நெயில் ஆர்ட்

தேதி: July 12, 2010

4
Average: 3.6 (11 votes)

 

நெயில் கோட்
நெயில் பாலிஷ்

 

நகத்தை பராமரிப்பது மிக முக்கியம். இப்போது மேக்கப் போடாதவர்கள் கூட நெயில் பாலிஷ் உபயோகிக்கும் பழக்கம் உள்ளவர்கள் உண்டு. எப்போதும் உங்கள் நகம் அழகாக இருக்க தரமான நகப்பூச்சு, நெயில் பாலிஷ் ரிமூவரை பயன்படுத்தவும்.
நகத்தை எப்போதும் சதை தெரிய வெட்டிவிட கூடாது. சற்று தள்ளி வெட்ட வேண்டும். உங்கள் கைக்கு ஏற்றபடி நீளமாகவோ, சற்று குட்டையாகவோ நகம் வளர்க்கலாம். நகம் அளவுக்கு அதிகமான நீளம் வளர்ந்தால் பார்க்க அழகாக இருக்காது, விரலின் அழகையும் கெடுத்து விடும்.
உங்கள் நிறம் சற்று மாநிறம் என்றால் லைட் ஷேடுஸ் (light shades) பளபளப்பு இல்லாத வகைகளில் உள்ள நெயில் பாலிஷ் பயன்படுத்துவது நல்லது. நீங்கள் நல்ல நிறம் என்றால் எல்லா நிறமும் பயன்படுத்தலாம். நெயில் பாலிஷை நீக்கிய பின் கைகளை கழுவிவிட்டு சிறிது நேரம் கழித்து நெயில் பாலிஷ் பூசலாம். நெயில் பாலிஷ் பூசியவுடன் எப்போதும் சுற்றி விரலில் பட்டிருப்பதை சிறிது பஞ்சு கொண்டு நீக்குங்கள். இந்த முதல் மூன்று படங்கள் டாப் கோட் மேல் ஆர்ட் வரைந்தவை.
பட்டுப்புடவை உடுத்தும் போது நகத்தின் முன்பகுதியை சற்று ஷேப் செய்து கொண்டால் பொருத்தமாக இருக்கும்.
நான்கு மற்றும் ஐந்தாவது படங்களில் உள்ள நெயில் ஆர்ட் பட்டுப்புடவை, புடவை கட்டும் போது பொருத்தமாக இருக்கும்.
இந்த படத்திலுள்ள நெயில் ஆர்ட் டிசைன்கள் மாடர்னாக உடுத்தும் போது பொருந்தும். மாடர்னாக உடை அணியும் போது flat நகங்கள் நன்றாக இருக்கும். நெயில் பாலிஷ் பிடிக்காதவர்கள் டாப் கோட் பயன்படுத்தலாம். இது நகம் பார்க்க அழகாக காட்டும். இந்த நெயில் ஆர்ட் குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக வழங்கியவர் திருமதி. வனிதா வில்வாரணிமுருகன் அவர்கள்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

தாஙகளுக்கு நிரய கைவினை தெரியும் போல நன்று. எனக்கு உங்கள் அனைத்து பகுத்தியும் பிடித்திருக்கிரது. வாழ்த்துக்கள்

கோகுல்

வனி...

முகப்பில் பார்த்ததும் அது நீங்களாகத் தான் இருக்கும் என நினைத்தேன். கைகளையும், விரல்களையும், இப்பொழுது நகங்களையும் உங்களைப் போல் யாரால் அழகாக காட்ட முடியும்.. ;-) நல்ல கற்பணை திறனுக்கு அளவே இல்லை.

கண்டிப்பாக என் திருமணத்திற்கு மெஹந்தி நீங்கள் தான். சரியா ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கோகுல்... மிக்க நன்றி. நிறையலாம் தெரியாது, அறுசுவையில் இருந்து கற்று கொண்டது தான். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரம்யா... சீக்கிரம் கல்யாண தேதி சொல்லுங்க... கண்டிப்பா நம்ம மருதாணி தான்!!! ;) ஆனா உங்க ஊர் பக்கம் வர தான் எனக்கு கொஞ்சம் பயம்... அது ஒரு பெரிய காமெடி கதை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா


அன்பு வனிதா மேடம்,
ஈரோடுன்னா உங்களுக்கு பயமா!ரம்யா இருக்க பயமேன்?

