வுங்கள் நண்பர்களை பற்றி சொல்லுங்கள்

அன்பு நண்பர்களே , நண்பர்கள் ,நட்பு என்றதும் நம் முகம் மலரதொடங்கிவிடுகிறது. எவ்வளவோ friends நம் வாழ்வில் வந்தாலும் நமக்கென ஒரு உயிர் தோழி இருக்கத்தான் செய்வாள். அந்த பெஸ்ட் பிரண்ட்ஸ் பற்றி இந்த பதிவில் நாம் பகிர்ந்து கொள்ளலாம். என் வுயிர் தோழியின் பெயர் ஹேமா. ஹேமாவுடன் நான் சின்ன காஞ்சிபுரம் அரசினர் வுயர்நிலை பள்ளியில் 11 அண்ட் 12th படித்தேன். முதலில் அவளை கண்டாலே எனக்கு பிடிக்காது. அவ்வளவாக பேசமாட்டேன்.ஒரு சமயத்தில் மிகவும் நெருங்கிய தோழிகளாக மாறிவிட்டோம்.ஹேமா எங்கிருக்கிறாளோ அங்குதான் சுந்தரியும் இருப்பாள் என்று ஸ்டுடன்ட் முதல் teachers வரை தெரியும்.அந்த அளவுக்கு பிரசித்தி நாங்கள்.அவள் இருந்ததோ பெரிய காஞ்சிபுரம்.நாங்கள் இருந்ததோ தேரடி ரோடு (நடுவில்) அத்தையு தாண்டி schoolirgu போகவேண்டும். ஹேமா cyclel வந்து என்வீட்டிளிருந்து என்னை pick up செய்துகொண்டு இருவரும் அவ்வள்ளவு தூரம் நடந்தே schoolukku போவோம் (அவளுக்கு doubles வராது)இவ்வாறு இனிமையாக சென்றுக்கொண்டிருந்த எங்கள் நட்பில் என் அப்பாவின் transparal பிரிவு ஏற்பட்டது. இத செய்தியை கேட்டு தாங்கமுடியாமல் மெழுவர்த்தி வுரிகிவரும் துளியை என் கையில் வடித்து ஹேமா என்று எழுதிக்கொண்டேன்.அவளும் என் பெயரை எழுதிகொண்டால். இருவர் கையிலும் புண்ணாகிவிட்டது. இருவர்வீடிலும் செம டோஸ் .இவ்வாறாக பிரிய மனமில்லாமல் பிரித்தோம்.நான் கோவைக்கு சென்றுவிட்டேன் .நான் Bse சேர்த்தேன் .அவள் டீச்சர் ட்ரைனிங் படித்தாள்.முதலில் என் திருமணத்திற்கு அவள் பெற்றோரோடு என் சொந்தவூரான திருநெல்வேலிக்கு வந்தாள்.பின் அவள் திருமணத்திற்கு நானும் சென்றுவேந்தேன்.இப்பொழுதுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது எங்கள் நட்பு.இப்பொழுதும் என் கையை பார்த்தால் ஹேமா நியாபகம் வரும். என்ன பைத்தியக்காரத்தனமாக நடந்துகொண்டோம் என சிரித்துக்கொள்வேன்.எப்பொழுது நினைத்தாலும் அந்த நட்பின் மனம் மட்டும் என் மனதை விட்டு அகலாது.நீங்களும் வுங்கள் நட்பை பற்றி எழுதுங்கள் நண்பர்களே

My name is shridevi. My best friend name is sivagamasundari. We are studied in ranipettai institute of technology polytechnic college in the year of 1999-2001. Some bodies here studied in walajapet.

TRY TRY TRY
DON'T BE SHY
THEN YOUR POSITION WILL BE HIGH.

சுவாரசியமான பகுதி ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள்.

