நகைச்சுவை நிகழ்ச்சி

நம் வாழ்க்கையில் நடந்த ஒரு சில விஷயங்கள் இன்று நினைத்தாலும் நமக்கு சிரிப்பை வரவழைக்கும். அதுபோல் உங்கள் வாழ்க்கையில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளை இங்கே (நினைவு) கூறுங்கள் தோழிகளே ! நம் தோழிகளும் சில நிமிடங்கள் கவலை மறந்து சிரிக்கட்டும்.

என் மகனுக்கு 8 வயது அப்போது...நானும்,என் கணவரும் கலப்பு மணம் செய்தவர்கள்.என் மகன் சரியான வடிவேலு காமெடி பைத்தியம். ஒரு முறை பக்கத்து வீட்டு அக்காவிடம் என் திருமணம் பத்தி சொல்லும்போது நான் பிள்ளை சமூகம் என்று குறிப்பிட்டேன். இதை கேட்ட என் மகன் "அம்மா...நீ வெறும் பிள்ளையா...இல்லை கை புள்ளயா
" என்று கேட்டானே பார்க்கனும்...ஒரே சிரிப்பு மழை தான்...

Madurai Always Rocks...

என் மகனுக்கு 3 வயதிருக்கும் .என் அம்மாவீட்டிற்கு சென்றிருந்தேன்.என் மகன் chocalate கேட்டு அழுது கொண்டிருந்தான்.என் அம்மா அவனிடம் பொறவாட்டி (திருநெல்வேலி பாசையில் பிறகு என்று அர்த்தம்)வாங்கித்தரேன் என்று சொன்னார்கள்.இதை கேட்ட என் மகன் பொறவாட்டி என்றால் ஏதோ தின் பண்டம் என நினைத்துகொண்டு பொறவாட்டி வேணும் என்று அழ ஆரம்பித்துவிட்டான். பிறகு அவனை சமாதான படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.இந்த நிகழ்ச்சியை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வரும்

நல்ல தலைப்பு...நாங்கள் கன்னடம்.. என் அக்காவின் திருமணத்தின் போது மாமாவிற்கு கொழுந்தியா என்ற முறையில் விளையாட்டுத்தனமாக பரிமாறிக் கொண்டிருந்தேன். மாமாவிற்கு கன்னடம் தெரியாது. எங்கள் பேச்சில் சாக்கு என்றால் போதும் என்றும் பேக்கு என்றால் வேண்டும் என்றும் அர்த்தம். நான் அவரிடம் சாக்கா பேக்கா என கேட்டதற்கு அவரிடம் ஏதோ பதார்த்தம் என நினைத்து சாக்குல ஒன்னு பேக்குல ஒன்னு என ஹோட்டலில் ஆர்டர் செய்வது போல கேட்டாரே பாக்கனும் எல்லோரும் செமையாக சிரித்துவிட்டோம். பிறகு தவறாக நினைத்து விடுவாரோ என பயம் வேறு.. அப்பப நினைத்து அவரை கிண்டல் செய்து கொண்டிருப்போம். ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இது முந்தின நாள் நடந்தது, என் பொண்ணுகிட்ட wild animal, domestic animals எல்லாம் சொல்லி கொடுத்துட்டு இருந்தேன் அப்போ புத்தகத்த திறந்து வச்சி காட்டு விலங்குகள் இருக்குற பக்கத்த எடுத்து வச்சி சொல்லிக் கொடுக்கறதுக்கு முன்னாடி ஒரு கேள்வி கேட்போமேன்னு பாப்பா wildanimals லாம் எங்க இருக்கும்னு கேட்டேன் பாருங்க அவ உடனே புக்குல இருக்கும்னு சொன்னா பாருங்க என்னால சிரிக்க கூட முடியல ரொம்ப நொந்து போய்ட்டேன்ங்க. அப்பறம் ரொம்ப நேரம் நினைச்சு நினைச்சு சிரிச்சேன். இப்படி நிறைய நிகழ்ச்சிகள் இருக்கு நியாபகம் வரும் போது வந்து பகிர்ந்துகுறேன்.

ஹாய் ரம்யா கார்த்தி, எனது சொந்த ஊர் சேலம். நீங்களும், கன்னட தேவங்கா. நானும் அதே.

All is well

மூணு வருசத்துக்கு முன்னே, "நீங்க காயல்பட்டிணமா?" டயலாக் அறுசுவையில ரொம்ப பிரபலமா இருந்துச்சு. :-) அது அப்படியே கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகி, நீங்க கோயம்புத்தூரா, நீங்க நாகர்கோவிலா, நீங்க மதுரையான்னு பரவி, அதுக்கப்புறம் மதுரை தோழிகளே வாருங்கள், கோவை தோழிகளே வாருங்கள், நாஞ்சில் மண்ணின் புதல்விகளே வாருங்கள் ன்னு போயி, ஆண்டிப்பட்டி, அரசம்பட்டி எல்லாம் சுத்தி கடையநல்லூர் வரைக்கும் வந்துடுச்சு..