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஹாய் வனிதா,
உங்கள் nail arts பார்த்தேன். உங்கள் nails அழகாக உள்ளது. எனக்கு ஹென்னா போட்டு கொள்வதை விட nail polish போட்டு கொள்வது மிகவும் பிடிக்கும். இப்போதுள்ள french manicure and pedicure செய்து காட்டுவீர்களா?
<நேரம் கிடைத்தால்>.

அழகா இருக்குது வனிதா! ஆமாம் உங்ககிட்ட ஒன்னு கேக்கணும்.. எத்தனை முறை யாரையெல்லாம் கீறி வச்சிருக்கிங்க... மீ த எஸ்கேப்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அழகா இருக்கு வனி.
இலா மேடம் என்னவாம்! ;))

‍- இமா க்றிஸ்

ரொம்ப அழகா இருக்கு வனிதா, எனக்கு நெயில் பாலிஷ்னா ரொம்ப பிடிக்கும் நானும் நிறைய கலெக்ஷன்ஸ் வச்சிருக்கேன் வனிதா. ஆனா இப்படி டிசைன்லாம் செய்து போட்டுக தெரியாது இனி ட்ரை பண்ண வேண்டியது தான்.

வனிதா நெயில் ஆர்ட் ரொம்ப சூப்பரா இருக்கு. ஆனா எனக்கு நகம் வளர்ப்பது பிடிக்காது, நெயில் பாலிஷ் போட்டுக் கொள்வது பிடிக்கும். ஆமாம் வனிதா உங்க நகம் தானா இது? நீங்க கொடுத்திருக்கும் இந்த ஆர்ட்லாம் என் நகத்துல் போட இடமே இருக்காது.

senbagababu

நெயில் பாலிஷ்ல கூட இவ்வளவு பண்ண முடியுமா?...!!!
நீங்க என்ன பிராண்ட் பயன்படுத்தறீங்க?
அதெல்லாம் சரியா தரமா பார்த்து தேர்ந்தெடுக்கவே எனக்கெல்லாம் தெரியாதுங்க :-

நல்லா இருக்கு ஆர்ட்...உங்க கைகளுக்கு மட்டும்தானா..இல்ல கணவருக்கும் பண்ணிவிடுவீங்களா..:-)

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

மோகனா... ரம்யா'வை நம்பி போக சொல்றீங்களே!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹர்ஷா... மிக்க நன்றி.

//french manicure and pedicure // - இதெல்லாம் தேவா மேடம் மாதிரி எக்ஸ்பெர்ட்'ட கேட்டிருக்கணும். எனக்கு சத்தியமா தெரியாது.. இதுவரை செய்ததும் இல்லை. :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இலா!!! நலமா??? மிக்க நன்றி.

//யாரையெல்லாம் கீறி வச்சிருக்கிங்க// - இதுவரை யாரும் மாட்டல.... உங்களை தான் தேடிகிட்டு இருக்கேன் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இமா... மிக்க நன்றி :)

//இலா மேடம் என்னவாம்// - உங்களுக்கு பதில் கிடைச்சுதா?? ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தேவி... மிக்க நன்றி. இனி வித விதமா உங்க கற்பனைக்கு ஏற்ற மாதிரியும், ஆடைக்கு ஏற்ற மாதிரியும் ட்ரை பண்ணுங்க. மறக்காம எங்களுக்கும் படம் அனுப்புங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி

என்னை நம்பி வருவதில் உங்களுக்கென்ன அப்படி ஒரு பயம் ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வனிதா, பேசாம ஒரு பார்லர் ஆரம்பிச்சுருங்க.

