பட்டிமன்றம்20- பெண்சுதந்திரம்

பழைய பட்டிமன்ற இழையில் வேறு விஷயங்களும் புகுந்துவிட்டதால் அதே தலைப்பிலான பட்டிமன்றம் இந்த இழையில் தொடரப்படப் போகின்றது. தோழிகள் தங்கள் வாதங்களை எடுத்து வைத்து பட்டிமன்றதை சுவாரசியமாக்க கேட்டுக் கொள்கிறேன்.

"இன்றைய காலக்கட்டத்திற்கு, பெண் உரிமை மற்றும் சுதந்திரம் என்பது அவரவரின் இடச்சூழலை பொருத்து இருக்கிறது.. ஆனால் பொதுவாக அது வளர்ந்து வருகிறதா? இல்லை பெயரளவில் மட்டும் உள்ளதா?"

வாதங்களை அள்ளி வீசுங்கள். நான் வந்து அள்ளிக்கறேன்

நடுவர் அவர்களே

பெண் சுதந்திரம் மற்றும் உரிமை வளர்ந்துக் கொண்டுதான் உள்ளது.

1.பலத் தொழில்களின் கடினமான உடல் உழைப்பு இல்லாத துறைக்கு பெண்களைதான் அமர்த்த நினைக்கிறார்கள். பெண் சுயமாக சிந்தித்து எடுக்கும் முடிவு சரியானதாக இருக்கும் என அவள் தனது உரிமையை சரியான முறையில் உணர்த்தியதால தானே..

2.இன்று படித்து முடிக்கும் அனைத்து பெண்களும் படிப்புக்கு ஏற்றவாறு சம்பாதித்து 25 அல்லது 26 வயதிதான் திருமணம் செய்கிறார்கள்.இதெல்லாம் பெண் சுதந்திரத்தைதான் குறிப்பிடுகிறது.

3.பெண்கள் பிறரிடம்,குறிப்பாக ஆண்களிடம் நடந்துக் கொள்ளும் முறையை பொருத்து அவள் நல்லவிதமாகவே நடத்தப்படுவாள்.

4.இன்று திருமணதிற்கு பிறகு பெண்கள் கணவனைதான் சார்ந்திருக்கவேண்டி இருப்பது என்பது..அவள் அவளிடம் கூட கணவனை விட்டு கொடுக்க மறுப்பதுதான். அவளால் எல்லாவித முடிவையும் எடுக்க முடியும் என்றாலும், அவளின் கணவனின் பதிலுக்கு எதிர்ப்பர்க்கிறாள் என்பதும் ஒருவித உரிமைதான்.
அவள் கணவனின் முடிவில் சற்று தடுமாற்றம் இருந்தாலும், சரியாக அவள் உரிமையையும் சுதந்திரத்தையும் பயன்படுத்தி மாற்றமுடிகிறது என்பது ஒப்புக்கொள்ள வேண்டியதே.

5.ஆண்களைப் போலவே அனைத்து தொழில்களிலும் அவளால் நல்லவிதமாக அவள் சுதந்திரத்தை பயன்படுத்த முடிகிறது.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

kandippaga valarnthu irukirathu.naam ellorum punaipeyar illamalae ninaitha karuthukalai veliyudukiromae ithilurunthe theriyavillaya?

//முன்பெல்லாம் பெண்களை மாலை 6 மணிக்கு மேல் வெளியில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள்//

“நான் ப்ரண்ட்ஸோட சுத்திட்டு வரேன். அதுனால வரதுக்கு லேட் ஆகும்னு சொன்னா யாராவது ஒத்துக்குவாங்களா? வேலைக்கு போக மட்டும் தான் அனுமதி

//படிப்பு, வேலை வாய்ப்பு, எல்லாவற்றிலும் பெண்களுக்கு முன்பு இருந்ததை விட இப்போது சுதந்திரம் வளர்ந்து கொண்டு இருக்கிறது.//

நாம் நினைத்த படிப்பு, வேலைக்கு போக அனுமதி உண்டா?டீச்சர் ட்ரைனிங் போறதுனா போ. இல்லைன்னா வீட்டுலயே கெடன்னு சொல்பவர்கள் தான் அதிகம். அந்த மாறி படிப்புலாம் வேண்டாம். அதுலாம் ஆம்பளைங்களுக்கு தான் ஒத்துவரும் அப்படின்னு சொல்பவர்கள் தான் அதிகம். 12வது முடிச்சாச்சு இனிமே வீட்டுவேலைல அம்மாவுக்கு கூட மாட உதவி பண்ணுன்னு சொல்பவர்கள் தான் அதிகம். என்னை விட அதிகமா சம்பாதிக்குற. சோ அந்த வேலைக்கு நீ போகாதன்னு சொல்வபவர்கள் தான் அதிகம்.

