பட்டிமன்றம்20- பெண்சுதந்திரம்

பழைய பட்டிமன்ற இழையில் வேறு விஷயங்களும் புகுந்துவிட்டதால் அதே தலைப்பிலான பட்டிமன்றம் இந்த இழையில் தொடரப்படப் போகின்றது. தோழிகள் தங்கள் வாதங்களை எடுத்து வைத்து பட்டிமன்றதை சுவாரசியமாக்க கேட்டுக் கொள்கிறேன்.

"இன்றைய காலக்கட்டத்திற்கு, பெண் உரிமை மற்றும் சுதந்திரம் என்பது அவரவரின் இடச்சூழலை பொருத்து இருக்கிறது.. ஆனால் பொதுவாக அது வளர்ந்து வருகிறதா? இல்லை பெயரளவில் மட்டும் உள்ளதா?"

வாதங்களை அள்ளி வீசுங்கள். நான் வந்து அள்ளிக்கறேன்


சபாஷ் இளவர்சி, எதிரணியினருக்கு ந்ல்ல பதிலடி கொடுத்துள்ளீர்கள்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஆமினா..வனக்கம்..இந்த மன்றதை ஒரு 4 நாட்களாக கவனிக்கிறேன்..having little time now.. unable 2 typing tamil now with feeble patiency..let me chance tomorrow to type in tamil..anyway..ur contribution z so much great..u can be able 2 contribute all tasks..im..i have to wish ramya and mr.sheik and latha also..everytime u D people trying to encourage all types of conversation....tkcr..god bless you..

Madurai Always Rocks...


நடுவர் அவர்களே!
தமிழக அரசு நமக்கு எந்த அளவு சுதந்திரம் கொடுத்துள்ளது என்பதற்கு “மகளிர்
சுய உதவி குழுவே” சாட்சி.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஹய்யா பட்டி சூடுபிடிச்சிடுச்சு. எனக்கு ஜாலி ஜாலியா இருக்குதே :). எல்லாரும் கலக்கறாங்களே! ரம்யா இளவரசி ஆணித்தரமா கருத்துக்களை அள்ளிக் கொட்டியிருக்காங்க. ஆமினாவும் விடுவதாய் இல்லை. பதிலுக்கு பதில் கொடுக்கறாங்க.

தோழிகளே இப்படியே தொடருங்க. எல்லாருக்கும் தனித்தனியா சிண்டு முடியறதுக்கு கொஞ்சநேரத்துல வர்றேன் :). நாரதர் வேலை பார்ப்பதுதானே நடுவரின் வேலையே :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவரே நான் எந்த கட்சின்னு குழம்பிட்டேன். ரொம்ப நேரமா பேச்சளவு கட்சிக்கு ஆளில்லையே கட்சி மாத்திடுவோமா'னு யோசனை... அதான் பதிவு போடாம காத்திருந்தேன். இப்போ 2 சிங்கம் அணியை பலம் ஆக்கிட்டாங்க. அதனால் வளர்ந்திருக்குன்னு நம்ம ரம்யா கட்சி பக்கமே வாதாடுறேன். ;)

அன்று ஆண் முன் உட்கார கூட அனுமதி இல்லாத பெண்கள் இன்று சட்டசபை போய் ஆணுக்கு நிகரா சத்தம் போடுறாங்க!!!

வீட்டு அடுப்படி விட்டு வெளியே வராமல் இருந்தவங்க, இன்று விருந்தினருடன் சரி சமமாக உட்கார்ந்து பேசுகிறார்கள்.

இரவு, பகல் வித்தியாசம் இல்லாம ஆணை போலவே வேலைக்கு போறாங்க.

என்ன படிக்க விரும்பறோம், என்ன வேலை வேணும், என்ன சம்பளம் வேணும் என்று அனைத்தையும் சொல்லும் உரிமை இப்போது பெண்களுக்கு உண்டு.

- மிச்சத்தை யோசிச்சுட்டு வரேன் !!! ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எத்தன பொண்ணூங்கள அவங்க அப்பா அம்மா படிக்க வைக்கிறாங்கன்னு நெனைக்கிறீங்க?
எத்தனை பெண்களின் கனவுகள் சமயலறையில் கருக்கப்பட்டிருக்கிறது தெரியுமா உங்களுக்கு?
இந்த ஏழை நாட்டில் எத்தனை பெண்களுக்கு அவள் படிக்க விரும்பியும் திருமணத்துக்கு அவர்கள் பெற்றோர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள் என்று தெரியுமா உங்களுக்கு?
எத்தனை பெண்கள் அடிமைபட்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
இந்தியாவின் முதுகெழும்பான கிராமங்களில் பெண்களின் நிலை என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

இந்த அருசுவை தளத்திலேயே எத்தனை பெண்கள் அவர்களின் முழுவிவரங்களும், உண்மை பெயரும் கொடுக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
தங்கள் கணவரின் அனுமதி துளியும் இன்றி எதிலும் பங்கு கொள்ள முடியுமா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எப்பவும் போல சொல்லிக்கிட்டு தான் இருக்கிறார்கள். வாழ்க்கையில் அடிபட்டவர்கள் சுயமாக முடிவு எடுக்கிறார்கள். மற்றவர்கள் இதுதான் பண்பாடு என்று இருக்கிறார்கள்.


