Please help me

ஹாய் தோழிகளே,வணக்கம்.நான் மனோரஞ்சிதா,என் பையனுக்கு இப்போ 3 வயதாகுது.அவன் பிறந்ததிலிருந்து ரீப்ளக்ஸ்(REFLEX) பிரச்சனையால் ரொம்ப கஸ்டப்படுகிறான்.எது குடுத்தாலும் வாந்தி எடுத்து விடுவான்.காலையில் வாந்தி எடுக்கலையின்னா மதியம் சாப்பிடும் போது அனைத்தையும் சேர்த்து எடுத்து விடுவான்.பிறந்து 3 வருசம் ஆகுது.தினமும் வாந்தி அவன் எடுப்பதும் நான் துடைப்பதுமாக வாழ்க்கை ஓடுது.தினம் தினம் அவனுடன் போராட்டமாகவே எனக்கு இருக்கு.சில நேரம் அவன் வாந்தி எடுத்தால் நான் உக்காந்து அழுவேன்.அதை பார்த்த பையன் அம்மா, நான் இனி வாந்தி பன்னமாட்டேன்னு சொல்லுவான்.எனக்கு அவன் அப்படி சொன்னதும் இன்னும் அழுகை வந்துடும்.அப்புறம் அவன் வேனுன்னா எடுக்கான்,அவன் உடம்பு (REFLEX)பிரச்சனன்னு மனசை தேத்திப்பேன்.பிரச்சனை எப்பொ சரியாகும் உங்களுக்கு தெரிந்து இது மாதிரி REFLEX பிரச்சனை சரியாகி உள்ளதா?டாக்டரை கேட்டால் 3 வயதால் சரியாகி விகுமென்று சொன்னார்.3 வயதும் ஆகிவிட்டது..இன்னும் REFLEX தீர்ந்தபாடு இல்லை.தோழிகளே ஏதேனும் வழி சொல்லுங்களேன்
என்றும் அன்புடன்
மனோரஞ்சிதா

என் மகனுக்கும் இது போல் தான் பிரச்சனை இருந்தது. பிறந்து தாய்பால் கொடுத்த 10 நிமிடத்திலிருந்து.....
எது சாப்பிட்டாலும் சிறிது நேரத்தில் வாய்,மூக்கு,காது வழியாக கூட வந்தது. ஆனா நீங்க சொன்ன பிரச்சனையா என்று தெரியவில்லை. என் டாக்டரும் அதை பற்றி எந்த விவரமும் சொல்லவில்லை. எதுவும் சாப்பிட மாட்டான். விரும்பி சாப்பிட்டாலும் உடனே வாந்தி.

2 1/2 வயசு ஆகுது. இப்ப தான் அந்த பிரச்சனை இல்லாமல் இருக்கு. நீங்கள் சொன்ன பிறகு தான் நானும் அதை கவனிக்கிறேன்.

அது போல் தான் உங்க குழந்தைக்கும் இருக்கும். கவலைபடாதீங்க. சரியாகிவிடும். சாப்பாடு ஊட்டி முடிந்த பின் உடனே அவன் கவனத்தை திசை திருப்புங்கள். விளையாட்டில் ஈடுபடுவது. சிரிப்பு காட்டுவது,சாக்லேட் மெல்ல வைப்பது......இது போல் ஏதாவது செய்யும் போது அந்த எண்ணம் மறைய வாய்ப்புள்ளது. பிறகு அதுவே பழக்கமாகி முற்றிலுமாக நிறுத்திவிடுவான். ட்ரை பண்ணி பாருங்க!!!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அன்பு அமீனா,நீங்கள் சொன்னது முற்றிலும் சரி தான்.குழந்தை பிறந்த போது நீங்கள் சொன்ன அத்தனையும் இருந்தது. இப்பவும் தொடர்கிறது.ஒரு வித்தியாசம் முன்பு மூக்கு வழியாக வந்த வாந்தி நின்றுவிட்டது.இப்போ வாய்வழி மட்டும் தான்.இதர்க்கு பெயர் தான் Reflex problem.நீங்கள் உங்க பையனுக்கு ஏதாவது மாத்திரை,மருந்து கொடுத்திங்களா?இல்லை வீட்டு மருந்து ஏதாவது கொடுத்திங்களா?கொடுத்திருந்தால் என்ன ம்ருந்தென்று சொல்லுவிங்களா.நன்றி .
என்றும் அன்புடன்
மனோரஞ்சிதா

அன்பே சிவம்.
மனோரஞ்சிதா

மேலும் சில பதிவுகள்