பழைய பட்டிமன்ற இழையில் வேறு விஷயங்களும் புகுந்துவிட்டதால் அதே தலைப்பிலான பட்டிமன்றம் இந்த இழையில் தொடரப்படப் போகின்றது. தோழிகள் தங்கள் வாதங்களை எடுத்து வைத்து பட்டிமன்றதை சுவாரசியமாக்க கேட்டுக் கொள்கிறேன்.
"இன்றைய காலக்கட்டத்திற்கு, பெண் உரிமை மற்றும் சுதந்திரம் என்பது அவரவரின் இடச்சூழலை பொருத்து இருக்கிறது.. ஆனால் பொதுவாக அது வளர்ந்து வருகிறதா? இல்லை பெயரளவில் மட்டும் உள்ளதா?"
வாதங்களை அள்ளி வீசுங்கள். நான் வந்து அள்ளிக்கறேன்
பட்டிமன்றம்
பட்டிமன்றம் புதிய இழையில் ஆரம்பிச்சாச்சு. எல்லாரும் வாங்கோ வாங்கோ!
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
நடுவரே
வந்துட்டோம் வந்துட்டோம்... பெண் சுதந்திரம் வளர்ந்துதான் வருகிறது..நடுவரே
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
உயர்திரு. நடுவர் அவர்களே
உ
உயர்திரு. நடுவர் அவர்களே,
பெண் சுதந்திரம் வளர்ந்து வருகிறது என்பதற்கு ஐ. டி._ல் பணிபுரியும் பெண்களே நல்ல உதாரணம். முன்பெல்லாம் பெண்களை மாலை 6 மணிக்கு மேல் வெளியில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள்.ஆனால் இப்போது இரவில் பணி செய்கிறார்கள்.பெண் சுதந்திரம் வளர்ந்துதான் வருகிறது..என்ற எனது வாதத்தை முன் வைத்து தற்போது விடை பெறுகிறேன்.
நன்றி! வணக்கம்!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
நடுவரே...
பெண் சுதந்திரம் பேச்சளவில்தான் இருக்கின்றது,நடைமுறையில் அது வளரவில்லை என்பதுதான் எனது கருத்து.ஐ.டி.ல 6மணிக்கு மேல பணிக்கு செல்கிறார்கள் என்றால் அது குடும்ப பொருளாதார சூழ்நிலைதான் காரணம்,சுதந்திரம் என்று சொல்லமுடியாது.இன்றும் அனேக குடும்பங்களில் சுயமாக முடிவு எடுக்க விடமாட்டார்கள்.ஆண்களை சார்ந்துதான் பெண்கள் இர்க்கவேண்டும் என்ற நிலை 90%
இன்றும் உள்ளது.நடுவரே அப்பறமா வந்து கருத்தை சொல்கிறேன்..
radharani
நடுவரே...
பெண் சுதந்திரம் பேச்சளவில்தான் இருக்கின்றது,நடைமுறையில் அது வளரவில்லை என்பதுதான் எனது கருத்து.ஐ.டி.ல 6மணிக்கு மேல பணிக்கு செல்கிறார்கள் என்றால் அது குடும்ப பொருளாதார சூழ்நிலைதான் காரணம்,சுதந்திரம் என்று சொல்லமுடியாது.இன்றும் அனேக குடும்பங்களில் சுயமாக முடிவு எடுக்க விடமாட்டார்கள்.ஆண்களை சார்ந்துதான் பெண்கள் இர்க்கவேண்டும் என்ற நிலை 90%
இன்றும் உள்ளது.நடுவரே அப்பறமா வந்து கருத்தை சொல்கிறேன்..
radharani
பெண் சுதந்திரம்
பெண் சுதந்திரம் வளார்ந்து உள்ளது என்பதே என் கருத்து வாதத்துடன் பின்னர் வருகிறேன் தோழிகளே
பட்டி மன்றம்
நடுவர் அவர்களுக்கு
வணக்கம். பெண் சுதந்திரம் வளர்ந்து இருக்கிறது என்ற கட்சியில் எனது கருத்துகளைத் தருகிறேன்.
படிப்பு, வேலை வாய்ப்பு, எல்லாவற்றிலும் பெண்களுக்கு முன்பு இருந்ததை விட இப்போது சுதந்திரம் வளர்ந்து கொண்டு இருக்கிறது. இன்னும் வளரும்.
மீண்டும் வருகிறேன்.
அன்புடன்
சீதாலஷ்மி
அன்புடன்
சீதாலஷ்மி
பெண் சுதந்திரம் வளர்ந்து
பெண் சுதந்திரம் வளர்ந்து இருக்கிற்து என்பதுஎன் வாதம்.நம்ம வீட்டையே உதாரணமாக எடுத்து கொள்ளலாம்.நம் அம்மாக்களுக்கு இருந்த்தை விட நாம் அதிகம் சுதந்திரமாக இருக்கிறோமா? இல்லையா??
நடுவர் அவர்க்ளே!
உ
அந்த காலத்தில் இப்படி நாம் பேசுவது போல் நம் தாயாரோ, பாட்டியோ பேசி இருக்க முடியுமா எதிர் அணியினர் யோசிக்க வேண்டும்.கல்பனா சாவ்லா,சுனிதா வில்லியம்ஸ் இவர்கள் பெண் சுதந்திரத்திற்கு நல்ல உதாரணம்.ஏன் என்னையே உம். ஆக எடுத்து கொள்ளுங்கள்.வீட்டில் எந்த முடிவு என்றாலும் என்னை கலககாமல் யாரும் எடுப்பதில்லை.என் இஷ்டம்தான்.எனது பெண் குழந்தைகளை அவர்கள் விரும்பிய படிப்பை படிக்க வைத்தோம்.பெரியவளை (பி.ஈ.,எம்.பி.ஏ.) படித்து இருந்தாலும் அவள் பிஸின்ஸ் செய்ய ஆசை பட்டதால் அதை அனுமதித்தோம். ஆகவே படிப்பு, வேலை வாய்ப்பு, எல்லாவற்றிலும் பெண்களுக்கு முன்பு இருந்ததை விட இப்போது சுதந்திரம் வளர்ந்து கொண்டு இருக்கிறது. இன்னும் வளரும் என்ற என் வாதத்தை கூறி தற்சமயம் விடை பெறுகிறேன்.நன்றி! வண்க்கம்!
வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...
மோகனாரவி
வாங்க மோகனா. ஒரே ஒரு சின்ன திருத்தம் நான் "திரு" இல்லை "திருமதி". தோழிகளுக்குள் இப்படி அடைமொழிகள் வேண்டாமே. சாதாரணமாக நடுவரே நாட்டாமயே இப்படி ஏதாவது சொன்னால் போதுமே :)
"ஐடி பொண்ணுங்களை பார்த்தாலே தெரியுதே பெண்கள் சுதந்திரம் வளர்ந்திருக்குன்னு சொல்ல" ன்னு வாதத்தை ஆரம்பிச்சிருக்காங்க மோகனா. எதிரணியின் பதில் என்னவோ?
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!