‍- இமா க்றிஸ்

ஆஹா!!! செண்பகா.... எப்படி??? எப்படி இப்படிலாம்??? உங்க பின்னூட்டம் இருக்கும்'னு நான் நினைக்கவே இல்லை!!! இன்ப அதிர்ச்சி குடுத்துட்டீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. மிக்க நன்றி. எப்பவாது நகம் வளர்ந்தா முயற்சி செய்யுங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நிச்சயமா வனிதா இந்த ஆர்ட் நெயிலில் போட்டால் அதை படம் எடுத்து அனுப்புகிறேன்.

இளவரசி... மிக்க நன்றி. நான் பயன்படுத்துவது lakme(அ)street wear. தேர்ந்தெடுப்பது கஷ்டம் இல்லை... பயன்படுத்தி பார்த்தா தெரிஞ்சு போகும் தரம். கணவர் கையில்??? அவ்வளவு தான் நான்... வீட்டில் அதன் பின் நெயில் பாலிஷ் பார்க்கவே முடியாது. :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரம்யா... இல்லையா பின்ன... உங்க ஊரில் ஆண்களை கூட பாவம்'னு விட்டுடலாம்... பெண்கள் கெட்டிக்காறர்கள் ஆச்சே!!! ;)

இமா... பியூட்டி பார்லர் வெச்சா என்னை நம்பி வர வேணாமா யாராச்சும்??? நீங்க, ரம்யா, இலா (முக்கியமான ஆள்) எல்லாம் வந்தா ஆரம்பிச்சுடலாம். ;)

தேவி... மிக்க நன்றி. அவசியம் அனுப்புங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி

ஏதோ விஷயம் நல்லா நடந்துள்ளது போல எங்க ஊரில்.. ;-)
என்னை சேர்த்து பியூட்டி பார்லரா ஹ்ம்ம்ம்... இலா,இமா வேணா ஓகே.

நான் என்னோட மூளைக்கு பதில் முகத்தை வேணா கொடுக்கிறேன்.. ட்ரையல் எடுங்க மூனு பேரும் சேர்ந்து ஏனா என் மூளை இந்த வேலைக்கு ஆகாது.. ஜாலியா உக்காந்து மேக்கப் மட்டும் போட்டுக்குவேன் ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

தங்களின் பதிவு மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.. இன்று தான் இணைந்தேன்..இத்தனை நாட்கள் வீணானதே என்று வருந்துகிறேன். வாழ்த்துக்கள் மீண்டும்.

ஜேசுதாசன்.

ஜேசுதாசன்.
-----------------------------------------------------------------
வாழ்க்கையில் சில நேரங்களில் நமக்கு கிடைக்கும் நண்பர்கள் கூட நம் வாழ்க்கையை நல்ல வழியில் திசை திருப்பமுடியும்....

ஐயோ வனீஈஈஈ எப்படி இப்படீல்லாம்? அசத்தறீங்க போங்க. இருங்க ஒரு மாதத்தில் நகத்தை இன்னும் கொஞ்சம் நீளமா வளர்த்ததும் நானும் போட்டு ஃபோட்டோ அனுப்பறேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு வனிதா,

நான் சொல்ல நினைக்கிறதை எல்லாம் இங்க எல்லோரும் சொல்லிட்டாங்க. இருந்தாலும் நானும் சொல்லுவேன்! ரொம்ப ரொம்ப அழகு!!

தினம் ஒரு கை வேலை, ஒரு சமையல் குறிப்பு, இன்னும் கதைகள், சிரியா தொடர், எல்லோருக்கும் உற்சாகம் ஊட்டும் பின்னூட்டங்கள்... எப்படி இவ்வளவுக்கும் நேரம் கிடைக்குது, அதை ரகசியத்தை முதலில் சொல்லுங்க!

நானும் செம்பகா கட்சிதான். நகத்தில் நெயில் பாலிஷ் வச்சு வெறும் புள்ளி மட்டும்தான் வச்சுக்க முடியும். (:

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

ஜேசுதாசன்... மிக்க நன்றி. அறுசுவை சார்பில் "வருக வருக". :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அப்படி போடுங்க கவிசிவா... மிக்க நன்றி. சீக்கிரம் வளர சொல்லுங்க, சீக்கிரம் போட்டு அனுப்புங்க. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு சீதாலஷ்மி... மிக்க நன்றி.

