மனநிலை பாதித்தோர் மற்றும் முதியோர்கள் பிச்சை எடுப்பதை பார்த்தால் என் மனம் மிகவும் வருந்துகிறது. அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என நினைக்கிறேன். அவர்களுக்கு உதவ helpline number இருக்கிறதா? பண உதவி செய்தால் அவர்கள் அந்த பணம் தீர்ந்த பிறகு மறுபடியும் பிச்சை எடுப்பார்கள். எனவே, எதாவது முதியோர் இல்லம் அல்லது மனநிலை காப்பகம் உள்ளதா?
ஹாய் பவித்ரா
நல்லாருக்கீங்களா... உதவனும்னு நினைக்கறீங்களே அதுக்கு என் பாராட்டுக்கள்... நீங்க எந்த ஊருன்னு தெரியல. உங்க ஏரியா போலீஷ் ஸ்டேசன்-ல போய் கேட்டுப்பாருங்க எப்பவும் சரியான முகவரியும் போன் நெம்பரும் அவங்ககிட்ட இருக்கும்.
அங்க போக கஷ்டமா இருந்தா நெட்-ல உங்க ஏரியாவ டைப் பன்னி சர்ச் பன்னி பாருங்க அதுல முகவரியோ போன் நெம்பரோ இருக்கும் அந்த நெம்பர்க்கு கால் பன்னி அவங்ககிட்ட தெளிவா பேசிட்டு அப்பறமா முடிவெடுங்க... அவங்கள கொண்டுபோய் சேக்கரதுக்கும் கொஞ்சம் பார்மாலிட்டீஸ் இருக்கு சரிங்களா...
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
அன்புடன்
லதாவினீ.
பவித்ரா
நீங்க எடுத்த முடிவுக்கு வாழ்த்துக்கள். என்ன செய்வதாக இருந்தாலும் பெரியவர்கள்,அனுபவமுள்ளவர்கள் முன்னிலையில் செய்யுங்கள். உங்கள் கணவரை கலந்தாலோசியுங்கள்.காப்பகத்தில் சேர்ப்பது என்றால் நீங்கள் தான் கையெழுத்து போட வேண்டும். ஏதேனும் ப்ரச்சனை என்றால் உங்களை தான் அழைப்பார்கள். ஆதலால் முடிந்த அளவுக்கு தூரமாய் இருந்தே உதவுங்கள். உங்களின் உதவி உங்களுக்கே உபத்திரமாய் போய் விட கூடாது.
(நான் நீங்கள் உதவி செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை. ப்ரச்சனை வராமல் உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.)
அன்புடன்
ஆமினா
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
அமினா,
நன்றி அமினா,
எனக்கு இந்த மாதிரி formalities இருக்கு என்று தெரியாது. எனக்கு திருமணம் ஆன பிறகு இதற்கு முயற்சி செய்கிறேன்.
அன்புடன்
பவித்ரா
latha
thanks for ur reply,
அன்புடன்
பவித்ரா
பவித்ரா
மன்னிக்கவும். உங்களுடைய ப்ரொபைல்(திருமனமாகதவர்) பார்க்காமலே எழுதிட்டேன்.
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
amina
its ok akka
அன்புடன்
பவித்ரா