admin sir

தமிழ் எழுத்து உதவி பெட்டியை மேலே பல்சுவைக்கு அடுத்து கொடுக்கலாமே.எல்லாரும் காணவும் பயன் படுத்தவும் எளிதாக இருக்குமே////

அன்பு ரீம்

ரொம்ப நல்ல யோசனை சொல்லியிருக்கீங்க. பழைய தளத்தில் தமிழில் பதியணும்ங்கற தகவல் முகப்பிலேயே அழுத்தமாக இருந்தது.

தமிங்லீஷில் இருந்தால் படிக்க சிரமமாக இருப்பதால் பெரும்பாலும் படிக்க முடியாமல் போய் விடுகிறது.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

நீங்கள் கேட்டுள்ளது போல் மேலே பல்சுவைக்கு பக்கத்தில் எழுத்துதவி லிங்க் கொடுத்தல் இயலாது. அதுதான் டாப் லெவல் நேவிகேசன் பார். அதில் அதி முக்கியமான லிங்க்கள் கொடுக்க வேண்டும். இருக்கும் இடமோ மிகவும் குறைவு. இன்னும் சில முக்கிய பிரிவுகளின் லிங்க்ஸ் அங்கே கொடுக்க வேண்டி உள்ளது. இப்போதே இடம் பற்றாக்குறை காரணமாகத்தான், நிறைய பிரிவுகளை பல்சுவை பக்கத்தில் அடைத்துவிட்டோம்.

அடுத்து, எழுத்துதவி பற்றி நான் பலமுறை குறிப்பிட்டுள்ளேன். அது ஒரு சிலேட்டு பலகை மாதிரி. நீங்கள் தமிழில் எழுத கற்றுக் கொள்வதற்கான உதவி பலகை. எந்த ஆங்கில எழுத்துக்களுக்கு எந்த தமிழ் எழுத்துக்கள், எப்படி டைப் செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள ஒரு ஆரம்ப அரிச்சுவடி மாதிரியான விசயம். அதையே எப்போதும் பயன்படுத்த வேண்டாம். அதில் நிறைய வசதிகள் கிடையாது. எழுத்துக்களை பற்றி தெரிந்துகொண்ட பின்னர், ekalappai அல்லது NHM writer ஐ இன்ஸ்டால் செய்து, அதனை பயன்படுத்த தொடங்க வேண்டும். அதுதான் எளிதானது, பல வகைகளில் பயனுள்ளது.

இந்த அளவிற்கு பயனில் உள்ள எழுத்துதவி பக்கத்திற்கு இதற்கு மேல் முக்கியத்துவம் கொடுத்தல் சிரமம். எழுத்து பயிற்றுவித்தல் அறுசுவையின் முக்கிய நோக்கமில்லையே.. வேண்டுமென்றால் தமிழில் டைப் செய்வது எப்படி என்பது போன்ற லிங்க் ஒன்றை முகப்பில் முன்பு போல் வெளியிடலாம். இன்னும் கொஞ்சம் விரிவான பக்கம் தயார் செய்து, அதற்கான லிங்க்கை முகப்பு பக்கத்தில் கொடுக்கின்றேன்.

thanks

நிங்கள் குறிப்பிட்டுள்ள ekalappai அல்லது NHM writer ஐ இன்ஸ்டால் செய்வது எப்படி? kindly help me.

அன்புடன்,
சுஜாதா செந்தில்குமார்.

http://www.arusuvai.com/tamil/node/15439

இந்த லிங்க்ல போய் பாருங்க. ஆஷிக் அதை எப்படி டவுன்லோட் செய்வது என்று விளக்கமாக சொல்லியுள்ளார். வேறு ஏதேனும் சந்தேகமிருப்பினும் அவரே தீர்த்துவைப்பார்.

அன்புடன்
ஆமினா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நீங்கள் குறிப்பிட்ட லிங்கின் உதவியால் NHM Writerஐ download செய்து அதன் மூலமாக direct ஆக அறுசுவையில் தமிழில் type செய்து உங்களுக்கு இப்போது பதில் அனுப்பியுள்ளேன். மேலும் MS WORD,WORDPAD மற்றும் Notepad அனைத்திலும் தமிழில் type செய்வது மிகவும் எளிதாக உள்ளது. மிகவும் நன்றி,நன்றி,நன்றி.

அன்புடன்,

சுஜாதா செந்தில்குமார்.

கேக்கவே(பாக்கவே) ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.இனி கலக்க வேண்டியது தான்.முதல் முறை எழுதியது போல் அல்லாமல், தேர்ந்தவர் எழுதியது போலவே இருக்கு. வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆமினா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

one more help please
அறுசுவையில் நான் ஆன்லைனில் இல்லாதபோது எனக்கு வரும் கருத்துக்களை
எவ்வாறு தெரிந்துகொள்வது?

சுஜாதா
மன்றம் பக்கம் போனீங்கனா அதில் கடைசி பதில் என்று கொடுத்து நேரம் போட்டிருப்பார்கள். அந்த நேரத்தை வைத்து நீங்கள் காணலாம். நானும் அப்படி தான் செய்கிறேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்