//ரகசியத்தை முதலில் சொல்லுங்க!// - உங்களுக்கு தெரியாததா??? நான் வீட்டில் எவ்வளவு வெட்டியா இருக்கேன்னு உங்களுக்கு தெரியாதா??? ;)

//இருந்தாலும் நானும் சொல்லுவேன்// - இந்த வரியை படிச்சதுல இருந்து என்னை மறந்து தனியா சிரிக்கறேன்... அத்தனை சந்தோஷம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா மேடம்,
உங்க நெயில் ஆர்ட் அருமையா இருக்கு
ரொம்ப சந்தோசம்
நேற்று kmart சென்றேன் அங்கு நெயில் ஆர்ட் செய்வதற்கு தனியே நெயில் ஆர்ட் பென்(sally hansen) வந்து இருக்கிறது இரண்டு கலர் வாங்கி இருக்கேன்
உங்க அளவுக்கு இல்லை என்றாலும் முயற்சி செய்து பார்க்க போகிறேன்
மேலும் பல குறிப்புகள் தந்து அசத்த என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

வனி குழந்தைகளையும் கவனித்து கொண்டு எல்லா கைவேலை, அழகு, தையல், க்ராப்ட்ஸ், கதை, கவிதை, சமையல் இன்னும் என்ன கைவசம் இருக்கு எல்லாத்தையும் எப்படிப்பா முடியறது.
ரொம்ப சந்தோஷமா இருக்கு வனி.

தொடரட்டும் உங்கள் பனி.
என் மகள் இதே போல் அடிக்கடி செய்யசொல்வா. நானும் செய்வேன். என்னிடம் நைல் ஆர்ட் கிட் இருக்கு. எல்லா டார்க்&லைட் கலர்ஸும் இருக்குப்பா வாரம் வாரம் இதே வேலை தான் எனக்கு. ஹார்ட், ப்ளவர், பேர்ட் இதே போல் நிறய்ய டிசைன் போடுவா.

இதை பார்த்ததும் அவளுக்கு ரொம்ப சந்தோஷம் ஆண்டிக்கு சொல்லுங்க. ரொம்ப அழக்கா போட்டிருக்காங்க என்று சொல்ல சொன்னாப்ப நானும் சொல்கிறேன் ரொம்ப அழகா இருக்கு வனி.

கவிதா... மிக்க நன்றி. நெய்ல் ஆர்ட் பென் எல்லாம் இருந்தா இதை விட நல்லாவே வரையலாம். இங்க நான் குடுத்திருக்கும் டிசைன் அனைத்தும் சாதாரண நெய்ல் பாலிஷ் ப்ரஷ் கொண்டு வரைந்தது. அதனால் கவலை இன்றி வரைந்து படமும் அனுப்புங்க. நெய்ல் பாலிஷ் பென் இருந்தா சின்ன நகத்தில் கூட டிசைன் பண்ணலாம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

விஜி... மிக்க நன்றி. நெய்ல் ஆர்ட் கிட்டே இருக்கா??? அப்போ இதை விட நல்லாவே வரைவீங்க. இங்க நான் குடுத்திருக்கும் டிசைன் அனைத்தும் சாதாரண நெய்ல் பாலிஷ் ப்ரஷ் கொண்டு வரைந்தது. அதனால் நீங்க வரைந்து படம் அனுப்புங்க. நேரம் கிடைப்பது ரொம்ப குறைவு தான் விஜி. ஆனாலும் அம்மா சமையல், குழந்தைகளை பார்த்துக்குறதுன்னு உதவி செய்யறாங்க அதனால் ஓரளவு முடியுது. மதிய நேரத்தில் குழந்தைகள் தூங்கும்... சும்மா தான் இருப்பேன். அந்த நேரம் தான் இந்த வேலை எல்லாம். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Vanitha enna brand nalla irukkunu konjam sollungalen

NewMom... எனக்கு தெரிஞ்சு நம்ம ஊரில் கிடைப்பதில் விலையும், தரமும் நல்லா இருக்க ப்ராண்டுகள் lakme / street wear / elle 18 இவை. உங்களுக்கு எது ஒத்துவருதுன்னு பாருங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வரவேற்றமைக்கு மிக்க நன்றி.

