பிஞ்சுக்குழந்தைகளுக்கு எதுக்கு தண்டனை?

எல்லாருக்கும் வணக்கம்.

தினமும் நியூஸ் பேப்பரை திறந்தாலே கண்டிப்பா இருக்க நிறைய விஷயங்கள்-ல கைக்குழந்தையை விட்டு தாய் ஓட்டம், குப்பைதொட்டியில் கைக்குழந்தை, சாக்கடையில் குழந்தை, பேருந்து நிலையத்தில் குழந்தை-ன்னு விதவிதமா நியூஸ் இருந்தாலும் எல்லாவிதத்துலயும் பாதிக்கபடரது ஒன்னும் அறியாத அந்த பிஞ்சு குழந்தைகள்னு நினைக்கும் போது மனசு தாங்க முடியரதில்ல.

இந்தமாறி பன்னுறவங்கள எல்லாம் கொன்னாக்கூட என் ஆத்திரம் தீராது. எப்படி இப்படிலாம் தூக்கி போட இவங்களால முடியுதுன்னு தெரியல இந்த அளவுக்கு கல் நெஞ்சம் படச்சவங்கள் என்ன பன்னறது??? என்ன தண்டனை குடுக்கறது???

இவங்க பன்னற தப்புக்கு அந்த பிஞ்சுக்குழந்தைகள் தான் என்ன பன்னுச்சு? எதுக்கு இவ்வளவு பெரிய தண்டனை அந்த பச்சைமண்ணுக்கு??? இதபத்தி உங்க கருத்து என்ன தோழிகளே?

ஒரு பக்கம் குழந்தை இல்லை என்று எத்தனையோ தம்பதிகள் கண்ணீர் விட்டு கொண்டுஇருக்கிறார்கள்.மறுபக்கம் இப்படி பட்ட கொடுமைகலும் நடந்து கொண்டு தான் இருக்கிற்து.குழந்தையை தூக்கி எறிந்து விட்டு எப்படி இவர்களால் நிம்மதியாக இருக்க முடிகிற்து//?????

உ வாழ்க வளமுடன்!
அவர்களுக்கு மனசாட்சியெ கிடையாதா?

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

சில நாட்களுக்கு முன்பு கூட ஒரு செய்தி தாளில் படித்தேன். இராமநாதபுரத்தில் பள்ளியில் படிக்கும் பெண்ணுக்கு குழந்தை பிறந்து கழிவறையின் ஒரு ஓரத்தில் போட்டுவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வகுப்பறையில் அமர்ந்திருக்கிறாள். அங்கு போன சிறுமிகள் குழந்தை அழுகுரலை கேட்டு கத்தியவுடன் தான் அனைவருக்கும் விசயம் தெரிந்துள்ளது. உடனே அந்த குழந்தைக்கு முதலுதவியும் சிகிச்சையும் செய்யப்பட்டது.
இந்த கொடுமையை என்னவென்று சொல்வது?

மேலும் வறுமையின் காரணமாக குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து பெற்றோர்களும் விஷம் அறுந்திய பல செய்திகள் பார்க்கும் போது எரிச்சலாக இருக்கிறது.

அதற்கும் மேல் தான் குறி சொல்வதை அனைவரும் நம்ப வேண்டும் என்பதற்காக விளையாடிக்கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு சாக்லேட்டில் விஷம் வைத்து குழந்தை சாகும் முன்பே அந்த வீட்டு வாசலில் ”இந்த வீட்ல ஒரு உயிர் போகப்போது” என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த ஊரில் 18 குழந்தைகளை கொன்றிருக்கிறார்கள்.

இந்த மாறி விஷயங்கள் கேட்க்கும் போது யாருக்கும் மனச்சாட்சியே இல்லையோ,அவர்களின் மனத்தினை கடவுள் கல்லாகவா படைத்தான்? என்று நினைக்க தோன்றுகிறது.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

என்னைப்பொறுத்த வரைக்கும் சரியான விழிப்புனர்வு இல்லாததால தான் இப்படில்லாம் நடக்குது. அதுவும் எல்லாம் சின்ன வயசு பெண்கள் பன்னற தப்பால தான் இதமாறி கொடுமைகள் நடக்குது.

மத்த ஊர்களை விடவும் திருப்பூர் மாவட்டத்துல தான் அதிகமா சிசுக்கொலைகளும் குழந்தைகள் கண்டெடுக்கப்படரதும் நடக்கறதா ரீசெண்ட்டா பேப்பர்-ல படுச்சேன். அதுவும் உண்மைதான்னு நினைக்கறேன் ஏன்னா தினமும் கண்டிப்பா ஒரு நியூஸ் வந்துரும் மத்த ஊரில் எப்படின்னு தெரியல இங்க ரொம்ப மோசம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.