என் தோழி பெயர் கண்மணி. ஊரில் மிக பெரிய செல்வாக்குள்ள குடும்பம். அவளின் அப்பா டாக்டர். தாத்தா இப்போதுள்ள தமிழக அரசின் முக்கிய துறையில் மினிஸ்டர். நான் அரசு மகளிர் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் போது அவ்ள் அப்பாவுடன் என் வகுப்பறைக்கு வந்தாள். என் வீட்டின் எதிர் வீடு என்பதால் அவளை முன்பே தெரியும். ஆனால் பேசிக்கொண்டது இல்லை.நான் வகுப்பின் லீடர் என்பதால் டீச்சர் என் அருகில் உக்காரவைத்து விட்டு போன பாடங்களை பற்றி விளக்கமும், நோட்டும் கொடுக்க சொன்னார். நான் க்ளாஸ் ரூம்க்கு வெளியில் மரத்தடியில் விளக்கம் கொடுக்க போகும் போது அழுதுவிட்டாள்.(அவள் பழைய தோழிகளை பிரிந்த சோகத்தில்).பின் தானாகவே சமாதானப்படுத்திக்கொண்டு என் தோழியாய் இருக்க சம்மதமா என்று கேட்டாள். அன்று முதல் அவள் என் உயிர் தோழியாய் மாறினாள். அந்த ஒரு நாள் மட்டுமே அவளின் அழுகையை பார்த்தேன். அதன் பிறகு எப்போ பார்த்தாலும் ஒரே சிரிப்பு தான். யாரையும் விட்டு வைக்க மாட்டாள். எல்லாரையும் கேலி செய்வாள். அவளுடன் இருந்த நாட்கள் தான் என் பள்ளி வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். என்னை யாருடனும் பேச விடமாட்டாள். எனக்கும் அவள் என்னை தவிர்த்து யாருடனாவது பேசினால் கோபம் வரும். நாங்கள் இணை பிரியாத தோழிகள் என்று அனைவருக்கும் தெரியும். தூங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் ஒன்றாகவே இருப்போம். பணம்,செல்வாக்கு படைத்தவர் என்ற ஒரு குணம் கூட இல்லாதவர்கள் அவளின் வீட்டில் இருப்பவர்கள். இப்போது அவள் சென்னையில் படிக்கிறாள்.படிப்பில் இப்போது அவள் பிஸி என்பதால் எப்பவாவது சந்தித்துக்கொள்வது உண்டு.இன்றும் யாராவது உன் உயிர் தோழி யார் என்று கேட்டாள் என் வாயிலிருந்து முதலில் வரும் வார்த்தை "கண்மணி"

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அமீனா வுங்கள் குணம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. யாருடைய மனமும் புண்படாமல் காமெடி கலந்த நடையில் எழுதுகிறீர்கள், கீப் இட் அப்.சரி pointukku வருகிறேன்.நான் ஒரு விஷயத்தை எழுத மறந்துவிட்டேன்.நீங்கள் எழுதியது போலவே ஹேமாவும் நானும் மிகவும் possissivaga இருப்போம். அவளுடன் வேறு யாரும் பேசினால் எனக்கு பிடிக்காது அவளுக்கும் அப்படிதான்.ஹேமாவுக்கு 7 .7 .2010 அன்று பிறந்தநாள்.அன்று மறக்காமல் அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுப்பவும் .bye அமீனா.

இப்பவே என் அட்வான்ஸ் விஸஸ் சொல்லிடுங்க.
நீங்க சொன்ன மாறி தான் (அந்த பைத்தியக்கார தனத்தை நினைத்து சிரிப்பது பற்றி) நானும் ஒரு விசயம் சொல்ல வந்தேன். ஆனா சொல்லுறதுக்கே சிரிப்பு வந்துச்சு. இது மாறியே கண்டிப்பா எல்லருக்கும் ஏதாவது ஒரு மறக்க முடியாத நிகழ்சிகள் இருக்கும்ல :(

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இந்த இழை ஒரு வருடத்திற்க்கு முன்பு ஆரம்பித்தது,இப்ப அருசுவையில தினமும் புதுப்புது தோழிகள் வந்துகிட்டே இருக்கிங்க,உங்களின் நண்பர்களை பற்றி இங்க பகிர்ந்துகோங்க நாங்களும் படித்து சந்தோஷப்படுரோம் சரியா தோழிகளே.இப்ப உங்க உயிர் தோழிகளை பற்றி இங்கே தொடருங்க.