அன்பு ஆமினா,
இப்போ படிக்காத பெண்களை பார்ப்பதே அரிதாக இருக்கிற்து.பெண்களுக்கு நல் ல பல திட்டங்களை அரசு செயல் படுத்துகிறது. நம் நட்டை”ஏழை நாடு” என யார் சொன்னார்கள்?இன்னும் முதல் உறுப்பினர் admin அவர்களெ தனது முழு விவரங்க்ளை தர தயங்கும் போது மற்றவர்கள் தயங்குவதில் என்ன தவறு?

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஆஹா!!! நடுவர் இருக்க நான் வருவது தப்பு தான்!!! ஆனாலும் இது பிரெச்சனை ஆகும் முன் தடுக்கவே இங்கு நான். பெயர் சொல்லி பதில் சொல்லாதீங்க யாரும்.... பொதுவா அந்த அணிக்கே பதில் சொல்லுங்க. இருவருக்குள் நடக்கும் வாக்குவாதம் ஆகிட கூடாதில்லையா???

நடுவர் மன்னிக்கணும்.... நான் வந்து சொன்னதுக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவர் அவர்களே...

அறுசுவையில் தன் தகவலை கொடுக்க மறுப்பதும் ஒருவித உரிமைதான். அது தனிப்பட்ட விஷயம். அதற்கும் உரிமை மற்றும் சுதந்திரதிற்கும் தொடர்பு இல்லை. ஒரு பெண் நினைத்தாலும் தகவலை பறிமாறிக் கொள்ளலாம். அதனால் உருவாகும் பிரச்சனையை எதிர் கொள்ள முடிந்தால் அது தனிப் பட்ட பெண்ணின் தைரியத்தை பொறுத்த விஷயம். உரிமையை பொறுத்ததல்ல.. ஆணும் சில இடங்களில் தகவல் தேவை இல்லாமல் கொடுத்தால் சிக்கலிதான் சிக்க வேண்டும். அதனால் அவரவரின் அறிவை உபயோகித்து இங்கே தெரிவிக்கலாம், இங்கே கூடாது என இரு பாலரும் தெரிவிக்கின்றனர்.

பெண் பிள்ளையை படிக்க வைக்காதது பெற்றோரின் ஏழ்மையும், அறியாமையையும் சார்ந்த விஷயம். இன்று எத்தனையோ பெற்றோர் கஷ்டப்பட்டு படிக்க வைக்கவே நினைகிறார்கள். படிக்க வைக்க முடியவில்லை எனில் பெண்களை அவர்களின் விருப்பபடி வேலைக்கு வெளியூர்களுக்கும், பக்கத்தில் உள்ள கம்பெனிகளுக்கோ அனுப்பி வைக்கிறார்கள். அது அந்த அறியாமையில் வாழ்ந்துக் கொண்டு இருக்கும் கிராம பெண்களின் முன்னேற்றம் இல்லையா.. இந்தியா வளர்ந்து வரும் நாடுதான். இத்தனை பெரிய இந்தியாவே வளர்ந்து கொண்டு இருக்கும் போது... அறியாமயில் வாழும் கிராம பெண்கள் இந்த அளவு முன்னேறி இருப்பது.. வளர்ச்சி தானே..

அழகி போட்டியில் கலந்து கொள்ளுவது பெண்ணின் தனிப்பட்ட வாழ்வில் அவளுக்கென கொடுத்துள்ள உரிமை வரம்பை எப்படி பயன்படுத்துகிறாள் என்பதாகும்.. ஆனால் அவள் செல்லும் உரிமை பெற்றிருக்கிறாளா என்பதே விஷயம்.அதில் தான் சுதந்திரத்தை வெளிப்படுத்த வேண்டும் இல்லை என்றாலும்.. அவள் தனிபட்ட விருப்பத்தில் தடை இல்லையே...

கணவன் அனுமதி என்பது.. பெண்ணே விருப்பப்பட்டு அடங்கி போகும் விஷயம். அவளால் பொறுக்க முடியவில்லை எனில் அவள் விவாகரத்து வாங்கி கொள்ளும் உரிமை பெற்றுள்ளாள்..விவாகரத்து வாங்கி எத்தனை கஷ்டங்கள் சமூகத்தில் அடைய வெண்டி உள்ளது எனக் கூறமுடியாது. எல்லாம் அவளின் கையில் தான் உள்ளது.

சுதந்திரமாய் கணவன் நீ செல் .. என விட்டால அதே பெண் சிணுங்கி.. உங்களுக்கு பாசமே இல்லை.. என்னை தனியா விடுறீங்க.. என மூக்கை சிந்தி அழுவதும் உள்ளது. அங்கே பொஸஸிவ் என்பது வரும். அதனால் பெரும்பாலான பெண் அன்பு கணவனின் கண்காணிப்பில் வாழ விரும்புவாள்.

ஒரு விண்ணப்பம்..யாரும் பெயரை குறிப்பிட்டு வாதாட வேண்டாம் என்பது என் பணிவான வேண்டுகோள்.

மீண்டும் வருகிறேன்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்