//நம் அம்மாக்களுக்கு இருந்த்தை விட நாம் அதிகம் சுதந்திரமாக இருக்கிறோமா? இல்லையா??//
நம்ம அம்மா இருந்த அடுப்படில தான் நாமும் இருக்கோம். அம்மா எப்படி அப்பாவுக்கு சமச்சு போட்டாங்களோ அப்படி தான் நாமும் இப்ப சமைக்கிறோம்.அம்மா எப்படி அப்பாகிட்ட ஒவ்வொரு முடிவுக்கும் எதிர்பார்க்கிறார்களோ அப்படி தான் நாமும் எதிர்பார்க்கிறோம்.

//அந்த காலத்தில் இப்படி நாம் பேசுவது போல் நம் தாயாரோ, பாட்டியோ பேசி இருக்க முடியுமா//
ஆண்களை போல் உங்களால் வரையறை இல்லாமல் பேச முடியுமா? உங்கள் கணவர் ஒரு முடிவு எடுத்த பிறகு நான் எடுத்த முடிவு தான் சரி என்று உங்களால் உங்கள் கண்வரிடம் வாதாடமுடியுமா? இல்லை அவரையும் மீறி உங்கள் முடிவை செயல்படுத்த முடியுமா?

//எனது பெண் குழந்தைகளை அவர்கள் விரும்பிய படிப்பை படிக்க வைத்தோம்//
ஈ.சி.ஆர் ரோட்டுல நல்ல வியாபாரம் நடக்குது. அதுனால நான் அங்கே ஒரு ஹோட்டல் வச்சு நடத்த போறேன்னு சொன்னா ஒத்துக்குவோமா? நான் தனியா வெளிநாட்டுல படிக்க போறேன்னு சொன்னா எத்தன பேர் அனுப்புவாங்க?

//சில பெண்களின் கணவன்மர்கள் வெளிநாடுகளில் வேலை செய்துக் கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் தங்கள் மணைவியை அங்கு அழைத்து செல்ல முடியாத சூழ்நிலை.......//
அந்த பொண்ணு தனியா இருக்கும் போது எவ்வளவு தர்மசங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்படுவாள் என்று உங்களுக்கு தெரியுமா? “நீ அங்கே தனியா கஷ்ட்டப்பட்டுட்டு இருக்க, ஆனா உன் பொண்டாட்டி இங்க...... என்று ஒரு வார்த்தை அவன் அம்மாக்களிடமிருந்தோ,நண்பர்களிடமிருந்தோ ஆண்களுக்கு விழுந்தாள் போதும். அதன் பிறகு பெண்களின் வாழ்க்கைக்கு உத்திரவாதம் இருக்கா?
//இதுலாம் என்னங்க நம்ம குடியரசு தலைவரே ஒரு பெண்தானங்க இதுக்கு மேல பெண்கள் சுதந்திரம் அடைஞ்சுட்டாங்கன்னு சொல்ல வேற என்ன எடுத்துக்காட்டுங்க//
ஓட்டு போட்டு நாம் ஜேய்க்க வச்ச சோனியா காந்தி ஏன் ஆட்சிக்கு வரல.? இந்திராகாந்தியை ஏன் கொலை செய்தார்கள்.? நீங்கள் சொல்லும் குடியரசு தலைவருக்கும் பொறுப்புக்கள் பெயரளவில் தான் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அவங்க எடுக்குற ஒவ்வொறு முடிவும் பிரதமரின் மறைமுக/வெளிப்படையான தலையீடு இல்லாமல் அணுவும் அசையாது என்பது உங்களுக்கு தெரியுமா?

//ஏங்க உலக அழகி பிரபஞ்ச அழகி உள்ளுர் அழகி என்று பெண்கள் உலகம் முழுவதும் கலக்குறாங்கலே சுதந்திரம் இல்லாமையா //
ஏன் ஓவ்வொறு பெண்களும் ஒவ்வொரு விதத்தில் அழகு இல்லையா? நீங்கள் அழகு இல்லையா? நான் அழகு இல்லையா?அங்கே போய்,கேட்வாக் நடந்து, அவங்க சொல்ற ட்ரஸ் போட்டதுக்கு பிறகு தான்(மீதியை ஹிந்தி படம் பேஷன்ல போய் பாருங்க) அழகி என்பதை நிறுபிக்க வேண்டுமா? அது சுதந்திரமா?