என்னுயிர் தோழி யாருனு யோசிக்கும்போதே குழப்பம் வரும் என்னுயிர் தோழி இரண்டு பேர் இரண்டு பேர்ட்ட மாட்டிட்டு நா பட்ட பாடு எனக்கு மட்டுமே தெரியும் அவங்க பேர் காஞ்சனா மீனா எங்களுக்கு கிட்டத்தட்ட ப்ரெண்ட்ஸ்னு பாத்த 25, 30 பேர் கேங் அதுல நாங்க மூனுபேர் திக் ப்ரெண்ட் ஆனா இதுல என்ன விசேசம்னா காஞ்சனாக்கு மீனா என்ட்ட பேசனா பிடிக்காது அவ மட்டும் தா பேசணும் நினைப்பா மீனாவும் அப்டி தா இவங்களுக்கு நடுவில நா மாட்டிப்பேன் காஞ்சனா கொஞ்ச நாள்ல அப்டிலாம் பிராப்ளம் பண்றதில்ல இப்ப 2 வருசம் முன்ன ஒரு பிராப்ளத்தால பிரிஞ்சிட்டோம் ஆனா இப்பவும் என் மத்த ப்ரெண்ட் யாராவது பாத்த என்ன அவ மேரேஜ்க்கு கூப்பிடலனு சொல்லி கஷ்டபடுவா எனக்கு அவளுக்கும் காண்டாக்ட் இல்ல அவள எப்டியாவது பாக்கணும் சாரி கேக்கணும் துடிச்சிட்டு இருக்கேன் பா அவ நெம்பர கஷ்டபட்டு வாங்கினேன் ஆனாலும் அவள காண்டாக்ட் பண்ண முடில ஆனா கண்டிப்பா பண்ணுவேன் நம்பிக்கை இருக்கு இப்ப எனக்கு மீனா மட்டும் தா க்ளோஸ் யார் என்ட்ட பேசினாலும் இன்னிக்கு வரைக்கும் அவளுக்கு பிடிக்காது அவளுக்கும் எனக்கும் அப்டி ஒரு அண்டர்ஸ்டாண்டிங் என்ட்ட எதையும் மறைக்கமாட்டா அதோட எல்லார் பர்த்டேகும் நா செஞ்சி குடித்த கிரீட்டிங் கார்ட் இன்னிக்கு வரைக்கும் பத்திரமா வெச்சியிருக்காங்க அது தா எனக்கு ரொம்ப சந்தோஷத்த தருது அதே போல ப்ரியாவும் என்னோட க்ளோஸ் ப்ரெண்ட் அம்மா அப்பா இல்ல அக்காங்க மட்டுமே இப்ப வரைக்கும் என்ட்ட அவ்ளோ க்ளோஸ் என்ன விசயம்னாலும் என்ட்ட தா சொல்லுவா நா எடுத்த முடிவ தா அவளும் எடுப்பா அப்டியொரு ப்ரெண்ட்ஸ் இன்னிக்கு வரைக்கும் வாரம் ஒரு முறை இல்லனா மாதம் ஒருமுறை கண்டிப்பா போன்ல பேசிடுவோம் இப்டிபட்ட ப்ரெண்ட்ஸ் குடுத்த கடவுள்கு தா நன்றி சொல்லணும் பா இதிலென்ன ஸ்பெசல் னா இவங்க எல்லாருமே என்னொட 9 வதுல இருந்து 12 வரை மட்டும் படிச்சவங்க இன்னிக்கு வரைக்கும் எத்தனை ப்ரெண்டு வந்தாலும் என்னமட்டுமே அவங்களோட உயிர் தோழியா சொல்லுவாங்க அது தா எங்க நட்பு

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ரேணு உங்க தோழிகளை பற்றி படிக்கும் போதே என் தோழி ஹேமாவின் நினைப்புதான் வருதுபா.அவளுக்கும் நான் வேற யார் கிட்டேயும் பேசினா பிடிக்காது அவ கிட்ட மட்டும் தான் குளோசா இருக்கனும்ன்னு நினைப்பா.அது தான் எனக்கு நியாபகம் வருது

வேர யாரும் இல்லையாபா உங்க உங்க தோழிகளை பற்றி எங்களோட பகிந்துக்கோங்க.

ஹலோ சுந்தரி...நலமா? நேற்றே உங்களைப் பற்றி நான் கேட்ட நியாபகம்....நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்?
ம்ம்ம்.....என்னுடைய சின்ன வயது தோழிகள் தொடர்பெல்லாம் விட்டுப் போயிற்று....இப்போது என்னுடைய மிக நெருங்கிய தோழி முத்துலட்சுமி....எங்கள் நட்பு 30 வயதுக்கு மேல் தொடங்கியது....ஆனாலும் ஏதோ ரொம்ப நாளாக நெருங்கிப் பழகியது போல தோன்றும்...எங்கள் குழந்தைகள் எங்களை உ.பி.ச (உடன் பிறவா சகோதரி) என்று கேலி பண்ணும் அளவு எங்களின் நட்பு இருக்கும்...இருவருக்கும் ஒரே மாதிரியான எண்ணங்கள்...அழுவதானாலும், சிரிப்பதானாலும் உடனே எனக்கு அவளிடம் சொல்லிவிட வேண்டும்...அவளும் அப்படியே.....அம்மாவிடம், உடன் பிறந்த சகோதரியிடம், கணவரிடம், பெற்ற பெண்ணிடம் சொல்ல முடியாத விஷயங்களை பகிர்ந்துகொள்ள முடிவது தோழியிடம் மட்டும்தான் என்பது என் அபிப்பிராயம்....

MY BEST FRIEND UYIR THOLI ELLAME EN LIFE LA ENNODA AMMA THAN Rgowsi-R gowsalya Rajagurupakkiam.

Excellent

மேலும் சில பதிவுகள்