உண்மைதான் லதா.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அதே போல் எய்ட்ஸ் நோயால் பாதிக்கபட்டவர்களும் திருப்பூரில் அதிகம் என்று நானும் படித்தேன்

நல்லாருக்கீங்களா? ஆமாங்க. உண்மைதான். திருப்பூர்-ல நிறைய பனியன் கம்பெனிகள் இருக்கு அதுக்கு பல ஊர்கள்ள இருந்தும் ஆண்களும் பெண்களும் வேலைக்கு வராங்க... சின்ன புள்ளைங்கன்னு கூட பாக்காம அவங்க பெற்றோர்களும் காசுக்காக அனுப்பி வெக்கராங்க. அவங்களையும் சொல்லி என்ன பன்ன? வறுமை கொடுமையால அனுப்பராங்க.

18 வயசுக்குள்ள இருக்கற சின்ன வயசு பிள்ளைங்க தான் எல்லாரும்... அவங்களுக்கு எந்த விஷயத்துலயுமே கொஞ்சம் கூட விழிப்புணர்ச்சி இல்லை.

இவங்களையும் விட்டு வெக்கரதில்லை சில மனிச நாய்கள். மோப்பம் பிடிச்சு கல்யாணம் பன்னிக்கரேன் அப்படின்னு ஆசை வார்த்தை பேசி மயக்கிறாங்க. இப்படி ஆகறதால தன்னோட வீட்டுக்கும் போக முடியாது வேற வழியும் இல்லாம இந்தமாறி பன்னறாங்க. என்ன பன்ன இதுக்கெல்லாம்???

இது திருப்பூர்-ல மட்டும் இல்லை எங்க ஊர்லயும் நடந்துட்டு தான் இருக்கு... அந்த கொடுமைய ஏன் கேக்கறீங்க. அத நாளைக்கு வந்து சொல்ரேன். சொன்னா நீங்கள்லாம் அதிர்ச்சில உறைஞ்சே போய்ருவீங்க...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

அன்பு தோழிகளே! இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் பேச்சுக்கு தான்.. நாம இந்த கொடுமையான விசயங்களை இங்கு பேசுவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கோ இல்லை பேசுபவர்களுக்கோ ஒரு பயனும் இல்லை. என்னை பொருத்தவரை எல்லா ஊர்களிலும் எல்லா கொடுமையும் நடக்கும் நல்லதும் நடக்கும். செய்திதாளும் தொல்லைகாட்சியும் சொல்லாத விசயத்தயா நாம் இங்க பேசபோறோம்.

எனக்கு பல விஷயங்கள் நம்மட ஊரில் நடப்பது தெரியாது. சொல்லபோனால் தெரிந்துகொள்வதால் என்ன பயன். என்னால ஒன்னுமே செய்ய முடியாது. குறைந்த பட்சம் என் வீட்டருகில் நடந்த நிகழ்வுகளோ இல்லை உறவினர்/நண்பர் வட்டாரத்தில் நடக்கும் நிகழ்வுகளோ கேட்டாலும் யாராலும் உதவ இயலாத நிலை. ஏன்??? முதலில் அவரவர் வாழ்க்கையை பார்க்கணும் என்ற எண்ணம். ரெண்டாவது... நாமாக உதவ போனாலும் எத்தனை நாளைக்கு உதவ முடியும். நம்ம ஊரில் உதவுறேன் என்று சொன்னால் நல்லா நடக்கறவங்களும் சப்பாணி ஆயிடுவாங்க.

நானும் எதோ நல்ல விதமாக குழந்தைகளுக்கு உதவும் இழைன்னு உள்ள வந்தேன்...நம்மால குறைந்த பட்சம் என்ன உதவி செய்ய முடியும் என்று எழுதினால் நல்லா இருக்கும். பல நாள் இங்கிருப்பதால் எனக்கு தெரியும் முக்கால்வாசி சீரியலில் வரும் கதாநாயகிக்காக அழுவது போல தான்...

என்ன பிரெண்ட்ஸ் நான் சொல்வதை தவறாக எண்ண மாட்டீர்களே....

அதிர்ச்சி எல்லாம் தராதீங்கப்பா.. எனக்கு ரொம்ப வீக்கான ஹார்ட் :)

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

hai ila nan new joining neenga viruppa patta nan ungakuda pesalama
reya suresh

கட்டாயமா.. தமிழ்ல எழுதினா எனக்கு கண்வலிக்காம பார்த்து பேசுவேன்.... இங்க எல்லாருமே பிரெண்ஸ் தான். எப்படி மன்றத்தில் பதில் போடுவது .. புதிய இழை தொடங்குவது என்று கத்துகிட்டது போல தமிழிலும் பதிவு போட்டா எல்லாருமே ஆசையா வந்து பேசுவாங்கன்னு தோணுது.. நீங்க என்ன சொல்லறீங்க

http://www.arusuvai.com/tamil_help.html

கீழே தங்கிலீஷில் அடிச்சு மேலே வரும் தமிழ் வாக்கியத்தை காப்பி பேஸ்ட் செய்யுங்க.. நான் முதன் முதலில் நல்லா தமிழில் அடிச்சிட்டு கீழே இருக்கும் தங்கிலீஷ் காப்பி பேஸ்ட் செய்தேன்.. ரொம்ப காமெடியா இருக்கும் இப்ப நினைச்சாலும்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்