எனவே பெண்களுக்கு சுதந்திரம் என்பது பெயரளவில் தான் இருக்கிறது. இன்னும் வளரவில்லை என்பது என் வாதம். மீண்டும் வருவேன்.

(ஆமி’க்கு மயக்கம் வந்துச்சு. ஜூஸ் கொண்டுவாங்கப்பா.......)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வாங்க ஆமீன்..

இப்போ தான் வாதாடனும்னு ஆசையே வந்திருக்கு.. நேரம் வரும் போது வருகிறேன்.. ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பெண் சுதந்திரமாக இருப்பதாகச் சும்மா பேசிக்கொண்டிருக்கிறோம். இன்னும் இம்மி அளவு கூட வளரவில்லை. வாதத்துடன் பின்னால் வருகிறேன்.

அன்புடன்,
இஷானி

என்னருமை நாட்டாமைக்கு..:-) வணக்கம்..
நம்ம கட்சி சுதந்திரம் வளர்ந்திருக்கு…கட்சிதான்..!!
சொல்லப்போனால் ஆண்களின் சுதந்திரம் குறைந்துவிடுமோ…என்று அவர்கள் பயப்படும் அளவுக்கு அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கிறது..:-)
மறுபடியும் இந்த சீட்டில நீங்க சுதந்திரமா உட்கார்ந்திருப்பதை பார்க்க மகிழ்ச்சி எனக்கு….!
இந்த சுதந்திரத்தை உங்களுக்கு கொடுத்தது உங்கள் கணவன் மற்றும் அறுசுவை இயக்குனர் தானே……
அப்படியென்றால் இங்கே “உங்களுக்கு குடும்பம் தாண்டி ஒரு அறுசுவை என்ற குட்டி சுமூகம் வரை” முடிவெடுக்கும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது அல்லவா?
இல்ல நீங்களாவே உங்க திறமையின் மூலம் அந்த சுதந்திரத்தை பெற்று கொண்டதாக இருந்தாலும்… உங்க சுதந்திரம் வளர்ந்திருக்கிறதுதானே?:-
நம் அம்மாக்களுக்கு அன்று கிடைத்த சுதந்திரத்தைவிட நமக்கு இன்று கிடைக்கும் சுதந்திரம் அதிகம்…..:-

உடைகள் விஷயத்தில் ..வளர்ந்திருக்கிறது..!!!
“அன்றைய பெண்கள் சேலையை தவிர வேறெதுவும் அணிந்ததில்லை..இன்று சுடிதார்,ஜீன்ஸ்பேண்ட்ஸ்,நைட்டி,மேக்ஸின்னு …உலகத்தின் அத்தனை நவநாகரீக உடைகளையும் உடுத்தவும் பெரும்பாலான ஆண்கள் அனுமதிக்கிறார்கள்….தானே……அப்படி அனுமதிக்காவிட்டாலும் அரித்தெடுத்தாவது பெண்கள் பெற்று கொள்கிறார்கள்தானே..!”

உணவு விஷயத்தில்…வளர்ந்திருக்கிறது..!


கேசரி என்றால் நெய் சொட்ட சொட்ட வழுக்கி கொண்டு போகுமாறு செய்யவேண்டும்……அன்றைய பெண்கள்…..
ஆனால் இன்றைக்கு பெண்களால் ஒரு டீஸ்பூன் நெய்யிலேயே..கேசரி செய்து..அதிகம் நெய் விட்டால் உடம்புக்கு ஆகாது …இது போதும்..இதையே ஒரு கரண்டி சாப்பிட்டால் போதும் இனிப்பு வேண்டாம் என கணவனை கண்டிக்கும் சுதந்திரம் பெண்களுக்கு உண்டு…
எனக்கு தெரிந்து நிறைய ஆண்கள் மனைவி திட்டுவாள் என்று டீ,காபி குடிப்பதை கூட விட்டுவிட்டார்கள்…!ஆக என்ன உணவை வீட்டு ஆண்கள் சாப்பிடவேண்டும் என்பது மட்டுமல்ல என்ன உணவை சாப்பிடக்கூடாது என்பதுகூட பெண்கள்தான் முடிவு செய்கிறார்கள்…
தனக்கு முடியவில்லை என்றால் நீங்கள் சமையுங்கள் என்றோ…இல்லை ஹோட்டல் உணவு சாப்பிடலாம் என்றோ முடிவெடுக்கும் சுதந்திரம் இன்றைய பெண்களுக்கு உண்டு……

