வரலெஷ்மி விரதம்

அன்பு தோழிகளுக்கு வணக்கம்
(1) வரலெஷ்மி விரதத்தை பற்றிய விபரங்களையும்,அதை எடுக்கும் விதிமுறைகள் பற்றியும் தெரிந்தவர்கள் இங்கு கூறவும்.
(2) எனக்கும் எனது குடும்பத்தினர்கள் யாருக்கும் இந்த பழக்கம் இல்லை, எனது சொந்தத்தில் கூட யாரும் இந்த விரதத்தை எடுத்ததாக எனக்கு தெரியவில்லை (எடுக்கவும் இல்லை) ஆனால் எனக்கு இது ஒரு ஆசையகவே உள்ளது, இதற்கு பரம்பரை பழக்கம் இருக்க வேண்டுமா, இல்லை யாரவது பெரியவர்கள் எடுத்துக் கொடுக்க வேண்டுமா.
(3) நான் பிராமின் இல்லை, பிராமின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்ளிடம் சொல்லி எடுத்துக்கொடுக்கச் சொல்லலாமா ஏன் என்றால் "நோன்பு என்பது பரம்பரையாக செய்யும் பழக்கம் உள்ளவர்கள் போல" இதர்க்கும் ஏதாவது விதிமுறைகள் உண்டா என்பதை தெரிவக்கவும். இதன் நன்மைகளை பற்றி அவரவர்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை கூரவும்.

ஹாய் அமினா எப்படி இருக்கிங்க நீங்கதான் முதல் பதிவு எல்லோருக்கும் போடுவீங்க, ஆனால் நான் கேட்ட கேள்வி உங்களுக்கு தெரியாதுனு நினைக்கிரேன் எல்லோருடைய கேள்விகளுக்கும் உங்கள் பதிவுகளை போட்டு எல்லோரையும் ஊக்க படுத்துரிங்க நன்றி.

அன்பு நித்யா வரலக்‌ஷ்மி விரதம் ஒன்னு அம்மா வீட்டில்
செய்யும் வழக்கம் இருக்கனும். இல்லைனா புகுந்த வீட்டில்
செய்வது வழக்கமா இருக்கனும். நாமாக ஆரம்பித்து செய்ய
முடியாது நீங்க நினைப்பதுபோல இது பரம்பரை வழியாக
வரவேண்டிய விஷ்யம்தான்..

என்னை (பெயர் ஞாபகம் வச்சு)கூப்பிட்டு பாராட்டியதற்கு மிக்க நன்றி.
உங்க பதிவை பார்த்த முதல ஆள் நானாதான் இருப்பேன்னு நினைக்கிறேன்.கை ஊரிட்டே இருந்துச்சு(ஆமினா என்று பெயர் வராத பதிவு இருக்கலாமா?).பதில் தெரியல. அதான் சொல்லல:( தெரியாதுன்னு போடலாம்னு நெனச்சேன். எதுக்கு தேவையில்லாம உங்க கிட்ட திட்டு வாங்கணும்னு பேசாம இருந்துட்டேன்:)

பதில் கடுகளவு தெரிஞ்சாலும் போடனும்னு சபதம் எடுத்துட்டு தான் இதுல சேந்தேன். ஏதோ என் அறிவுக்கு எட்டின கேள்வியா இருந்தா சொல்லுவேன். மத்தபடி படிப்பு சம்மந்தமா கேட்டா கண்டிப்பா சொல்லவே மாட்டேன் (நாவல்ஸ் பத்தி சொன்னேனான்னு பாத்தீங்களா?). ரொம்ப பேசுறேனோ:)

மறுபடியும் நன்றி.....

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

உ வாழ்க வளமுடன்!
அன்பு நித்யா, வரலஷ்மி விரதம் பிறந்தாத்தில் OR புக்காத்தில் வழக்கம் இருந்தால் மட்டுமே நாம் செய்ய முடியும்.நாம் செய்யவில்லையென்றாலும் செய்பவர்கள் வீட்டீற்கு சென்று கலந்து கொள்ளலாம்.உங்களுக்கு ஆசையாக இருந்தால் வீட்டீல் லஷ்மி படம் வைத்து அன்று பூஜை செய்யுங்கள்.நீங்கள் பக்தியுடன் செய்யும் போது பலன் இருமடங்காகும்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

எனக்கு இது பற்றி ரொம்ப தெரியாது. நான் வீட்டில் எடுத்ததும் கிடையாது. ஆனால் ஆசை உண்டு.

//நாமாக ஆரம்பித்து செய்ய முடியாது//
//பிறந்தாத்தில் OR புக்காத்தில் வழக்கம் இருந்தால் மட்டுமே நாம் செய்ய முடியும்.//

இந்த இரண்டு கூற்றுக்களும் சரியா? அல்லது இதுதான் பழக்கத்தில் உள்ளதால் இப்படிக் கூறப்பட்டதா?

