கல்வியில் முன்னேற முன்னேற நம் சமூக பார்வை ஒரு படி மேலே போகுதுன்னு ஒரு பக்க சந்தோசம் இருந்தாலும்..மற்றொரு பக்கம்..பெண் சமூகத்தில் ஒரு இச்சை பொருளாக இருந்து வருகிறாள் என்பதும்..அதற்கு எந்த சமூக மாற்றமும் இல்லை என்பதும் ஏற்று கொள்ளவும் வேண்டும் இல்லையா??
சமீப காலமாக நாகர்கோயில் பக்கம் அருமனை என்ற ஊரில் ஒரு ராணுவ தந்தையே தன் மகளை கற்பழித்து தண்ணீர் தொட்டியில் முக்கி கொன்ற சம்பவம் நமக்குள் அருவருப்பு மட்டுமல்லாது நம் சமூக கலாச்சார சீர்கேட்டினை நமக்கு எடுத்து சொல்கிறது...இரண்டு நாட்களுக்கு முன்னர், பெங்களூர் இல் தங்கி வேலை பார்க்கும் அமெரிக்க பெண்ணை ஒரு கூட்டம் கற்பழித்து விட்டு சென்று இருக்கிறது...என்ன படித்தும்..என்ன முன்னேறியும்...பெண்களுக்கு சமூகத்தில் பாதுகாப்பு என்பது இல்லை என்பது எவ்வளவு வெட்கக்கேடான விஷயம்...
ஹாய் ஆனந்தி மேம்
உண்மையாவே இது ஒரு வெட்கக்கேடான விஷயம் தான். நான் நிறைய டைம் யோசிச்சிருக்கேன் இந்தமாறி விஷயங்கள நிறுத்தவே முடியாதான்னு... இந்தமாறி பன்னரவங்கள எல்லாம் செத்தே போயுரலாம்னு நினைக்கற அளவுக்கு கொடுமை பன்னி கொல்லனும்னு தோனும் ஆனா நம்ம நினைச்சு என்ன பன்னரது??? நம்ம சட்டங்களை திருத்துனா மட்டும் தான் இதயெல்லாம் தடுக்க முடியும்...
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
அன்புடன்
லதாவினீ.
சட்டங்களை மீறியது உணர்வுகள் இல்லையா
உண்மை தான்..but..சட்டங்கள் ஒரு பக்கம் கடிவாளம் போட்டாலும் தனிமனித ஒழுக்கம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கணும் இல்லையா...இதை சட்டங்கள் வலியுறுத்த முடியாது..அது சமுதாயத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் சிறு வயதில் இருந்தே குழந்தைகள் உணரும் வகையில் கொண்டு வரணும்..சட்டங்களை மீறியது உணர்வுகள் இல்லையா..
Madurai Always Rocks...
ஹாய் ஆனந்தி மேம்
கண்டிப்பா தனிமனித ஒழுக்கம் இருக்கனும் மனிதனா பொறந்தா..... ஆனா ஒழுக்கத்த சொல்லிக்குடுகற பெற்றோர்களே அத சரியா கவனிக்காததும் இந்த காலத்துல இதமாறி தவறுகள் நடக்கறதுக்கு காரணம் ஆயுருது... முழுமையா பெற்றோர்களையும் தப்பு சொல்ல முடியாது... எந்த பெத்தவங்களும் நம்ம குழந்தைகள் கெட்டுப்போகனும்னு நினைக்க மாட்டாங்களே???
சட்டங்கள் கடுமையா இருந்தா தவறுகள் குறைய வாய்ப்பு இருக்கே... இங்க பன்னற தவறுகளை கடுமையான தண்டனைகள் குடுக்கற நாட்டுல போய் பன்னுவாங்களா???
தவறு செய்யற மனிதர்கள் திருந்தனும்னா சட்டங்களை திருத்தி கடுமையாக்கனும்... அப்பதான் குற்றங்களை குறைக்க முடியும்...
மீண்டும் பேசலாம்.
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
அன்புடன்
லதாவினீ.
Oru sila Pengalum karanam...
Intha mathiri nadapatharku oru sila pengalum sila familyum karanamai eruklam. Eppadi endral, sila kudumbangalil, pen pillaigalai valarnthu, poopeitha pinbum, kuzanthaiagave bavithu, avargalin aadaigal mela kavanam seluthuvathu illai. Avargalin pen avargal kangaluku kulanthaiagave thrialam, aanal intha mathiri kora vakkiram buthikarargaluku, pothai porulagave than therivargal, karpazhipugalum, balathkarangalum athigamaga nadai peruvatharku ithuvum karanamai amaialam.
Aduthu, cinema thurayum karanam.Pengalai aadai kuraithu, kavarchiaga katti, aangalin kora buthiku theeni potu vidugirargal.
Ini Pengaluku immathiri thollaigal varamal eruku, arasangamum, cinema thuraigalum petrorgalum sernthu konjam yosika vendum. Ithuve en karuthu.
True Love Never Fails.
ஹாய் வரலஷ்மி
நல்லாருக்கீங்களா? உங்க பதிவை அழகான தமிழ்ல பதிவு பன்னீங்கன்னா ந்ல்லாருக்குமே...
இப்படி சொன்னதுக்கு கோச்சுக்காதீங்க...
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
அன்புடன்
லதாவினீ.
hi ananthi
சட்டங்கள் கடுமையானால் தான் இது மாதிரியான தவறுகளை ஓழிக்க முடியும்.அதே போல் சமீபகாலமாக தவறான தொடர்புக்கள் அதிகரித்து இருப்பதை பார்த்தால் நாடு எங்கே போய் கொண்டு இருக்கிறது?????? என்று அச்சமாக இருக்கிறது.
hai changdini. neena endha
hai changdini. neena endha oor. my name is vani. iam at chennai - annanagar
hai seetha. chennai-la neenga
hai seetha. chennai-la neenga engey irukeenga. naan vani. chennai la annanagar la irukkaen. neenga nalla samappengla. naan sumar than.
தீர்வு
இவ்வாறு செய்பவர்களுக்கு மரண தண்டனை கொடுதால், அணைவருக்கும் பயம் இருக்கும்...பெண்களுகும் ஆடை ஒழுக்கம் வெண்டும்....இந்த சட்டம் இருந்தால் கண்டிபாக இந்தமாதிரி ஆவதை தடுகலாம்...இந்த சட்டம் saudi il அமலில் உள்ளது
பெண்களுக்கு தக்க சமயம் உதவாத சட்டம் சாக கடவது
ஆக மொத்தம் பெண்மையின் பாதுகாப்பு, சட்டங்கள் புண்ணியத்தால் நடக்கலாம்..
ஒன்று மட்டும் நினைவில் கொள்ளவேண்டும்...எங்கு மிரட்டலோ,தண்டனையோ அதிகம் இருக்கிறதோ அங்கே அத்துமீறல்களும் அதிகம்..
பெண்களுக்கு தக்க சமயம் உதவாத சட்டம் சாக கடவது...
சரிதானே...
Madurai Always Rocks...