நட்பு வட்டாரம்:
அன்றைய பெண்களுக்கு வீட்டு ஆண்கள்,உறவுக்காரர்கள் தவிர வேறு ஆண்களை முகம் பார்த்து பேசும் சுதந்திரம் இல்லை..
எங்கோ ஒரு அதியமான்,ஔவையார் நட்பு மட்டும்தான் உண்டு…மற்றபடி பெண்களின் நட்பு பெண்களோடே முடிந்து போனது..ஆனால்
இன்றைய பெண்களுக்கு பெண்களைபோலவே…ஆண்களோடு சகஜமாக சங்கோஜமின்றி நட்பு பாராட்ட முடியும்..
ஆயிரம் பேர் உள்ள சபையில் கூட..இன்று எந்த பெண் வேண்டுமானாலும் தன் கருத்தை ஆணித்தரமாக சுதந்திரமாய் சொல்லமுடியும்…….!!

எல்லா துறைகளிலும் பெண்கள் இருக்கிறார்கள்…..அதற்கு அவர்கள் திறமை மட்டும் காரணமில்லை……அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரமும்தான்.
சொல்வதற்கு நிறைய இருக்கிறது…சந்தர்ப்பம் கிடைத்தால் மறுபடியும் வருவேன்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

50 சதவீதம் கூட வேண்டாங்க. 33 தான் கேக்குறோம். மசோதா கொண்டுவரப்போறோம்னு சொன்னாலே பாராளுமன்றத்துல 10 நாளைக்கு ரகளை தான்.

அந்த மசோதா எப்ப எழுதப்பட்டது தெரியுமா? ஏன் இன்னும் அமலுக்கு கொண்டுவர முடியல? இதெல்லாம் யோசிச்சு பாருங்க எதிரணியினரே!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அழகி போட்டி சரியா?தவறா?என்பதை வேறவொரு பட்டிமன்ற்த்தில் பேசலாம்.அந்த ப்ரொஃப்ஸன் கூட எடுக்கிற்த்ற்கு அவஙகலுக்கு சுதந்திரம் இருக்கிதால் தானே.இந்திரா காந்தி பெண் என்பதனால் கொல்லபடவில்லை.வரலாற்றை மாத்ததிங்க. குடியரசு தலைவர்கல் ஆணாக இருந்தாலும் அவர் நிலையும்
அது தான்.


நடுவர் அவர்களே ,
ஆமினா எந்த காலத்தில் இருக்கிறார்? ”12வது முடிச்சாச்சு இனிமே வீட்டுவேலைல அம்மாவுக்கு கூட மாட உதவி பண்ணு” எந்த பெண்ணையாவது +2 படித்த பிறகு தன் ஏழ்மை காரணமாக மட்டுமெ இந்த வார்த்தயை தாயார் சொல்வார்க்ளே தவிர எப்பாடு பட்டாவது படிக்க வைக்கவே விரும்புகிறார்கள். இந்த தலைப்பை அமலுக்கு கொண்டு வந்த நடுவர் இருக்கிறார்.நாம் வாதாடுகிறோம்.இது ஒன்றே போதும் பெண் சுதந்திரம் வளர்ந்துள்ளது என்பதற்கு.மீண்ண்ண்ண்ண்ண்டுடுடுடுடும் வருவேன் என கூறி என் வாதத்திற்கு சிறிது இடைவெளி விட்டு பிற்கு தொடர்கிறேன்.ந்ன்றி! வணக்கம்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

இந்திரா காந்தி பெண் என்பதற்க்காக கொல்லபடவில்லை என்பதும் எனக்கு தெரியும். அவர்கள் ஏன்,எந்த பிரச்சனையால்(என் படிப்பு இந்திய பொருளாதாரம் மற்றும் இந்திய அரசியலமைப்பு பற்றியது என்பது உங்களுக்கு தெரியுமா?) கொல்லப்பட்டுளார்கள் என்பதும் எனக்கு தெரியும். அழகி போட்டி சரியா தவறா என்பது என் வாதத்தில் சொல்லவில்லையே. அழகு என்பது அனைவருக்கும் உண்டு. அழகு போட்டி நடத்தி தான் நாம் சுதந்திரம் பெற்றுள்ளோமா என்பதே என் கருத்து.இந்த விஷயத்தில் பெண்கள் ஆண்களுக்கு போகப்பொருளாகத்தான் காட்சியளிப்பாளே தவிர அதை வைத்து பெண்கள் அனைவருக்கும் சுதந்திரம் வளர்ந்திருக்கு என்பது என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. தாங்கள் அதை பற்றி பேசியதால் அதை பற்றி சொன்னேன். அவ்வளவே!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்