எனக்குத் தெரிந்து, புராணக் கதையின்படி - ஒரே ஒரு பெண் சில நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து இந்த விரதத்தை முதலில் நடத்தினாள். அப்படியானால் இப்போது வரலெட்சுமி விரதம் மேற்கொள்பவர்கள் எல்லாம் அவரின் தலைமுறையினர்தானா? என்ற கேள்வி வருகிறது.

ஏன் வரலெட்சுமி விரதம் மற்றவர்கள் எடுக்கக் கூடாது என்பதைத் தெரிந்து கொள்ள ஆசை. தெரிந்தவர்கள் விளக்கவும்.

அன்புடன்,
இஷானி

யாரும் எடுக்கலாம். இதுக்கெல்லாம் விதிமுறை பார்க்க கூடாது. என்னை கேட்டா எல்லா பழக்கங்களும் ஒரு காலத்தில் புதுசு தானே ??!!!
எனக்கு கொலுவும் பிடிக்கும் கிறிஸ்மஸ் மரமும் பிடிக்கும் ரம்ஜான் நோன்பும் பிடிக்கும். அதுதான் எங்க வீட்டில செய்ய போறேன்... எந்த ஒரு விரதமோ / கடவுள் காரியமோ.. அக/புற தூய்மையாலும் இறை சிந்தையோடும் செய்யும் அனைத்தையும் இறைவன் ஏற்பார்....

குறிப்பு: யார் மனதையும் நம்பிக்கையும் நோக செய்ய அல்ல... இது என் சொந்த பார்வை..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

வுங்களை போலே என்னக்கும் வரலக்ஷ்மி விரதம் என்றால் மிகவும் பிடிக்கும்.அதுவும் நாங்கள் இருப்பது ஹைதராபாத் என்பதால் இங்கு வீட்டுக்கு வீடு பெண்கள் இந்த நோன்பை இருந்து தாம்பூலம் வாங்கிக்கொள்ள எண்ணையு அழைப்பார்கள். இந்த நோன்பு நம் பரம்பரையில் பழக்கம் இருந்தால் மட்டுமே செய்யவேண்டும் என இங்குள்ளவர்கள் சொல்கிறார்கள்.நான் வரலக்ஷ்மி விரதம் அன்று அரிசி பாயசம் வைத்து லக்ஷ்மி படத்திற்கு பூஜை செய்து கொள்வேன். இந்தமுறை லக்ஷ்மி படம் போட்ட காசுவாங்கி பூஜை செய்து மாங்கல்யதில்கோர்த்து கொள்ளலாம் என்று நினைக்கிறன். அப்படி பழக்கம் இல்லாதவர்கள் செய்யலாமா .தெரிந்தவர்கள் சொல்லவும்.

கோமு, அமினா, சொவுமியா, இஷானி, இலா, சுந்தரி உங்கள் கருத்துக்களை தெரிவித்ததற்க்கு உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி,நீங்கள் சொல்வது போல தான் செய்ய வேண்டும் சரஸ்வதி படம் வைத்து எதாவது (ஒரு இனிப்பு வகை) நெய்வேதியத்திர்க்கு செய்து பூஜை செய்ய வேண்டியது தான், ஆனால் இந்த பூஜையை பற்றி தெரிந்தவர்கள் சற்று விளக்கமாகச் சொன்னால் இதன் நன்மைகளை நாங்கள் தெரிந்துகொள்வோம்.

அன்புடன்
நித்தியா

நான் எங்கள் வீட்டில் செய்யும் முறை பற்றி சொல்றேன் நித்யா, விரத நாளன்று மாலை வேலையில் லெஷ்மி படத்தை எடுத்து வைத்து ஒரு பலகையில் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்து கோலமிட்டு படத்தை அதில் வைத்து அதற்கு பூ, பொட்டு வைத்து அலங்கரிக்கவும். இந்த விரதத்திற்கு என்று எங்கள் வீட்டில் மோதகம் செய்வார்கள்(கடலை பருப்பு பூரணம் வைத்த கொழுக்கட்டை தான்). பழ வகைகள், பூ, வளையல், நோன்பு கயறு அல்லது நூலை தேவையான அளவு நறுக்கி எடுத்துக் கொண்டு அதில் 7 அல்லது 9 கயறு எடுத்துக் கொண்டு தண்ணீரில் நனைத்து கழுவி விட்டு மஞ்சள் தடவி அதையும் பூஜையில் வைக்க வேண்டும். மோதகத்தை வைத்து நெய்வேத்தியம் செய்து கயறை எடுத்து கட்டிக் கொள்ள வேண்டும், வளையல் எடுத்து போட்டுக்கலாம். இது ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாறுபடலாம் நித்யா. இதைப்போல் செய்வது பொதுவானது தான்.

மேலும் சில பதிவுகள்