ஜேசுதாசன்.
-----------------------------------------------------------------
வாழ்க்கையில் சில நேரங்களில் நமக்கு கிடைக்கும் நண்பர்கள் கூட நம் வாழ்க்கையை நல்ல வழியில் திசை திருப்பமுடியும்....

வனிதா உங்கள் நெயில் ஆர்ட் அழகா இருக்கு. எனக்கு நகம் வளர்க்கனும் ஆசையா இருக்கு, அப்படி வளர்த்த கூட சீக்கிரமா உடைஞ்சு போயிடுது. அதுக்கு ஏதாவது டிப்ஸ் சொல்லுங்க.

வனி, அழகா இருக்கு. நல்ல பொறுமைதான் உங்களுக்கு. எனக்கு இந்த வேலைகள் செய்ய பொறுமை குறைவு.
வாணி

வினோஜா... மிக்க நன்றி. சிலருக்கு அப்படி ஆகும், உடல் வாகு அப்படின்னு சொல்வாங்க. எனக்கு இதுக்கு டிப்ஸ்'லாம் தெரியலப்பா... நம்ம தேவா'ட கேட்டு பாருங்க, இருக்கான்னு. எதாச்சும் சொன்னா நானும் தெரிஞ்சுக்கறேன், தெரிந்த ஒரு தோழி இதை அடிக்கடி சொல்லி புலம்புவா, அவளுக்கும் சொல்வேன். :)

வாணி... மிக்க நன்றி. பொறுமை ஏதும் இல்லைங்க, பொழுது போகலன்னா எதாச்சும் செய்வேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா u r crafts are very nice என்க்கு உங்க உதவி வேண்டும் என் குழ்ந்தைக்கு ஜீலை 30 fancy dress competition வருகிறது அதுக்கு animals or flowers ப்ற்றி ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்க்கு பூக்கள் ப்ற்றி செய்ய ஆசை எப்ப்டி செய்வது என்று என்க்கு சொல்லுங்கள் if u have somje ideas please give me soon i am waiting for u r reply other friends also pls give u r ideas

பர்வீன்... மிக்க நன்றி. எனக்கு நீங்க சொன்ன விஷயம் பற்றி அத்தனை ஐடியா இல்லை. ஆனாலும் நீங்க கேட்டுட்டீங்க... அதனால் வேறு ஒரு வேலை செய்கிறேன்... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்க நெயில் ஆர்ட் ரொம்ப அழகாய் இருக்கு, ஆனா, நான் நிறைய நகம் கடிப்பேன் அதனால எனக்கு நெயிலே இல்லை, உங்க நெயில் ஆர்ட் பார்த்ததும் கண்டிப்பா செய்யணும் போல இருக்கு

அன்புடன்
பவித்ரா

பவித்ரா... மிக்க நன்றி. நகம் கடிக்குறது ரொம்ப கெட்ட பழக்கம். நம்ம எல்லாருக்கும் கை கொடுக்கும்போது மற்றவர் சங்கட படும்படி வைக்கும். அதனால இனி நகம் கடிக்க கூடாது. ஓகே'வா??? அடுத்த மாசம் நகம் கடிக்கலன்னு பதிவு பார்க்கணும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கண்டிப்பா நானும் கடிக்க கூடாதுன்னுதான் நினைக்கிறேன், இன்னும் 2 வாரங்களிலேயே நீங்க நான் நகம் கடிப்பதில்லை என்ற பதிவை பார்க்கலாம். டீல்

அன்புடன்
பவித்ரா

பவி தான் சமத்து!!! Good girl :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இத நீங்க 2 வாரம் கழித்தே சொல்லுங்க

அன்புடன்
பவித்ரா

nagam azhaga valara enna seiyanum.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta