சில நேரங்களில் உதவி உபத்திரமா??

நான் ஏன் இந்த தலைப்பை கொடுத்தேன் என்றால் நேற்று நடந்த நிகழ்ச்சி...விற்பனை பெண்கள் இருவர் வந்து என்னிடம் "உங்க போர்டிகோவில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கலாமா என்றார்கள்..சரி இதில் என்ன குறைஞ்சு போக போறோம் னு சாப்பிடுங்க சொன்னேன்..2 பேருன்னு சொன்னவங்க ஒரு 10,12 பேரு வந்தாங்க..சரி..சாப்பிட்டு தானே போக போறங்கனு..கண்டுக்கலை...தண்ணீர் கேட்டாங்க...குடுத்துட்டு போய் படுத்துட்டேன்..ஒரு 1 hour இருக்கும்.. அவங்க சாப்பிட்டு முடிச்சுட்டு அப்படியே படுத்து செட்டில் ஆய்ட்டாங்க..கேட்க ஒரு மாதிரி தயக்கமா இருந்தது...சரி..ரெஸ்ட் எடுக்கட்டும்..கொஞ்சநேரத்தில் போயடுவங்கனு உள்ள போயிட்டேன்..கொஞ்சநேரத்தில் ஒரே சிரிப்பு சத்தம்..3 sales things auto, 5 gents..எல்லாரும் எங்க வீட்டு போரிடிகோ குள்ளே ..கொஞ்சநேரத்தில் ஓடி புடிச்சு எல்லாம் விளையாட ஆரம்பிச்சுட்டங்க...2
hrs aaiduchu...பொறுத்து பார்த்து கேட்டேன்..என்னங்க சாப்பிட உட்காறேனு சொன்னேங்க...இன்னும் கிளம்பலையான்னு...ஏதோ அவங்களுக்கு துரோகம் பண்ணிய range இல் ஒரு பார்வை பார்த்துட்டு போனாங்க...அந்த இடம் பூராவும் குப்பை..சாத பருக்கை..கருவேப்பில்லை...ஈ..சரியான தலைவலியோடு..டெட்டால் போட்டு அலசிவிட்டு...புலம்பிட்டே வந்து படுத்தேன்..சில நேரங்களில் உதவி உபத்திரம் ஆகுமோன்னு...

ஹாய் ஆனந்தி மேம் நல்லாருக்கீங்களா?

எனக்கும் உங்களுக்கு ஆனமாறி ஒரு சம்பவம் நடந்துருக்கு... எங்க ஆபிஸ் இருந்த சமயம் ஒரு ஆளும் ஒரு பொம்பளையும் வந்தாங்க வந்து ஒரு அட்டைய குடுத்தாங்க அதுல எங்களால பேச முடியாது, காதும் கேக்காது ரொம்ப சிரமத்துல இருக்கோம் ரெண்டு குழந்தைகள் இருக்காங்க எங்களுக்கு, உங்களால முடிஞ்சா ஏதாச்சு வகைல எங்களுக்கு உதவுங்கன்னு எழுதி இருந்துச்சு... ட்ரஸ், காசு, சாப்பாடு எதுன்னாலும் பரவால்லன்னு சைகைலயே சொன்னாங்க... நானும் பாக்க பாவமா இருக்காங்கன்னுட்டு கைல இருந்த காச குடுத்துட்டு எனக்கு வாங்கி வெச்சுருந்த சாப்பாட்டு பார்சலை எடுக்க பக்கத்து ரூம்கு போய்ட்டு வந்து பாக்கும் போது அவங்க இல்லை... சரி அவங்களுக்கு நாம சொன்னது புரியல போல அதான் போய்ட்டாங்கன்னு நினைச்சு என் வேளைய பாக்க ஆரம்பிச்சுட்டேன்...

ஒரு மணி நேரம் கழிச்சு ஏதோ நெனப்புல செல்போன்-ன பாத்தா கானோம். எனக்கு என்ன பன்றதுன்னு தெரியாம பக்கத்து ஆபிஸ்ல போய் கால் பன்னி பாத்தா எடுத்து அட்டென் பன்னிட்டாங்க. எப்படி யூஸ் பன்ரதுன்னு தெரியாம அலுத்திருப்பாங்கன்னு நினைக்கரேன். ’என்ன இது ஏதோ சத்தம் வந்துச்சு இப்ப நின்னுருச்சு’ அப்படின்னு பேசிக்கராங்க... நான் ஹலோ ஹலோன்னு லோலோன்னு கத்துனது தான் மிச்சம்.

அப்பறம் என்ன வினீத்-ட நல்லா திட்டு வாங்குனத வேற சொல்லனுமா என்ன???
அதனால இத மாறி வரவங்கள எல்லாம் பக்கத்துல கூட சேக்கறதில்ல இப்ப... உண்மையா உதவி கேட்டு வரவங்கள கூட இப்ப சந்தேகபட வேண்டி இருக்கு அவங்களால என்ன பன்ன???

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

ரொம்பவே நல்லா இருக்கேன் லதா..நீங்கள் நலமா???
ஆமாம் லதா ,,,இந்த மாதிரி சில எரிச்சல் நிகழ்ச்சிகளுக்கு பிறகு உதவி பண்ண மனசு இருந்தாலும்...உபத்திரம் நினைச்சு கொஞ்சம் தயக்கமாவே தான் இருக்கு..சமீபத்தில் கூட ஒரு செய்தி படித்தேன்...ஒரு ஜப்பான் நாட்டு பெண்மணி தமிழ்நாடை சுற்றி பார்க்க வந்துருக்காங்க..அப்போ சென்னையில் இருந்து ஒரு guide ஐயும் கூட்டி போயிருக்குகாங்க..மதுரை வந்து கோவில் சுற்றி காட்டிகிட்டு இருக்கும்போது அவசரமா ஒரு 10,0000 ரூபாய் தாங்க...ஊர்ல இருந்து போன் வந்துருக்கு அப்பாக்கு முடிலயனு சொல்லிருக்கான் அந்த guide ...இந்த அம்மாவும் இரக்கப்பட்டு குடுத்துருக்காங்க...போயிட்டு வந்த ஆளு இன்னும் 20k கேட்ருக்கார் ...இவங்களும் குடுத்துருக்காங்க...போன ஆள் திரும்பல..இந்த அம்மாகிட்டயும் பணம் இல்லை...போன் பண்ணினால் சுவிட்ச் ஆப் ..வெறுத்து போய் embassy கு புகார் பண்ணி...எனக்கு அந்த பணம் வேணாம்...பட் எங்களை மாதிரி வெளி நாட்டுக்காரங்க வந்தால் இப்படி ஏமாத்தாம இருக்க மட்டும் அந்த guide கிட்டே சொல்லுங்கன்னு சொல்லிட்டு போயிருக்காங்க...எவ்வளவு அசிங்கமா இருக்கு இல்லையா லதா??

Madurai Always Rocks...

நல்லாருக்கீங்களா? உங்க பதிவை இந்த இழைல இப்பதான் பாத்தேன். அதனாலதான் இவ்லோ லேட்டா பதிவு குடுக்கரேன். மன்னிக்கவும் லேட் ரிப்ளைக்கு. ஆமாம்க பெருமைப்பட கொஞ்சம் விஷயம் இருந்தா மத்தவங்ககிட்ட அசிங்கபட நிறைய விஷயங்கள் இருக்கும்... என்ன பன்ன இதெல்லாம் மாறவே மாறாது போலருக்கு...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

மேலும் சில பதிவுகள்