சமீபத்தில ஒவ்வொருத்தரும் அவங்க அவங்க ஊருக்கு தனியா த்ரெட் ஆரம்பிக்க, அதைப் பற்றி நிறைய கம்ப்ளெயிண்ட் வர ஆரம்பிச்சுது.. எனக்கென்னவோ அதை தடுக்கணும்னு தோணலை. ஊர் பாசம் இருக்கிறது தப்பில்லை. உலகத்துல ஒவ்வொரு மூலையில இருக்கிற மக்கள், இண்டர்நெட் மூலமா, அறுசுவை மூலமா அவங்க ஊர்காரங்களை கண்டுபிடிச்சு, அவங்ககூட பேசினா அது ஒரு தனி சந்தோசம்தான். 'இந்த மாதிரி த்ரெட்ஸ் ரொம்ப அதிகமா போகுது.. எதாவது செய்ங்க' ன்னு சிலர் எங்கிட்டே சொன்னப்ப, நான் சொன்ன பதில் இதுதான். "எத்தனை த்ரெட்ல, எத்தனை நாளைக்குதான் ஊர்க்காரங்கிட்டே மட்டும் பேசுவாங்க? ஆரம்பத்துல ஒரு ஆர்வத்துல பேசுவாங்க.. அதுக்கப்புறம் மற்ற த்ரெட்டுக்கு வந்துடுவாங்க.."

ஆனா, மேலே உள்ள பதிலை படிச்ச பிறகு, ஊர்பாசம் அடுத்த வடிவம் எடுக்கப் போகுதோன்னு பயமா இருக்கு. "நீங்களும், கன்னட தேவங்கா. நானும் அதே.." வோட அடுத்த பரிணாமம், "நீங்க கவுரா நாயுடுவா, நீங்க நாட்டுக்கொட்டை செட்டியாரா, நீங்க வடகலை அய்யங்காரான்னு.. " தொடங்கி, தேவர் இனத் தோழிகளே வாருங்கள், கவுண்டர் குலப் பிறப்புகளே வாருங்கள் வரைக்கும் போயிடப் போகுதோன்னு கவலையா இருக்கு. :-(

என்னோட கவலை கொஞ்சம் அதிகமோன்னு தோணலாம். நான் சொல்லி இருக்கிற மாதிரி நடக்குதோ இல்லையோ.. அது அடுத்தப் பிரச்சனை.. என்னோட கவலைக்கு பின்னாடி இருக்கிற கேள்வி இதுதான்.. "பேசுகிறவர் என்ன ஜாதி, என்ன குலம், என்ன மதம் என்பது இது போன்ற பொது மன்றங்களில் அவசியம் தேவையா?"

அட நம்ம ஊர்காரர் ன்னு கண்டுபிடிச்சு உண்டாகிற சந்தோசத்துல என்னால குறை காண முடியலை.. அதேசமயம், அட நம்ம ஜாதிக்காரங்கன்னு ஒருத்தர் சந்தோசப்பட்டா, அதையும், ஊர்பாசத்தையும் ஒரே தட்டுல வச்சு என்னால பார்க்க முடியலை. அதனால, அது போன்ற வார்த்தைகள், பதிவுகளை நீக்கிடலாம்னு நினைக்கிறேன். தயவுசெய்து அதை தவிர்த்துடுங்க..

இந்த இழை கொஞ்சம் இன்ட்ரெஸ்டிங்கா இருக்குன்னு சொல்ல வந்தேன்... காமெடியா இருக்கு..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

how r u

தப்பா எடுத்துக்கலன்னா உங்க பதிவ கொஞ்சம் மாத்திடுங்க. அவங்க mail-id இருந்தா, உங்களுக்குள்ள நல்ல நட்பு இருந்தா அதைத் தனியா கேட்டு தெரிஞ்சுக்கலாமே. அவங்களே எப்பவாவதுதான் இங்க வராங்க.

அன்புடன்,
இஷானி

ரேணுகா...

உங்களின் மொழி ஆர்வம் புரிகிறது.ஆனால் ஜாதியை பற்றி கேட்கும் அளவு முக்கியம் இல்லை என நினைக்கிறேன். ;-) மொழி தெரியாததால் ஏற்பட்ட நகைசுவை பற்றி நான் கூறவே கன்னடம் என கூறினேன்.

ஆதலால் தவறாக நினைக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன் ..உங்களுக்காக...என்னோட ஊர் ஈரோடு ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்