கருப்பாக உள்ளது.முகம் வெள்ளையாக உள்ளது.மூக்கு மட்டும் தனியாக தெரிகிறது.இரு முறை பேஷியல் கூட செய்து விட்டேன்.சரி ஆக வில்லை.பதில் சொல்லுங்கள் தோழிகளே..

thank you for your wonderful tips

super

Na samaikarapa oil facela patu facela thalumpu aagiduchu athu poga yaravathu help panunga plz.......

இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்குகுறைங்க, வெயிட்டக் குறைங்க'னு டாக்டர் சொல்றாரு.
மின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் ...

ஹாய் சகோதரிகளே,

நான் அருசுவைக்கு புதிது.அனைவரும் நலமா?எனக்கு மூக்கின் மேல் மங்கு என்று சொல்வார்கள் அது லேசாக உள்ளாது.அதற்கு என்ன செய்தால் சரியாகும்.

All is well..

தோழி எனக்கு ஆயில் ஸ்கின், முக்கு கிட்ட ஒயிட் ஹெட்ஸ் வேர இருக்கு நான் சிந்தால் சோப்பு யூஸ் பன்ரேன். எப்பையாவது டவ் க்ரீம் யூஸ் பன்ரேன். எனக்கு கிரீம் ஏதாவது இருந்த சொல்லுங்க்க. ரொம்ப ஆயில்லா இருக்கு. ஏதாவது face wash cream,enna mathiri treatment panna oil face konjamavathu marum pls solunga.. naturea irunthalum solunga..

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Kadalai mavula pachapayira arachi mix panni face la apply panni konjam nayram kalichi face wash panna nalla result kedaikum

hai anna epdi irukinga...tips ku thanks

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Fine how r u

How to remove unwanted hair? plz give me any treatment in my wife

How to remove unwanted hair? plz give me any treatment in my wife

frnds face related ah enaku beauty tips venum pa... yaravathu sollungalen enaku antha tips entha link la irukunu theriyathu.. nan arusuvaiku puthusu pa

eswari

Hi frnds nan arusuvaiku new member

Nan lakme cleanser and Himalaya toner weekly once use panren adhu sariyana. Theervu thana solunga plz daily rose water use panren duty mudinju veetuku vanthadhum. Cleanser toner use panren ana koda white heads mulusa pogala help me plz

Nega ena work panranga frd

Life Is Easy When U "Accept All"

Nan pharmacist frnd

Enaku yarum padhil sola matingla

உங்களை எப்படிக் கூப்பிடட்டும்!

//Enaku yarum padhil sola matingla// :‍) பதில் சொல்லத் தெரிஞ்சவங்க‌ கண்ணுல‌ இன்னும் படவில்லை.

காஸ்மெடிக்ஸ்... எதுவாக‌ இருந்தாலும் பாக்கட்ல‌ விபரம் போட்டிருப்பாங்களே! அதில் இருப்பதைப் படிச்சு அதன் படி பயன்படுத்துங்க‌. சரியா இருக்கும்.

‍- இமா க்றிஸ்

Oh sorry frnd my name is abi

க்ளன்ஸ்ஸர் டோனர் ஓக்கே ஆனா இதனால வைட் கெட்ஸ் முழுதும் இல்லாமல் போகாதே.காரணம் வைட் அண்ட் பிளாக் ஹெட்ஸ் இருக்குற இடம் தோலின் 2 வது படை.மேற்புற தோல் க்கு மட்டும்தான் நீங்கள் சொல்வதெல்லாம் பலனளிக்கும்.

வைட் ஹெட்ஸ் ரிமூவ் பண்றதுக்கு கடைல ஒரு நீடில் மாதிரி ஒரு ரூல்ஸ் விக்கும் வாங்கிக்கோங்க.15 ரூபா ந்னு நினைக்கிறேன்.

தண்ணியை சூடு பண்ணி தடிமன் வந்தா ஆவி பிடிப்பதுபோல் பிடிக்க வேணும்.
{தோல் துவாரங்கள் திறந்து கொள்ளும் }
இப்போது அந்த டூள்ஸ் ஆல் பிளாக் ஹெட்ஸ் வைட் ஹெட்ஸ் உள்ள இடங்களில் வைத்து மெதுவா அழுத்த ரிமூவ் ஆகீவிடும்.

Ok romba thx surejini cleanser toner wkly once than use pananuma

Facial massager use panalama

??????

சுரேஜினி பிஸி என்று நினைக்கிறேன். தேவாவையும் இப்போ காணோம். எனக்கும் பதில் தெரியாது. சில சமயம் இப்படித்தான் எம் அவசரத்திற்கு பதில் சொல்ல ஆட்கள் அமைவதில்லை.

‍- இமா க்றிஸ்