பட்டிமன்றம்20- பெண்சுதந்திரம்

பழைய பட்டிமன்ற இழையில் வேறு விஷயங்களும் புகுந்துவிட்டதால் அதே தலைப்பிலான பட்டிமன்றம் இந்த இழையில் தொடரப்படப் போகின்றது. தோழிகள் தங்கள் வாதங்களை எடுத்து வைத்து பட்டிமன்றதை சுவாரசியமாக்க கேட்டுக் கொள்கிறேன்.

"இன்றைய காலக்கட்டத்திற்கு, பெண் உரிமை மற்றும் சுதந்திரம் என்பது அவரவரின் இடச்சூழலை பொருத்து இருக்கிறது.. ஆனால் பொதுவாக அது வளர்ந்து வருகிறதா? இல்லை பெயரளவில் மட்டும் உள்ளதா?"

வாதங்களை அள்ளி வீசுங்கள். நான் வந்து அள்ளிக்கறேன்

ராதாராணி நீங்க பெண்சுதந்திரம் வளரவில்லை அணியா?
//இன்றும் அனேக குடும்பங்களில் சுயமாக முடிவு எடுக்க விடமாட்டார்கள்.ஆண்களை சார்ந்துதான் பெண்கள் இர்க்கவேண்டும் என்ற நிலை 90% இன்றும் உள்ளது//

சம்பாதிச்சு என்ன பிரயோஜனம். சுதந்திரமாக முடிவெடுக்க முடியலியேன்னு கேள்வி கேட்கறாங்க ராதாராணி. எதிரணியின் பதில் என்னவோ?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தேவி நீங்க வளர்ந்திருக்குங்கற அணியா? சீக்கிரம் வந்து வாதத்தை அள்ளி விடுங்க. இல்லேன்னா எதிரணியினர் உங்களுக்கு வாதம் செய்ய உரிமையில்லைன்னு சொல்லிடப் போறாங்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சீதாலெக்ஷ்மி மேடம் நீங்களும் வளர்ந்திருக்கு அணியா? உங்கள் விரிவான வாதத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

reem நீங்களும் வளர்ந்திருக்கு அணியா? அம்மாக்களை விட நாம் சுதந்திரமாத்தானே இருக்கோம். நியாயமாதான் இருக்கு. எதிரணியினர் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மோகனா அம்மா அவங்க வீட்டிலுள்ள உதாரணத்தைக் கொண்டே பெண்சுதந்திரம் வளர்ந்திருக்குன்னு சொல்லிட்டாங்க. எதிரணியினர் என்ன சொல்லப் போறீங்க?

என்னப்பா எதிரணியில் ராதாராணியைத் தவிர யாரையும் காணோம். சீக்கிரம் வாங்க. வாதாட அவங்களுக்கு சுதந்திரம் இல்லையோ?!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நம்ம பாட்டி காலத்தில் எல்லாம் எந்த ஒரு காரியத்தை செய்றதா இருந்தாலும் பெண்களா அதை செயல்படுத்தியது இல்லை, மற்றவற்களை(தன் கணவனை) சார்ந்தே இருந்தாங்க. நம்ம அம்மாக்கள் எல்லாரும் சுயமா சிந்திச்சாலும் ஒரு வார்த்தை அவங்கவங்க கணவர்களிடம் ஆலோசனை கேட்டுட்டு தான், அதுவும் சிலர் ஓகே இல்லனா செய்யவே மாட்டாங்க. ஆனா நம்ம காலத்தில் நம்ம எடுக்கும் எந்த ஒரு முடிவும் சரியானதத்தான் இருக்கும்னு அவரவர் கணவரே உற்சாகப்படுத்துறாங்க. அப்போ அடுத்த தலைமுறையினர் வரவர பெண்களின் செயல் திறன் வளர்ச்சி அடைஞ்சிருக்குனு தானே சொல்லனும்.
எடுத்துக்காட்டுக்கு சொல்றேன், இப்ப சில பெண்களின் கணவன்மர்கள் வெளிநாடுகளில் வேலை செய்துக் கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் தங்கள் மணைவியை அங்கு அழைத்து செல்ல முடியாத சூழ்நிலை. அப்போது இங்கு இருக்கும் பெண் தன் தேவைகளையும் பார்த்துக் கொண்டு தன் குடும்பதார்களின் தேவைகளை பூர்த்தி செய்துக் கொண்டு பிள்ளைகளையும் கவனித்துக் கொண்டு ஒரு முழு குடும்ப தலைவியாக தன்னை வெளிப்படித்திக் கொள்கிறார்கள். அப்போது அந்த பெண்ணின் தனித்துவம், எந்த ஒரு விஷயத்தையும் எதிர்க்கொள்ளும் விதம், தனிச்சையாக முடிவெடுக்கும் பாங்கு இவை அனைத்து வளர்ச்சி அடைந்து இருக்குனு தானே சொல்லனும்.
இதுலாம் என்னங்க நம்ம குடியரசு தலைவரே ஒரு பெண்தானங்க இதுக்கு மேல பெண்கள் சுதந்திரம் அடைஞ்சுட்டாங்கன்னு சொல்ல வேற என்ன எடுத்துக்காட்டுங்க வேணும்.
திரும்ப வருவேன். இங்க நிறைய பெரிய பெரிய பேச்சாளார்கள் எல்லாம் இருக்காங்க, ஏதோ எனக்கு தெரிஞ்சப்புல வாதாடிட்டேன். போன முறை தொடர்ந்து வர முடியவில்லை இந்த முறையேனும் தொடரனும்னு நினைக்கிறேன் பார்க்கலாம்.


சபாஷ் தேவி.உங்கள் வாதம் அருமை.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஏங்க உலக அழகி பிரபஞ்ச அழகி உள்ளுர் அழகி என்று பெண்கள் உலகம் முழுவதும் கலக்குறாங்கலே சுதந்திரம் இல்லாமையா??


“இப்ப சில பெண்களின் கணவன்மர்கள் வெளிநாடுகளில் வேலை செய்துக் கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் தங்கள் மணைவியை அங்கு அழைத்து செல்ல முடியாத சூழ்நிலை. அப்போது இங்கு இருக்கும் பெண் தன் தேவைகளையும் பார்த்துக் கொண்டு தன் குடும்பதார்களின் தேவைகளை பூர்த்தி செய்துக் கொண்டு பிள்ளைகளையும் கவனித்துக் கொண்டு ஒரு முழு குடும்ப தலைவியாக தன்னை வெளிப்படித்துக் கொள்கிறார்கள்.”
நல்ல வாதாடல்.ந்ன்று தேவி நன்று.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...


அப்படி சொல்லுங்க ரீம்

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்