என்னுடைய மகளுக்கு வயது 12 ஆகப்போகிறது. வயதிற்கு வரும் பருவம். பருவம் அடையும் போது சிலர் கீரை விதையை பாலில் கலந்து குடிக்கச்சொல்கிறார்களே. இது எதற்கு? அதனால் என்ன ஆகும்? உடலுக்கு நல்லதா? எல்லாருக்கும் ஒத்துக்கொள்ளுமா? யாருக்காவது தெரியுமா தெரிந்தால் சொல்லுங்களேன்.
அன்புடன்
லதா
விஸ்வ ஸ்ருதி(லதா)
பின்னாளில் ஏற்படும் அதிக உதிரபோக்கு,கருப்பை சம்மந்தமான ப்ரச்சனைகள்,குழந்தையின்மை ஆகியவற்றை தடுக்க உதவுவதால் பெரியவர்கள் அதை சாப்பிட சொல்வார்கள். அதுவும் இல்லாமல் உதிரம் அதிகமாக வெளியேரினால் உடலில் உள்ள சத்து குறையும். அதை ஈடு செய்யும் பொருட்டு கொடுக்கிறார்கள். எடுத்துக்கொள்வது அவரவர் இஷ்டம்.நாட்டுக்கோழி முட்டை(சத்து),நல்லெண்ணெய்(குளிர்ச்சி) சாப்பிட சொல்வதும் அதற்காக தான்.
பிறகு ஒரு முக்கியமான விஷயம். கீரை விதை குளிர்ச்சி தருவது. வயதிற்கு வரும் பெண்களுக்கு அடிவயிற்றுவலி (பெரிய அளவில்),சூட்டினால் வலி வராமல் இருக்க அதை கொடுக்கலாம்.
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
மிக்க நன்றி amina mohammed
ஹாய் அமீனா
என்னுடை சந்தேகத்திற்கு மிக அழகாக தெளிவாக பதில் கூறியதற்கு மிக்க நன்றி.
அன்புடன்
லதா.
ஹாய் விஷ்வஸ்ருதி
நல்லாருக்கீங்களா? உங்க பெயர் லதாவா? என் பெயரும் அதே...
நீங்க கேட்டதுக்கு பதில் தெரியல அம்மாட்ட கேட்டேன் அவங்க ரொம்ப நல்லதுன்னு சொல்றாங்க, எந்த பிரச்சனையும் வராதாம் எல்லார் உடம்புக்கும் ஒத்துக்கும்னும் சொன்னாங்க... அது சாப்பிடரதால கர்ப்பப்பை பலமடையும்னு சொன்னாங்க...
ஆமினா அக்காக்கு தெரியாத விஷயமே இருக்காது அவங்க இன்னும் நல்லா சொல்லிருக்காங்களே... அக்காக்கு நன்றிகள் என் சார்பாகவும்.....
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
அன்புடன்
லதாவினீ.
ஹாய் லதாவினீ
நான் ரொம்ப நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?
உங்களோட பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. அம்மாவுக்கும் ஞாபகமா சொல்லிடுங்க.
அன்புடன்
லதா.
Sorry Amina
ஹாய் ஆமினா
உங்கள் பெயரை தவறாக அடித்து விட்டேன் மன்னிக்கவும்
அன்புடன்
லதா
விஸ்வ ஸ்ருதி
அதுக்கு எதுக்கு மன்னிப்புன்னு பெரிய வார்த்தையேல்லாம் சொல்லிட்டு. அத நான் பெருசாவே எடுக்குறதில்ல. நிறைய பேர் அப்படி தான் எழுதுறாங்க. சொல்ல போனால் அது என் தப்பு தான்.Aamina என்று போட்டிருந்தால் தெரிந்திருக்கும். உங்க மன்னிப்பு எனக்கு வேண்டாம். திருப்பி தரேன். கேட்ச் பண்ணிக்கோங்க.
அன்புடன்
ஆமினா
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
நன்றி ஆமினா
நன்றி ஆமினா மன்னிப்பை திரும்ப வாங்கிக் கொள்கிறேன். இப்ப சந்தோஷமா.
அன்புடன்
லதா
விஸ்வ ஸ்ருதி
விஸ்வ ஸ்ருதி
தேவையான அளவு லதாவும், ஆமினும் சொல்லிவிட்டார்கள். தாரளமாக கொடுக்கலாம். நல்லது
அது தவிர,
1.உளுந்து கஞ்சி கர்பபைக்கு மிக நல்லது.
2.எள்ளுருண்டையும் நல்ல ஊறுதியை கொடுக்கும்.
3.மாதுளை உதிரப்போக்கு ஏற்படுவதால் நல்ல ஊட்டமான பழம்.
4.சத்துமாவு என எல்லா தானிய வகைகளையும் சேர்த்து வறுத்து அரைப்பார்களே அதுவும் நல்லது.
5.சத்தான முறையான உணவு பழக்கம் முக்கியம்
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
அரைக்கீரை விதை
அன்பு விஸ்வ ஸ்ருதி,
அரைக்கீரை விதை பற்றி மேலும் சில கருத்துகள்.
பெண் பருவமடைந்தவுடன் அரைக்கீரை விதையை பாலில் கலந்து குடிக்க சொல்வார்கள்.
அரைக் கீரை விதை எந்த நிலத்தில் போட்டாலும் நன்றாக முளைத்து விடுமாம். அது வளர்வதற்கு தனிப்பட்ட மண் வாகு, நல்ல தண்ணீர் என்று சிறப்பு கவனம் எதுவும் தேவையில்லையாம், இதுதான் இந்தக் கீரையின் இயல்பு.
அது போல பெண்ணும் திருமணமாகிப் போகிற இடத்தில், செழிப்பாக இருந்து, மற்றவர்களுக்கும் நன்மையைத் தருபவளாக இருக்க வேண்டும் என்பதை சொல்லி, இதை குடிக்க சொல்வார்கள்.
இது வீட்டிலுள்ள பெரியவர்கள் சொன்னது.
அன்புடன்
சீதாலஷ்மி
அன்புடன்
சீதாலஷ்மி
ஹாய் ஆமினா
ஹாய் ஆமினாஅஸ்ஸலாமு அழைக்கும் நல்லா இருக்கீங்களா உங்ககுட பேசி ரொம்ப நாளாகிவிட்டது என்ன தெரியுதா உங்களுக்கு தெரியாத விசயமே இருக்காது போல யாரு என்ன கேடாலும் சும்மா டக்கு டக்குனு பதில் சொல்லுரிங்க
அன்புடன்
நஸ்ரின் கனி